Friday, June 04, 2010

'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு

திரும்ப திரும்ப்ச் சொன்னதையே சொன்னாலும் இதுதான் உண்மை.

என்னை நம்புபவர்களுக்கு விளக்கம் தேவையில்லை. நம்பாதவர்களுக்கு இன்னும் எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் போதாது!

எனினும்...சில வார்த்தைகள்!

பதிவுலகில் ஒரு நடைமுறை ஹிட் ஆனால் அதை பின்பற்ற சிலர் விரும்புவது இயல்பு. உதாரணத்திற்கு, சென்ற வருடம் பரிசல்காரனின் பத்து கேள்விகளைத் தொடர்ந்து பதிவுலகமே பத்து கேள்விகளால் நிரம்பியது. அதைத்தொடர்ந்து நானும் ஆயாவிடம் பத்து கேள்விகள் இடுகையை இட்டேன். இதற்கு நான் பரிசல்காரனிடம் பர்மிஷன் கேட்கவில்லை.

அடுத்து, ஒரு வாசகர் கடிதத்தை நர்சிமும் வெட்டிபயலும் இடுகிறார்கள். அதைத் தொடர்ந்து தன்னைத் தானே பகடி செய்து, அதையும்
நர்சிமிடம் கேட்டபிறகு அவரது ஒப்புதலுடனே தீபா இடுகிறார். அப்படி ஒப்புதல் இல்லாவிட்டால் முன்பே தெரிவித்திருக்கலாம்.
அதைத் தொடர்ந்து கண்டன பதிவுகள்,சர்ச்சைகள் வரத் தொடங்குகின்றன. தீபாவிற்கு ஆதரவாக கமெண்ட்கள் இடுகிறேன். பிரச்சினை ஓய்ந்ததும் முகில் என்னை கிண்டல் செய்து அனுப்பிய வாசகர் கடிதத்தை இடுகிறேன். அதை அனைவரும் ரசித்தாலும் ஒரு சில பதிவர்கள் அதை நீக்குமாறு கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து என்னை நச்சரிக்கிறார்கள்.

என்னைப் பற்றிய சுய கிண்டலில் நான் யாரையும் காயப்படுத்தவில்லை, சொல்லப்போனால் என்னை நானே டேமேஜ் செய்து கொண்டதுதான் அதிகம். இதில் நீக்க ஒன்றுமில்லை என்று சொன்னாலும் வடகரைவேலன் போன்றவர்கள் வழியாக பிற பெண் பதிவர்கள் மூலம் எனக்கு தொடர் நச்சரிப்பு வருகிறது. இந்த இடத்தில்தான் ‘இந்த போஸ்ட்க்கு என்ன இவ்ளோ முக்கியத்துவம்' என்று வியப்பும் எரிச்சலும் மேலிடுகிறது. அதனாலேயே அதை இன்றுவரை நீக்கவில்லை. கவனிக்கவும், இங்கு தீபாவின் பிரச்சினை முடிந்தவுடன், தீபா மற்றும் நர்சிம் சம்பந்தபட்ட அனைத்து இடுகைகளும் நீக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் என்னையும் ராப்பையும் வைத்து அதிஷா எழுதிய ”அடிச்சுக்கிட்டு சாவுங்கடி” இடுகை இன்னமும் இருக்கிறது. அந்த இடுகையை விட,என்னை நானே கிண்டல் செய்துகொள்வதைத்தான் நடுநிலைவாதிகளால் தாங்க முடியவில்லை போல!

தற்போது, சாட்டில் வந்து மயில் ஒரு லொள்ளு சபா டைப்பிலான இடுகையின் சுட்டியைக் கொடுக்கிறார். சம்பந்தபட்டவரிடம் ஒப்புதல் பெற்றதாக கூறுகிறார். வாசகர் கடிதம் கொண்டு வந்த வினையை நினைத்து இதற்கு உளவு வேலை பார்க்க வந்துவிடுவார்களோ என்று முன்னெச்சரிக்கையாக அதைச் சொல்லியே இடுகையை ட்விட்டரில் பகிர்கிறேன். 'இப்படி இல்லை' என்று சொன்னால் 'அப்போ அப்படித்தான்' என்று எடுத்துக்கொள்பவர்களை நான் என்ன செய்ய முடியும்? நானே எழுதியதாக கதை கட்டுவார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. அப்படி நானே எழுதினால் அதை எனது பதிவில் போட்டுக் கொள்ளும் தைரியம் எனக்குண்டு.

கடந்த வருட சீரியஸ் சர்ச்சையை பகடி செய்யும் விதமாகவும், மணிகண்டனுக்கு பதிலாகவும் சில கமெண்ட்கள் இடுகிறேன்.
நான் மட்டுமல்ல, என்னோடு பல பதிவர்கள் இடுகிறார்கள். அவ்வளவுதான் எனக்குத் தெரியும் . நான் எந்த குழுமத்திலோ எந்த பிரபல நட்பு வட்டாரத்திலோ இல்லை. ஆனால், நான் இட்ட கமெண்ட்கள்தான் பிரச்சினையாக இருக்கிறது என்பது அவ்விடுகையின் சில கமெண்ட்கள் மூலமாக தெரிய வருகிறது

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, ஒரு வருடமாக நான் சீண்டி வருகிறேனென்று சொல்லப்படுகிறது. எங்கே என்னவென்று இப்போது வரை எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் விளக்கினால் பரவாயில்லை.

ஆனால், நர்சிம் தொடர்ந்து என்னை சீண்டியதை அவரது இடுகைகளிலிருந்து சொல்ல முடியும். உதா. சென்ற வருடம், ஐ லவ் யூ சென்னை என்று இடுகையிட்டததைத் தொடர்ந்து அய்யனார் எழுத பலரும் சென்னை குறித்து அவரவர் அனுபவங்களை எழுத தொடங்குகிறார்கள். பதிவுலகில் எனக்குப் பிடித்த அம்சமே இதுதான். கதைகள்,கவிதைகளை விட அனுபவங்களை அவரவர் பகிர்வுகளில் வாசிப்பதே வாழ்க்கையை
இன்னும் நெருக்கமாக காட்டுகிறது. எனது அனுபவங்கள், பார்வையை மட்டும் இல்லாமல் சக ஜீவனின் அனுபவங்களையும் அவர்களது எண்ணங்களையும் அறியக் கிடைப்பது வேறு எங்கே என்று கூறுங்கள்? அதில் குசும்பன் அவருக்கே உரிய கலாய்த்தலுடன் சென்னை
பிடிக்காமல் போனதை எழுதுகிறார். அதில் நர்சிம் , “இன்னும் கூட குத்தலாம் தலைவா” என்று கமெண்ட் இடுகிறார். அதைத் தொடர்ந்து அவரும் சென்னை குறித்து இடுகையிடுகிறார். இது என்னை சீண்டுவதற்கு என்று நான் சொல்லலாமா? எனக்கே அபத்தமாக இருக்கிறது. இதை ஒரு நிகழ்ச்சியாக சொல்ல வரவில்லை, இதையும் சீண்டல் என்று நான் கொள்ளலாமா என்றுதான் கேட்கிறேன்.

ஆனால், நிஜமான சீண்டல் ஒன்று இருக்கிறது. பல பெண் பதிவர்கள் அதை உணர்ந்து இருக்கிறார்கள். என்னிடம் தனிப்பட்ட ரீதியில் பகிர்ந்தும் இருக்கிறார்கள். ஆனால், நான் இதை பிரச்சினையாக்க விரும்பியதில்லை. பிரச்சினையாக்குமளவுக்கு எனக்கோ, மற்ற பெண் பதிவர்களுக்கோ இங்கே பாதுகாப்பில்லை என்பதும் உண்மையே. பதிவுலகில் பெண்கள் குறித்து புதுகை எழுதிய இடுகையின் மூலம் நர்சிம்மின் இடுகையை வாசிக்க நேர்ந்தது. விதூஷை அசோக் 'எளிய அழகுடன் இருக்கிறீர்கள்' என்று சொன்னதைத் தொடர்ந்து ‘குழந்தைகள் அப்டேட் முதல் பெண்ணிய கருத்துகள் முழுவதும் பதியப்படும் உலகில் இதை யாரும் கேட்கவில்லை, பெண்ணியம் என்னவென்று புரியவில்லை' என்கிற ரீதியில் நர்சிம் எழுதினார். இப்போது சொல்லுங்கள்,இதை என்னவென்று சொல்வீர்கள்?

இதைக் குறித்து நான் கண்டன இடுகை இட்டிருக்கலாமல்லவா? நான் இட்ட ஸ்மைலியுடன் இட்ட கமெண்ட்கள் ஒருவரை காயப்படுத்துகிறது எனில் “பப்புவை குறித்தும், எனது சில பெண்ணிய பார்வைகள் குறித்தும்' நான் எழுதுகிறேனே. அப்போது அவர் என்னை சீண்டித்தான் அதை எழுதியிருக்கிறாரா? எனக்கு எந்த பதிலும் வேண்டாம். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!

அடுத்து, மயிலின் இடுகையை தொடர்ந்து பூக்காரி வெளிவருகிறது. முற்றிலும் என்னை குறி வைத்து எழுதப்பட்டு ! பூக்காரியை வாசித்தபோது கீழவெண்மணி பற்றிய மைதிலி சிவராமனின் கட்டுரைகள் வாசித்தது நினைவுக்கு வந்தது. பிறப்பு குறித்தும் வளர்ப்பு குறித்து எழுதியிருந்தது அதனோடு முற்றிலும் தொடர்புடையது. நான், எனது முகம், நிறம், வளர்ப்பு, குழந்தை, தொழில் என்று என்னை எல்லா வகையிலும் இழிவுபடுத்திய அந்த இடுகை புனைவு என்ற பெயரில் வன்மத்துடன் தயாரிக்கப் பட்டிருந்தது.

