Friday, July 30, 2010

Bubble Art

கண்ணாடி போன்ற சோப்புக் குமிழ்களை விடுத்து வண்ண வண்ண சோப்புக்குமிழ்கள் செய்ய முடிந்தால் - பபிள் ஆர்ட் (ஐடியா ஃப்ரம் இணையம்)! கடையிலிருந்து வாங்கிய பபிள் கரைசலோடு சிறிது வாட்டர் கலர்களை கரைத்துக் வெவ்வேறு கிண்ணங்களில் கொடுத்தேன்.பப்பு, குமிழ்களை காற்றில் விட அதை பேப்பரில் சேமித்தேன். இது நல்ல விளையாட்டாக இருந்தது - பப்புவுக்கு! அவள் காற்றில் பறக்க விட்டதும் ஓடிப் போய் நாந்தானே பிடிக்க வேண்டும்.மீதி பேப்பர்களை கீழே வைத்து குமிழ்களை மெதுவாக பேப்பரை நோக்கி செலுத்தி வெடிக்க விட்டாள். நீலம், பச்சை மற்றும் மஞ்சள். வழக்கம்போல எல்லா வண்ணங்களையும் ஒன்றாகக் கலந்து கருப்பு வண்ணம் கொண்டு வந்து கருப்புக் குமிழ்களையும் உருவாக்கினாள்.சிறிது நாட்களுக்கு முன்பு உடையாத சோப்புக் குமிழைப் பற்றி, காடு மலைகளை சுற்றி செல்லும் ஒரு சோப்புக்குமிழைப் பற்றி படித்த கதையைப் நினைவு கூர்ந்தோம்.

தொடர்ந்து, பள்ளிகூடக் கதைகளைச் சொல்லத் தொடங்கினாள்.


“நவ்ஜோத் இல்லப்பா, அவனுக்கு வலிக்கவே வலிக்காது. கிள்ளினா கூட வலிக்காது. அடிச்சாக் கூட வலிக்காது. சண்டைப் போட்டாக் கூட வலிக்காது” - பப்பு

” ஓ, ஏன்?”

”செமையா கிள்ளினாக் கூட அவனுக்கு வலிக்காது. செமையா அடிச்சா..செமையா சண்டையா போட்டாக் கூட வலிக்கவே வலிக்காது” - பப்பு

“ஆ!! எப்படி பப்பு?” - நிஜமாகவே ஆர்வமாக இருந்தது எனக்கு.

ஒரு நொடி - என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

“அவங்கம்மா அவனை அப்ப்ப்ப்ப்டி வளக்கறாங்க!”

ஹலோ நவ்ஜோத் அம்மா, அடுத்த பேரண்ட்ஸ் மீட்டிங்கில் தங்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். :-)

22 comments:

அமைதிச்சாரல் said...

//“அவங்கம்மா அவனை அப்ப்ப்ப்ப்டி வளக்கறாங்க!”//

பப்புக்குட்டி... ஐ லவ் யூடா செல்லம் :_))))))))))))))))

தமிழ் பிரியன் said...

:))
எங்க வீட்ல ”டீச்சர் என் கன்னத்தைப் பிடிச்சிக் கிள்றாங்க... வந்து என்னன்னு கேளுங்க”ன்னு டெய்லி பஞ்சாயத்து நடக்குது.. :)

அம்பிகா said...

எப்படி பப்பு இப்படி ....?

``Bubble Art"- nice

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

Uma said...

“அவங்கம்மா அவனை அப்ப்ப்ப்ப்டி வளக்கறாங்க!”

தாங்கமுடியலை...ROTFL :)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

:))

பின்னோக்கி said...

அழகான மாடர்ன் ஆர்ட். நல்ல உடற்பயிற்சி. நல்லாத்தான் வளர்த்துருக்காங்க பையன. அப்புறம் எப்படி இதெல்லாம் தெரியும்னு உங்க பொண்ண கேட்கலையா ? :)

☀நான் ஆதவன்☀ said...

//”செமையா கிள்ளினாக் கூட அவனுக்கு வலிக்காது. செமையா அடிச்சா..செமையா சண்டையா போட்டாக் கூட வலிக்கவே வலிக்காது” - பப்பு//

:)))) பாஸ் பப்பு & ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து அவனை “நீ ரொம்ம்ம்ம்ம்ப நல்லவண்டா”ன்னு சொல்லியிருப்பாங்க போல. அவனும் வலிக்காத மாதிரியே நடிச்சிருப்பான் பாஸ் :)))

கோமதி அரசு said...

