Thursday, January 21, 2010

பப்பு டைம்ஸ்

"ஒரு சிங்கம் வலையிலே மாட்டிக்கிட்டிருந்துச்சு. நாங்கதான் காப்பாத்துனோம்.”

”ஒரு ஹிப்போவை வேடன் வலையிலே மாட்டியிருந்தான். நானும் வர்ஷினியும் காப்பாத்தினோம்.”

”வரும்போது வேன் பள்ளத்துலே மாட்டிக்கிச்சு...நாங்க ப்ரேக் போட்டு (?) ஓட்டிக்கிட்டு வந்தோம்.”

“அப்புறம் , வேற என்ன பார்த்தே?”

”கொரங்கு, லவ் பேர்ட்ஸ், பேரட்ஸ்....”

ஸ்கூல் ட்ரிப்-காக வேடந்தாங்கல் சென்று வந்த பின்புதான் இத்தனை கதையும்.
பத்து -பத்தரை மணிக்கு தூங்க செல்வோம் - வழக்கமாக. படுத்தபின்னும் பேசிக்கொண்டிருந்தால் “ரைனோ வர்ற டைம், எல்லோரும் தூங்குங்க” என்று சொல்லிவிடுவோம். அன்று நானும் முகிலும் ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தோம்....ஊருக்குப் போவதைப்பற்றிதான். கொஞ்ச நேரம் பொறுத்துப்பார்த்த பப்பு,

“கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டீங்க...ரைனோ வர்ற டைமாச்சு”ஆச்சி, எனக்கு குறிஞ்சி பேரு புடிக்கல...பைரவி -னு வச்சிக்கலாமா...பைரவி பேரு குறிஞ்சி வச்சிடலாம். என்னை பைரவின்னு கூப்பிடு - பப்பு

பைரவி...பைரவி... - நான்

என்னங்கம்மா... - பப்பு

அவ்வ்வ்வ்!
அயிகிரி நந்தினி என்ற பாடலை புதிதாகக் கற்றுக்கொண்டிருக்கிறாள். பிரேயர் சாங்க். இப்போதெல்லாம் எப்போதும் அந்த பாட்டுதான்.

ஏன் பூஜாக்கா இல்ல? என்றாள் திடீரென்று.

பூஜாக்கா ஆம்பூரிலேதான் இருப்பாங்க.

இல்லே நந்தினி அக்கா, ரம்யாக்கா ல்லாம் வர்றாங்க இல்ல இந்த பாட்டுலே..என்று பாடி காண்பித்தாள்.

அயிகிரி நந்தினி....
நந்தனுதே..

ரம்யாக்கா அத்தினி.......

பூஜாக்கா பேரு ஏன் இல்ல?

25 comments:

மாதேவி said...

"என்னங்கம்மா... - பப்பு"
நல்லாத்தான் கவனித்திருக்கே.
"பூஜாக்கா பேரு ஏன் இல்ல?"

கரெக்டான கேள்வி அசத்துங்க பப்பு.

"ரைனோ வர்ற டைமாச்சு” :)))

அப்புறம் வாறேன் நான்.

சின்ன அம்மிணி said...

//பைரவி...பைரவி... - நான்//

சந்தோஷப்படுங்க ஆச்சி. பாதாள பைரவின்னு பேர் வைக்கசொல்லி மட்டும் அப்பு அடம் புடிச்சிருந்தா நினைச்சுப்பாருங்க உங்க நிலைமையை :)

கோமதி அரசு said...

முல்லை,
பப்புவின் மழலை கேள்விகள் நெஞ்சை
அள்ளி செல்கிறது.

ராமலக்ஷ்மி said...

பப்பு சொன்ன கதைகள் சுவாரஸ்யம்:)!

அதானே, பப்பு பேசும் போது மட்டும்தான் வருமா என்ன ரைனோ:)?

//ஏன் பூஜாக்கா இல்ல?//

:))!

அமைதிச்சாரல் said...

பப்புவின் வீர சாகசங்கள் சூப்பர்..இன்னும் நிறைய வேடந்தாங்கல் கதைகள் இருக்கும் போலிருக்கே. :-)).

