முன்னால் சென்ற பஸ்ஸின் விளம்பரபலகை எனது கவனத்தை ஈர்த்தது. யூனினாரின் “சாதிக்க நிபந்தனைகளே இல்லை” பார்த்து பார்த்து ”என்ன நிபந்தனையோ” என்று புரியாமல் போரடித்தது போக இப்போது இவை.
Billion hearts beating என்ற விளம்பரம்தான் அது.
அநேகமாக ஏதாவது ஒரு மருத்துவமனையின் ஹெல்த் செக்கப் ஆக இருக்கும். அதன் வாசகங்களும், அதனைத் தொடர்ந்து எழுந்த எண்ணங்களும் விளம்பரத்தைப் பற்றிய மற்ற விபரங்களை என் கண்களிலிருந்து மறைத்துவிட்டது.
அதிலிருந்த வாசகம் இதுதான் “I pledge to quietly eat all the veggies my wife puts in my plate” . அதை சொல்வது போல அருகில் ஒருவர் நின்றுக்கொண்டிருக்கிறார்.
அவரது மனைவி சொல்வது போல ஏதாவது இருக்கிறதா என்று தேடினேன். ஒன்றும் காணோம். ( பஸ்ஸின் இடப்பற்றாக்குறையும் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.)
அதைப் பார்த்ததும் எழுந்த முதல் எண்ணமே,
ஏன் அவரது மனைவிதான் அவருக்கு பரிமாறவேண்டும்?
அல்லது, மனைவிதான் கணவனை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது போல - மனைவிதான் கணவனது உடல்நலத்துக்கு பொறுப்பு என்பது போல எண்ணத்தை விதைக்கிறார்கள்?
”என் தட்டில் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்வேன். எடுத்துக்கொண்டதை முழுவதுமாக நான் உண்பேன்” என்று ஏன் கணவரால் உறுதி கூற முடியவில்லை?
அதற்கு பெயர் அன்பு என்றெல்லாம் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏன், அன்பற்ற வாழ்க்கை வாழும் பல குடும்பங்களிலும் மனைவிகளே கணவனுக்கு பரிபாலனை செய்வதை கண்டிருக்கிறேன்.
மனைவி கணவனுக்கு பரிமாறுவது அன்பு என்று சொல்வீர்களானால் கணவன் மனைவிக்கும் அல்லவா பரிமாற வேண்டும்?
எப்படி காய்கறிகளை உண்டால் உடல்நலத்துக்கு நல்லது என்பது மனைவிக்கு தெரிகிறதோ அதேபோல கணவனுக்கும் அல்லவா தெரியவேண்டும்?
மனைவி வேலைக்கு போகிறாளோ இல்லையோ அதை விடுங்கள். வேலைக்கு போகும் பெண்ணை போலவே வீட்டிலிருக்கும் பெண்ணுக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகள் இருக்கிறது.
மாமா காலையில் 8.45 பஸ் பிடிக்க வேண்டுமானால், அறிவழகி அத்தை 5.30 மணிக்கு எழுந்துக்கொள்ள வேண்டும். மாமாவின் காந்திய கொள்கைகளினால் வீட்டில் காஸ் அடுப்பு கிடையாது. மிக்ஸி கிடையாது. எந்த வீட்டு உபயோகப் பொருளும் ‘ஆடம்பரம்'தான் அவருக்கு. முதல்நாள் மட்டும் என்றைக்காவது அபூர்வமாக வெங்காயம் உரித்துத் தருவார் மாமா. ஊதுகுழலை ஊதியபடி கண்களை இடுக்கிக்கொண்டு சாணம் மெழுகிய அடுப்போடு மல்லுகட்டிக் கொண்டிருப்பார் அத்தை.
பக்கத்தில் பம்ப் ஸ்டவில் வேகமாக வேக வேண்டிய வட்டிலையும் கவனித்தபடி. அதிகாலையில், வாசலில் சாணம் தெளித்து கோலம்போட்டபின் சமையலறைக்குள் அத்தை நுழைந்தால் மாமாவும், பிள்ளைகளும் இட்லியோ தோசையோ சாப்பிட்டு, மதிய உணவை கட்டி எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றபின் கழுவ வேண்டிய பாத்திரங்களுடன் ஒன்பதரை மணிக்குத்தான் வெளியே வருவார்.
நடுவில், மாமாவின் இஸ்திரி போட்ட சட்டை எங்கே போயிற்று, அல்லது சட்டைக்குள் இருந்த பில்கள் எங்கே என்பனவற்றிற்கும் - “அம்மா, அட்டை போட்ட கணக்கு புக் எங்கே” ”அவன் என்னோட சைக்கிள் சாவியை ஒளிச்சு வைச்சுட்டான்” என்று சகலத்திற்கும் அத்தைதான்.
