Sunday, June 13, 2010

Few of her favorite sites....

கடந்த கோடைவிடுமுறையில் பப்புவை புத்தகங்களை விட அதிகம் ஆக்கிரமித்திருந்தது கம்ப்யூட்டர்தான். பெரும்பாலும் பெயிண்ட் பிரஷை வைத்துதான் விளையாடுவாள். அதைவிட்டால் sesame street மிகவும் பிடித்தம்.
தற்போதைய லிஸ்டில் இருக்கும் ஒரு சில தளங்கள் :

http://www.starfall.com/ இதில் இரண்டாவது பிரிவும் மூன்றாவது பிரிவும் மிகுந்த உபயோக இருந்தது. இரண்டாவது பிரிவு, வார்த்தைகளை, ஒலிகளை பகுக்கவும், கதைகளை பப்புவே நேவிகேட் செய்வதற்கும் உதவியது. நமது உதவி இல்லாமல் அவர்களாகவே அடுத்த பக்கங்களுக்கு செல்வதற்கு ஏற்ற வகையில் இருப்பது மிகுந்த உதவி- நமக்கு! வார்த்தைகளை, எழுத்துகளை கற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கும் சிறார்களுக்கு இந்த தளம் ஏற்றது. இதிலே இருக்கும் books பிரிவையும் வார்த்தைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தலாம். பப்புவிற்கு nouns,verbs பற்றியெல்லாம் புரியாததால் தொடர்ந்து மூன்றாவது பிரிவை பார்க்க இயலவில்லை.

http://www.abcya.com/ ஒரு இடுகையில் பின்னூட்டத்தில் சித்தார்த்தும், மடலில் வெயிலானும் பகிர்ந்துக் கொண்டது. இதில் கிரேடு வகையாக பிரித்திருந்தாலும் பொதுவாக 4 - 5 வயதினர் எல்லா கிரேடையும் பயன்படுத்துக்கொள்ளலாம். ஒரு சில மட்டும் புரிந்துக்கொள்ள கடினமாக இருக்கும். இதன் டாட் டு டாட் மற்றும் எண்கள் விளையாட்டுகள், பூசணிக்காய் க்ரேவிங் - சூப்பர் டூப்பர் ஹிட்! இந்த தளம் குட்டீசை முழுவதுமாக விழுங்கிவிடும். ஒவ்வொரு மூலையும் பப்புவுக்கு அத்துபடி. வண்ணமயமான அமைப்பும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.

http://pbskids.org இவை முழுவதும் விளையாட்டுகள்தான். கொஞ்சம் சீசேம் ஸ்ட்ரீட் பாணியில் இருந்தாலும் செம ஹிட். 'லோட் ஆகுது' என்று பப்புவுக்கு தெரியவைத்தது இந்த தளம்தான். :-) கண்ட்ரோல்களை கையாள்வதற்கான , பின்னணி குரலை கேட்க வைத்ததும் சீசேம் ஸ்ட்ரீட் மற்றும் இந்த தளத்தின் வெற்றி.

http://ceebies.com/ - இதில் பப்பு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. வேறு குட்டீஸுக்கு பயன்படலாம்.

இது அல்லாமல், கணினியிலே இருக்கும் வேறு விளையாட்டுகளும் பப்புவின் ஃபேவரிட்.

உங்க வீட்டுலே எது ஹிட்டுங்க? பின்னூட்டத்தில் அறிமுகப்படுத்துங்க!

17 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. என் தங்கை பெண்ணுக்கு உபயோகமாயிருக்கும். அறிமுகப் படுத்துகிறேன் அவளுக்கு. நன்றி.

நட்புடன் ஜமால் said...

இப்போதைக்கு எங்க வீட்ல பப்பு அப்டேட்ஸ் தாங்க ஹிட்டு

வளரட்டும் ஹாஜர் இங்கிருந்தே நிறைய எடுத்து கொடுக்கலாம்

நன்றிடா பப்பு :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நான் படிக்கும்போது இதெல்லாம் இல்லையே பாஸ்!
பப்புவிற்கு நன்றி!

சின்ன அம்மிணி said...

எல்லாத்தையும் நான் பாத்துட்டு சொல்றேன் :)

ராசராசசோழன் said...

நல்ல தகவல்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இங்க பையன் இவைகள் கூடவே வளந்துட்டு..இப்ப நான் இதெல்லாம் வெளையாட பேபி இல்லைங்கறான்.. புதுசா எல்லாம் கார்டூன் நெட்வொர்க் இண்டியா. காம். ஒரே சண்டை தான்.

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு. இனி அம்மாவிடம் இது
என் கம்பியூட்டர் டைம் என்று கேட்பாள் பப்பு.

பின்னோக்கி said...

வெப்சைட்டிற்கு நன்றி. கூடவே, கம்பியூட்டர் பக்கமே வர அடம் பிடிக்கும் என் மகன் போன்ற பிள்ளைகளுக்கு, எப்படி கற்றுக்கொடுப்பது என்றும் சொன்னால் புண்ணியமாகப் போகும் உங்களுக்கு.

கெக்கே பிக்குணி said...

பப்பு / முல்லை, ஸ்டார்ஃபால் என் சின்னதுக்கு பிடித்துப் போய் விட்டது, இங்கே இப்ப கிரேக்க கதைகள் தாம் பெரும் ஸ்டைல். எனவே அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

கோமா, //இனி அம்மாவிடம் இது என் கம்பியூட்டர் டைம் என்று கேட்பாள் பப்பு.// பிள்ள‌ங்க‌ என் க‌ம்பியூட்ட‌ர்ன்னு கேக்கிற‌ கால‌மா இருக்குங்க‌. 18 வ‌ய‌தில் தான் நான் முத‌ல்முத‌லா க‌ம்ப்யூட்ட‌ர் தொட்ட‌து, இப்ப‌ அவ‌ங்க‌ளுக்கே சொந்த‌மா க‌ம்ப்யூட்ட‌ர் வேணுமாம்:-)

மயில் said...

வர்ஷா funbrain.com http://www.thekidzpage.com/ பப்புவோடது, http://www.friv.com.. ஒரு ஸிஸ்டம் பாத்தலை, :))

வல்லிசிம்ஹன் said...

அடுத்தாப்பில பதிவு எப்படி எழுதறதுன்னு தெரிஞ்சுக்குவா பப்புமா:)

என் பேத்தி யூ டியூபில் அவ அம்மா மார்க் செய்து கொடுத்த கார்டூன்களைப் பார்க்கிறாள்.
நான் நிறைய தமிழ்ப் பாட்டுகளை குறித்துக் கொடுத்திருக்கிறேன்.

நசரேயன் said...

nickjr.com/playtime/cats/games/index.jhtml

நசரேயன் said...

www.sproutonline.com

நசரேயன் said...

www.mattle.com

-/பெயரிலி. said...

have a look at uptoten.com
http://www.uptoten.com/

shaali said...

dear mullai, i hav an error message when loading pbs kids any ideas?

தீஷு said...

ஏனோ தெரிய‌வில்லை முல்லை தீஷுவிற்கு கம்பியூட்ட‌ர் கேம்ஸ் பிடிப்ப‌தில்லை. ரொம்ப‌ நாட்க‌ளுக்கு முன் ஸ்டார்பால் காட்டினேன். அவ‌ளுக்குப் பிடிக்க‌வில்லை என்ப‌தால் நிறுத்திவிட்டேன்.