Thursday, January 07, 2010

அய்யனாரின் 'உரையாடலினி'

ஒரு சிலர் நண்பர்களாவதற்கு எந்த முகாந்திரமும் வேண்டியிருக்காது. சாதாரணமாக பேச்சு ஆரம்பிக்கும், ஆனால் கொஞ்ச நாட்களுக்குள் நமது முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்திருப்பார்கள். கோகிலாவுடனான நட்பும் அப்படித்தான். ஹாஸ்டலில் காஃபி எடுக்க வரும்போதோ அல்லது நோட்ஸ் கொடுக்கல் வாங்கலிலோதான் ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஒரு சின்ன ஹாய்....போதும்!

சிஸ்டருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இரவு முழுக்க பேசி சிரித்துக் கொண்டும், வாரயிறுதிகளில் பெரியார் பஸ் ஸ்டாண்ட், நேதாஜி ரோடை வலம் வந்தும் முனியாண்டி விலாசில் பரோட்டாவுக்காக சென்று அங்கிருந்தவர்களை பார்த்து அலறியடித்து ஓடி வந்ததும்.... ஆட்டோகிராஃபில் date என்ற இடத்தில் ”dated till sun rises in west" என்றோ "பூமி சுழலுவதை நிறுத்தும்வரை " என்று எழுதப்பட்டுக்கொண்டிருந்தது மாறி "dated till mullai's and kohila's friendship ends" என்றாகியது. அந்த கோகிலாவை ஏழு வருடங்களுக்குப்பிறகு பார்த்தேன். முதல் வகுப்பு படிக்கும் மகனுடன் வந்திருந்தாள். கிண்டி பார்க்கில் எதிர்பாராதவிதமாக சந்தித்தோம். ஐந்து நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை எங்கள் சந்திப்பு. அய்யனாரின் ஜோ-வை வாசிக்கும்போது கோகிலாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை!

அய்யனாரின் 'உரையாடலினி' தொகுப்பை தற்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் வாசித்தபின், நீண்ட நேரம் அந்த கதைகளுக்குள் நான் அலைந்துக்கொண்டிருந்தேன். சட்டென்று அடுத்த கதைக்கு தாவிவிட முடியவில்லை. கதையின் மாந்தர்களும், என் நினைவின் மாந்தர்களும் எனக்குள் அசைவாடிக்கொண்டிருக்கிறார்கள், நெடுநேரமாக! ஜோவும் சந்தோசும் சங்கமித்திரையும் தமிழ்செல்வியும் குமாரும் வேறு பெயர்களில் எனக்கு அறிமுகமாகியிருந்தார்கள். அவர்களின் நினைவுகளோடே கதையின் தாக்கமும் இரண்டு நாட்களாக தொண்டைக்குள் உருண்டுக் கொண்டிருக்கிறது!

எனக்கு உற்சாகமான இளைஞர்களை பிடிக்கும். என் சிறுவயதில் வீடு நிறைய இந்த இளைஞர்கள் இருந்தார்கள். சித்தப்பாக்கள், மாமாக்கள் அவர்களின் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என்று.
'இங்கே வராதே, உள்ளே போ' என்று விரட்டிக்கொண்டும், சமயங்களில் வாஞ்சையுடன் கடைக்கு அழைத்துச் சென்று கைநிறைய சாக்லேட் வாங்கிக்கொடுத்துக்கொண்டும். திடீரென்று அவர்கள் அனைவரும் தொலைந்து போனார்கள் . பாலிடெக்னிக் என்றும் வெளியூரில்/ வெளிநாட்டில் வேலை என்றும் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள். காணாமல் போன அந்த அத்தனை இளைஞர்களும் இந்த தொகுப்பில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒன்றாக என்ன பேசிக்கொள்வார்களென்று அன்று எனக்கு மண்டை குடைந்ததற்கு விடை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. :-) அநேக கதைகளில் குடி இருக்கிறது...வாசிக்கும்போதே எனக்கும் கொஞ்சம் போதையேறினாற்போல இருந்தது! சில இடங்களில் குடியைப்போலத்தான் பெண்களையும் ட்ரீட் செய்கிறார்களா என்றும் தோன்றியது!

Life is a box of chocolates என்பதை உரையாடலினிக்கும் சொல்லலாம்.