காலை உணவோடு மதிய உணவும் தயாராகி அனைவரும் கிளம்பிவிட, துணிகளை ஊறவைத்து கிணற்றில் நீர் இறைத்துவிட்டு பதினோரு மணிக்கு மேல் மிச்சம் மீதி இருப்பதையும்,முந்தைய நாள் மீந்ததையும் எடுத்துக்கொண்டு சாப்பிட அமர்வார். அல்லது சாப்பிடுவதாக பேர் பண்ணிக்கொண்டு!
தேவையான காய்கறிகளை அவர் உண்கிறாரா? அவரது வேலைக்குத் தேவையான சக்தியை பெறுமளவு ஊட்டச்சக்தியும் சமச்சீர் உணவும் அவர் உட்கொள்கிறாரா? இதையெல்லாம் பார்த்துக்கொள்ளவும் பரிமாறவும் ஒருவரும் இல்லை.
அதன்பின் நாள் முழுவதும் -மாடுகளை பார்த்துக்கொள்ள, கூடத்தை ஒற்றை ஆளாக பெருக்கித்தள்ள, தோட்டத்தை சுத்தம் செய்ய, மாலையில் திரும்பவும் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு, காபி போட்டு,இரவு உணவை தயாரிக்க, திரும்ப பாத்திரம் கழுவி, சமையலறையை சுத்தம் செய்து...இவைநடுவில் ஊறுகாய்,வத்தல்,அப்பளம், முறுக்கு,அதிரசம்...
சொல்லப்போனால், சகலவித வீட்டு உபயோக பொருட்கள் இருக்கும் கீதா ஆண்ட்டிக்கு இதே கதைதான். மீதி இருப்பதை உண்டு ஒப்பேற்றி விடுகிறார்களென்பதை யாரும் மறுக்க முடியாது. அறிவழகி அத்தையோ கீதா ஆண்ட்டியோ...ஏன் நமது அம்மாக்களுமே இப்படித்தானே? இதை மறுப்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா என்ன?
இன்றைய நிலையில் கணவன் மனைவி இருபாலரும் வேலைக்குச் செல்கிறார்கள். சில வீடுகளில் கணவனும் சமையல் வேலைகளில் உதவி செய்கிறார். கணவன் மாலையில் ஜிம்முக்குச் சென்றால் மனைவி அதிகாலையில் செல்கிறார். இருவரும் சமச்சீரான உணவுகளை உட்கொள்ள திட்டமிடுகிறார்கள்.
ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தபோது கவனித்தேன். மணமேடையில் வாழ்த்திவிட்டு இறங்கி வந்த எல்லா தம்பதிகளிலும் - 40 வயதிற்கு மேற்பட்ட எல்லா பெண்களும் படிகளில் கைப்பிடியை பிடித்தபடி பக்கவாட்டில்தான் இறங்கி வந்தனர்.
ஏன்?
மூட்டுவலி.
கணவனது தட்டில் காய்கறிகளை நிரப்பும் பெண்களின் நிலை இதுதான்.
” எனது மனைவியின் தட்டில் பரிமாறி அவள் அத்தனை காய்கறிகளையும் உண்ணுமாறு பார்த்துக்கொள்வேன்” என்று ஏன் அவரால் உறுதி எடுத்துக்கொள்ளமுடியவில்லை?
அப்படி சொல்பவரை படம் பிடித்து போட எது தடுத்தது?
நேற்று அண்ணா சாலை வழியாக கடந்து வரும்போது கண்ணில் பட்டது அதே விளம்பரம். இந்த முறை, அவரது படத்துக்கு பக்கத்தில் ஒரு பெண்ணின் படம். அந்த பெண் சொல்வது போல அமைந்திருக்கும் வாசகம் :
”I pledge to get off my bus a stop early and walk ”
” கணவர் எனது தட்டில் வைக்கும் காய்கறிகள் அனைத்தையும் உண்பேன்” என்று உறுதிகூறுவது போல ஒரு பெண்ணின் படத்தை போட முடியவில்லையே, ஏன்?
பெண்கள் எப்போதும் caregivers-தான் என்ற எண்ணத்தை பதிய வைக்கிறார்களே, ஏன்?
Times are changing...better change now!
26 comments:
உங்க ஆதங்கம் புரிகிறது....வளர்ந்த நாடுகளில் கூட உணவு விசயத்துல விளம்பரங்கள் அப்படி தான் வருது...
நானும் அந்த விளம்பரத்தைப் பார்த்து எரிச்சலடைந்தேன்.
