Tuesday, September 28, 2010

Who'd a thunk it?

ஆதிவீட்டிலிருந்து வந்த பப்பு சொன்னாள், “நான் ஆதியை அவங்கம்மாக்கிட்டே சொல்லி அடி வாங்க வச்சேன்”.

அதிர்ச்சியுடன், ”ஏன் பப்பு” - ஆயா

”ஆதி என்னை கிஸ் பண்ணான். ” - பப்பு.

ஆதி எங்கள் பக்கத்துவீட்டு பையன். “குறிஞ்சி அக்கா குறிஞ்சி அக்கா” என்று பப்புவின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பான். லீவு நாட்களில் இருவரும் மாறி மாறி அவரவர் வீடுகளில் விளையாடுவார்கள். (இந்த ஆதியை என்றோ ஒருநாள் தூக்கிக்கொஞ்சப் போய்தான் இன்னும் கிள்ளுகளையும், கடிகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறேன் பப்புவிடம். )எல்கேஜி படிக்கிறான். பப்புவின் மலையாளப் புலமையை வளர்ப்பதில் ஆதிக்கும், ஆதியின் ஆயாவிற்கு பெரும் பங்குண்டு.

”ஆதி உன்னை ஆசையா கிஸ் பண்ணியிருப்பான். பேபிதானே...பப்பு. ” - ஆயா

“தமிழ் டூ தமிழ் தானேப்பா கிஸ் பண்ணனும். அவன் மலையாளம். அதான் அவங்கம்மாக்கிட்டே சொல்லி அடி வாங்க வைச்சேன்”

who_would_have_thunk_it?

(யார் கிஸ் பண்ணனும்னெல்லாம் வீட்டுலே பேசிக்கிறதுல்லே...எப்போவாவது பிரைவேட் பார்ட்ஸ் பத்தி மட்டும் குளிக்கவைக்கும்போது சொல்றதுண்டுன்னாலும், இதெல்லாம் எங்கேருந்து கத்துக்கறாங்க??)

15 comments:

ஆயில்யன் said...

////அதான் அவங்கம்மாக்கிட்டே சொல்லி அடி வாங்க வைச்சேன்”/


எண்ட தெய்வமேஏஏஏஏஏஏஏ:((

கானா பிரபா said...

அவங்கம்மாக்கிட்டே சொல்லி அடி வாங்க வைச்சேன்”//

ஐயேடா, எண்ட குருவாயூர் பெரியப்பா :(

Thenral said...

Enna kodumai sir ithu........????!!!!!!

நட்புடன் ஜமால் said...

அதுவும் மலையாளம் என்பதால் அடி

எங்கிட்டிருந்து கத்துகிட்டாகலோ ...

வல்லிசிம்ஹன் said...

அடப்பாவமே அந்தப் பையன்:0)
இப்படிப்பட்ட வீராங்கனையை எப்படி வச்சுக் காப்பத்தப் போறீங்களோ முல்லை:))

காமராஜ் said...

samaththu marumakal

நசரேயன் said...

//தமிழ் டூ தமிழ் தானேப்பா கிஸ்
பண்ணனும். //

நியாயம் தான்

அன்புடன் அருணா said...

Nobody could thunk it!!!!

குடுகுடுப்பை said...

அதெல்லாம் கத்துப்பாங்க, இந்தியர்கள் மற்ற மொழிக்காரர்களை குறை கூறுவது நம் இரத்தத்தில் ஊறியது.

தமிழ்காரங்கெல்லாம் mean அப்படின்னு எம்பொண்ணுக்கூட ஒரு வடக்கத்தி பொண்ணு சண்டை போட்டு இப்பதான் சரியாகிருக்கு.

லெமூரியன்... said...

:) :) :)

இதெல்லாம் ரத்தத்தில் ஊறிப் போன உணர்வுங்க (தமிழுனர்வுதான்)
சொல்லி குடுக்கலாம் தேவை இல்ல....

\\“தமிழ் டூ தமிழ் தானேப்பா கிஸ் பண்ணனும். அவன் மலையாளம்........//

சமத்துப் பொண்ணு...!
:)

அம்பிகா said...

\\ வல்லிசிம்ஹன் said...
அடப்பாவமே அந்தப் பையன்:0)
இப்படிப்பட்ட வீராங்கனையை எப்படி வச்சுக் காப்பத்தப் போறீங்களோ முல்லை:))\\
:-)))

மாதேவி said...

அப்படியா பப்பு :)))

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா... டெரர் பப்பு :)

தீஷு said...

பப்பு, அந்த பையன் பாவம்டா!!

மருது said...

உணர்ச்சிவசப்படும் சில தமிழின வாதிகள் இங்கு பதிந்திருப்பது போல் அது ஒன்றும் இரத்தத்தோடு ஊறியது அல்ல.

இரத்தத்தோடு ஊறியது என்று கூறுபவர்கள் தமிழ்நாட்டில் தான் வேலை பார்க்கின்றனரோ ?.. தமிழ் படங்கள் தான் பார்க்கின்றனரோ ?.. இல்லை கணினியை தூக்கிப் போட்டுவிட்டு இன்னும் ஓலைச்சுவடியில் எழுதிக் கொண்டு இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

குழந்தைக்கு அது தவறு என்று அறிவுறுத்தியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தோழமையுடன்
செங்கொடி மருது