ஆத்திரம், அவமானம், அழுகை, மன உளைச்சல், கோபம், கையாலாகத்தனம் எல்லாமும் என்னை அரிக்க ஆரம்பித்தன. ஆனாலும் இதை எதிர்கொள்ள வேண்டுமென்ற உறுதியும் இருந்தது. இல்லையென்றால் பதிவுலகை விட்டு இரக்கமின்றி துரத்தப்பட்டிருப்பேன். உடனடியாக எதிர்வினை செய்ய வேண்டாம் ,நிதானமாக இருப்போமென்று எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் பைத்தியக்காரன் என்னைத் தொடர்பு கொண்டு வருத்தத்தை தெரிவித்து அவரது இடுகையை அம்பலப்படுத்துவோம் என்கிறார். அடுத்த சில மணிநேரங்களில் வினவு தொடர்பு கொள்கிறார். மேலே சொன்ன அனைத்தையும் அவர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். தோழர்கள் என்னை ஆறுதல்படுத்தி நம்பிக்கை அளிக்கிறார்கள். முக்கியமாக இதை விடக்கூடாது என்று சொன்னது எனக்கு பெறும் ஆறுதலாக இருந்தது.

விதூஷை சொன்னதற்கு அவ்வளவு கொதித்தவர் இப்படி ஒரு பெண்ணை கேவலப்படுத்துவதற்காக எழுதலாமா, அதிலும் கமெண்ட்களில் கார்க்கியின் வக்கிரமும் அதை கண்டிக்காமல் அனுமதிக்கிறாரே.. அவர்களுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. என்னையும், என் மகளையும் பதிவுலகில் பலரும் அன்போடு பார்த்த அந்த சித்திரத்தை, சித்திரக்கூடத்தை அடியோடு தீ வைத்து எரிப்பதில் எத்தனை இன்பம்? இப்படியெல்லாம் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்? என்ன செய்வது, இருக்கிறார்கள்.

முன்பு நர்சிம் கொதித்தது விதூஷ் அவரது சாதி என்பதாலா?( ஏனெனில் வித்யா அய்யர் என்ற பெயரில் ஓட்டுகள் போடுபவர் அவர். ) ஆர்குட்டில் நான் முன்பு வன்னிய சாதி ஃபோரமில் இருந்ததற்கு சாதி உணர்வோ, இல்லை வெறியோ காரணம் இல்லை. அது மிகவும் தற்செயலாய் நடந்த நிகழ்வு. ஏன், புதிதாக வரும் ஹீரோயின்களுக்கான ஃபோரம்களிலும்தான் நான் இருக்கிறேன். சுயசாதி பெருமை இருந்தால் எனது பெயரில் படையாச்சி என்று சேர்த்துக் கொண்டு ஓட்டு போடவில்லை. அல்லது ஒரு சில பதிவர்கள் தங்கள் இடுகைகளில் ‘காமராஜ்' புகழ் மட்டுமே பாடுவது போல ராமதாஸின் புகழை நான் பாடவில்லை. வினவின் பாமக மீதான விமரிசனக் கட்டுரையை ஆதரித்து ஒட்டளித்திருக்கிறேன்.அவர்களது கருத்தோடு உடன்படுகிறேன். என் மீது நடத்தப்பட்ட வன்முறையை விட எனது ஃபோரம் நடவடிக்கைதான் சுகுணா திவாகருக்கு தேவைப்பட்டிருக்கிறது. இந்த புலனாய்வு நடவடிக்கைகளைத் தாண்டி நான் எப்போதும் வெளிப்படையானவளே.

ஞாயிறு மதியம் வரை தீபா நீங்கலாக எந்த பெண் பதிவரும் இதற்கு கண்டனத்தை எழுப்பவில்லை. ஏன், நர்சிமின் இடுகையில் ஒரு கண்டன குரல்கூட அவர்களால் பதிவு செய்யப்படவில்லை. அனைவரும் சாட்டில் தனிப்பட்ட விதத்தில் என்னிடம் அனுதாபத்தை தெரிவிக்கிறார்களே தவிர ஒருவரும் வெளிப்படையாக குரல் எழுப்பவில்லை. எது அவர்களை தடுத்தது என்று இன்று வரை எனக்கு புரியாத புதிர். எனக்கு தேவையாயிருந்தது அனுதாபமல்ல, கோபமே! அந்தக் கோபம் சக பெண்பதிவர்களிடமிருந்து ஒரு அலையாக வரவில்லையே என்பதால் நானும் தனிமைப் பட்டிருந்தேன்.

மாதவராஜும்,காமராஜூம் ஞாயிறு இடுகையிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து சிலர் கண்டனம் தெரிவிக்கிறார்கள். கார்க்கி பகிரங்கமாக இடுகையிட்ட மயிலை நாங்கள் குறிப்பிடவில்லை என்று சில இடங்களில் எனது பெயரையும் வெளிப்படுத்தியே கமெண்ட்கள் இடுகிறார். ஆமாம், கார்க்கி, நீங்கள் ஏன் என்னை குதறுகிறீர்கள்? உங்களுக்கு ஏன் இத்தனை வன்மம? என்னை விடுங்கள், எனது மகளைக்கூட விட்டு வைக்காத உங்களது 'மனிதநேயம்' என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இது சூடு பிடிப்பதைத் தொடர்ந்து, அதுவரை அமைதியாக இருந்த ரவி நெகிழ்ச்சியாக ஒரு இடுகையிடுகிறார். ரவி, நீங்கள் எங்கள் குடும்ப நண்பர் என்ற விதத்தில் உதவ முற்படுகிறீர்கள், புரிகிறது. ஆனால் இதை சனிக்கிழமையோ அல்லது எல்லாருக்கும் முதலிலோ அல்லவா இட்டிருக்க வேண்டும், நீங்கள் என்னை சகோதரி என்றுக் குறிப்பிடும் பட்சத்தில். சரியான அர்த்தத்தில் புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். காயப்படுத்துவதற்காக கேட்கவில்லை, இப்போது கேட்கவில்லை என்றால் பின் எப்போதுமே கேட்க முடியாமல் போய்விடலாம் அல்லவா! நர்சிமின் நட்பு என்ற பயத்தில் பூக்காரியின் அழுகை பலருக்கும் கேட்டிருக்காது என்றே பார்க்கிறேன்.


விக்னேஷ்வரி சமாதான உடன்படிக்கையை கொண்டு வருகிறார். அது எப்படி விக்னேஷ்வரி, இடுகையை ஒரு பெண்ணை கேவலப்படுத்தியத்தை கண்டிக்காமல் பிரச்சினையை தீர்க்க முயல்கிறீர்கள்? இடுகையை எடுக்கச் சொல்லி சகோதரியாக இறைஞ்சியதாக கோபப்பட்டதாக சொல்லியிருந்தீர்கள். ஏன், சகோதரியாக இல்லாமலிருந்தால் இப்படித்தான் கேவலப்படுத்துவார்களா உங்கள் சகோதரர்கள்? மன்னியுங்கள், விக்னேஷ்வரி! என்னை பொதுவெளியில் இழிவு செய்தவர்களிடமே தலைவிரி கோலமாக அழுதபடி உயிர்ப்பிச்சை கேட்கும் அடிமை நானில்லை.

நர்சிம் இடுகையை தூக்கிவிடுகிறார். கவனிக்கவும், செய்த தவறுக்கு கொஞ்சமும் வருந்தவில்லை. மன்னிப்பு கேட்பதென்றால், முகிலுக்கு பின்னூட்டமிட்டதைப் போல உள்ளத்தை வருத்தியதென்றால் அப்போதே அல்லவா மன்னிப்பு கேட்டு பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைத்திருக்க வேண்டும்.ஆனால், எனக்கு நன்றி சொல்லி அல்லவா அவருக்கு அனுதாபத்தை தேடுகிறார்?

வினவு திங்களன்று இடுகையை எனக்கு அனுப்பிவிட்டு சம்மதத்தை கேட்கிறார். பழைய இடுகைகளிலிருந்தும், அவரை தொடர்பு கொண்ட பிற பதிவர்கள் சொன்ன தகவல்களை வைத்தும் எழுதியிருப்பதாக கூறுகிறார். வன்புணர்ச்சி என்ற வார்த்தை ஒன்றும் “பூக்காரி”யை விட
என்னை பாதித்துவிடவில்லை. தாராளமாக இடுகையிடுங்கள் என்று சம்மதிக்கிறேன். பதிவுலகில் பூக்காரியின் அருமை பெருமைகளை வார்த்தைகளால் நாறடித்த பிறகு அதை கண்டிப்பவர்களின் கையை கட்டிப்போட நான் விரும்பவில்லை. சொல்லப்போனால் எனது உணர்ச்சிகளின் குமுறலாய் அதைப் பார்க்கிறேன். தனிமையில் சலித்திருந்த என்னை அந்த இடுகை தோளில் கை போட்டு பார்க்கலாம் ஒரு கை என்றது.

தொடர்ந்து தோழர்கள் நர்சிமின் வக்கிர புத்தியை அம்பலப்படுத்துகிறார்கள். இமேஜ் நாசமாவதை தாங்க முடியாமல் புனைவு சிலரை காயப்படுத்தியதாகவும் என்னிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும் இடுகிறார். ஆனால் அதாவது என்னை கேவலபடுத்தியதற்கும், பப்புவின் இடுகைகளை ரசித்து மறுமொழி இட்டவர்களை கேவலப்படுத்தி இருந்ததையும், மற்ற பெண்பதிவர்களை சில்வண்டுகள் என்றும் “அவளுகளுக்கு இருக்கு” என்ற அச்சுறுத்தலையும் விட்டு விட்டார். பூக்காரி என்ற உண்மையான 'புனைவினால்' நைந்திருந்த எனக்கு அந்த மன்னிப்பு ஒரு பச்சையான புனைவு என்று புரிந்து கொள்வதற்கு மெனக்கெடவில்லை.