இந்த புத்தகத்தின் சாக்லேட்கள் சில, சாப்பிட்டபின்னும் நாக்கிலும், மனதிலும் நிழலாடும் சுவை கொண்டவை, சில டார்க் பிட்டர் சாக்லேட்கள் , உள்ளே காரமெல் கொண்டவை, ஒன்றுமில்லா ஹாலோ சாக்லேட், லிக்கர் கொண்டவை சில, பபிள்கம் போன்றவை சில என்று...மொத்தத்தில் ஒவ்வொரு கதையும் வாசிப்பவர்களுக்கு ஒவ்வொரு அனுபவம்! தவறவிடக்கூடாத அனுபவம்.


‘ரொம்ப ஃபேமஸ்' என்று எல்லோரும் சொல்லும் ஒன்று எனக்கு பிடிக்காமல் போய்விடும். வீம்பு அல்லது பந்தா என்று எனது
நண்பர்கள் /உறவினர்கள்சொல்வதுண்டு. ஏனோ எனக்கு சாதாரண மனிதர்கள் எழுதும் சாதாரண எழுத்துகளே எனக்குப் போதுமானவையாக இருக்கின்றன. இன்றைக்கு பிரபலமானவர்கள் என்றுச் சொல்லப்படும் பலரின் நூல்களை நான் வாசித்தது இல்லை..ஒன்றிரண்டைத் தவிர. அதில் எனக்குத்தான் நஷ்டமென்றாலும் பெரிய கவலையொன்றும் இல்லை. ஏனோ, நான் அப்படித்தான்! அதைவிடுங்கள்....

அய்யனாரின் அடுத்த புத்தகத்துக்கும் அந்த நிலை வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது! :-)
வாழ்த்துகள் அய்யனார்!

36 comments:

rapp said...

அய்யனார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

//‘ரொம்ப ஃபேமஸ்' என்று எல்லோரும் சொல்லும் ஒன்று எனக்கு பிடிக்காமல் போய்விடும்//
//அய்யனாரின் அடுத்த புத்தகத்துக்கும் அந்த நிலை வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது! :-) //

மிகவும் ரசிக்கும்படியான வாழ்த்து:):):)

க.பாலாசி said...

//அவர்களின் நினைவுகளோடே கதையின் தாக்கமும் இரண்டு நாட்களாக தொண்டைக்குள் உருண்டுக் கொண்டிருக்கிறது! //

சில கதைகளை படிக்கும்போது இதேபோன்றதொரு நிலை அவ்வப்போது எனக்கும் ஏற்படும். அனுபவங்களும், நிகழ்வுகளும்தானே நூலாகின்றன. எதுவும் விதிவிலக்கல்ல.

நல்ல இடுகை...

rapp said...

//ஜோவும் சந்தோசும் சங்கமித்திரையும் தமிழ்செல்வியும் குமாரும் வேறு பெயர்களில் எனக்கு அறிமுகமாகியிருந்தார்கள். அவர்களின் நினைவுகளோடே கதையின் தாக்கமும் இரண்டு நாட்களாக தொண்டைக்குள் உருண்டுக் கொண்டிருக்கிறது!//

படிக்க ஆவலாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக கொடுத்திருக்கலாம்:):):)

//இந்த புத்தகத்தின் சாக்லேட்கள் சில, சாப்பிட்டபின்னும் நாக்கிலும், மனதிலும் நிழலாடும் சுவை கொண்டவை, சில டார்க் பிட்டர் சாக்லேட்கள் , உள்ளே காரமெல் கொண்டவை, ஒன்றுமில்லா ஹாலோ சாக்லேட், லிக்கர் கொண்டவை சில, பபிள்கம் போன்றவை சில என்று...மொத்தத்தில் ஒவ்வொரு கதையும் வாசிப்பவர்களுக்கு ஒவ்வொரு அனுபவம்!//

ஒயிட் சாக்லேட் இல்லாதது மகிழ்ச்சி. மறுபடியும் அய்யனார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆயில்யன் said...

வாசிப்பவர்கள் நூலினை வாசித்து அதனை தம் வாழ்வின் சம்பவங்களோடு பொருத்தி பார்க்கையில் - பொருந்தி போகையிலேயே - அந்த எழுத்தாளர் வாசக உள்ளங்களை வென்று விட்டார் என்று கூட கூறிவிட நிறைய உதாரணங்கள் இருக்கு! அந்த வகையிலும் வாழ்த்துக்கள் அய்யனார்!

