Monday, January 25, 2010

1000ல் 1வன்

”செகண்ட் ஹாஃப் பார்க்காதீங்க...உங்களாலே பார்க்கவே முடியாது”

”செகண்ட் ஹாஃப் பார்த்தாலும் சண்டை வந்தா கண்னை மூடிக்கோங்க..பார்க்காதீங்க”

”கண்டதெல்லாம் சாப்பிடுவாங்க..உங்களாலே பார்க்க முடியாது...”
(காவிரி டெல்டாவில் எலியை சுட்டு சாப்பிட்ட சோழ வம்சத்து விவசாயிகளின் நிலையை விடவா...கோரமாக இருந்துவிடப்போகிறது!)

-அலுவலக நண்பர்களின் அறிவுரைகளை எல்லாம் மீறி பார்த்து விட்டேன்.

'நம்ம தமிழ் சினிமாக்காரங்களுக்கு மரத்தை பார்த்தா சுத்திக்கிட்டு டூயட் ஆடத்தான் தெரியும்' என்று பெரிம்மா சொன்னது செல்வராகவன் காதில்
விழுந்துவிட்டது போல. மரத்தை சுற்றி டூயட் இல்லை. ஆங்கில படத்துக்கு நிகரான தமிழ் படம்!

வன்முறை அதிகம்தான். ஆனால், கார்கள் சீறிப்பாய்வதையும்,
கையில் துப்பாக்கியுடன், ரோட்டில் செல்லும் எவரையும் சுடத்தயங்காத அலையும் ஹீரோவையும் இஞ்ச் இஞ்சாக கதாநாயகியை உடலையும், படுக்கையறைக்காட்சிகளையும் மாய்ந்து மாய்ந்து காண்பிக்கும்
படங்கள் செய்யாத வன்முறையையா இந்தப்படம் செய்துவிடப்போகிறது?

அபோகலிப்டோ, ட்ராய், கிளாடியேட்டர், இண்டியானா ஜோன்ஸ், மம்மி ரிடன்ஸ் இன்னபிறவற்றை முகில் புண்ணியத்தில் சில-பல தடவைகள் பார்த்ததில் எந்த அதிர்ச்சியும் எனக்கு இல்லை. அல்லது மரத்துபோய் விட்டது.

குறைகள் உண்டுதான்...ஆனால், உடையார் நாவலை வாசித்து ஏற்றுக்கொள்ளும்போது இந்தக் படத்தையும் ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு? (என்னைப் பொறுத்தவரை உடையார் நாவல் ராஜாக்கள் காலத்து ‘அப்பம் வடை தயிர்சாதம்')

பார்த்திபனின் நடிப்பு அசத்தல். ராஜாக்கள் ஒருவேளை இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்றும் தோன்றவைத்தது. நமது ராஜாக்கள் ஓடிப்போனாலும், சில வருடங்களுக்குப் பிறகு பெரிய படையுடன் வந்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதாகவே வரலாற்று நாவல்களில்
வாசித்திருந்ததால் முடிசூடிக்கொள்ள அழைக்கும் தூதுக்காக ராஜா ஏன் காத்திருக்கிறார் என்றுத் தோன்றியது.

'சோழ வள நாடு சோறுடைத்து, சோழர்களுக்குப் பதில் பாண்டியர்களை அவ்வாறு காட்டியிருக்கலாம்' என்பது (பாண்டியர்களின் மேல் என்ன கோபமோ!) முகிலின் இரண்டு பைசா.

சோழ ராஜாவின் கோட்டையும், குகை சித்திரங்களும் நிழலின் மூலம் வழியறிதலும் , பார்த்திபன் மற்றும் கார்த்தியின் ஆட்டமும் ரசிக்க வைத்த காட்சிகள்.

