முதுகில் அமர்த்தி யானையாக வீட்டை வலம் வந்த பெரிய மாமா...
வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டித் தந்த பெரிய மாமா...
அமர்ந்து ஆட பெட்ஷீட்டை நாலாக மடித்து வைத்த பெரிய மாமா...
விரல்களில் மருதாணி தொப்பி வைத்துவிட்ட மாமா...
ஆட்டுக்காலை அம்மியில் தட்டி உள்ளிருப்பதை எடுத்து ஊட்டிவிட்ட மாமா...
மீன்முள்ளை முழுங்கியதும் வெறும்சாதத்தை உருட்டித் தந்து
முதுகை நீவி விட்ட மாமா..
அன்னங்கள் நெய்த திருபுவனம் பட்டை தேடித்தேடி எடுத்துத் தந்த மாமா....
சொல்லக் சொல்லக் கேட்காமல் ஒவ்வொரு லீவுக்கும்
ஹாஸ்டலுக்குப் பெட்டி தூக்கிய பெரிய மாமா...
எனக்குப் பிடித்த மாப்பிள்ளையை
நிறைவாக கட்டிவைத்துவிட்டு
தான் பார்த்த மாப்பிள்ளையை நான் கட்டாத குறையுடன்
விலகி ஒதுங்கிக் கொண்ட மாமா....
விவாகரத்தானது
தெரிந்தால்
மாமாவின் முறிந்த உறவு பழையதாகிவிடுமா?!
7 comments:
ஹும்ம்ம் ...நல்ல வரிகள், பாசமுள்ள உறவு என்றும் மாறாது.
இது எந்த தமிழ்படத்துல வர்ர சீன் பாஸ்?
:((
/* ☀நான் ஆதவன்☀ said...
இது எந்த தமிழ்படத்துல வர்ர சீன் பாஸ்?
*/
ரிப்பீட்டு
Nalla irukkunga...
தெலுங்கு படமா இருக்கும்
//Blogger நசரேயன் said...
தெலுங்கு படமா இருக்கும்//
இருக்கும்
Post a Comment