ஆயில்யன் said...

///ரொம்ப ஃபேமஸ்' என்று எல்லோரும் சொல்லும் ஒன்று எனக்கு பிடிக்காமல் போய்விடும். வீம்பு அல்லது பந்தா என்று எனது நண்பர்கள் /உறவினர்கள்சொல்வதுண்டு///


ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ம்பூர்
பிரியாணி?!?!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புத்தக அனுபவம் நல்லா எழுதி இருக்க்கீங்க முல்லை.. சாக்லேட் பப்புவுக்கு மட்டுமில்லாம நல்லா நீங்களும் சாப்பிடுவீங்கன்னு தெரியுது.. ;)

அன்புடன் அருணா said...

'உரையாடலினி'"இப்பவே படிக்கவேண்டும் எனத் தூண்டும் விமரிசனம்.!

தமிழ் பிரியன் said...

நன்றி ஆச்சி!

தமிழ் பிரியன் said...

\\\ஆயில்யன் said...

///ரொம்ப ஃபேமஸ்' என்று எல்லோரும் சொல்லும் ஒன்று எனக்கு பிடிக்காமல் போய்விடும். வீம்பு அல்லது பந்தா என்று எனது நண்பர்கள் /உறவினர்கள்சொல்வதுண்டு///


ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ம்பூர்
பிரியாணி?!?!\\

ஹா ஹா ஹா.. இது மட்டும் விதிவிலக்குன்னு சொல்லி இருக்கலாம்..;-))

Deepa said...

மிக நேர்மையான நேர்த்தியான விமர்சனம். அய்யனாரின் சிரசுக்கு மேலும் ஒரு மயிலிறகு இந்தப் பதிவு. :-)

//மொத்தத்தில் ஒவ்வொரு கதையும் வாசிப்பவர்களுக்கு ஒவ்வொரு அனுபவம்! தவறவிடக்கூடாத அனுபவம். //

தனிமையின் இசையிலேயே கரைந்து கொண்டிருக்கிறேன். இதையும் படிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்.

பிரியமுடன்...வசந்த் said...

உரையாடலினியிலிருக்கும் choklates கண்டிப்பா படிக்கறேன்...

நல்லா எழுதியிருக்கீங்க...

மாதவராஜ் said...

//ரொம்ப ஃபேமஸ்' என்று எல்லோரும் சொல்லும் ஒன்று எனக்கு பிடிக்காமல் போய்விடும். வீம்பு அல்லது பந்தா என்று எனது நண்பர்கள் /உறவினர்கள்சொல்வதுண்டு. ஏனோ எனக்கு சாதாரண மனிதர்கள் எழுதும் சாதாரண எழுத்துகளே எனக்குப் போதுமானவையாக இருக்கின்றன.//

ஆஹா..!
நானும் இப்படித்தான்.


நல்ல பதிவு.

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்தல் முல்லை!

confident shot!

வாழ்த்துக்கள் ஐயனார்!

லெமூரியன்... said...

அருமையான விமர்சனம் முல்லை..!
படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது..!

நசரேயன் said...

//இன்றைக்கு பிரபலமானவர்கள் என்றுச் சொல்லப்படும் பலரின் நூல்களை நான் வாசித்தது இல்லை.//

இந்த பிரச்னைக்கு தான் நான் புத்தகம் எழுதுறதில்லை

குடுகுடுப்பை said...

/‘ரொம்ப ஃபேமஸ்' என்று எல்லோரும் சொல்லும் ஒன்று எனக்கு பிடிக்காமல் போய்விடும்//
//அய்யனாரின் அடுத்த புத்தகத்துக்கும் அந்த நிலை வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது! :-) ////

ஒரு இலக்கியவாதியை நான் உங்களில் காண்கிறேன்.

Rajalakshmi Pakkirisamy said...

Good One :)

சின்ன அம்மிணி said...

சாக்லெட் கூட ஒப்பீடு எனக்கு பிடிச்சிருந்துது.

நட்புடன் ஜமால் said...

‘ரொம்ப ஃபேமஸ்' என்று எல்லோரும் சொல்லும் ஒன்று எனக்கு பிடிக்காமல் போய்விடும்.]]