Taken for granted ஆக நாம் கடந்து போகும் கசக்கும் உண்மைகளைப் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறாய்.
அது சரி, இத்தனை "ஏன்" கள் இருக்கே இடுகையில், "ஏன்னு கேட்கிறேன்" லேபில் போடலையே ஏன்? ஏன்? ஏன்?
:)
மாற வேண்டும் என்று என்ன கட்டாயம்.இப்படி இருக்க தானே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.யாரேனும் ஒருவராவது குடும்பத்தில் முழு பொறுப்பும் எடுத்து தானே ஆக வேண்டும்.அதனால் தானே இந்தியா கலாச்சாரம் மிகுந்த நாடாக மற்ற நாடுகளால் பார்க்க படுகிறது.நம் பெண்களால் தான் குடும்பம் என்னும் அமைப்பு சிதைந்து போகாமல் இருக்கிறது. விதண்டாவாதம் செய்ய தான் பெண் விடுதலை என்னும் பதம் இப்பொழுதெல்லாம் பயன் படுகிறது.எத்தனை ஆண்கள் பெண்களால் கஷ்டப்படுகிறார்கள்.அவர்கள் யாரும் வெளியில் சொல்வதில்லை.ஏனெனில் கேலி செய்யப்படுவர்.பெண்கள் கஷ்டப்பட்டால் தான் இங்கு இரக்கபடுவர்.ஆண்கள் உட்பட.
Sterotyping தான் காரணம்! இதை விடக் கொடுமை சில சமயம் Women Wellness Clinic, Mothers Day, Womens Day விளம்பரங்கள். சில அலுவலங்களில் கூட தோல், நகம், முடி அழகைத்தாண்டி பெண்களுக்காக என்று யாரும் யோசிப்பதில்லை.
இவை மட்டும் தானா,
இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கு என் கிட்ட
இருப்பினும் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி
என்ன மாதிரியான மாற்றத்தை விரும்புகின்றீர்கள் அல்லது எதிர்ப்பார்க்கின்றீர்கள்
அட போங்க நீங்க. எல்லாத்தையும் பெண்கொடுமையாவே பார்த்துக்கிட்டு.
பரிமாற்றதுல கூட உங்களுக்கு என்ன பிரச்சினை.
எல்லாத்தையும் வேற பார்வையில பார்க்குறத நிறுத்துங்க.
அப்படித்தான், அம்மா எனக்கு ஏன் நீளமான முடி இல்லைன்னு ஒரு பொண்ணு அவங்க அம்மா கிட்ட கேட்டதக் கூட குறை சொன்னீங்க.
முல்லை ,உங்களுடன் ஒத்துபடுகிற்ஏன். நீங்கள் சொன்னீர்களே தாங்கலாக நடந்த்து வருகிறார்கள் என்ரு...அதர்க்கான காரணம் osteoporosis.அதிகமான வேலை, மிச்சம் மிதியெல்லாம் சாப்பிட்டு குண்டான உடம்பு, மாதவிடாய் நிர்க்கும் போது மக்கர் செய்யும்..ஆனால் யாருக்கு கவலை.'குடும்பம்' அன்ற 'கதகதப்பு' பாதுகாபு இப்படி வாய் சொல்லில் வீர்ரர்டி தான் நாம்.
எத்தனை பெண் களுக்கு regular breast chekup,cervical smear செய்வதன் முக்க்யத்துவம் தெரியும்?
கடந்த முறை இந்தியா பொனபோது எங்கள் வீட்டிர்க்கு சுத்தம் செய்ய வந்த பெண்மணி 'என்ன சாருக்கு சாப்பாடு வைக்கிலிய?' என்று என்னிடம் சண்டை. எனக்கு சற்று நேரம் கைத்து புரிந்தது. நான் சொன்னேன் 'எல்லாம் மேசையில இருக்கே'.அதர்க்கு அவர்'எங்க ஊட்டுக்காரருக்கு நாந்தான் போயி சாப்பாடு குடுக்கணும், இல்லைனா சாப்பிட மாட்டரு".இதே அம்மா தான் தினமும் கணவரிடம் அடி உதை என்று வாழ்பவர். அவர் குடிப்பதனஅல் இந்த அம்மாவுக்கு ஏகப்பட்ட வலி ,basically mental health concerns but she will complain bodily pains and aches.
எனக்கு ஏற்க்கனவே எரிச்சல் ,ஏனென்றால் இந்தியா போனவுடனே அது என்னவோ கிச்சன் என்னுது என்ற taking for granted மனொபாவம். ஓ ,எனக்கு வரும் கோபத்திறிக்கு அளவே இல்லை.I am a working woman who contributes for my travel ticket and shares all expenses ,so how come cooking is my job and the other person doesnt have to contribute anything?