குகைச் சித்திரங்கள் வடலூரின் சத்திய சன்மார்க்க சபையை நினைவூட்டியது. அங்கே ஒரு அறையில் அதில் வள்ளலாரின் பிறப்பு, கடவுள் அருள் அவர் மேலே இருந்தது, அவரது அண்ணன் செல்ல வேண்டிய கதாகலாட்சேபத்திற்கு
உடல்நலக்குறைவால் அவர் செல்ல இயலாதபோது ராமலிங்கம் சென்று உரையாற்றியது, ஆறுமுக நாவலர் தொடுத்த வழக்கிற்கு நீதிமன்றதிலும் மருதூரிலும் ஒரே நேரத்தில் காட்சி தருதல், சபையின் ரகசிய வழியில்
சிதம்பரத்திற்கு நடந்தே செல்லுதல் போன்ற காட்சிகளை சுவரிலே வரைந்தும் வைத்திருப்பதை இதே போல ஆச்சர்யத்துடன் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

எங்கேயோ போய்விட்டேன்....

‘1000ல் 1வன்' கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். செல்வராகவனுக்கு பாராட்டுகளுடன் நன்றிகள்!

27 comments:

ராமலக்ஷ்மி said...

படம் இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் உங்கள் விமர்சனம் வெகு அசத்தல்:)!

//எங்கேயோ போய்விட்டேன்....//

எப்பவோ போயாச்சு முல்லை:)! வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

நல்ல பார்வை

பின்னோக்கி said...

படம் உங்களுக்கு புடிச்சுருக்குன்னு சொல்றீங்க. வெரிகுட்.

//அல்லது மரத்துபோய் விட்டது

மிகப்பெரிய வரிகள். பாலசந்தரின் ஒரு படத்தின் மிக முக்கியமான காட்சியின் வரி இது.

பின்னோக்கி said...

உடையார் படிச்சுட்டீங்களா ? நல்லாயில்லயா ?.

படம் பார்க்கவில்லை. ஆனால் பார்த்திபன் உடையலங்காரம், அந்த கால ராஜாக்களின் உடைக்கு மிக அருகில் வந்தது மாதிரி இருந்தது. பெரிய கோயிலில், ராஜ ராஜ சோழனின் முகம் வரையப்பட்டிருக்கும். அதைப் பார்த்து உடையலங்காரம் செய்திருப்பது அருமை.

துபாய் ராஜா said...

நியாயமான விமர்சனம். உண்மையை உள்ளது உள்ளபடி உரைத்தமைக்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

பிரியமுடன்...வசந்த் said...

நல்ல பார்வை...!

காவிரிக்கரையோரம் எலி சுட்டு தின்ன விவசாயிகள் இன்னும் நினைத்தால் நெஞ்சு பகீர்ன்னுது....!

Deepa said...

இந்தப் படம் பற்றி நான் படித்த முதல் விமர்சனம் இது தான்.

கொஞ்சம் பயமுறுத்தினாலும் பார்க்கும் ஆசை வந்து விட்டது.

//அபோகலிப்டோ, ட்ராய், கிளாடியேட்டர், இண்டியானா ஜோன்ஸ், மம்மி ரிடன்ஸ் இன்னபிறவற்றை முகில் புண்ணியத்தில் சில-பல தடவைகள் பார்த்ததில் எந்த அதிர்ச்சியும் எனக்கு இல்லை. அல்லது மரத்துபோய் விட்டது. //
நீங்க யாரு, வீராங்கனை ஆச்சே!

நட்புடன் ஜமால் said...

தெளிவான பார்வை.

ட்ராயில் முதல் கத்தி குத்து கழுத்தில் ‘சரக்’ன்னு இறங்கும் அப்படியே சாய்வார் குத்து பட்டவர்

இந்த காட்ச்சியை - அதன் மேக்கிங்கை மட்டுமே இரசித்தோம்.

"saw" ஸீரீஸ் படம் பாருங்க - வன்முறை - சகிக்க முடியாத அளவுக்கு.

1001 இன்னும் பார்க்கலை.

காமராஜ் said...

இந்த அனுகுமுறை
படம் பார்க்கத் தூண்டுகிறது முல்லை.
என்றாலும் 35 கோடி
செலவு குறித்தும் சொல்லியிருக்கலாம்.
அந்த எலிக்கறிக்கு அடுத்த பாராவாக.

