Wednesday, January 27, 2010

Letter of the week - e

பப்புவுக்கு, முட்டை வடிவம் பெரிய அளவில் வரைந்தால் கீழிருப்பது போலத்தான் வருகிறது. (இரண்டு முட்டைகள் நான் வரைந்தேன்.) 'Little Egg' என்ற புத்தகத்தை வாசித்தோம். அடைகாக்கும் அம்மாவிடமிருந்து முட்டை உருண்டு ஓடி பின்னர் அம்மாவிடம் வந்து சேரும் கதை.


அவளாகவே கொண்டு வந்த இன்னொரு புத்தகம் கேட்டர்பில்லர். நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்தோம். குட்டி கேட்டர் பில்லரை பார்த்ததும், 'அம்மா கேட்டர்பில்லர் எங்கே' என்றாள். 'பட்டர்பிளைதான் அதோட அம்மா, பட்டர்பிளைதான் இலையிலே முட்டை போட்டுச்சு, அப்புறம் பறந்து போய்டுச்சு' என்றதும் 'இல்லே அம்மா-அப்பா கேட்டர்பில்லர் இருக்கணும்' என்றாள். 'கேட்டர்பில்லர் பெரிசாகி எப்படி மாறிடும்' என்றால் 'பட்டர்பிளையா மாறிடும்' என்றாள். பட்டர்பிளையா மாறி முட்டை போடும் என்றேன். ஆனாலும் குட்டி கேட்டர்பில்லர் அம்மா-அப்பா இல்லாமல் தனியாக இருப்பதை பப்பு விரும்பவில்லை.யானையின் காது, கை, கால் மற்றும் வாலை இணையத்திலிருந்து பிரிண்ட் எடுத்துக்கொடுத்தேன். வண்ணங்கள் அவளது தேர்வு. செவ்வகத்தை வரைந்து காதுகளை மேலே ஒட்டச் சொன்னேன். கால்களை ஒட்டிவிட்டு கண்கள் மற்றும் தும்பிக்கையை வரைந்தாள். வாலை எங்கே ஒட்டுவது என்று தெரியாமல் கேப் கிடைத்த இடத்தில் ஒட்டினாள்.
அடுத்தது என்ஜின். பப்புவுக்கு அவளது பொம்மைகளை சேரில் உட்காரவைத்து டூர்ர்ர்ர்ர் என்று ஓட்டிக்கொண்டு போய் பள்ளியில் விளையாடும் விளையாட்டு பிடிக்கும். என்ஜின் இப்படித்தான் இருக்குமாம்.


தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்த இரு மொழி கதை புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தோம். தமிழில் இருந்ததை வாசித்தேன். ஆங்கிலத்தை டெஸ்ட் செய்யலாமென்று,

தோட்டத்துக்கு இங்கிலிஷிலே என்ன ?

கார்டன்

பூ?

ஃப்ளவர்

'அழகான'

சூப்பர்!!

!!

21 comments:

செல்வநாயகி said...

///தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்த இரு மொழி கதை புத்தகத்தை ///

where can we buy these books mullai?

குடுகுடுப்பை said...

அழகான சூப்பர்

சின்ன அம்மிணி said...

//னாலும் குட்டி கேட்டர்பில்லர் அம்மா-அப்பா இல்லாமல் தனியாக இருப்பதை பப்பு விரும்பவில்லை. //

ரசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

சூப்பர்!!

நட்புடன் ஜமால் said...

சின்ன அம்மனி இரசித்ததையே நானும் இரசித்தேன்

---------------

முட்டை நல்ல முயற்சி

யானையும்.

---------------

நிறைய கற்றுகொள்கிறேன் பப்பு.

கோமதி அரசு said...

பப்புகுட்டி,
சூப்பர்!!

அமுதா said...

சூப்பர்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இரு மொழி கதைபுத்தகமா .. நானும் பார்த்ததில்ல முல்லை..

S.A. நவாஸுதீன் said...

///ஆனாலும் குட்டி கேட்டர்பில்லர் அம்மா-அப்பா இல்லாமல் தனியாக இருப்பதை பப்பு விரும்பவில்லை.///

///'அழகான'

சூப்பர்!!///

சூ............ப்பர்.

ஈரோடு கதிர் said...

ஆஹா

பித்தனின் வாக்கு said...

நவாஸுதீன் சொல்வதை நானும் ரீப்பீட்டேய்ய்ய்ய்ய். நன்றி முல்லை.

துபாய் ராஜா said...

சூப்பர்!!

:))

சந்தனமுல்லை said...

அன்பு செல்வநாயகி & முத்து,

இடுகையில் குறிப்பிட்ட புத்தகங்கள் - http://www.eurekachild.org/eurekabooks/ (புத்தகச் சந்தையில் வாங்கியவை).

இவை தவிர சில இரு மொழி புத்தகங்களை http://www.tulikabooks.com/bookshelf.htm விலும் வாங்கியிருக்கிறேன்.

எரிக் கார்லேவின் பேப்பர் பேக் எடிஷன்
http://www.flipkart.com/mixed-up-chameleon-eric-carle/014050642x-uow3f9o14k - இது ஆங்கிலம்/இந்தி வெர்ஷன்.

சந்தனமுல்லை said...

நன்றி குடுகுடுப்பையார், சின்ன அம்மிணி,ராமலஷ்மி,ஜமால், கோமதி அம்மா, அமுதா மற்றும் நவாஸ்! :-)

சந்தனமுல்லை said...

நன்றி கதிர், பித்தனின் வாக்கு, துபாய் ராஜா!

லெமூரியன்... said...

\\குட்டி கேட்டர்பில்லர் அம்மா-அப்பா இல்லாமல் தனியாக இருப்பதை பப்பு விரும்பவில்லை...//

மிகவும் ரசித்தேன்..!
:-)

\\'அழகான'

சூப்பர்!!

!!....//

ஆத்தீ சூப்பரு..! :-)

வல்லிசிம்ஹன் said...

படமெல்லாம் சூப்பர் முல்லை. குழந்தைக்குத் தான் எத்தனை கருணை.
மனசால்,கற்பனைக்காகக்கூட அப்பா அம்மா தன்னை விட்டுப் பிரிவதை விரும்பவில்லை. பப்புவின் அன்பிற்கு ஒரு ஜே.

☀நான் ஆதவன்☀ said...

ஒன்னு மட்டும் தெரியுது பாஸ்.... பப்பு உங்கள மாதிரி இல்லாம ரொம்ப புத்திசாலியா வருவான்னு! :)))

பின்னோக்கி said...

பரவாயில்ல. இந்த மாதிரி எல்லாம் சொல்லிக் குடுக்குறீங்க.

4 வயசு ஆகிடுச்சு. அதுனால 4 வரி நோட்டுல எழுத சொல்லிக் கொடுங்க.

Deepa said...

அழகான அம்மா!
சூப்பர் பப்பு!

பா.ராஜாராம் said...

"புத்தகச்சந்தையும் ஒரு மனுஷியும்" என நான்பாட்டுக்கு குருட்டாம்போக்கில் ஒரு கவிதை எழுதிவிட்டேன் என வருந்துகிறேன் முல்லை.எவ்வளவு அழகான பொழுதுகளை மகளுடன் கழிக்கிறீர்கள்!மன்னியுங்கள் பப்பு ஆச்சி..

:-(