அமுதா நீங்கள் சொல்வது சரியே... ஏற்கனவே பெண்கள் சம உரிமை என்கிற பெயரில் குழந்தைகளை கூட கவனிக்க நேரம் இல்லாமல் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.. இப்படியே போனால் இன்னும் இரண்டு , மூன்று தலை முறை தாண்டி போனால் இந்தியாவில் கூட குடும்பம் என்ற அமைப்பே இல்லாமல் போய்விடும்.. குழந்தை வளர்ப்பு கூட அடிமைத்தனம் என்றாகி விடும்.. பண தேவைக்காக வேளைக்கு செல்கிறார்கள் என்பதை கூட சில சமயங்களில் ஒத்துக்கொள்ள முடியவில்லை ... அத்தியாவசியம் என்பதே போய் , ஆடம்பர தேவைகள் அதிகமாகி விட்டது, நமது அடுத்த தலை முறையை கூட நம் இப்படியே பழக்கப்படுத்தி விடுகிறோம்..
இப்படி எல்லாம் பேசினவள் தான் நானும். ஆனால் கடவுள் எல்லாத்துக்கும் செக் வச்சு அடக்குறாரே...
நீங்களாவது பார்த்து நடந்துகோங்க
//பெண்கள் எப்போதும் caregivers-தான் என்ற எண்ணத்தை பதிய வைக்கிறார்களே//
நர்ஸ் வேலையும் அப்படித்தான். ஆணுக்குள்ளும் தாய்மை இருக்குன்னு ஏன் எல்லாருக்கும் புரிவதில்லை.
வயசான பெண்களுக்கு மூட்டு வலியா ?. சிரிக்கலாம் போல இருக்குங்க. வயசான பெண்களைப் பார்த்த நீங்க, வயசான ஆண்களைப் பார்த்திருக்கிறீர்களா ?. எங்கே ? ரிடையர் ஆவதற்குள் மேலே போய் விடுகிறார்கள். என்னவோ, ஆண்கள், பெண்களின் சாப்பாட்டைப் பிடுங்கி சாப்பிட்டு, கொழுத்து அலைவது போல எழுதியிருக்கிறீர்கள். தன் குடும்பம், மனைவி, குழந்தைகளுக்காக, அல்லும் பகலும் பாடுபடும் ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள் முல்லை.
என் மாமா, தன் மனைவியை, அடிக்கடி ஹெல்த் செக்கப் கூட்டிப் போகிறார். இப்படி நான் சொன்னால், இது அதிசயமாக எங்கோ ஒன்று நடக்கும் விஷயம் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.
இப்படி உரிமை பேசி..பேசி.. விடுங்க...
//அடுத்த தலை முறையை கூட நம் இப்படியே பழக்கப்படுத்தி விடுகிறோம்..//
அடுத்த தலைமுறையிலாவது பெண்கள் தான் செய்ய வேண்டுமென்று நிர்பந்திக்கப்படும் விஷயங்கள் இரு பாலருக்கும் பொதுவாக வேண்டும் என்பதற்காகத் தான் இந்தக் கேள்விகள் சிந்தனைகள்.
ஆண் பெண் இரு இனமும் சகல விதத்திலும் சமமாக நடந்து கொண்டால் குடும்ப அமைப்பு சிதைந்து விடும் என்பது என்ன நியாயம்?
பெருவாரியான குடும்பங்களில் பெண்கள் இடிதாங்கியைப் போல் எல்லாச் சுமைகளையும் வாயை மூடிக் கொண்டு தாங்கி வருவதால் தான் அக்குடும்பங்கள் சிதையாமல் இருக்கிறது. அதற்காக அது நியாயமாகி விடுமா? குடும்ப அமைப்புக்கான "பெருமையையும் மரியாதையையும்" பெண்களுக்கு முழுவதுமாக வழங்கியதும் போதும் அதன் பொருட்டு அவர்களை உணர்வு ரீதியாக, உடல் ரீதியாக, உழைப்பு ரீதியாக....இன்னும் இன்னும் சுரண்டுவதும் போதும்.
//பின்னோக்கி said... என்னவோ, ஆண்கள், பெண்களின் சாப்பாட்டைப் பிடுங்கி சாப்பிட்டு, கொழுத்து அலைவது போல எழுதியிருக்கிறீர்கள். /
:))))))
எப்படிங்க இப்படில்லாம் யோசிக்கிறீங்க?
சிரிச்சிட்டே இருக்கேன்.(உண்மையிலேயே!)
