மீட்டிங்-லே கொட்டாவி மேல கொட்டாவியா வந்து கண்கள் தானாவே மூடிக்குமே...எப்போடா வீட்டுக்குப் போய் தூங்குவோம்னு இருக்குமே....அது மாதிரியான நாள் நேத்து.
பப்பு வழக்கம் போல சிரிப்பும் ஒரே தொணதொண பேச்சுமாக. எல்லாம் அடுத்த நாளைப் பற்றித்தான் - யெல்லோ டே!
“ப்லீஸ் தூங்கு பப்பு, நாளைக்கு பேசிக்கலாம்”
“ஹேய், நான் சும்மாதாம்ப்பா இருக்கேன்...தூங்கலாம்னு...என் வாய்தான் அதுவே சிரிக்குது”
!!
“இங்கே பாரு....வாய் சிரிக்குதுதானே...”
இருட்டில் அவள் சிரிப்பதை எப்படி பார்ப்பது..என் கையை எடுத்து அவள் வாய் மேலே வைக்கிறாள்.
அவ்வ்வ்வ்...ஆமாம், அது வாய் கொள்ளாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தது.
“ வாயை திட்டு ஆச்சி”
”ஷ்ஷ்.....ஏன் சிரிச்சிட்டே இருக்கே?” (ஸ்ப்பா..எ கொ ச !!)
”ஏன் சிரிக்கறே....பப்பு தூங்கணும் இல்லே...கொஞ்சம் நேரம் அமைதியா இருக்க மாட்டியா-னு திட்டு ஆச்சி”
””
”கொர்...கொர்...”
நானில்லை. பப்புதான் தூங்குவதாக குறட்டை சத்தம் விட்டு பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தாள்..இல்லையில்லை...பப்புவின் வாய்தான்!
“என்ன்ன்ன்ன்ன பப்பு?”
திரும்பவும் கதை.
“இந்த வாய் இருக்கு இல்லேப்பா...நான் வேன்லேருந்து இறங்கும் போது சொல்லுது..என் டாய்ஸ்ல்லாம் எடுத்துக்குமாம்ப்பா...வாய் எங்கேயாவது டாய்ஸ் எடுத்துக்குமா?......பப்புவின் வாய், வாயைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது...
17 comments:
அசத்தல்..
இந்தக்கமெண்டையும் நான் எழுதும் முன்னாலேயே என் கை எழுதிவிட்டது :-))
//என் வாய்தான் அதுவே சிரிக்குது//
:)!
இலக்கியவாதி பப்பு வாழ்க வாழ்க
//என் வாய்தான் அதுவே சிரிக்குது//
so sweet
////ஹேய், நான் சும்மாதாம்ப்பா இருக்கேன்...தூங்கலாம்னு...என் வாய்தான் அதுவே சிரிக்குது”////
பப்பு சொன்னதும் சரி அதை அப்படியே இங்கே சொன்னதும் சரி டாப்! :)
பப்புவைக் கூட பதிவெழுத சொல்லலாம் போலிருக்கே ...சோ ஸ்வீட்
வருங்கால பி.ந. பதிவர் பப்பு வாழ்க!
:-))
பப்பு பெரிய இலக்கிய சாதனை படைக்க்கப் போகிறாள். இந்தக் கும்மாளமும் குதூகலமும் எப்பவும் நிலைக்கணும் முல்லை.
என் வாய்கூட அதுவே சிரிக்குது!!!
:)) கடைசியில வாய் தூங்குச்சா இல்லையா பா?
/என் வாய்தான் அதுவே சிரிக்குது.//
வாழ்த்துகிறேன் பப்புவை.
உங்களை விடப் பெரிய எழுத்தாளரா வருவாங்க போல!! நல்ல கற்பனை வளம்!! :-)))
ஹி ஹி ஹி :-)
எவ்வளவு அற்புதமாக இயங்குகிறது பிஞ்சுமனம்
ஒரு கவிஞன் எப்போதாவது நனவிலிக்குள் சஞ்சரிப்பான் ஆனால் குழந்தை நனவிலியாகவே இருக்கிறது
//எனது வாய் பொம்மையை எடுத்துக்கொள்கிறது//
வார்த்தையை மட்டுமல்ல இந்த உரையாடலுக்குள் இழுக்கப்பட யாரையும் ஒர் கவிதையாய் மாற்றிவிடுகிற வல்லமை எப்போதும் குழந்தைக்குத்தான் வாய்க்கும்
இதை எதற்க்காகவோ யாரோ பப்புவிடம் சொல்லியிருக்கவேண்டும்
அவர்களின் சொல்லுக்குப்பின்பு மறைந்திருக்கும் உண்மையைமட்டும் தேடுங்கள் அவர்களை அவர்களாகவே விட்டுவிடுங்கள்
//பப்புவின் வாய், வாயைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது...//
நானும் வாயை மூடமுடியாம சிரிச்சுட்டிருக்கேன் :)
//என் வாய்தான் அதுவே சிரிக்குது//
அழகு..
Post a Comment