Wednesday, January 13, 2010

பிரித்தலும் கோர்த்தலும்

தழைய தழைய தொங்க வேண்டுமாம் தாலி
சொல்கிறாள் அம்மா.
வயிறு வரை நீண்டிருந்தது
கழுத்துக்குப் பின்னிருந்த முடிச்சுகள் உறுத்தியபடி.
மூணு மாசம்தான் அப்புறம் பிரிச்சுக் கோர்த்துக்கலாம்
இம்முறையும் அம்மாதான்.
வாசலில் யாரிடமோ கையாட்டியபடி
பேசி சிரித்துக்கொண்டிருக்கும்
அவனை பார்க்கிறேன்
மணிக்கட்டில் பளபளத்தது புதுச்சங்கிலி.
இனிமே புடவைதானே, அண்ணி
திசைதிருப்பியது மூத்த நாத்தனாரின் குரல்.
கட்டுக்கழுத்தி வளையல் போடாம இருக்கக்கூடாது
மாமியாரின் கவலை கையொடித்தது.
தாலி கட்டியவனை அலுவலகம் அனுப்பி
எனை விடுப்பெடுக்க வைத்த
நல்லதொருநாளில்
பிரித்துக் கோர்க்கப்பட்டது மஞ்சள்கயிறு
தங்கச்சங்கிலியுடன்.
வைபவத்திற்கு வந்தவர்களை
வழியனுப்பித் திரும்புகையில்
அவனது
கண்களின் திசை அறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
அவனது பார்வையை பிரித்துக் கோர்ப்பது
யார்??

குறிப்பு :
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக.

39 comments:

பா.ராஜாராம் said...

ஆகா!

ரொம்ப பிடிச்சிருக்கு முல்லை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எதோ பாவம் அவங்களுக்குத் தெரிந்த வழிமுறை எல்லாம் சொல்லி இருக்காங்க.. ஆனா எந்த வழிமுறையும் பயனில்லைன்னு அவங்களுக்குத் தெரியல..

\\இனிமே புடவைதானே அண்ணி // இருக்கறதுலயே இதான் செம வில்லத்தனம்.. ;))

நல்லாருக்கு கவிதை.. வாழ்த்துகள்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

Nice

பிரியமுடன்...வசந்த் said...

'புதுசு' ஆ இருக்கு...

வாழ்த்துக்கள் வெற்றி பெற...!

butterfly Surya said...

வாழ்த்துகள்.

சினேகிதி said...

\\கட்டுக்கழுத்தி\\?? eathum saapidura item a?:)

aveda parvai pirichu koorthal ena pirikaamal korthal ena athu epavume ---- than.

சின்ன அம்மிணி said...

சூப்பர். வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆச்சி
(உங்களுக்கு எத்தனை நாத்தனார்கள்:))

நசரேயன் said...

ஓடியா .. ஓடியா.. கவுஜ படிக்க ஓடியா

rapp said...

super mullai. idhuku mela naan sonnaa, adhuve indha kavidhaikku minus aagida poguthu:):):)

நசரேயன் said...

//எனை விடுப்பெடுக்க வைத்த
நல்லதொருநாளில்
பிரித்துக் கோர்க்கப்பட்டது மஞ்சள்கயிறு
தங்கச்சங்கிலியுடன்.//

எவ்வளவு பவுன் ?

//
வழியனுப்பித் திரும்புகையில்
அவனது
கண்களின் திசை அறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
அவனது பார்வையை பிரித்துக் கோர்ப்பது
யார்?? //

பூனைக்கு எந்த எலயாள மணி கட்ட முடியும்.

இதெல்லாம் பார்க்கும் எனக்கும் கை அரிக்குது கவுஜ எழுத

அன்புடன் அருணா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் முல்லை!

நட்புடன் ஜமால் said...

தாலி கட்டியவனை அலுவலகம் அனுப்பி
எனை விடுப்பெடுக்க வைத்த
நல்லதொருநாளில்]]

ம்ம்ம் ...

வெற்றி பெற(வும்) வாழ்த்துகள்.

----------------

நசேரயனையும் கவுஜ வைத்த ஆச்சிக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் ...

