காலையில்,
பள்ளிக்கூட பையை எடுத்து மாட்டும் போதுதான் கவனித்தேன். பையின்
ஜிப்பிலிருந்து, ஒரு கீ செயின் ஆடிக்கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால்
காம்பஸ்.
"காம்பஸை ஏன் ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு போறே?" - நாந்தான். ('ஒன்னு புதுசா வாங்கிடக்கூடாது. உடனே ஸ்கூல்ல எடுத்துட்டு போய் காட்டி, அதை ரிப்பேராக்கிட்டு வரணும்!' - மைண்ட்வாய்ஸ்)
" மாஸ்டர் கேட்டாருப்பா" - பப்பு
"என்னது, காம்பஸையா? எதுக்கு கேட்டாரு?" நாந்தான். (இந்த இடத்துலே டவுட் வரணுமே!) ;)
"இல்லப்பா, நான் நார்த் சவுத் பார்த்துக்கிறதுக்கு" - பப்பு
"அதுக்கு எதுக்கு, இது இப்போ?..எடுத்து வை..நாம ஊருக்கு எங்கியாவது போகும்போது எடுத்துக்கிட்டு போலாம். சொன்னா கேளு" - மீ
"இல்லப்பா, நான் எங்கே இருக்கேன், எந்த டிரக்ஷன்லே போறேன்னு பார்த்துக்கிறதுப்பா..ஸ்கூல்ல எங்கே இருக்கேன்னு தெரிஞ்சுக்கலாம் இல்ல" - பப்பு
"நீயே யோசிச்சிக்கோ! இது கண்டிப்பா ஸ்கூலுக்கு வேணுமான்னு! ஸ்கூல் போற வரைக்கும் உனக்கு டைம்" -
என்று சொல்லிவிட்டு விட்டுவிட்டேன்.
மாஸ்டர் காம்பஸை ஏன் கேட்டார்? அதான், எப்படியும் ஸ்கூல் போற வரைக்கும் டைம் இருக்கே!

"சரி, ஸ்கூல் வந்ததும் காம்பஸை எடுத்து குடுத்துடு, வீட்டுல பத்திரமா வைக்கிறேன். காம்பஸ் கிடைக்காம எங்கெல்லாம் தேடினோம்...கஷ்டப்பட்டு வாங்கினதுதானே!" - மீ
"இல்லப்பா..மாஸ்டர் நார்த் எதுன்னு கேட்டா எனக்கு தெரியலை...அதான்.." பப்பு
ஓ!! அதுதானா விஷயம்!..ம்ம்...அதுக்கு காம்பஸ்!
"என்னது...உனக்கு தெரியாதா? நீதான் படிச்சிருக்கே இல்ல...மறந்துட்டியா? சொல்லு...சூரியனை பார்த்து நில்" - மீ
"எனக்கு தெரியும்...எங்க ஸ்கூல்ல இருக்கு" - பப்பு
"ம்ம்..சொல்லு" - மீ
"சூரியனை பார்த்து நில்...உன் இரண்டு கையையும் இரண்டு பக்கம் நீட்டு" - பப்பு
"ம்ம்.." - மீ
"உன் இடக்கு பக்கம் வடக்கு..
வடக்கு பக்கம் தெற்கு" - பப்பு
"ம்ம்?? என்னது?" - அதிர்ச்சியுடன் மீ!
"ம்ம்...தேற்கு?" - பப்பு (சரியா சொல்றாங்களாம்!)
"ம்ம்ம்ம்?" - மீ
"வடக்கு பக்கம் தேற்கு?" - பப்பு (கான்ஃபிடன்ட்டாக வந்தது பதில்)
"என்னப்பா சொல்றே?" - மீ ( 'கன்ட்ரோல் த கோவம்...இப்போ கோவப்பட்டு பிரயோசனம் இல்ல...' - மைண்ட்வாய்ஸ்)
ரொம்ப கஷ்டப்பட்டு, வந்த துக்கத்தை தொண்டைக்குள்ளேயே அழுத்தி முழுங்கினேன்.
