Wednesday, July 14, 2010

பாலூட்டி வளர்த்த parrot!!


(பப்பு @ எறும்பு அரண்மனையை பார்க்கும்போது)

வர்ஷினி பப்புவை வீட்டுக்கு வரச் சொன்னாள் என்று தினமும் சாயங்காலத்தில் பஜனை பாடிக்கொண்டிருந்தாள், கடந்த வாரம் முழுதும் . 'வீக் எண்டில் போகலாம் பப்பு' என்றாலும் கேட்பதில்லை. 'நான் வழி கேட்டுட்டு வந்திருக்கேன், போலாம் வா - ஃப்ர்ஸ்ட் லெஃப்ட் அப்புறம் ரைட் அப்புறம் ஸ்ட்ரெய்ட்' என்று ஒரே தொணப்பல். ”நீ வர்ஷினியை வீட்டுக்கு கூப்பிடு “ என்றால் “நாந்தான் ஃப்ர்ஸ்ட் அவ வீட்டுக்கு போணும்” என்று பதில். இரண்டு நாட்களாக இதே புலம்பலாக இருக்கிறதே என்று அழைத்துச் சென்றேன். அப்போதே மணி ஏழுக்கு மேலாகி இருந்தது. 'இப்படில்லாம் யாரையும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது, அவங்க ஃப்ரீயா இருக்காங்களான்னு கேட்டுட்டுதான் மத்தவங்க வீட்டுக்கு போகணும்' என்று சிக்னலுக்காக நின்ற போது சொல்லிக்கொண்டிருந்தேன்.

”வர்ஷினியோட அம்மா எவ்ளோ 'குட்'டா இருக்காங்க, நீ ஏன் இப்படி இருக்கே? ”

பக்கத்தில் இருந்த ஸ்கூட்டி ஆண்ட்டி திரும்பிப் என்னை பார்த்தார். இந்த பக்கத்திலிருந்த பைக் தம்பதியினரும் ! மீ த ஙே !?!

“ஏன் பப்பு, எப்படி இருக்கேன்” - ரொம்ப பாவமாக கேட்டேன்.

“சொல்றதை கேக்காம இப்படி இருக்கே, வர்ஷினி அம்மா எப்படி சொல்றதை எல்லாம் கேக்கறாங்க...குட்டா, நீ ஏன் Bad-ஆ இருக்கே?”

பெரிம்ம்ம்ம்மா....எங்கே போனீங்க?

குழந்தைங்களை எப்போவும் கம்பேர் பண்ணக்கூடாதுன்னு எனக்குச் சொன்னீங்களே... அம்மாங்களை கம்பேர் பண்ணக் கூடாதுன்னு பப்புக்கு சொன்னீங்களா?!!

அப்புறம் இன்னொரு முக்கியமாக விஷயம், டிராஃபிக்லே நிக்கும்போது குழந்தைகளுக்கு அட்வைஸ் பண்ணாதீங்க...

அப்படியே எந்த அம்மாவாவது அட்வைஸ் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தால் அவர்களை திரும்பிப் பார்த்து இன்னும் தர்மசங்கடத்திற்குள்ளாக்காதீர்கள்...ப்லீஸ்!
பப்புவின் இந்த வருட முதல் ஃபீல்ட் ட்ரிப் கடந்த சனிக்கிழமையன்று முடிந்தது. அனுப்பும்போது இந்த முறை எனக்கு அவ்வளவாக கவலை/படபடப்பு இல்லை. கொடுத்த உணவை சாப்பிட்டு வர வேண்டுமேயென்று மட்டும் தோன்றியது. திரும்பி அழைத்து வரச் சென்றபோது அவளது பையைப் பார்த்து கிட்டதட்ட நான் மயக்கமடைந்துவிட்டேன். பைக்குள் ஒரு குட்டை - ஃபீல்ட் ட்ரிப்பில் பீல்ட்டிலிருந்த மணலெல்லாம் பைக்குள். பாட்டிலிலிருந்த தண்ணீர் எல்லாம் ஊற்றி கரைசலாக தேங்கியிருந்ததைப் பார்த்தபோது கவலை/படபடப்பின் அடுத்த லெவல் புரிந்தது.

