Monday, July 26, 2010

பப்பு - தி எக்ஸ்ப்லோரர்

வழக்கமான பார்க், வண்டலூர் ஜூ அல்லது எப்போதும் போகும் வாக்கிங் பாதைகள் என்று கொஞ்சம் போரடித்தது. வானத்து வரைக்கும் வீடு கட்டி நிலாவை தொட முடியுமா, கடலுக்கு உள்ளே எவ்ளோ தூரம் போக முடியும், நீ தொலைஞ்சே போக மாட்டியா என்று பப்பு கேட்டுக்கொண்டிருந்தபோது தோன்றியது இது.

ஓ, ஜாலியா தொலைந்து போகலாமே?!!

தாயக்கட்டை காட்டும் திசையில் நடந்து சென்று எங்காவது தொலைந்து வந்தால் என்ன?

DiceWalk!
familyfun இல் இருந்து பிரிண்ட் எடுத்துக்கொண்டோம். அதில் சொன்னபடி ஒட்டினால் தாயக்கட்டை ரெடி.நிறைய சாலைகள் பிரியும் இடமாக தேர்ந்தெடுத்துக்கொள்வது நலம். (விரைவில் திரும்பி வர முடியாது!! ) தாயக்கட்டையை பப்பு வீசி எறிய ஒரு திசையை சுட்டியபடி வீழ்ந்தது. ஆனாலும், அவளுக்கு எந்த திசை வேண்டுமோ அதன்படி திருப்பி வைத்துக்கொண்டாள். அவள் இஷ்டப்படி இரு தடவைகள் நடந்தோம். அது இரண்டுமே சற்று தெரிந்த வழிகள்.

நாற்கர சாலைகளில் வீசி எறிய இப்போது தாயக்கட்டையின் வழி நடந்தோம். இரண்டு சாலைகள் வந்தால் சொல்லாமலே தாயத்தை வீசினாள். எங்கெங்கோ கிளைகள் பிரிந்து முடிவில் எங்கிருக்கிறோமென்றே தெரியாத சாலைகளில் நடந்துக் கொண்டிருந்தோம்.


இருபுறமும் மரங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும், இதமான காலை வெயிலுமாக - நன்றாகவே இருந்தது. ஹவுஸிங் போர்ட் குடியிருப்பு பாணியிலான வீடுகளை பார்த்துவிட்டு பப்பு ”ஆம்பூர் ஆயா வீட்டுக்கு வந்துட்டோமா?” என்றாள். ”வந்தா நல்லாதான் இருக்கும்” என்றேன் (பிரியாணியை நினைத்தபடி).

பசி வயிற்றைக் கிள்ளவே, back track செய்து திரும்பினோம்.

விருப்பமிருந்தால் உங்கள் வீட்டு குட்டீஸுடன் முயன்று பார்த்து உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்!

(”சித்திரக்கூடத்தில்” அப்டேட் இல்லாதபோது மடலிலும்,பின்னூட்டத்திலும் தொடர்பு கொண்டு விசாரித்த/எங்களை நினைத்துக்கொண்ட அன்புள்ளங்களுக்கு நன்றியும் எங்களின் அன்பும்!)

14 comments:

அமைதிச்சாரல் said...

ஹா..ஹா..ஹா.. நல்லா ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க.

மயில் said...

:))) முல்லை யு ஆர் தெ க்ரேட் மாம் :)

ஆயில்யன் said...

ஆஹா சூப்பர் ஐடியாவாச்சே! செம த்ரில்லிங்!

எனக்கும் இப்படி பஸ் பிடிச்சு பிறகு பேர் தெரிஞ்சுக்காமலே ஊர் மாறி மாறி எங்கயாச்சும் போய்ட்டு வரணும்ன்னு நொம்ப்ப்ப ஆசை !

சென்ஷி said...

:)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இரண்டு சாலைகள் வந்தால் சொல்லாமலே தாயத்தை வீசினாள்.//
:)

நல்லா இருக்கு... முயற்சிக்கிறோம்..

Deepa said...

Wow! super creative idea...thanks!
//வானத்து வரைக்கும் வீடு கட்டி நிலாவை தொட முடியுமா, கடலுக்கு உள்ளே எவ்ளோ தூரம் போக முடியும், நீ தொலைஞ்சே போக மாட்டியா//

hey Pappu! ethukku antha last question? Amma torturing you??!
:)))

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஆச்சி,
எங்க போனீங்க ரெண்டு வாரமா?
பிரியாணி சாப்பிடுவதிலேயா குறி, நம்ம சின்னபாண்டி மாதிரி?

சின்ன அம்மிணி said...

//ஓ, ஜாலியா தொலைந்து போகலாமே?!! //

நான் நியூஸி போன புதுசில தனியா வாக்கிங் போயி ஒரு வீதி முன்னாடி திரும்பி தொலைஞ்சு நானே என்னை கண்டுபிடிச்சுக்கிட்டேன் :)

நசரேயன் said...

முயற்சி செய்யணும்

☀நான் ஆதவன்☀ said...

:)))))) நல்ல அனுபவம் போங்க :)

அன்புடன் அருணா said...

ஆஹா!கொஞ்சம் தொலைஞ்சுட்டு வரலாமே!!!!!சூப்பர்!

அமுதா said...

அட!!! இது சுவாரசியமான தொலைதலா இருக்கே!!! I too will get lost :-))

நட்புடன் ஜமால் said...

நல்ல ஐடியா :)

காலம் said...

தொலைதல் எப்போதும் நம்மை நாமே கண்டுபிடித்தலுக்கு சமமானதாகும்