விளையாட்டின் பாதியில்
என்னைத் தேடி ஓடி வருகிறாய்.
முழங்கையை என்னெதிரே நீட்டுகிறாய்.
”காயம் வந்துடுச்சு, முத்தா கொடு”
குனிந்து முத்தமிட்டதும்
வலி போய்விட்டதாக நம்பிக்கைக் கொள்கிறாய்.
என்னை எப்போதாவது இடித்துவிட்டாலும்
உடனே முத்தமிட்டபடி சமாதானமாகிறாய்.
”வலி போய்டுச்சில்ல”
அப்பொழுதுதான் முளைத்த கொம்புடன்
ஓரக்கண்ணால் பார்க்கிறேன்
நியோஸ்பிரினையும் அயோடெக்ஸையும்!
17 comments:
//அப்பொழுதுதான் முளைத்த கொம்புடன்
ஓரக்கண்ணால் பார்க்கிறேன்
நியோஸ்பிரினையும் அயோடெக்ஸையும்!
//
ஹா ஹா ஹா
எதிர் கவுஜ போட ஆயில்ஸ் எங்கேயிருந்தாலும் இங்கு வருமாறு அழைக்கப்படுகிறார்....!
எத்தனை நாள்தான் இப்படி ஏமாத்திக்கிட்டு இருப்பீங்கன்னு நாங்களும் பாக்கத்தானே போறோம்:)
அப்பொழுதுதான் முளைத்த கொம்புடன்
ஓரக்கண்ணால் பார்க்கிறேன்
நியோஸ்பிரினையும் அயோடெக்ஸையும்!]]
நைஸ் ...
உண்மைதான் முல்லை,
நம் குழந்தைகளின் அன்பே
வலி நிவாரணிகள்; சிறுமுத்தங்களே
ஒத்தடங்கள்.
`பப்பு கேர்’
நல்லா இருக்குங்க
குழந்தையின் முத்தமல்லவா. புண்ணாகிய இதயமே குளிர்ந்துவிடுமே.
அருமை அருமை.முல்லை.
அட!
நல்லா சொல்லியிருக்கீங்க
:-)
:))
இன்னைக்கு எத்தனை தல உருள போகுதோ தெரியலயே? ஐ மீன் எத்தனை எதிர் கவுஜ வரப்போகுதோ?
பாஸ் லேபிள்ல கவிதைன்னு இல்லையே? ஒய் பாஸ்?
Nice one.. :-)
ரொம்ப அருமையா இருக்குங்க
எல்லாரும் நைஸ் 1 நைஸ் 1 அப்படின்னு சொல்லியிருக்கிறத பார்த்தா ஆச்சிக்கு 2010ல கவிதாயினி அங்கீகாரம் கொடுத்தாச்சேய்ய்ய்ய்ய்ய்!(இனி எதிர் கவுஜ கெடியாது)
ஆச்சி கவிதாயினி ஆச்சு!
வாவ்!பூங்கொத்து!
Nice !
நல்லாயிருக்கு முல்லை!
:-)
கவுஜன்னு போடலை அதனாலே எதிர் கவுஜ இல்லை
இப்படி ஒரு மருந்துக்காகவே எத்தனை தடவை வேண்டுமானாலும் காயம் பட்டுக்கொள்ளலாம், இல்லையா முல்லை...:-))
Post a Comment