20 comments:

மயில் said...

ம்ம்ம்க்கும்..நான் எதாவது சொன்னா வர்ஷா சொல்ற டயலாக் அநியாயத்துக்கு அறிவாளியா இருக்கியே விசாலாட்சின்னு :((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கலக்கல்ங்கோ..:)

Deepa said...

ஹா ஹா ஹா!
பப்பு த டெரர்..கேட்டாளே ஒரு கேள்வி!
முன்னல்லாம் குழந்தைங்களைக் கம்பேர் பண்ணி அம்மாக்கள்d மிரட்டறது அப்படியே மாறிப் போச்சா?

பப்பு ட்ரெஸ் செம க்யூட், நல்லா உயரம் வெச்சிருக்கா...
:)

ராமலக்ஷ்மி said...

//பப்பு @ எறும்பு அரண்மனையை பார்க்கும்போது//

சூப்பர்:))!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

:-)

"1000lights"

hi hi! nothing but

aayiram balbu!!!

சின்ன அம்மிணி said...

//சொல்றதை கேக்காம இப்படி இருக்கே, வர்ஷினி அம்மா எப்படி சொல்றதை எல்லாம் கேக்கறாங்க...குட்டா, நீ ஏன் Bad-ஆ இருக்கே?” /

இந்தியாவே ஒளிரும் அளவுக்கு பல்ப் வாங்கி இருக்கீங்க :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

///இந்தியாவே ஒளிரும் அளவுக்கு பல்ப் வாங்கி இருக்கீங்க :)/// -Blogger சின்ன அம்மிணி

இதை யாராலும் மறுக்க முடியாது ஆச்சி

அம்பிகா said...

\\”வர்ஷினியோட அம்மா எவ்ளோ 'குட்'டா இருக்காங்க, நீ ஏன் இப்படி இருக்கே? ”\\

பப்பு சொன்னா கேளுங்க.

அன்புடன் அருணா said...

/குழந்தைங்களை எப்போவும் கம்பேர் பண்ணக்கூடாதுன்னு எனக்குச் சொன்னீங்களே... அம்மாங்களை கம்பேர் பண்ணக் கூடாதுன்னு பப்புக்கு சொன்னீங்களா?!! /
point noted !!!

காமராஜ் said...

பப்புவுக்கு அன்பு.

நசரேயன் said...

உலக மகா பல்ப் வாங்கி இருக்குகீங்க

காலம் said...

அதானே அம்மா தலைக்குள் இருப்பது எப்படி பப்புவின் பைக்குள் வந்தது
எனக்கும் ஒரே படபடப்பாய்தான் இருக்கு

செல்வநாயகி said...

I love pappu:))

மணிநரேன் said...

:)

Jaffer said...

பொதுவா இப்போ நம் பிள்ளைகளின் IQ அதிகம். எம்பொண்ணு என்னைக் கேட்கிறா உங்களுக்கு அல்ஜிப்ரா தெரியுமான்னு...

மீ த ஙே!

ஜெயந்தி said...

//அப்படியே எந்த அம்மாவாவது அட்வைஸ் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தால் அவர்களை திரும்பிப் பார்த்து இன்னும் தர்மசங்கடத்திற்குள்ளாக்காதீர்கள்...ப்லீஸ்! //
:)

pinkyrose said...

wow!

தீஷு said...

ஏன் முல்லை bad அம்மாவா இருக்கீங்க?

மாதேவி said...

பப்பு படம் கலக்கல். வாழ்த்துகள்.

அமைதிச்சாரல் said...

ஏங்க பப்பு சொல்றத கேக்க மாட்டேங்கிறீங்க :-)))