"போப்பா..எனக்கு தமிழ்லே சொல்லவே தெரில... இங்கிலீஷ்லே சொல்லித்தா..அதை" - பப்பு
"அதை எப்படி இங்கிலீஷ்லே சொல்லுவாங்க...நீதான் புரிஞ்சுக்கணும். நார்த்னா என்ன" - மீ
"அதை ஃபுல்லா எனக்கு இங்கிலீஷ்லே சொல்லு..." - பப்பு
"சூரியனை பார்த்து நில், உன் இரண்டு கைகளையும் இரண்டு பக்கம் நீட்டு..இதெல்லாம் நீயே இங்கிலீஷ்லே சொல்லிக்கோ. ரைட் ஹான்ட் எது? அதுதான் வலது. வலது பக்கம் தெற்கு. லெஃப்ட் ஹாண்ட் தான் இடது. இடது என்ன? - மீ
"இடக்கு பக்கம் வடக்கு" - பப்பு (திரும்ப...திரும்ப...)
"இடக்கு இல்ல..இடக்கை பக்கம் வடக்கு" - மீ
.....
"இதுகூட தெரியலையா உனக்கு? ஏன் மாஸ்டர் கேட்டப்போ சொல்லலை?" - மீ
"மாஸ்டர் கிளாஸ் ரூம்லே கேட்டாருப்பா..அங்கே எப்படி எனக்கு ஈஸ்ட் வெஸ்ட்ல்லாம் தெரியும்? சூரியனை பார்த்தாதானே தெரியும்" - பப்பு
ஓ!!
ஒருவழியாக, பள்ளியும் வந்துவிட்டது. வாசலிலியே, காம்பஸை எடுத்து என்னிடம் தருமளவு மனம் மாறிவிட்டாள்.
"இரு, நான் பார்த்துட்டு குடுத்துடறேன்" என்று காம்பஸை எடுத்து நேராக நின்று பார்த்தாள். அது சவுத்வெஸ்ட் என்று காட்டியது. :))
காம்பவுண்டிற்கு, உள்ளே சென்று பார்க்கலாம் என்று அவளது வகுப்பறை இருக்கும் திசையில் நிற்க வைத்து, திசைகளை பார்த்துக்கொண்டோம். நார்த்தை மட்டுமே அவள் கவனித்தாள். மீதி கவனமெல்லாம், குழந்தைகளை விட்டுச்செல்லும் பெற்றோர்கள் இதை கவனிக்கிறார்களா என்றுதான்! அடக்கமட்டாமல், "இதான் உங்க கிளாஸ்லேருந்து நார்த், இது ஈஸ்ட்" என்று மீதியை நாந்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்.
உடனே, காம்பஸை தன் கைகளால் பொத்தி என் கைகளில் புதைத்துவிட்டு,
"சரி சரி...எனக்கு தெரியும்...ஈஸ்ட் ஆர் வெஸ்ட்..ஹோம் ஈஸ் த பெஸ்ட்...நீ இப்போ வீட்டுக்கு போ!" என்று சொல்லிவிட்டு படிகளில் ஏறத்துவங்கினாள்!!
"காம்பஸை ஏன் ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு போறே?" - நாந்தான். ('ஒன்னு புதுசா வாங்கிடக்கூடாது. உடனே ஸ்கூல்ல எடுத்துட்டு போய் காட்டி, அதை ரிப்பேராக்கிட்டு வரணும்!' - மைண்ட்வாய்ஸ்)
" மாஸ்டர் கேட்டாருப்பா" - பப்பு
"என்னது, காம்பஸையா? எதுக்கு கேட்டாரு?"

2 comments:
ரசித்தேன்...
ஹோம் ஈஸ் த பெஸ்ட்...!
Super!
Post a Comment