இடையில் ரவியும் முகிலும் தொடர்பு கொள்கிறார்கள். கவிதாவும் ஏதோ உடன்படிக்கை கொண்டு வர முயற்சி செய்கிறார். இதில் எதுவும் எனது consensus இல்லாமலே நடைபெறுகிறது. ஏனெனில் எனக்கு வேண்டியது தனிப்பட்ட தீர்வுகள் அல்ல.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை யாராவது ஒரு பெண் பதிவரை இப்படி பலியாக்குகிறார்கள். உதாரணங்கள் சொல்ல விரும்பவில்லை.
இதற்கு சில வருடங்களுக்கு முன்பு கூட உதாரணம் காட்டலாம். கடைசி பலியாக என்னோடு இது முடியட்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். முகிலிடம் நான் பார்த்துக்கொள்கிறேன், என்னால் முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறேன்.

அதையும் மீறி, எனக்கு தெரியாமலே

நேற்று முகில் எழுதிய கடிதத்தை ரவி அவரது பதிவில் வெளியிட்டிருக்கிறார். அலுவலக மீட்டிங் மற்றும் தமிழ்மணம் தொங்கிய நிலையில் உடனடியாக அதைக்குறித்து அறிய முடியாதிருந்தது. அதைக் குறித்து சில விளக்கங்கள்:

பதிவெழுத முகிலைக் கேட்டு நான் வரவில்லை.முகிலைக் கேட்டு கமெண்ட் போடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.

சித்திரக்கூடத்திலும் பதிவுலகிலும் சந்தனமுல்லையாகவே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேனே தவிர முகிலுடைய மனைவியாக அல்ல. நான் முகிலின் சொத்தோ கவுரவமோ அல்ல. அதைக் குறித்த தெளிவு என்னிடம் இருக்கிறது.

முகிலிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்?

இதன் மூலம் மனைவி, கணவனது சொத்து என்பதே திரும்ப நிறுவப்படுகிறது. கணவனும் மனைவியும் சேர்ந்த குடும்பத்தில் கணவன் அங்கமே தவிர, கணவன் என்றைக்கும் மனைவியை ரெப்ரசெண்ட் செய்ய முடியாது!

அப்படியே நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், கேட்க வேண்டிய நபர் யாரைப் பற்றி புனைவெழுதி எல்லார் பதிவுகளிலும் ஒரு வருடமாக சீண்டி வருகிறேனென்று கமெண்ட்களிட்டு திரிந்தீர்களோ அவளிடம்.

ஏன், ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்க உங்கள் ஈகோ பின்வாங்குகிறதா?

சிரித்துவிட்டு கடந்து விடக்கூடிய கமெண்ட்களுக்கு வஞ்சம் தீர்க்க பத்தி பத்தியாக வார்த்தைகள் கொட்டி புனைவு எழுதமுடியும் போது மன்னிப்பு என்பது குற்றத்தை உணராமல் ஒற்றை வரியில் - இதற்கு மேல் சொல்லாமலிருந்தால் இமேஜ் போய் விடுமோவென்ற எண்ணத்தில் - ஏன் சொல்லபடுகிறது? சூழ்நிலை எனக்கு ஆதரவாக திருப்பப்படும் நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வரும் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் முட்டாளில்லை.

'அதான், மன்னிப்பு கேட்டாச்சுல்லே, ஏத்துக்கிட்டு போக வேண்டியதுதானே' என்பது உங்களின் வாதமெனில், பிரச்சினையை எப்படியாவது முடித்து வைக்கவேண்டுமென்பதுதான் உங்கள் பிரச்சினையாக இருந்தால், தயவு செய்து தள்ளிப் போங்கள்!

இந்த இடுகை உங்களுக்கானதில்லை.

எனக்கான முடிவுகளை என்னை எடுக்க விடுங்கள். எனக்கான தீர்வுகளை நானே கூற வேண்டுமே தவிர பிரச்சினை 'நல்லபடியாக' முடியவேண்டுமென்று கருதும் சிலர் அல்ல.

அல்லது உங்களது தமிழ்பட செண்ட்டிமென்ட்களுக்காக அல்ல. நானும் அழுது புரண்டு காப்பாற்றக் கோரும் தமிழ் சினிமா நாயகியும் அல்ல.

இதில் நான் யார் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டுமென்று நானல்லவா தீர்மானிக்க வேண்டும்?!

''அவரை மயக்க நான் பிராக்கெட் போட்டதாகவும், அதற்கு அவர் 'மசியாததால்' அவரை வஞ்சம் தீர்க்க நான் செயல்படுவதாகவும்'' தனது நண்பர்களிடம் சொன்னதுடன், எனக்கு ஆதரவாக நிற்கும் நண்பருடன் நான் 'கள்ளத்தொடர்பு' வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் தன் நண்பர்கள் மூலம் கிசுகிசு எழுத வைத்திருக்கிறாரே...

இப்படிப்பட்ட ஒரு நபரை நான் மன்னிக்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்

இனி யாரும் பெண் பதிவர்களை கிண்டலடிக்க இந்த ஒரு வழியை எடுக்க மாட்டார்கள் என்பது இதற்கு கிடைத்த வெற்றி. அதற்கு வினவுக்கும் மற்ற தோழர்களுக்கும் நன்றி! வினவின் அந்த இடுகை ஒரு கல்வெட்டாக இருக்கட்டும்.

இது குறித்து சாதி வெறியையும் ஆணாதிக்கத்தையும் அம்பலப்படுத்திய அத்தனை தோழர்களுக்கும் நன்றி!

இதையெல்லாம் மீறியும் பாலியல் ரீதியாக வருங்காலத்தில் ஏதேனும் ஒரு பெண் பதிவரை யாரேனும் காயப்படுத்தினால், அப்போது கண்டிப்பாக வினவு தோழர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்பேன்.

நர்சிம் மற்றும் கார்க்கி செய்த குற்றத்தை, தவறை என்னால் மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.

எனக்காக குரல் கொடுத்த தோழர்களுக்கும் என்னுடன் இருந்த அத்தனை நண்பர்களுக்கும், மடலிட்டு, ஆதரவாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி!

இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானோ, முகிலோ மட்டும் முடிவு செய்வது நியாயமாக இருக்காதோ என்று தோன்றுகிறது. தோழர்களும், நண்பர்களும் கூறட்டும்!

145 comments:

மங்களூர் சிவா said...

அன்புள்ள முல்லை சகோதரி,

உங்கள் வருத்தத்தை சற்றும் குறையா வருத்தத்துடன் நானும் என் மனைவியும் இருக்கிறோம்

கூட்டுக்களவாணிகள் யார் யார் என அம்பலப்படுத்திவிட்டீர்கள்

உங்கள் அளவு என் மனைவி மன தைரியமும் அற்றவள்

உங்கள் சம்மதத்துடன் பதிவிட்ட வினவிடம் இருந்து எனக்கு ஒரு பதில் வாங்கித்தரலாமே

தொடர்பான சுட்டிகள்

இந்த வருடத்தில் நான் எழுதியது மொத்தமே ஐந்து இடுகைகள்தான்

http://mangalore-siva.blogspot.com/2010/05/blog-post.html
http://mangalore-siva.blogspot.com/2010/06/blog-post.html
http://mangalore-siva.blogspot.com/2010/06/blog-post_02.html
http://mangalore-siva.blogspot.com/2010/06/blog-post_03.html
http://mangalore-siva.blogspot.com/2010/06/blog-post_04.html

பின்னூட்டத்தை வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.

உங்களுக்கு இங்கு இடும் பின்னூட்டத்தையும் நான் பதிவிட்டுக்கொள்கிறேன்

நன்றி

Uma said...

நீங்கள் பெண்ணாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது. உங்கள் அமைதி புரியாமல் எங்கே பதிவு எழுதுவதை விட்டு விட்டு போன்சாய் மரம் வளர்க்கப் போய்விட்டீர்களோ என்று கவலைப் பட ஆரம்பித்தேன்.

சுரேஷ் கண்ணன் said...

அன்புள்ள தோழி,

நானும் ஒரு 'மிதமான' ஆணாக்கவாதி என்றாலும் இந்த சர்ச்சையை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் பிடித்திருக்கிறது. பாராட்டும் வாழ்த்தும்.

raja said...

I am regular reader not a blogger, hats off to you... i read pookari...thats the worst ever i have ever read ...

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சந்தனமுல்லை,

மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் எழுதியிருக்கிறீர்கள்!!!

நேரமின்மை + மனச்சோர்வு காரணமாக முன்பு போல தமிழ் வலைப்பதிவுகளைப் படிப்பதில்லை. எழுதுவதுமில்லை. கூகுள் ரீடரில் சில பதிவுகளைத் தொடருவதோடு சரி.

ஏதோ பிரச்சினையென்று ட்விட்டரில்தான் தெரிந்தது. இன்றைக்குத்தான் 'பூக்காரி' என்ற அமில அசிங்கத்தைப் படித்தேன். எந்தப் பெண்ணையும் எதிர்க்க பெரும்பாலான ஆண்கள் தேர்ந்தெடுக்கும் ஆயுதத்தைத்தான் நர்சிம் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரைத் தீர்க்கமாக மன்னிக்கமாட்டேன் என்று சொல்வதற்கு வாழ்த்துகள் தோழி.