காமராஜ் said...

நல்ல எழுத்து,நல்ல கவிதையின் அத்துணை அம்சங்களும் இருக்கு முல்லை.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.பப்புவை கரும்புசாப்பிடச்சொல்லுங்கள்.
குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

padma said...

கண்களைக் கட்டுக்கு கொண்டு வர கற்று தருவார் உண்டோ?
ஆதங்கம் அனைத்து பெண்களிடமும் தான்
all the best
பத்மா

குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு.

குடுகுடுப்பை said...

பல சமயங்களில் புறக்கணித்தல் நன்று.வாழ்க்கையில் நான் பழகிக்கொண்டிருக்கிறேன் ஆனாலும் இன்னும் முடியவில்லை.

மாதவராஜ் said...

கவிதை நல்லா இருக்குங்க..

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

Anonymous said...

முகில் படித்தாரா?

திகழ் said...

வெற்றி பெற வாழ்த்துகள்


இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

முகிலன் said...

நல்லா இருக்குங்க கவிதை..

குடுகுடுப்பை said...

நானும் ஜோதில கலந்தாச்சு.

முகிலன் said...

நானும் நானும்..

நல்லா இல்லன்னா மன்னிச்சுருங்கக்கா..

மாதேவி said...

நல்ல கவிதை.வெற்றி பெற வாழ்த்துகள்.

இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்!

ஆரூரன் விசுவநாதன் said...

எழுத்துக்களை கோர்த்து, வாழ்த்த முடியவில்லை......

எத்தனையொ எழுதிய பின்னும்
ஏதோ தொக்கி நிற்கிறது.....


வாழ்த்த வார்த்தைகள் கிடைக்கா வலியில்-நான்...

அன்புடன்
ஆரூர்

ஹுஸைனம்மா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அதி பிரதாபன் said...

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

:-))

thanks!

இனிய பொங்கள் வாழ்த்துக்கள்!

அம்பிகா said...

கவிதை நல்லா இருக்கு முல்லை.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

amaithicchaaral said...

கவிதை நல்லா இருக்கு ஆச்சி,

பப்புவுக்கு ஸ்பெஷல் பொங்கல் வாழ்த்துக்கள்.

@ முத்துலெட்சுமி,
//இனிமே புடவைதானே அண்ணி // இருக்கறதுலயே இதான் செம வில்லத்தனம்.. ;))//
இனிமே தனக்கு மட்டும்தான் சல்வாரும், சுடிதாரும்ங்கிறதை கன்ஃபர்ம் பண்ணிக்கிறாங்களாம். :-)))).

Deepa said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் முல்லை!
:)
அத்துடன் ராப் சொன்னதை நானும் வழிமொழிந்து கொள்கிறேன்!

சக்தியின் மனம் said...

வாழ்த்துக்கள்

Deepa said...

இதை எத்தனை பேர் பிரிச்சுக் கோத்து வெளாண்டுருக்காங்க பாத்தியா?
:-))

நேசமித்ரன் said...

அன்பின் தோழமைக்கு

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துகள்

மிக்க மகிழ்ச்சி உங்களின் படைப்புகள் மேலும் ஊக்கத்துடன் வெளிவரட்டும்

:)

- நேசமித்திரன்

பலா பட்டறை said...

தமிழ் மணம் விருதுக்கு..வாழ்த்துக்கள்.:)

Deepa said...

தமிழ்மணம் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் முல்லை!
Keep rocking!!!
:-)

சிங்கக்குட்டி said...

"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,

சிங்கக்குட்டி.

அம்பிகா said...

தமிழ்மணம் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் முல்லை!

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை. யாருடைய பார்வையும் யாராலும் கட்ட முடியாது. மனம் அடக்கி பார்வையைத் திருப்பலாம்,ஆனால் முதல் பார்வையை மாற்றுவது சிரமம். மிக்க நன்று முல்லை அக்கா. எனது பதிவர்கள் சமையல் அறை பதிவைப் படித்துத் திட்டவும் நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா!!!!!!!!!!!!!!!

ஆச்சி, செம்ம சூப்பர்.