நிலைமை மாறி வருகிறது முல்லை.
எங்க வீட்டில் குழந்தைகளாக இருக்கும்போதே பொறுப்பைக் கற்றுக் கொண்டார்கள். இப்பொழுதுன் எங்க மகன்கள் அவர்கள் வீட்டில் கடைக்குப் போவது,டிஷ்வாஷர் போடுவது,டயப்பர் மாற்றுவது.,வீட்டைச் சுத்தம் செய்வது,பாத்ரும் சுத்தம் எல்லாம் கவனிக்கிறார்கள்.
என் மாமியார் காலம்,வேறுமாதிரித்தான் இருந்தது.
ஓட்டெல்லாம் பாசிட்டிவாதான் போட்டேன்... (ஏன் எனில் பிடிச்சிருக்கு நிறைய ஏன்கள்?)
ஆனா,
இந்த கேள்வியையும் வைக்காமல் நகர முடியல.
"என்ன முல்லை, உங்களோட இதே தொல்லையா போச்சு?" :-)
//அது சரி, இத்தனை "ஏன்" கள் இருக்கே இடுகையில், "ஏன்னு கேட்கிறேன்" லேபில் போடலையே ஏன்? ஏன்? ஏன்?
:)//
:-)) தீபா வேற..
(என் ஆணாதிக்க மனநிலை குறிச்சும் பயமாத்தான் இருக்கு)
இதைக் கூட ப்ராக்கட்டில் போடத்தான் மனசு வருது பாருங்க என்று ஒரு இடுகையை போட்டுறாதீங்க முல்லை. பாவம், புள்ள குட்டிக்காரன் உங்க சித்தப்ஸ், பொழச்சு போகட்டும். :-))
முல்லை,
என்னோட சிறுகதை ஒன்று உங்கள் கருத்தோடு இணைகிறது.
www.9-west.blogspot.com/2009/12/blog-post_05.html
//அவர்கள் வீட்டில் கடைக்குப் போவது,டிஷ்வாஷர் போடுவது,டயப்பர் மாற்றுவது.,வீட்டைச் சுத்தம் செய்வது,பாத்ரும் சுத்தம் எல்லாம் கவனிக்கிறார்கள். //
வ்ல்லி சொன்னது போல் இந்தியர்கள் எல்லோரும் வெளிநாடுகளில்....ரோமனில் ரோமானியர்கள் போல்தான் நடந்து கொள்கிறார்கள்.
இங்கு முல்லை கேட்டது, மனைவியர்கள் சத்தான உணவுகளை உண்கிறார்களா? அவர்கள் அது பற்றி கவனிக்கப் படுகிறார்களா? என்பதே!
//அது சரி, இத்தனை "ஏன்" கள் இருக்கே இடுகையில், "ஏன்னு கேட்கிறேன்" லேபில் போடலையே ஏன்?
ஏன்? ஏன்?//
நானும் இதையே யோசித்தேன், இடுகையிலே எவ்வளவு ஏன் இருக்குன்னு சொல்லுறவங்களுக்கு பரிசு கொடுக்கலாம்.
ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் உதவியாய் இருந்து வாழ்ந்தால்தான் குடும்பம் மகிழ்சியாக இருக்க முடியும்...ஒருவர் மற்றவர்
செயலில் குற்றம் கண்டுபிடித்து கொண்டு
இருந்தால் குடும்ப அமைப்பே சிதைந்து
விடாதா சகோதரி?
@நானானி,
விளம்பரக்காரங்களுக்கு இன்னும் புத்தி மாறவில்லை.
நாம வேணா எடுத்துச் சொல்லலாம்.:)
மாத்திப் போட்டாங்கன்னா நிஜமாகவே அவங்க கருத்து வெற்றி பெற வாய்ப்பு இருக்கு.
உங்கள் ஆதங்கம் நியாயமானது.
:)
தலைப்பு அருமை.
சரியான கேள்விதான்..
ஒருவேலை அந்த விளம்பரப்படம் எடுத்த டைரக்டர்/
நிருவனர்கள் / “பெண்”களாக இருந்திருப்பார்களோ..
விளம்பரக்காரங்க இனிமே இந்த கோணத்துல யோசிச்சே ஆகனும் .
(எங்கவீட்டுல ப்ரூட்ஸ் எல்லாம் வாங்கிவச்சிட்டு சாப்பிடச்சொல்லி ஒரே தொல்லை .. நாங்க தான் டிமிக்கி அடிப்போம்.. :)
)
@ பா.ரா
:)
I've come very late to the party. So I'll just say that I totally agree with you. :)
Post a Comment