எப்படியெல்லாம் தாக்கமுடியுமோ அப்படித் தாக்கிவிட்டு. ஒன்றுமே அறியாத பிஞ்சுக்குழந்தையையும் சேர்த்து எழுதிவிட்டு. கூடவே கொலை பற்றியெல்லாம் எழுதியிருப்பதாக பின்னூட்டங்களில் வாசித்தேன். பூக்காரியைப் படித்தபிறகு மனக்கொந்தளிப்பினால் என்னால் எதையும் வாசிக்க முடியவில்லை.

தமிழ் வலைப்பதிவுகளில் சாமரம் வீசிக்கொண்டு நடுநிலை நாடகம் போடுபவர்களை நம்பாதீர்கள். தோள் கொடுக்க வருபவர்களையும் ஒன்றிற்கு நான்கைந்து முறை யோசித்து சேர்த்துக்கொள்ளுங்கள். Just be strong as you are right now!

முகிலினுடைய இடுகையை வாசித்தபிறகு அங்கு பின்னூட்டங்களில் அன்பு பாராட்டிக்கொண்டு, கொஞ்சிக்குலாவிக்கொண்டு, பாசமழை பொழிந்துகொண்டு, மன்னிப்புநாடகங்களை ஒத்திகை பார்த்துக்கொண்டு, இதிகாச கால நாயகிபோல உங்களையும், உங்களை உடமையாகக் கொண்டவரைப்போல முகிலையும் கொண்டு அவரிடம் மன்னிப்புக்கோரியபடி இருக்கும் கும்பலையும், அப்படி விக்கித்துப்போய் மன்னிப்புக்கேட்பவர்களையும் எழுதிய முகிலையும் தைரியமாக கேள்வி கேட்ட உங்களுக்கு அறிவுரை மழை பொழிந்துகொண்டிருக்கும் கழிசடைக்கும்பலையும் சட்டையே செய்யாதீர்கள்.

ட்விட்டரில் சொன்னதைப்போலத்தான். Just be yourself. Like the frank, strong female you are.

எந்தவொரு முடிவையும் ஒன்றிற்கு பத்துமுறை யோசித்து நீங்களே முடிவு செய்யுங்கள். I have trust in you Mullai.

-மதி கந்தசாமி

காலம் said...

இந்த பதிவு வட்ட அரசியல் எனக்கு பதிவு வட்ட அரசியல் மிகப்புதிதாக இருக்கிறது மீண்டும் மீண்டும் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை

ஆனால் தீர்கமான உறுதியோடும் கொள்கைதெளிவோடுமிருந்து இதை எதிர்கொண்டவிதமும் தன்னை யார் முடிவுசெய்யவேண்டும் என்ற முத்தாய்ப்பும் அவரது பாதையை பறைசாற்றுகிரது

தொடருங்கள்

சென்ஷி said...

//
என்னை நம்புபவர்களுக்கு விளக்கம் தேவையில்லை. நம்பாதவர்களுக்கு இன்னும் எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் போதாது! //

சரியான வார்த்தைகள்....

kalagam said...

எனக்கான முடிவுகளை என்னை எடுக்க விடுங்கள். எனக்கான தீர்வுகளை நானே கூற வேண்டுமே தவிர பிரச்சினை 'நல்லபடியாக' முடியவேண்டுமென்று கருதும் சிலர் அல்ல.

அல்லது உங்களது தமிழ்பட செண்ட்டிமென்ட்களுக்காக அல்ல. நானும் அழுது புரண்டு காப்பாற்றக் கோரும் தமிழ் சினிமா நாயகியும் அல்ல.//

இந்த பதிலைத்தான் நான் எதிபார்த்தேன்.

உங்களின் இந்த பதில் கட்டுரை மிகச்சிறப்பு, பூக்காரியின் கதையை நான் படித்து விட்டு மிகவும் கோவப்பட்டுப்போனேன். இத்தனைக்கும் வினவில் வந்த ஒரு கட்டுரைவாயிலாகவே சந்தன முல்லையைப்பற்றி கேள்வி, அவ்வளவுதான். ஏன் முன் பின் தெரியாத நபர் பாதிக்கப்படும் போது தலையிடக்கூடாதென்கிறார்கள். இதென்ன வகை நீதி. பாதிக்கப்படும் மக்களை வதைத்துக்கொண்டு நீ கேட்காதே என்பது ஆதிக்கத்தின் உச்சகட்டம் நர்சிமின் சப்பைகட்டிகள் அதைத்தான் செய்கிறார்கள்.

போராட்டம் தான் வாழ்க்கையே, நேற்று முகிலின் கடிதத்தை விட உங்களின் இக்கட்டுரையில் தலைநிமிர்ந்து போராடும் குணம் வெளிப்படுகிறது. ஆதிக்கத்துக்கெதிரான போராட்டத்தில் வினவு தோழர்களோடு நாங்களும் இருக்கிறோம் பதிவிலும் சரி களத்திலும் சரி.

தோழமையுடன்
கலகம்

இராஜ ப்ரியன் said...

//''அவரை மயக்க நான் பிராக்கெட் போட்டதாகவும், அதற்கு அவர் 'மசியாததால்' அவரை வஞ்சம் தீர்க்க நான் செயல்படுவதாகவும்'' தனது நண்பர்களிடம் சொன்னதுடன், எனக்கு ஆதரவாக நிற்கும் நண்பருடன் நான் 'கள்ளத்தொடர்பு' வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் தன் நண்பர்கள் மூலம் கிசுகிசு எழுத வைத்திருக்கிறாரே...//
சொல்வதற்கொன்றுமில்லை இது போன்ற ஜந்துக்கள் திருந்தவே திருந்தாது போல.

porattamtn said...

பல சமயங்களில் நாம் யாருக்காகப் போராடுகிறோமோ, அவர்கள் நம்மை விட உணர்வுரீதியாக போராட்டத்தில் பின்தங்கியிருப்பது, நமக்கு சமயங்களில் சோர்வூட்டக் கூடியதாக இருக்கும். சமீப காலங்களில் முதன் முறையாக சென்டிமெண்டுக்கு மயங்காத சிந்தனைத் தெளிவும், ஆணாதிக்கத்தின் பல்வேறு நிறங்கள் குறித்த தீர்க்கமான அரசியல் புரிதலையும், கலங்காத செயல் உறுதியும் கூடிய உணர்வை, தங்கள் எழுத்தில் காண்கிறேன்.தொடர்ந்து போராடுவோம் தோழர்.

சென்ஷி said...

//எனக்கு ஆதரவாக நிற்கும் நண்பருடன் நான் 'கள்ளத்தொடர்பு' வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் தன் நண்பர்கள் மூலம் கிசுகிசு எழுத வைத்திருக்கிறாரே... //

கேவலமான மனிதர்கள் உலகம் முழுதும் சூழ்ந்திருக்கிறார்கள்.. :((

தப்பாட்டம் said...

சாட்டில் வந்து மயில் ஒரு லொள்ளு சபா டைப்பிலான இடுகையின் சுட்டியைக் கொடுக்கிறார்
//


கேள்வியே இங்க தான் லொள்ளுசபா மாதிரினா அல்லது அதில் நர்சிம் புண்பட ஒன்னும் இல்லைனா மதுரைநீ போஸ்டில் மயில் ஏன் போட வேண்டும்???

செந்தழல் ரவி said...

//இது சூடு பிடிப்பதைத் தொடர்ந்து, அதுவரை அமைதியாக இருந்த ரவி நெகிழ்ச்சியாக ஒரு இடுகையிடுகிறார். ரவி, நீங்கள் எங்கள் குடும்ப நண்பர் என்ற விதத்தில் உதவ முற்படுகிறீர்கள், புரிகிறது. ஆனால் இதை சனிக்கிழமையோ அல்லது எல்லாருக்கும் முதலிலோ அல்லவா இட்டிருக்க வேண்டும், நீங்கள் என்னை சகோதரி என்றுக் குறிப்பிடும் பட்சத்தில். சரியான அர்த்தத்தில் புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். காயப்படுத்துவதற்காக கேட்கவில்லை, இப்போது கேட்கவில்லை என்றால் பின் எப்போதுமே கேட்க முடியாமல் போய்விடலாம் அல்லவா! நர்சிமின் நட்பு என்ற பயத்தில் பூக்காரியின் அழுகை பலருக்கும் கேட்டிருக்காது என்றே பார்க்கிறேன்.
///

இணைய இணைப்பு இல்லாத இடத்தில் இருந்தேன். தமிழ்மணத்தை திறந்ததும் பார்த்தேன். நர்சிம் இடுகையும் எடுக்கப்பட்டிருந்தது. மாதவராஜ் இடுகையின் வெப் கேச் சுட்டியில் நர்சிம் இடுகையை பார்த்தபின்பே பிரச்சினையின் தீவிரம் உணர்ந்தே. இது விளக்கத்துக்காக மட்டும்.

மேலும் நீங்கள் நினைப்பதுபோல நட்புக்காக அநீதிக்கு துணைபோய்விடவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன். நர்சிம் இடுகை என் கண்ணில் பட்டிருந்தால் பைத்தியக்காரனைபோல அய்யனாரைபோல எவ்வித சமரசமும் இல்லாமல் என்னுடைய எதிர்ப்பை பதிவுசெய்திருப்பேன்.

முகில் இரண்டு நாட்களாக தானே ஒரு வலைப்பதிவை உருவாக்கி அதில் தமிழ்மண பட்டை போட முயற்சி செய்து பிறகே என்னுடைய பதிவில் போடமுடியுமா எனறான். அவன் மின்னஞ்சலில் அனுப்பிய பதிவை பார்த்து பேச்சற்றுப்போய் - தமிழ் சினிமா செண்டிமெண்ட் போல் அழும் அவனை போல செய்யமுடியாத அலுவலில் அமர்ந்திருந்த காரணத்தால் - அப்படியே பதிவிட்டுவிட்டு - முகில் எழுதுகிறார் என்று தலைப்பிட்டுவிட்டு - என்னுடைய கணக்காக ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டுவிட்டு - உங்கள் இடுகை பார்க்க காத்திருக்கிறேன்.

