இரண்டு நாட்களுக்கு முன், ரத்த பரிசோதனைக்கு செல்ல வேண்டியிருந்தது.
காலையிலேயே செல்ல வேண்டியிருந்ததால், இரவே பப்புவிடம் தயார்படுத்த
ஆரம்பித்தேன்..
"பப்பு, நீயேதான் காலையில ரெடியாயிருக்கணும். நான்,
காலையிலேயே டெஸ்ட்க்கு போணும். உனக்கு கிளம்ப ஹெல்ப் பண்ண முடியாது.
எழுப்புனவுடனே எழுந்துக்கோ...நான் வந்ததும், நீ ரெடியா இருந்தாதான்,
ஸ்கூலுக்கு போக சரியா இருக்கும்..இல்லேன்னா, நீ லீவ்தான்..அப்புறம்,
ஸ்கூலுக்கு போக முடியாது"
.......
மாலையில், பரிசோதனை
ரிப்போர்ட்டுகளை வாங்கிக்கொண்டு வந்தேன். அந்த ரிப்போர்டுகளை கையில் வைத்து
புரட்டியபடி, பெரிம்மா கேட்டவற்றிற்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன். என்
கைகளில் இருப்பதை பார்த்துவிட்டு ஓடிவந்தவள், மூச்சிரைக்க கேட்டாள்..
"ஹேய், ரிசல்ட் வந்துடுச்சாப்பா....எவ்ளோ நாள் உயிரோட இருப்பே?"
அவ்வ்வ்வ்வ்வ்!
"ஆச்சி,இங்க பாருப்பா... மாடு, டாக்ல்லாம் இருக்குல்லப்பா.... அது
கண்ணுக்குல்லாம் கலர்சே தெரியாது. எல்லாம் பிளாக் &ஒயிட்டாதான்
தெரியும். தெரியுமா? குடையெல்லாம் அது முன்னாடி நாம ஓபன் பண்ணா அதுக்கு
எப்படி தெரியும்? கருப்பாக தெரியும் இல்ல ஆச்சி!ஆனா,மாடு க்கு ரெட் கலர்
பார்த்தால் எப்படி முட்ட வரும்... அதுக்குதான் கலர் தெரியாதே? எப்படி
ஆச்சி?"
??
இப்போ பப்புவோட டர்ன்னு நினைக்கிறேன்... #இது_கூடவா_உனக்கு_ தெரியாது?
"ஆச்சி,நானே ஒரு proverb உருவாக்கியிருக்கேன்ப்பா.சொல்லட்டா..
A kite without its tail can't fly.
Meaning-
A man without knowledge can't work."

No comments:
Post a Comment