நானும் இதே!

ஆனாலும் படித்துவிடுவேன்.

அகநாழிகை said...

நல்ல பகிர்வு. வாழ்த்துகள் அய்யனார்.
பகிர்தலுக்கு நன்றி சந்தனமுல்லை.

- பொன்.வாசுதேவன்

அமுதா said...

பகிர்தலுக்கு நன்றி முல்லை. இது போன்ற பகிர்வுகளால் தான் நல்ல எழுத்துக்கள் எனக்கு அறிமுகமாகின்றன

பித்தனின் வாக்கு said...

நல்ல பதிவு, அய்யனாரின் புத்தகம் கிடைத்தால் கண்டிப்பாக வாங்கிப் படிக்கின்றேன். நன்றி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான பகிர்வு

அய்யனார் said...

முல்லை

பகிர்வுக்கு மிக்க நன்றி. இணைய / அச்சுக்குமான இடைவெளிகளை உணர்ந்திருப்பதால் புத்தக வெளியீடு என்பது லேசான தயக்கத்தை தந்து கொண்டிருந்தது. இது போன்ற பகிர்வுகள் நம்பிக்கைகளையும் மகிழ்வுகளையும் ஒருங்கே தருகின்றன.

வாழ்த்திய அனைவருக்கும் நன்றியும் அன்பும்.

அம்பிகா said...

\\அருமையான விமர்சனம் முல்லை..!
படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.\\

:-]

Dr.Rudhran said...

முன்பு பௌத்த அய்யனார் என்பவரின் கவிதைகள், மேன்ஷன் கவிதைகள் என்பது தலைப்பு, மிகவும் நன்றாக இருந்த்தது, இருவரும் ஒருவரேவா?

தமிழ் பிரியன் said...

ஆச்சி.. எனக்கும் இந்த வியாதி இருக்கும் போல இருக்கு.. பாருங்க இனி உங்க பதிவுக்கு கூட அந்த நிலை வந்து விடுமோன்னு தோணுது.. ;-))

யாழினி said...

//நல்ல பகிர்வு. வாழ்த்துகள் அய்யனார்.
பகிர்தலுக்கு நன்றி சந்தனமுல்லை//

சிங்கக்குட்டி said...

நமக்கு இது ரொம்ப தூரம் :-)

☀நான் ஆதவன்☀ said...

ஊருக்கு வந்து வாங்கிட வேண்டியது தான். ஆவலை தூண்டிட்டீங்க. ஏற்கனவே உரையாடிலினியை வலைகளில் அறிமுகம் இருந்தாலும் புத்தகமா பார்க்கவும் ஆவலா இருக்கு.

சந்தனமுல்லை said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்!

டாக்டர். ருத்ரன், அய்யனாரின் வலைப்பூ முகவரி : http://ayyanaarv.blogspot.com

KVR said...

முன்பு சில முறை சூடுபட்டுக்கொண்ட பூனை என்பதால் பதிவர்களின் புத்தகங்கள் என்றால் எனக்கு ஒரு சின்ன அலர்ஜி (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு). ஆனால், அதையும் மீறி இந்த வருடம் வாங்க நினைக்கும் புத்தகங்களில் அய்யனாரையும் சேர்க்க வைக்கும் வகையில் இருக்கிறது உங்களது பகிர்வு.

வாழ்த்துகள் அய்யனார்.

குசும்பன் said...

//அய்யனாரின் 'உரையாடலினி' தொகுப்பை தற்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன்.//

சின்னபுள்ள இருக்கும் வீட்டில் இருக்ககூடிய புக்கா அது?அவ்வ்வ்

பார்த்து பப்பு பயந்துடபோவுது! பின் அட்டையை பார்த்து:))

காமராஜ் said...

நான் சத்தியமாக உன் அண்ணன்.
இப்படி எழுத முடியாததற்காக தம்பி.
அருமை முல்லை.

விக்னேஷ்வரி said...

நல்ல விமர்சனம் முல்லை. கண்டிப்பாக வாசிக்க நினைக்கும் புத்தகம்.

Jeeves said...

சரி சீக்கிறம ஒரு புக் வாங்கி அனுப்புங்க. நானும் ஒருமுறை படிச்சுடறேன்.