ட்விட்டரில் நடந்த அனர்த்தங்கள் அறிந்து விசாரித்தேன். அது முழுக்க தற்செயலானது என்று அறிகிறேன். அது குறித்து தீர விசாரித்துவிட்டே எதுவாயினும் செய்யவும்.

இந்த முழு விவகாரங்களும் தீரும் வரை உங்கள் இருவரின் பின்னாலும் எப்போதும்போல நிற்கிறேன்.

மன்னிப்போ தண்டனையோ குறித்த நேரத்தில் முடிவெடுப்பது தான் சரி. காலம் தாழ்த்தி வரும் நீதி, நிரபராதிக்கும் சரி, குற்றம் இழைத்தவருக்கும் சரி. அநீதியே !!!

வால்பையன் said...

உன் ஆதரவு உங்களுக்கு தான்!

Rajesh V Ravanappan said...

"கட்டிபிடிக்கும் போது ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்துதான் கட்டிப்புடிகிறாங்க!! ஆனா கற்புன்னு வரும் போது ஆம்பள காணாம போயிடறான்... என்னைக்கு கற்புக்குள்ள ரெண்டு பேருமே வராங்களோ அப்பத்தான் பாலியல் குற்றங்கள் குறையும்" - விதி படத்தில் பாக்யராஜ் சொல்வது..

பாலியல் பற்றிய ஆண்களின் உதாசினப் பார்வையே, "பூக்காரி" போன்ற படைப்புகளின் காரணி. விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் மறு வாழ்வுப் பற்றி யோசிக்கும் வேளையில், அவர்களின் முனங்கள் சத்தத்தைப் பற்றி கற்பனை செய்பவன் தண்டனைக்குறியவன்..

அவரது மன்னிப்பு - அவரது படைப்புக்கான அங்கீகாரம்..

தப்பாட்டம் said...

எனக்கு ஆதரவாக நிற்கும் நண்பருடன் நான் 'கள்ளத்தொடர்பு' வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் தன் நண்பர்கள் மூலம் கிசுகிசு எழுத வைத்திருக்கிறாரே
//


எப்போது கிழ் இறங்கி போராட ஆரம்பித்து விட்டீர்களோ...

அவர் தான் செய்ய சொன்னார் என்று ஆதாரம் தர வேண்டும் சும்மா கிசுகிசு பாணியெல்லாம் வேண்டாமே


உங்கள் மீது எனக்கு நம்பிக்கை குறைகிறது

SurveySan said...

ஹ்ம். இன்னிக்குதான் எல்லாம் கண்ணில் பட்டது. வருத்தமான நிகழ்வு. வருஷத்துக்கு ஒண்ணு நடக்குது.

எல்லாமே சரிதான், ஆனா, இதுக்கு சாதீய முலாம் பூசுவதுதான் சகிக்க முடியலை.

தனி மனித ஈகோ கிளாஷ், கொஞ்சம் கீழ்த்தரமா போயிருக்கு. அது தெளிவா தெரியுது.

நடக்கட்டும்.

ஜெயந்தி said...

உங்களோட உணர்வுகள ரொம்பத் தெளிவா சொல்லியிருக்கீங்க. உங்கள் தைரியமும் பிரச்சனையை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியமும் என்னை பிரமிக்க வைக்கிறது.

Bless Sense Studio said...
This comment has been removed by the author.
Deepa said...

தெளிவாக, கம்பீரமாக மௌனம் கலைத்திருக்கிறாய் தோழி!

நர்சிம்மின் இடுகையும் கார்க்கியின் பின்னூட்டங்களும் கண்டனத்துக்குரியன என்பதைக் கூறுவதற்கு சந்தனமுல்லை என் தோழியாக இருக்க வேண்டும் என்பதில்லை. (அது உண்மை தான் ஆனாலும்)

முல்லை என்றில்லை, எனக்குச் சம்பந்தமில்லாத பெண்பதிவர் யாரைப் பற்றி இப்படியொரு இடுகையை யார் எழுதி இருந்தாலும் நான் கொதித்திருப்பேன்.

//என்னை பொதுவெளியில் இழிவு செய்தவர்களிடமே தலைவிரி கோலமாக அழுதபடி உயிர்ப்பிச்சை கேட்கும் அடிமை நானில்லை.//சபாஷ்!

//'அதான், மன்னிப்பு கேட்டாச்சுல்லே, ஏத்துக்கிட்டு போக வேண்டியதுதானே' என்பது உங்களின் வாதமெனில், பிரச்சினையை எப்படியாவது முடித்து வைக்கவேண்டுமென்பதுதான் உங்கள் பிரச்சினையாக இருந்தால், தயவு செய்து தள்ளிப் போங்கள்! இந்த இடுகை உங்களுக்கானதில்லை. எனக்கான முடிவுகளை என்னை எடுக்க விடுங்கள்// ஆம், தயவு செய்து.

thooralveethi said...

கொலையே செய்தாலும் மன்னிப்பு கேட்டால் மறந்து மன்னித்து விட வேண்டும் பதிவுலக தர்மபடி...

மன்னிப்பு என்ற ரீதியில் சுய மரியாதையை இழக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன் சகோதரி..தங்களுக்கு என் ஆதரவுகள்!

Anu said...

Dearest Sandanamullai

Your words are strong and hard hitting.

They have given hope for a continued struggle against brahminical and patriarchal thugs, who come in different colors.

Please continue writing.

ஸ்ரீ said...

பெண்களுக்கான என்று சொல்வதை விட, சுயமரியாதையற்ற பதிவுலக ஆண்களுக்கு இந்த பதிவு ஒரு சிறந்த வழிகாட்டி.

///அவரை மயக்க நான் பிராக்கெட் போட்டதாகவும், அதற்கு அவர் 'மசியாததால்' அவரை வஞ்சம் தீர்க்க நான் செயல்படுவதாகவும்'' தனது நண்பர்களிடம் சொன்னதுடன், எனக்கு ஆதரவாக நிற்கும் நண்பருடன் நான் 'கள்ளத்தொடர்பு' வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் தன் நண்பர்கள் மூலம் கிசுகிசு எழுத வைத்திருக்கிறாரே... ///

அடத்தூ!

பின்னோக்கி said...

என்ன நடந்தது என்பதை, வெளியான அனைத்தையும் படித்து புரிந்து கொண்டேன்.

என்னுடைய மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

வலைத்தளங்களில் இப்படி நடப்பது வேதனைக்கு உரியது.

உங்களின் மன உறுதி பாராட்டத்தக்கது. தொடருங்கள் உங்கள் பதிவுகளை....

கண்ணகி said...

ஞாயிறு மதியம் வரை தீபா நீங்கலாக எந்த பெண் பதிவரும் இதற்கு கண்டனத்தை எழுப்பவில்லை. ஏன், நர்சிமின் இடுகையில் ஒரு கண்டன குரல்கூட அவர்களால் பதிவு செய்யப்படவில்லை. அனைவரும் சாட்டில் தனிப்பட்ட விதத்தில் என்னிடம் அனுதாபத்தை தெரிவிக்கிறார்களே தவிர ஒருவரும் வெளிப்படையாக குரல் எழுப்பவில்லை. எது அவர்களை தடுத்தது என்று இன்று வரை எனக்கு புரியாத புதிர். எனக்கு தேவையாயிருந்தது அனுதாபமல்ல, கோபமே! அந்தக் கோபம் சக பெண்பதிவர்களிடமிருந்து ஒரு அலையாக வரவில்லையே என்பதால் நானும் தனிமைப் பட்டிருந்தேன்.

உங்கள் குமுறல் நியாயமானது..தாமதத்திற்கு வருந்துகிறேன்..இருநாட்களுக்குமுந்தான் தெரியவந்தது..அதற்குள் “பூக்காரி” பதிவுநீக்கப்பட்டிருந்த்தது.அதை தேடி எடுக்க தாமத்ம்....என்ன நடந்த்து என்று புரிந்துகொள்ளத் தாமத்ம்......மன்னியுங்கள் முல்லை..உங்கள் துணிவும். எதிர் நோக்கியவிதமும் இனி யாரும் பாதிக்காமல் இருக்கவும், நீங்களே கடைசியாகவும் இருக்க்வும், நீங்கள் எடுக்கும் முடிவுக்கு என் வாழ்த்துக்கள்..பாதிக்கப்பட்ட பெண்ணின் வலி இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்....உங்கள் கணவரின் புரிதல் எல்லோருக்கும் இருக்குமா..அப்போது அந்தப்பெண்ணின் நிலை???...வாழ்த்துக்கள் முல்லை...

ramachandranusha(உஷா) said...

அன்புள்ள சந்தனமுல்லை,
பதிவு போடுவதுடன் சரி, எங்காவது மிக அபூர்வமாய் பின்னுட்டம் இடுவது என்று வழக்கமாகிவிட்டது.
அதேப் போல மிக குறைந்த பதிவுகள் மட்டும் படிப்பது. இரண்டு நாட்களுக்கு முன்பு, வலையுலக
தோழி ஒருவர் சொன்னதும்தான் பிரச்சனை கண்ணில் பட்டது.