பப்பு,நவஜோத் மாதிரி எல்லோரும் இருந்தால் வாழ்வில் பிரச்சனைகளே இல்லை.

நல்லபையனுக்கு வாழ்த்து!

குட்டிம்மாவின் சோப்பு குமிழ் ஒவியம் நல்லா இருக்கு.

ஜெயந்தி said...

மாடர்ன் (பபுல்) ஆர்ட் சூப்பர்.

சின்ன அம்மிணி said...

//அவங்கம்மா அவனை அப்ப்ப்ப்ப்டி வளக்கறாங்க!” //

Punch line super Pappu :)

ஆயில்யன் said...

ஹைய்ய்ய் இது நான் குட்டிபையனா இருக்கறச்ச கிளாஸுல பக்கத்து சீட் பசங்க புக்கில இங்க் அடிச்சு மடிச்சு வைச்சு விளையாடுற விளையாட்டு மாதிரியே இருக்கே !!!!

ஆயில்யன் said...

/// தமிழ் பிரியன் said...

:))
எங்க வீட்ல ”டீச்சர் என் கன்னத்தைப் பிடிச்சிக் கிள்றாங்க... வந்து என்னன்னு கேளுங்க”ன்னு டெய்லி பஞ்சாயத்து நடக்குது.. :///


அதுக்குத்தான் நான் இப்பவே ஊருக்கு கெளம்புறேன்னு பதறிக்கிட்டிருக்கீரா ஓய்???

கானா பிரபா said...

ஹலோ நவ்ஜோத்

நீங்க ரொம்ப நல்லவங்க ;)


சித்திரமும் கைப்பழக்கம், கலக்கல் பப்பு

பாட்டி பேரவை
சிட்னி

அமுதா said...

பபிள் ஆர்ட் அழகு

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

இது தான் பெரிய பல்புன்னு நினைக்கிறேன் ...

------------------------

பள்ளிக்கூட நாட்களில் ink bottleலில் நூல் தோய்த்து நோட்டு புத்தகங்களை வீண்டித்த நினைவுகள் வருது ...

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

இது தான் பெரிய பல்புன்னு நினைக்கிறேன் ...

------------------------

பள்ளிக்கூட நாட்களில் ink bottleலில் நூல் தோய்த்து நோட்டு புத்தகங்களை வீணடித்த நினைவுகள் வருது ...

காமராஜ் said...

ரெண்டு பேருக்கும் அன்பு.

சரி இனி ஒரு அடர்த்தியான கட்டுரை வரும் காத்திருக்கிறோம்.இல்லையா முல்லை.

காலம் said...

நல்லா திட்டு பப்பு அப்பவாவது புத்தி வருதான்னு பார்ப்போம்

அப்புறம் நான் ஐய்ஸ்கிரீம் வாங்கி தந்தாங்களா இல்லையா??

ponraj said...

சித்திரம் பேசுது!!

பூங்குழலி said...

அது நல்ல விளையாட்டாக இருந்தது -பப்புவுக்கு!

நமக்கு நல்ல உடல் பயிற்சின்னு எடுத்துக்க வேண்டியது தான்,,..

//”செமையா கிள்ளினாக் கூட அவனுக்கு வலிக்காது. செமையா அடிச்சா..செமையா சண்டையா போட்டாக் கூட வலிக்கவே வலிக்காது” - //

சில குழந்தைகள் இதை ஒரு வகை ரெசிஸ்டென்ஸாக செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் .என் மகன் கூட அடித்துக் கொண்டே இருந்த ஒரு மிஸ் அடிக்கும் போது அழவே மாட்டானாம் .அதற்கு அந்த மிஸ் "என்னடா ஒனக்கு வலிக்கவே வலிக்காதா ?" என்று கோபப்படுவார்களாம்.என்னிடம் சொல்வான் ,"நா மனசுக்குள்ளேயே எனக்கு வலிக்கல வலிக்கல ன்னு சொல்லிக்குவேன் ".வகுப்பில் சென்று பேசிய பின்னே இது முடிந்தது .

narumugai said...

கலக்கல்..வாழ்த்துக்கள்..

www.narumugai.com