மாதவராஜ் said...

எனக்கென்னவோ, இந்தப் படம் பார்க்கும் எந்த ஆர்வமும் இல்லாமலே இருக்கிறேன். அதுகுறித்து வந்த விளம்பரங்களும், ’பிரம்மாண்டம்’ ‘ஹாலிவுட் ரேஞ்சுக்கு’ போன்ற வார்த்தைகளும் எரிச்சலையேத் தருகின்றன.

கோமதி அரசு said...

முல்லை,
செல்வராகவன் மகிழ்ச்சி அடைவார்,
ஏன் என்றால் செல்வராகவன் ரசிகர்களை நம்பி படம் எடுத்து இருப்பதாய் சொன்னார்.அவர் நம்பிக்கை வீணாகவில்லை.

☀நான் ஆதவன்☀ said...

:))) பாஸ் நீங்களும் ரவுடி தான் பாஸ்

ச.செந்தில்வேலன் said...

அருமையான பார்வை!! என் கருத்தும் இதே தான்..

// ஆனால், கார்கள் சீறிப்பாய்வதையும்,
கையில் துப்பாக்கியுடன், ரோட்டில் செல்லும் எவரையும் சுடத்தயங்காத அலையும் ஹீரோவையும் இஞ்ச் இஞ்சாக கதாநாயகியை உடலையும், படுக்கையறைக்காட்சிகளையும் மாய்ந்து மாய்ந்து காண்பிக்கும்
படங்கள் செய்யாத வன்முறையையா இந்தப்படம் செய்துவிடப்போகிறது?//

எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்தன!!

நேரமிருந்தால் என் பார்வையையும் படியுங்கள்.

http://senthilinpakkangal.blogspot.com/2010/01/blog-post_23.html

ஹுஸைனம்மா said...

விமர்சனம் ரொம்ப நல்லாருக்குங்க.

//என்பது முகிலின் இரண்டு பைசா. //

அப்படின்னா என்னங்க? மெஸேஜ்?

KaveriGanesh said...

இரண்டாம் பாதி புரியவில்லை என்பது பலர் கருத்து, புரியவில்லை என்பதைவிட புரிய முற்படவில்லை என்பதே என் எண்ணம்.
இந்த மாதிரி படங்களுக்காக கொஞ்சம் புரிய முற்பட்டிருந்தால் இந்த படம் வெகுவாக கவரும்.

சாமனிய ஜனங்கள், படத்தின் இரண்டாம் பாதியில் நிசப்தமாக இருப்பதே படத்தின் வெற்றிக்கு சாட்சி. ஆனால் ஏனோ ஒத்துக்கொள்ளாத ஜனங்கள்.மிகவும் எளிமையுடன் , விளக்கத்துடன் படம் பார்த்த தமிழர்கள் இப்படத்தையும் ஒவ்வொரு காட்சியையும் விளக்க வேண்டும் என எதிர்பார்கிறனர். உதாரணமாக ,கார்த்தி,தான் உண்மையான தூதன் என்றும், இறுதி காட்சியில் தூக்கி செல்லும் சிறுவன் தான் அடுத்த ராஜா, என்பது தெரியாமலேயே அல்லது இது மாதிரி நிறைய இரண்டாம் பாதி காட்சிகள் புரியவில்லை என்பது பலர் கருத்து.

போதும் மக்களே, வேட்டைகாரன், வில்லுகள் போதும்.

ஆ.ஒ புரியமுற்படுங்கள். அது அருமையான படம் என்பது தெரியும் உங்கள் கண்களுக்கு.

2 தடவை பார்த்துவிட்டேன், இன்னும் 3 தடவை பார்க்கவேண்டும்.

அன்புடன்
காவேரி கணேஷ்.

தமிழ் பிரியன் said...

\\\'சோழ வள நாடு சோறுடைத்து, சோழர்களுக்குப் பதில் பாண்டியர்களை அவ்வாறு காட்டியிருக்கலாம்' என்பது (பாண்டியர்களின் மேல் என்ன கோபமோ!) முகிலின் இரண்டு பைசா.
\\\

வன்மையாக கண்டிக்கிறேன். ஏதோ மச்சான் என்பதால் சும்மா விடுகிறோம்.. ;-)

சின்ன அம்மிணி said...