முதலில் படித்தது வினைவு தளத்தில் பைத்தியக்காரன் எழுதிய பதிவு. அதில் சொல்லப்பட்ட வார்த்தை பிரயோகங்கள், சாதிலிஸ்ட்டுகள், போகிறப் போக்கில் பிற பதிவர்கள் பெயர்களை குறிப்பிட்டதுப் போன்றவை அதிர்ச்சியை தந்தன. பிறகு அங்கிருந்த லிங்குகள்
வழியாய் போனால் "பூக்காரி" கண்ணில் விழுந்தது. அதற்கு மூலக்காரணம் என்றுச் சொல்லப்பட்டவைகளைப் படித்தால் சாதாரண நையாண்டி. இதற்கு ஏன் இந்த வர்மம் என்றுக்
குழப்பம், இவர்களின் மோதல் ஒரு வருடமாய் நடக்கிறது என்ற வரிகள் பல இடங்களில் கண்டு, குழப்பத்தை மேலும் அதிகமாக்கின. இப்பொழுதும் நடந்தவைகளை உள் வாங்கிக் கொள்ள சிரமமாகவே உள்ளது,

ஆனால் சல்மா, கனிமொழி, குஷ்பூ என்று பொது வாழ்வில் கால் வைக்கும் அனைத்துப் பெண்களையும் கேவ்லப்படுத்தும் வழக்கமான ஆண்களின் ஆயுதம் கதை என்ற புனைவில் பல்லிளிக்கிறது. மன்னிக்கவே முடியாத குற்றம்.

எழுத்தை விமர்சிக்க, கேலி, நையாண்டி செய்ய எந்த வாசகருக்கும் உரிமையுண்டு. ஆனால்
ஒரு பெண்ணின் கேரக்டரை ஆபாசப்படுத்திவிட்டு, மன்னிக்க தெரிந்துக் கொள் என்ற உபதேசங்கள்
இன்னும் அசிங்கமாய் உள்ளன.

வலையுலகம் ஆரம்பித்ததில் இருந்து, எல்லா பெண்களும் இதே முறையில் இழிவுப் ப்டுத்தப்பட்டு வருகிறார்கள். மூத்த பதிவரான என்னிடம் லிஸ்டே உள்ளது. பயந்து ஓடுவது சுலபம். நின்று ஜெயித்துக் காட்டுங்கள். உங்களின் இந்த பதிவு அதை உறுதிப்படுத்துகிறது.

உங்கள் மனோ தைரியத்தை பாராட்டும்,
உஷா

டவுசர் பாண்டி... said...

வினை..எதிர்வினை !

வலி கொண்டு தரும் எதிர் வலி!

இப்படியாகத்தான் இந்த நிகழ்வுகளை புரிந்து கொண்டிருக்கிறேன்.

வரம்புகள் மீறப்படும் போது சட்ட ரீதியான பாதுகாப்பும், தீர்வுகளுமிருந்த வேளையில் எதற்காக சாதீய சகதிக்குள் போய் மாட்டினீர்கள் என்பதுதான் எனது ஆதங்கம்.

எப்படியாகிலும் உங்களின் மன உறுதிக்கு எனது வணக்கங்கள்.

ஜெயந்தி said...

பெண்களெல்லாம் திரளவில்லை என்கிற உங்கள் ஆதங்கம் ரொம்பவும் நியாயமானது.

எனக்கு திங்கள் கிழமைதான் இந்தப் பிரச்சனையே தெரியவந்தது. அதற்குள் ஏகப்பட்ட பதிவுகள், பின்னூட்டங்கள். இதில் தனியாக ஒரு பதிவு போட்டு இன்னும் குட்டையைக் குழப்ப விரும்பவில்லை. நீங்களோ அமைதி காத்தீர்கள். எனக்கு என்ன செய்வதென்ற குழப்பம்தான். தீபாவோ மயிலோ பெண்களை ஒன்றிணைத்திருந்தால் நிச்சயம் நன்றாக இருந்திருக்கும். என்ன செய்வது என்று புரியாமல் இருந்தேன். உங்களை தனிமையில் விட்டுவிட்டோம் என்ற வார்த்தை என்னை தீயாய் சுடுகிறது. உண்மைதான்

விக்னேஷ்வரி said...

விக்னேஷ்வரி சமாதான உடன்படிக்கையை கொண்டு வருகிறார். அது எப்படி விக்னேஷ்வரி, இடுகையை ஒரு பெண்ணை கேவலப்படுத்தியத்தை கண்டிக்காமல் பிரச்சினையை தீர்க்க முயல்கிறீர்கள்? இடுகையை எடுக்கச் சொல்லி சகோதரியாக இறைஞ்சியதாக கோபப்பட்டதாக சொல்லியிருந்தீர்கள். ஏன், சகோதரியாக இல்லாமலிருந்தால் இப்படித்தான் கேவலப்படுத்துவார்களா உங்கள் சகோதரர்கள்? மன்னியுங்கள், விக்னேஷ்வரி! என்னை பொதுவெளியில் இழிவு செய்தவர்களிடமே தலைவிரி கோலமாக அழுதபடி உயிர்ப்பிச்சை கேட்கும் அடிமை நானில்லை. //


மிக்க மகிழ்ச்சி முல்லை, உங்களின் தவறான புரிதலுக்கு. நான் யாருக்கும் ஆதரவு தெரிக்கவில்லை. நர்சிம் எழுதியிருப்பது உங்களைக் குறித்து தான் என என் பதிவெழுதிய நேரத்தில் அறிந்திருக்கவில்லை. தவிர, உங்களை என் பதிவின் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. விஜி, நர்சிம் இருவருமே நான் அறிந்தவர்கள். அவர்கள் மரியாதை காப்பாற்றப்படவே நினைத்தேன். இதில் நீங்களாக எங்கிருந்து வந்தீர்கள் என எனக்குத் தெரியாது. பின் தான் பிரச்சனை உங்கள் மீது திருப்பப்படும் வீரியம் அறிந்தேன். ஆனாலும் என் இடுகையில் நான் யாரையும் தவறாகக் குறிப்பிடவில்லை. உங்களின் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. இதற்கு மேல் உங்களுக்கு விளக்கம் அளித்தால் ஏற்கும் நிலையில் நீங்கள் இப்போது இல்லை. உங்கள் இடத்தில் நானே இருந்தாலும் நீங்கள் கொண்டிருக்கும் கோபம் தான் எனக்கும் இருக்கும். காலம் சரியாக்கட்டும்.

உங்களைப் புதுமைப் பெண்ணாகவே பார்த்துள்ளேன். நீங்கள் எப்போதும் அழும் அடிமை என நான் சொல்லியதில்லை. தொடரட்டும் உங்கள் பெண்ணியப் புரட்சி.

கையேடு said...

உங்களது தெளிந்த சிந்தனைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Kaargi Pages said...

ஆணாதிக்க திமிரை உறுதியாக எதிர்த்து நிற்கும் உங்கள் துணிவுக்கு ஒரு சல்யூட்...!

மிகத் தெளிவாகவும் கச்சிதமாகவும் உங்கள் கருத்தை வெளியிட்டுள்ளீர்கள்.

போராட்டம் தொடர வாழ்த்துக்கள் முல்லை..!

மாதவராஜ் said...

இந்தப் பெரும் கொடுமை நடந்தபின் “இந்தப் பதிவுலகம் இப்படி இருக்கிறதே என வெட்கித் தலைகுனிகிறேன்” என்றுதான் உங்களுக்குச் செய்தி அனுப்பினேன். அதையே இங்கேயும் சொல்கிறேன்.

வெற்று சமரசங்களைத் தாண்டிய உங்கள் உறுதியும், தெளிவும் அரிதானது. கடினமானது.

சித்திரக்கூடத்தை யாராலும் எரித்துவிட முடியாது. அது மகாகவியின் அக்கினிக் குஞ்சாய் சுடர் விடுகிறது!

Nunnokki said...

முல்லை..

மனைவி கணவனின் சொத்தல்லள் என்ற கருத்து தமிழ்ப் பதிவுலகின் நிலவுடமைக் கண்ணோட்டகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் வியப்பில்லை. மனைவி உரத்தும் எதிர்த்தும் பேசினாலேயே அவளை பஜாரி என்போர், குடும்பத்தின் புனிதத்தை (அதாவது ஆணாதிக்கத்தை, ஆணின் தலைமைப் பாத்திரத்தை) அவள் கேள்விக்குள்ளாக்குவதைச் சற்றும் சகியாது விபச்சாரி என்பார். அன்றாட வாழ்வின் பற்பல புலங்களில் நாம் காணும் வழமையான நிகழ்விது.

நர்சிம்மோடு முடிந்துபோகிற விஷயமன்று இது. நாளை வேறொருவரின் வழியாக ஆணாதிக்கம் தொடரவே செய்யும். அதற்காக நீங்கள் எழுதுவதை விட்டுவிடுவீர்களா அல்லது ஆணாதிக்கத்தோடு சமரசம் செய்துகொள்வீர்களா; அவர்தம் மனம் புண்படாதவாறு பின்னூட்டமிடுவீர்களா? மேலைநாடுகளின் ஒப்பீட்டளவிலான பெண்விடுதலையை அடைவதற்கே நம் சமூகம் வரலாற்றுக் கட்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. பிந்திய சமூக அமைப்பில் வாழ்ந்தாலும் முன்னேற்றகர சமூக அமைப்பின் மனத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் ஃபிலிஸ்டைன்களின் வெற்றுக் காகிதப் பூச்சாண்டிகளால் புண்படாதிருங்கள். தொடர்ந்து எழுதுங்கள்..

செழியன்.

Nunnokki said...

முல்லை..