இனிமேல் மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் கேக்கும்போதெல்லாம் பப்புவின் 'ரம்யாக்கா' ஞாபகம் கண்டிப்பா வரும்.

நட்புடன் ஜமால் said...

பப்புவை தொந்தரவு செய்ற மாதிரி பேசாதீங்க - ரைனோ வந்திடும்.

----------------

என்னங்கம்மா - ச்சோ சூவீட்

பின்னோக்கி said...

lateral thinking at its best. we can't think like pappu.

Kovilpatti Anandhan said...

correct question :)))

Kovilpatti Anandhan said...

correct question :))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடி ஆத்தி அந்த பாட்டுக்கு இதான் அர்த்தமா :))

KarthigaVasudevan said...

//அயிகிரி நந்தினி....
நந்தனுதே..

ரம்யாக்கா அத்தினி.......

பூஜாக்கா பேரு ஏன் இல்ல?//

Cute :)))

பிரியமுடன்...வசந்த் said...

பப்புக்கு சுத்திப்போடுங்க ஆச்சி...!

சாரி பைரவிக்கு...

:))

Deepa said...

:-)))

பப்பு டைம்ஸ் அத்தனையும் முத்துக்கள்!

//பப்புக்கு சுத்திப்போடுங்க ஆச்சி...!

சாரி பைரவிக்கு...

:))//

REPEAAATTTT!

தாரணி பிரியா said...

பப்புகிட்ட இப்ப எல்லாம் நல்லா பிரகாசமா பல்பு வாங்கறீங்கன்னு தெரியுது :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆமா ஏன் பைரவி டைம்ஸ் ந்னு போடல?

:)))))))))

பூஜாக்கா ஏன் வரல, நுழைச்சு விடுங்க பாட்டுல, குழந்தை ஆசைப்படுது இல்ல ;)

S.A. நவாஸுதீன் said...

////////பைரவி...பைரவி... - நான்

என்னங்கம்மா... - பப்பு

அவ்வ்வ்வ்! /////////


சோ..................ஸ்வீட்

கையேடு said...

//நுழைச்சு விடுங்க பாட்டுல, குழந்தை ஆசைப்படுது இல்ல ;)//

வழிமொழிகிறேன்..

கிரங்க அடிக்கிறாங்க கேள்வி மழைல.

பா.ராஜாராம் said...

//ஆச்சி, எனக்கு குறிஞ்சி பேரு புடிக்கல...பைரவி -னு வச்சிக்கலாமா...பைரவி பேரு குறிஞ்சி வச்சிடலாம். என்னை பைரவின்னு கூப்பிடு - பப்பு

பைரவி...பைரவி... - நான்

என்னங்கம்மா... - பப்பு//

கவிதை!

//பூஜாக்கா பேரு ஏன் இல்ல? //

கவிதையோ கவிதை!

:-))

ஹுஸைனம்மா said...

”பல்பு டைம்ஸ்”

மணிநரேன் said...

;)

நசரேயன் said...

நல்ல கேள்விதான்

காமராஜ் said...

இங்கே கொஞ்ச நேரம், வீட்டுக்குள் குழந்தை நடந்து திரிந்த சப்தமும்,தடங்களும். நல்லாருக்கு பைரவிம்மா.

அண்ணாமலையான் said...

ஹா ஹா ஹா ஹா ... நம்ம காமெடிலாம் சும்மா போல...

cheena (சீனா) said...

அன்பின் பைரவிக்கு நல்வாழ்த்துகள்

நல்ல இடுகை - ரசித்தேன் - மழலைச் செல்வங்களின் மனம் - பேச்சு - ரசிக்க வேண்டும் நாம்

நல்வாழ்த்துகள் சந்தண முல்லை

நிஜமா நல்லவன் said...

/தாரணி பிரியா said...

பப்புகிட்ட இப்ப எல்லாம் நல்லா பிரகாசமா பல்பு வாங்கறீங்கன்னு தெரியுது :)/


ஹா..ஹா..ஹா..ரிப்பீட்டு:)