காலையில தட்டுல இட்லியை வைச்சுட்டு, 'நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள சாப்பிட்டுட்டு ரெடியா இருக்கணும்"னு சொல்லிட்டு போறேன்.
"சிவாஜீஈஈஈ...வீ ஹாவ் கேப்சர்ட் யுவர் புரந்தர் ஃபோர்ட்"
"ஏய்...இப்ப நிறுத்த போறியா இல்லையா? என்ன சொன்னேன் உன்கிட்டே?"
"யெஸ், ஐ நோ! ஐ ஹாவ் டூ திங்க் அபவுட் இட்.சம்பாஜிஈஈஈ..."
"நிறுத்து...அஞ்சு நிமிசத்துல வருவேன்...தட்டு காலியா இருக்கணும்"
......
#ஸ்ப்ப்ப்பா
இது முடிஞ்சுதுன்னு ஸ்கூலுக்கு போய்க்கிட்டு இருக்கோம்.
"ஆச்சி, சிவாஜியும், அக்பரும் ஒரே காலத்துல இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?யாரு வின் பண்ணியிருப்பா?" - பப்பு
"...சிவாஜிதான்!"
"எப்படி சொல்றே?" - பப்பு
"சும்மாதான்...சிவாஜி clever இல்ல.அதான் அப்டி தோணுச்சு"
"ஹிஹிஹி...இல்ல,ஆச்சி..ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகியிருப்பாங்க." - பப்பு
'அட.... இது எனக்கு தெரியாம போச்சே லுக் '
"சிவாஜி
மவுடெய்ன் ராட்- னாலும், அக்பர்தான் வின் பண்ணியிருப்பார். அக்பர்,
வெறும் கையாலயே வாளை எல்லாம் உடைச்சிடுவார். ஔரங்கசீப்பை புடிக்கவே
புடிக்காது. உனக்கு?" - பப்பு
#இதுவேறையா...ஸ்ப்பாஆஆஆஆ
ஆமா, புரந்தர் ஃபோர்ட் எங்க இருக்கு?
போகணுமாம்!!
No comments:
Post a Comment