மனைவி கணவனின் சொத்தல்லள் என்ற கருத்து தமிழ்ப் பதிவுலகின் நிலவுடமைக் கண்ணோட்டகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்பதில் வியப்பில்லை. மனைவி உரத்தும் எதிர்த்தும் பேசினாலேயே அவளை பஜாரி என்போர், குடும்பத்தின் புனிதத்தை (அதாவது ஆணாதிக்கத்தை, ஆணின் தலைமைப் பாத்திரத்தை) அவள் கேள்விக்குள்ளாக்குவதைச் சற்றும் சகியாது விபச்சாரி என்பார். அன்றாட வாழ்வின் பற்பல புலங்களில் நாம் காணும் வழமையான நிகழ்விது.

நர்சிம்மோடு முடிந்துபோகிற விஷயமன்று இது. நாளை வேறொருவரின் வழியாக ஆணாதிக்கம் தொடரவே செய்யும். அதற்காக நீங்கள் எழுதுவதை விட்டுவிடுவீர்களா அல்லது ஆணாதிக்கத்தோடு சமரசம் செய்துகொள்வீர்களா; அவர்தம் மனம் புண்படாதவாறு பின்னூட்டமிடுவீர்களா? மேலைநாடுகளின் ஒப்பீட்டளவிலான பெண்விடுதலையை அடைவதற்கே நம் சமூகம் வரலாற்றுக் கட்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. பிந்திய சமூக அமைப்பில் வாழ்ந்தாலும் முன்னேற்றகர சமூக அமைப்பின் மனத்தைக் கொண்டிருக்கும் நீங்கள் ஃபிலிஸ்டைன்களின் வெற்றுக் காகிதப் பூச்சாண்டிகளால் புண்படாதிருங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

செழியன்.

குடுகுடுப்பை said...

உங்கள் தைரியத்துக்கு வணக்கம்.

Dr.Rudhran said...

தாமதமாகத் தெரிந்ததால்தான் நானும் தாமதமாய் உள்வந்தேன்.
இனி இதுபோல் எதுவும் நடக்க விடக் கூடாது எனும் வகையில் முடிவுகளும் நடவடிக்கைகளும் அமையட்டும்.

ஆயில்யன் said...

உமது மனோதைரியத்திற்கு எனது வணக்கங்கள் சகோதரி !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிகத் தீர்க்கமாகவும் தெளிவாகவும் இருக்கிறாது உங்கள் பார்வை. நீங்கள் உங்கள் நிலையிலிருந்து மாற வேண்டியதில்லை. கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் சம்பவங்கள் பலருடைய முகமூடிகளை அகற்றியிருக்கிறது.

செந்தழல் ரவி said...
This comment has been removed by the author.
அருள் said...

தைரியமாக இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

அதேசமயம் - பதிவுலகம் என்பது பயம்கொள்ள வேண்டிய இடமே இல்லை என்பதும் என் கருத்து.

எல்லோரும் அட்டைகத்திகளோடு சுத்துகிறார்கள், சிலர் மஞ்சள் பத்திரிகை அளவுக்கு போகிறார்கள் - கருத்துக்கு கருத்து என்கிற அளவுக்கு ஓ.கே., ஆனால், தரம்கெட்டு எல்லைமீறி தனிப்பட்ட முறையில் தனிமனித சுயமரியாதையை சோதிக்கும்போது, ஆளை கண்டுபிடித்து உதைத்தாலும் தப்பில்லை.

Padmaja said...

Dear Mullai,

Just came to my favorite blog world after a very long time..
What the hell is happening here!!
It took almost 1 day to read all the blogs related to the burning issue.
Hats of to u and Mukil
சுற்றி இத்துணை நடந்த போதிலும், கண்ணியம் காததற்கு.
I can see this as an idiotic action of a male chauvinist.
Never ever forgive them. They don’t deserve it.

You are the only one who can decide on how to proceed further with this.
What ever your decision is, I support you.
The so called neutralist’s can now go and mind their own business.

My only request is, be away from these evils ( I don’t like to call them as human beings) and continue your writing.

My wishes to Pappu for the new academic year…

Sabarinathan Arthanari said...

நண்பரே,

வருத்தமளிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முழு சம்பவங்களையும் சீர் தூக்கி பார்க்கும் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

//எனக்கான முடிவுகளை என்னை எடுக்க விடுங்கள். எனக்கான தீர்வுகளை நானே கூற வேண்டுமே தவிர பிரச்சினை 'நல்லபடியாக' முடியவேண்டுமென்று கருதும் சிலர் அல்ல.//

இது சம்பந்தமாக முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கே உரியது. தங்கள் கணவரையும் மற்றவர்களையும் கூட ஒதுங்கி இருக்க சொல்வதிலிருந்து நன்றாக புரிகிறது.

இது சம்பந்தமான மற்றவர்களின் அரசியலும் தேவையற்றது. உங்களது உறுதியான & நேரான எந்த முடிவும் வரவேற்கிறேன்.

Sabarinathan Arthanari said...

நண்பரே,

வருத்தமளிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. முழு சம்பவங்களையும் சீர் தூக்கி பார்க்கும் நிலையில் உள்ளதாக தெரிகிறது.

//எனக்கான முடிவுகளை என்னை எடுக்க விடுங்கள். எனக்கான தீர்வுகளை நானே கூற வேண்டுமே தவிர பிரச்சினை 'நல்லபடியாக' முடியவேண்டுமென்று கருதும் சிலர் அல்ல.//

இது சம்பந்தமாக முடிவெடுக்கும் உரிமை உங்களுக்கே உரியது. தங்கள் கணவரையும் மற்றவர்களையும் கூட ஒதுங்கி இருக்க சொல்வதிலிருந்து நன்றாக புரிகிறது.

இது சம்பந்தமான மற்றவர்களின் அரசியலும் தேவையற்றது. உங்களது உறுதியான & நேரான எந்த முடிவும் வரவேற்கிறேன்.

ராஜன் said...

உடனிருப்பேன் மனிதம் உம்முடன் இருக்கும் வரை!

வானமே எல்லை said...

உங்களைப் போன்ற தெளிந்த சிந்தனையும், தீர்க்கமும் நிறைந்த பெண் என் தாய்.

வணங்குகிறேன்.

எள்ளல்களை எளிதாக தாண்டி இருக்க வேண்டிய நர்சிம் படுபாதளத்தில் விழுந்து விட்டார்.

be strong and our moral support with you for the defensive actions against the ill souls and rotten hearts.

நட்புடன் ஜமால் said...

இனி இது போல் எதுவும் நடந்துவிடக்கூடாது.

எப்பொழுதும் போல் தொடருங்கள்

எனக்கு எந்த விளக்கமும் தேவைப்படவில்லை.

செந்தழல் ரவி said...

என்னுடைய முந்தைய (உஷாவுக்கனுப்பிய) பின்னூட்டம் ஒரு தனி மடல் போல அமைந்துவிட்டதால் அதனை நானே எடுத்துவிட்டேன்.

ram said...

நர்சிம்மும்,கார்க்கியும் செய்தது மிகக் கொடுமையான விசயம்,ஏற்றுக்கொள்ளப்படவே முடியாதது.அவர்கள் பண்ணிய குற்றத்திற்கு என்னுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்யும் இந் நேரத்தில் என் மனதில் சில கேள்விகள் உங்களுக்காக மட்டுமல்ல சந்தன முல்லை,மற்ற பதிவர்களுக்காகவும்:

1) நாம ஒருத்தரை ஒருத்தர் அவதூறு செய்வதை பல நாட்களாக பார்த்து வருகிறோம்.எதற்கும் நாம் நம் கண்டனங்களைத் தெரிவிப்பதில்லை. இதற்கு முன்பு சாரு நிவேதிதா,ஜெயமோகன் குடும்பத்தில் சில பேர் தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு காரணம் ஜெயமோகன்தான் என்பது முதற் கொண்டு இப்போது வரை வரும் கடுமையான அவதூறுகளை நாம் கண்டு கொள்வ‌தில்லை. ஏனென்றால் அது இரு இலக்கியவாதிகளுக்குள் இடைப்பட்ட சண்டை.2) கொஞ்ச நாட்களுக்கு முன்பு லீனா மணிமேகலை எழுதிய கவிதைக்கு,வினவு மிகவும் கேவலமாக எதிர்வினை செய்திருந்தது.தங்களுடைய பதிவில் மட்டுமல்லாமல் பொது கூட்டத்திலும்.இப்போது நர்சிம்,சந்தனமுல்லையை அவமதித்ததை விட அல்லது அதே அளவுக்கு அவதூறு புரிந்திருந்தது. அவரும் ஒரு பெண்தான்,அவருக்கும் ஒரு கணவர் இருக்கிறார்.உங்களை போலவே அவரும் மன உளைச்சலை அடைந்திருப்பார். உங்களுக்காவது இத்தனை பேர் ஆதரிக்கவும்/ஆறுதல் சொல்லவும் இருக்கிறார்கள்,அவருக்கு?.அப்போதே இதை நீங்கள் கண்டித்திருந்தால் இப்போது இந்தப் பிரச்சனை உங்களுக்கு வந்திருக்காது.இப்போது உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், மொத்த வலையுலகமே உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள்தான் இப்போது தமிழ் பட கதாநாயகி போல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.சிலர் உங்களுக்கு தாமதமாக சப்போர்ட் செய்தார்கள் என்று குற்றம் வேறு சாட்டுகிறீர்கள்.3) இதைவிட கொடுமையான விசயம்,இதற்கு முன்பு அதே தப்பு பண்ணிய வினவையே,உங்கள் பிரச்சனைக்கு அவர்கள் ஓடி வந்தவுடன் அவர்களைப் பாராட்டவும் செய்கிறீர்கள்.அதுவும், நர்சிம் உங்களை கேவலப்படுத்தியது போன்றே இப்போதும் அவர்கள் பயன்படுத்திய வன்புணர்ச்சி,சாதி எதுவும் உங்களுக்கு தப்பாகத் தெரியவில்லை.நாளை வேறு யாராவது ஒருவர் உங்களைப் பற்றி தவறாகப் பதிவிட்டால்,அப்போதும் “பூக்காரி”யை விட இந்தப் பதிவு ஒன்றும் என்னை பாதித்துவிடவில்லை என்று விட்டு விடுவீர்களா!4) நர்சிம் பண்ணிய தவறுக்கு வினவு கொடுக்க நினைத்த தண்டனையே,அவரை தமிழ்மணத்திலிருந்து தூக்க வேண்டும் என்பதுதான்.இப்போது அவர் இனிமேல் எழுதவே போவதில்லை என்று தனக்குத்தானே அதை விட பெரிய தண்டனையும் கொடுத்திருக்கிறார்.உங்களிடம் மனப்பூர்வமாக அவருடைய தளத்தில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.5) உங்கள் கணவரிடம் நர்சிம் ரவியின் தளத்தில் மன்னிப்பு கேட்டதற்கான காரணம்,உங்களைப் போலவே அவரும் மன உளைச்சலை அடைந்திருப்பார் என்பதாகத்தான் இருக்க முடியும்.அதற்கும் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை அதற்கு காரணம் ஈகோ என்கிறீர்கள்.6) இந்த உலகத்தில இருக்கக் கூடிய மிகப் பெரிய தண்டனை 'நாம் மனப்பூர்வமாக ஒருவரிடம் மன்னிப்பு கேட்கும் போது அதை அவர் ஏற்காமல் வெறும் 'நடிப்பு' என்று சொல்வதாகத்தான் இருக்க முடியும்'. அதனால் என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்க நர்சிம்மிற்கு ஏற்கெனவே தண்டனையும் கொடுத்து விட்டீர்கள்.7) இதற்கு மேல் நர்சிம் என்ன பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.உங்களிடம் மன்னிப்பு கேட்டாயிற்று,உங்கள் கணவரிடமும் கேட்டாயிற்று. இதற்கு மேல் எழுதவும் போவதில்லை என்று சொல்லி விட்டார். ஆனால் இப்போது நீங்கள் அடம் பிடிப்பதுதான் சரியாகத் தோணவில்லை.விருமாண்டியில் கமல் சொல்வதுதான் ஞாபகத்திற்கு வருகிறது 'மன்னிக்கிறவன் மனுஷன்;மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்'