ஆச்சி, புடிச்சிருக்கா. குட்.

சில காட்சிகள் எனக்கு பிடிக்கவே இல்லை. ரொம்ப வன்முறை. பலது பிடிச்சிருக்கு :)

அமுதா said...

எதைப் படிச்சாலும் இந்த படம் பார்க்கிற ஆசையே வரலை.

/*(என்னைப் பொறுத்தவரை உடையார் நாவல் ராஜாக்கள் காலத்து ‘அப்பம் வடை தயிர்சாதம்')*/
பு.த.செ.வி. எனக்கு உடையார் பிடித்த நாவல்.

நசரேயன் said...

//எங்கேயோ போய்விட்டேன்....//

ஆமா.. ஆமா

குடுகுடுப்பை said...

I too liked this movie, unfortunately I did not get a chance to watch it in theater.

tamil conversation between pathipan and reema is nice though I dont understand few words.

kudukuduppai cholan

குடுகுடுப்பை said...

தமிழ் பிரியன் said...

\\\'சோழ வள நாடு சோறுடைத்து, சோழர்களுக்குப் பதில் பாண்டியர்களை அவ்வாறு காட்டியிருக்கலாம்' என்பது (பாண்டியர்களின் மேல் என்ன கோபமோ!) முகிலின் இரண்டு பைசா.
\\\

வன்மையாக கண்டிக்கிறேன். ஏதோ மச்சான் என்பதால் சும்மா விடுகிறோம்.. ;-)//

intha kuru nila mannarkal tholla thaangalappa.

முகிலன் said...

// தமிழ் பிரியன் said...
\\\'சோழ வள நாடு சோறுடைத்து, சோழர்களுக்குப் பதில் பாண்டியர்களை அவ்வாறு காட்டியிருக்கலாம்' என்பது (பாண்டியர்களின் மேல் என்ன கோபமோ!) முகிலின் இரண்டு பைசா.
\\\

வன்மையாக கண்டிக்கிறேன். ஏதோ மச்சான் என்பதால் சும்மா விடுகிறோம்.. ;-)//

ரிப்பீட்டேய்

முகிலன் said...

//குடுகுடுப்பை said...
தமிழ் பிரியன் said...

\\\'சோழ வள நாடு சோறுடைத்து, சோழர்களுக்குப் பதில் பாண்டியர்களை அவ்வாறு காட்டியிருக்கலாம்' என்பது (பாண்டியர்களின் மேல் என்ன கோபமோ!) முகிலின் இரண்டு பைசா.
\\\

வன்மையாக கண்டிக்கிறேன். ஏதோ மச்சான் என்பதால் சும்மா விடுகிறோம்.. ;-)//

intha kuru nila mannarkal tholla thaangalappa.//

இந்தக் குறுநில மன்னர்கள் தான் சோழர்களை தீவுக்கு விரட்டி அடித்தார்கள் என்பதை குடுகுடுப்பை சோழன் மறக்கக் கூடாது. டாலஸிலிருந்து விரட்டினால் கரீபியன் தீவுகளுக்குத்தான் போக வேண்டியிருக்கும் சோழா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

☀நான் ஆதவன்☀ said...

:) பாஸ் நீங்களும் ரவுடி தான் பாஸ்

ஒரு ஸ்ட்ராங்க் ரிப்பீட்டு ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விமர்சனம் வித்தியாசமாக இருக்கு..

தைரியசாலி முல்லை :)

படம்வந்ததிலிருந்து பதிவர்கள் எல்லாம் மன்னர்களாகிட்டாங்களா ..

பா.ராஜாராம் said...

செ.சரவணகுமார்,சுகுணா திவாகர்,அனுஜன்யா,அப்புறம் உங்களின் இந்த பார்வை-பிடிச்சிருக்கு முல்லை.

Dr.Rudhran said...

i agree with you