Monday, August 30, 2010

வலைப்பதிவில் நான் ஒரு சூப்பர் ஸ்டார்...சுப்ரீம் ஸ்டார்...டான்டடைங்

"சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை."

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


இந்த போஸ்டோட டைட்டிலை பார்த்தீங்களா... கீழே Posted by ன்னு இருக்கா.. அதை அடுத்து இருக்கே..ஒரு தெய்வீக பெயர்...'அதை இன்னொரு முறை படிங்க'...ஹிஹி


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என்னோட‌ பர்த் சர்டிபிகேட் ‍‍‍லேருந்து இந்த வருஷ‌ ஃபார்ம் 16 வரைக்கும் அந்த பெயரேதான்!3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

தமிழ் வலைப்பதிவுக்கு உலகிற்கு கஷ்டகாலம்தான். வேறென்ன சொல்ல?!! ஹிஹி


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அட, இது கூட தெரியாதா...போடற இடுகையெல்லாமே அதுக்குத்தானே!


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஐயோ பாவம்....என் வலைப்பதிவிலே இருக்கிறது முழுசும் சொந்த விஷயம்தான்னு தெரியாதா உங்களுக்கு!

ஏன்னா‍ நான் ரொம்ப நல்லவ-‍னு சீன் போட வேற இடம் உலகத்துலே இருக்கா என்ன?

நான் ரொம்ப நல்லவ-னு இதுவரைக்கும் யாருமே நம்புனது இல்லே. ஆனா, இங்கேதான் முதன்முதல்லே நம்புனாங்க. அதுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டுள்ளேன்.(கண் கலங்குகிறது) நான் எழுதினதை இதுவரைக்கும் நானே படிச்சது இல்லே. ஆனா, அதையும் படிச்சு நாலு வரி எடுத்து போட்டு கமெண்ட் போடறாங்களே..அதுதான் விளைவுன்னு நினைக்கறேன்! (Hey, friends, juz kidding..:-) )6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


ச்சேச்சே... ரெண்டுமே இல்ல...நாம இன்னைக்கு இடுகை போடலேன்னா தமிழ்மணத்தோட கதி,அதைவிட பதிவுலகத்தின் கதி என்னாகுமோன்னு தினமும் குளிக்கறேனோ இல்லையோ போஸ்ட் போட்டுடறேன்!


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


காசா பணமா...அது இருக்கு ஒரு எட்டு. ஆனா ஆக்டிவ்வா இருக்கிறது மூணுதான். அதுலே ரெண்டு குழுப்பதிவு.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


என்ன, இப்படி சொல்லிட்டீங்க..."தமிழ்மணம் எனது தாய்நாடு, வலைபதிவர் யாவரும் என் உடன்பிறந்தோர்." (மீதி மறந்து போச்சு...அவ்வ்வ்வ்! )


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..யாரைன்னு குறிப்பிட்டு சொல்றது....நேத்துகூட‌ ஒபாமா போன் செய்து என்னால்தான் தமிழிலக்கியத்தை கரைத்துக் குடித்து அதிலேயே எப்போதும் திளைத்து நீந்துவதாக சொன்னபோது.....


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...


அஸ்கு புஸ்கு..அப்புறம் உங்களை எப்படி என் பதிவை தொடர்ந்து படிக்க வைக்கறதாம்.....:-)


அழைத்த சின்ன அம்மிணிக்கு நன்றி....:‍‍)
லேட்டானாலும் லேட்டஸ்டா எழுதியிருக்கேன்..(இதுக்கு எழுதாமலே இருந்திருக்கலாம்னு நீங்க நினைக்கறது ..ஹிஹி...)

இதை தொடர நான் அழைப்பது : All celebrity bloggers of india

17 comments:

சிங்கக்குட்டி said...

சந்தனமுல்லை இடுகை என்றாலே கலக்கல்தான், அதிலும் இது சந்தன கலக்கல் போங்க :-)

சும்மா சிரிப்பு வாசம் தூக்குது :-).

ஆயில்யன் said...

//All celebrity bloggers of india//


இப்படி சொன்னதால் மட்டுமே இது எனக்குமான அழைப்பு என நினைத்து,வருங்காலத்தில் எழுத முயற்சிக்கிறேன் !

நேரம் கிடைக்கும்போது ஏன்னா இப்ப நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் பிசி!

அஹமது இர்ஷாத் said...

அதென்னங்க All celebrity bloggers of india கொஞ்சம் சொல்லுங்கம்மணி தெரியாதுங்..

அஹமது இர்ஷாத் said...

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஐயோ பாவம்...///

யாரு பாவம் நீங்களா நாங்களா...?

tamildigitalcinema said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை http://writzy.com/tamil/ இல் இணைக்கவும்.

சின்ன அம்மிணி said...

//என்ன, இப்படி சொல்லிட்டீங்க..."தமிழ்மணம் எனது தாய்நாடு, வலைபதிவர் யாவரும் என் உடன்பிறந்தோர்." (மீதி மறந்து போச்சு...அவ்வ்வ்வ்! )

//

டைட்டில் பாட்டுக்கு ரஹ்மான் இசையா

:)

நல்லா காமெடியா இருக்கு

சின்ன அம்மிணி said...

//லேட்டானாலும் லேட்டஸ்டா எழுதியிருக்கேன்..(இதுக்கு எழுதாமலே இருந்திருக்கலாம்னு நீங்க நினைக்கறது ..ஹிஹி...)
//

அப்படியெல்லாம் நாங்க சொல்லமாட்டோம்.கவலையேபடாதீங்க

Deepa said...

தெய்வீக‌ பெய‌ர்...
ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌...
ஒபாமா...
அஸ்கு புஸ்கு..

தாயீஈஈ... முடிய‌ல‌ம்மா...யாராச்சும் வ‌ந்து வேப்பிலை அடிச்சு ஆத்தாவை ம‌லையேத்துங்க‌!
:))

ஜெயந்தி said...

ஏன் இந்த கொலவெறி.

பூங்குழலி said...

அஸ்கு புஸ்கு..அப்புறம் உங்களை எப்படி என் பதிவை தொடர்ந்து படிக்க வைக்கறதாம்.....:-)
இது தான் உங்க வெற்றி ரசகியமா ?

கானா பிரபா said...

இதை தொடர நான் அழைப்பது : All celebrity bloggers of india//

அப்பாடா தப்பிச்சேன், நல்லவேளை இந்தியாவுக்கு வரல

நசரேயன் said...

//All celebrity bloggers of india//

நான் முன்னாடியே எழுதிட்டேன்

அன்புடன் அருணா said...

/ All celebrity bloggers of india/
Ok Ok ...I'll try to write soon!!!:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

பா.ராஜாராம் said...

:-)

நசர், :-))

ஹுஸைனம்மா said...

//வலைப்பதிவில் நான் ஒரு சூப்பர் ஸ்டார்...சுப்ரீம் ஸ்டார்.//

அப்ப நாந்தான் “அல்டிமேட் ஸ்டாரா”? பட்டத்தை விட்டுக்கொடுத்ததுக்கு டாங்க்ஸ்!!

அமுதா said...

அழைப்புக்கு நன்றி முல்லை :-)