ஆரம்பத்தில் அது இப்படி இருந்தது. விளையாட்டாகத்தான் ஆரம்பித்தது.
சிறிது நாட்களுக்குள்ளாக,
0 1 3 4 5 6 7 8 9 10 என்று மாறியது.
அதற்கு கொஞ்ச நாளைக்குப் பிறகு,
10 20 30 40 50 60 70 80 90 100
அதற்குப் பிறகு,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ....
அதற்குப் பிறகு,
2 4 6 8 10 12 14 16 18 20.....
அதன் நடுவில், அவ்வப்போது
1 3 5 7 9 11 13 15...
அதைத் தொடர்ந்து,
ஒன்று, இரண்டு, மூன்று,நான்கு,.........பத்து.
என்றும் மாறியது. அதோடு, ஏக் தோ தீன் கூட!
அதற்கு கொஞ்சநாளைக்குப் பிறகு,
100 200 300 400 500 600 700 800 900 1000
அதைத்தாண்டி,
101 102 103 104 105 106 107 108 109 110 ,,,,
பிறகு அது இப்படி ஆயிற்று,
1000,2000,3000,4000........மில்லியன்,பில்லியன்,ட்ரில்லியன்..
அதைத் தொடர்ந்து,
20+20=40, 40+40=80,80+80=160, 160+160=.......
கொஞ்ச நாள் கழித்து,
100,99,98....... என்றும் அவ்வப்போது,
10,9,8..... என்றும் ஆனது.
அதற்குப் பிறகு, திடீரென்று ஒருநாள்
1+10=, 2+9=, 3+8=,4+7=ன்னு சொல்லு என்றாகியது.
"என்ன, எல்லாமே '11 ' வருதா, நானே கண்டுபிடிச்சது" என்றாய்.
'எப்படியோ, வேலை முடிந்தால் போதும்' என்று என்று ஓடிக்கொண்டேயிருக்கும் கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருப்பேன்.
"ஆச்சி, நம்பர்ல்லாம் எப்படி நிக்காம ஓடிக்கிட்டே இருக்கும் இல்ல, அது மாதிரி உனக்கு,ஆயாவுக்கு, நம்ம ஃபேமிலிக்கு, தோழர்களுக்கு எல்லாம் வயசு ஓடிக்கிட்டே இருக்கணும். 100 இயர்ஸ் ஆனாலும் யாரும் செக்கவே கூடாதுன்னு நினைக்கறேன்" என்கிறாய்.
எப்படியோ, பள்ளி சேர்ந்து மூன்றரை வருடங்கள் ஆனாலும், காலையில் ஏழு மணிக்கு உன் கையில் ஒரு டம்ளர் பாலைக்கொடுத்துவிட்டு, நீ குடிக்கும்வரை ( or vice versa) உன் முன்னால் நின்றுக்கொண்டு இந்த நம்பர்களை எல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது மட்டும் எப்போது நிற்கும்(!) என்று நினைத்துக்கொள்கிறேன் நான்.

Anyway, தொடர்ந்து வளர்ந்துக்கொண்டே இருக்கும் இந்த எண்களைப்போல, நீயும் வளர வாழ்த்துகள்,பப்பு! இந்த வருடமும், நிறைய கற்றுக்கொள்ளவும், அறிந்துக்கொள்ளவும் நண்பர்களைப் பெறவும் வாழ்த்துகள்!! :-)
2 comments:
அருமையானதொரு பகிர்வு !
எங்கள் வாழ்த்துகளும் பப்பு:)!
Post a Comment