Sunday, July 22, 2012

முகங்கள்...முகங்கள்...சுவர் முழுக்க முகங்கள்!!

 திடீரென்று வீட்டில் எங்கு திரும்பினாலும் முகங்கள். சுவரில்,பேப்பர்களில் என்று எங்கு பார்த்தாலும் முகங்கள்..முகங்கள்!! 

பப்புவுக்கு ஒன்று சரியாக வரும்வரை திரும்ப திரும்ப செய்துக்கொண்டிருப்பாள்.  புதிதாக வாங்கிய பொம்மையிலிருக்கும் ஸ்க்ருக்களை கழற்ற வேண்டுமோ, பேட்டரியிலிருக்கும் ஒயர்களை பார்க்க வேண்டுமோ அல்லது புக் மார்க்குகள் செய்ய வேண்டுமோ எதுவாயினும், அதில் வெற்றியடையும் வரை/அவளுக்கு திருப்தி ஏற்படும் வரை  திரும்ப திரும்பச் செய்துக்கொண்டிருப்பாள். 
பொதுவாக, வரையச் சொல்லித்தரும் புத்தகங்களை வாங்கியதில்லை. புத்தகத்தினால், அவளது, க்ரியேட்டிவிட்டி பாதிக்கக்கூடாது என்று.


இந்த நேரத்தில், Ed Emberley-யின்  புத்தகங்களைக் காண நேர்ந்தது.  அதில் ஒரு டைட்டில், முகங்கள் - ’Ed Emberley's Drawing Book of Faces’!  வித்தியாசமாக இருக்கவே, வாங்கினேன். 



அந்த நேரம் பப்புவுக்கு டெர்ம் விடுமுறை.    விடுமுறைக்கு ஆம்பூருக்குச் சென்றிருந்தோம். டீவி பார்க்க பழகி விடுவாளோ என்று பயமாயிருந்தது. (2.5  வருடங்களாக வீட்டில் டீவி இல்லை!)  நல்லவேளை, ed emberley-யின் புண்ணியத்தில், முகங்களை வரைந்து தள்ளிவிட்டாள்!! 




கடந்த டிசம்பரிலிருந்து இந்த போஸ்ட் டிராஃப்டிலிருக்கிறது. இன்று கொஞ்சம் வெட்டியாக இருந்ததால், தூசு தட்டி போஸ்ட் செய்திருக்கிறேன். :-)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லாத் தான் இருக்குங்க...

ராமலக்ஷ்மி said...

இரண்டாவது படம் ஃபேஸ்புக்கில் பார்த்த நினைவிருக்கிறது. பாவம் அந்த உயரமான உருவம் ஏன் கண்ணீர் விட்டு அழுகிறது? பக்கத்திலிருக்கும் டாக்டர் ஊசி போடப் போகிறாரோ:)?

மூணாவதில் மூணு பேருக்கு குளிர் நடுக்குது போல. கம்பளியோடு நிக்கறாங்க:).

நைஸ், பப்பு!