kalagam said...

//தரம்கெட்டு எல்லைமீறி தனிப்பட்ட முறையில் தனிமனித சுயமரியாதையை சோதிக்கும்போது, ஆளை கண்டுபிடித்து உதைத்தாலும் தப்பில்லை.//

அது நடக்குமா நடக்காதா ஆவலோடு காத்திருக்கிறேன்.

kalagam.wordpress.com

பதி said...

தெளிவான பார்வைக்கும் தீர்க்கமான முடிவுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் முல்லை.

அம்பிகா said...

அன்பு முல்லை,
நான் மிக மதிக்கும் எழுத்துக்கள் உங்களுடையவை. புடம் போடப்பட்ட பொன்னாய், உங்கள் எழுத்துக்கள்
மேலும்பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை. உங்கள் மன உறுதிக்கு என் வாழ்த்துக்கள்.
இந்த தலைப்பில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஏதோ உறுத்துகிறது

The Analyst said...

Dear Mullai,

வலையுலகில் இவ்வளவு கீழ்த்தரமான பாலியல் வன்முறைகள் இருக்குமென எதிர்பார்க்கவேயில்லை.

மிகத் தெளிவாக எழுதியுள்ளீர்கள். வலையுலகினூடகவாவது உங்களை சிறுது அறிந்ததில் பெருமைகொள்கின்றேன்.
Keep up the good work!

mohamed ashik said...

//ஆறு மாதத்திற்கு ஒரு முறை யாராவது ஒரு பெண் பதிவரை இப்படி பலியாக்குகிறார்கள்.//--தெரிந்தும் ஒரு பெண் பதிவராய் நீங்களே அமைதியாக இருந்திருக்கிறீர்களா? அப்போதே அந்த முதல் ஆறு மாதத்திலேயே எதிர்த்திருந்தால், அடுத்த பல ஆறுமாதங்களில் பல பெண் பதிவர்கள் தப்பி இருப்பார்கள். உங்களைக்காயப்ப்டுத்தும் வரை காத்திருந்தது போல உள்ளது.

மற்றபடி மேலே ram சொன்ன ஒவ்வொரு வரியும் நான் சொல்ல நினைத்துதான். அதில் 2) மற்றும் 3) வது கேள்விகளுக்கு தக்க பதில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

அவர் கேட்காத எட்டாவது கேள்வி:

8)பிற்காலத்தில் இது போன்ற ஒரு சம்பவம் நடக்காத அளவிற்கு சரியான தளம் உங்கள் அனைவராலும் தற்சமயம் போடப்பட்டுவிட்டாலும், இது அறியாத ஏதேனும் ஒரு பிற்கால புதிய பதிவர், அவர் ஒடுக்கப்பட்ட-தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்து அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பதிவர் முஸ்லிமாகவோ அல்லது பார்ப்பனராகவோ இருந்தால் இதே போன்ற வீறுகொண்ட போர்க்களம் அனைவராலும் அமைக்கப்படுமா?

கல்வெட்டு said...

.

//சந்தனமுல்லை...
இதன் மூலம் மனைவி, கணவனது சொத்து என்பதே திரும்ப நிறுவப்படுகிறது. கணவனும் மனைவியும் சேர்ந்த குடும்பத்தில் கணவன் அங்கமே தவிர, கணவன் என்றைக்கும் மனைவியை ரெப்ரசெண்ட் செய்ய முடியாது! //


சந்தனமுல்லை,
ஒரு பெண்ணின் ஆடை , அலங்காரம் முதல் பேச்சு செயல் எதுவானாலும் அவற்றில் குடும்ப கெளரவம் உள்ளது என்று சொல்லி பெண்ணின் மீது கலாச்சார சுமைகளை ஏற்றிவைத்துள்ள சமூகத்தில், நீங்கள் சொல்லியுள்ள கருத்துகள் சரியானவை.

பாதிக்கப்பட்டவர் நீங்கள் வலிகள் உங்களுக்கு. இதனால் உங்களுக்கு மற்றும் கணவர், குழந்தை,குடும்பத்தில் உண்டான மன உளைச்சல்கள் புரிந்துகொள்ளக்கூடியவை. நடந்த இந்த வன்முறைக்கு ஒரு பதிவராக என்னுடைய கண்டனங்களும் வருத்தங்களும்.

*****

பெண்களுக்கு எதிரான பாலியல் குறித்தான வன்முறைக்கு எதிராக அறைகூவல் விடும் நீங்கள்

//சந்தனமுல்லை...
இனி யாரும் பெண் பதிவர்களை கிண்டலடிக்க இந்த ஒரு வழியை எடுக்க மாட்டார்கள் என்பது இதற்கு கிடைத்த வெற்றி. அதற்கு வினவுக்கும் மற்ற தோழர்களுக்கும் நன்றி! ....

இதையெல்லாம் மீறியும் பாலியல் ரீதியாக வருங்காலத்தில் ஏதேனும் ஒரு பெண் பதிவரை யாரேனும் காயப்படுத்தினால், அப்போது கண்டிப்பாக வினவு தோழர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்பேன். //


உண்மையில் அப்படி பக்கச் சார்பு இல்லாமல் இருக்கிறீர்களா? ஏன் என்றால் சமீபத்தில் ம.க.இ.க என்ற ஒரு அமைப்பு லீனா என்ற பெண்ணுக்கு உங்களுக்கு நடந்ததைவிட அதிக அளவில் பாலியல் ரீதியான தாக்குதலைக் கொடுத்தது.

// http://www.lumpini.in/ethiraadal-003.html
ம.க.இ.க. பெண்கள் அணியினர் எழுப்பிய புரட்சிகர முழக்கங்களுக்கு ஒரு ‘சாம்பிள்’ : (என்னையும் சுகுமாரனையும் பார்த்து) ''போங்கடா, போய் லீனா கிட்ட படுத்துக்குங்கடா.’’ //

நீங்கள் செய்த பக‌டிக்கு எதிர்வினை என்று சொல்லி நர்சிம் புனைவில் எந்தக் கேவலத்தைச் செய்தாரோ, அதற்கு சற்றும் குறையாத அளவில் லீனாவிற்கு ஒரு குப்பைக் கவிதையை முன்னிருத்தி ம.க.இ.க செய்தது.

அதை இதே வினவு என்ற‌ குழு ஆதரித்தது. வினவில் வந்த பின்னூட்டங்கள் அதை விடக் கொடுமை.


இப்போது உங்கள் விசயத்தில் மற்ற பெண் பதிவர்கள் யாரும் நேரிடையான குரல் எழுப்பவில்லை என்று சொல்கிறீர்கள் ...

// சந்தனமுல்லை...
அனைவரும் சாட்டில் தனிப்பட்ட விதத்தில் என்னிடம் அனுதாபத்தை தெரிவிக்கிறார்களே தவிர ஒருவரும் வெளிப்படையாக குரல் எழுப்பவில்லை. ...சக பெண்பதிவர்களிடமிருந்து ஒரு அலையாக வரவில்லையே //


ம.க.இ.க செய்ததை ஆதரிக்கும் வினவு என்னும் பதிவர் குழுவை எந்தப் பெண்பதிவரும் அலையாக எதிர்த்ததாகவும் தெரியவில்லை .

ஏன்?

தனக்கு அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கு துன்பம் என்றால் மட்டும் வரும் செலக்டிவ் அறச்சீற்றம்தான் பெரும்பாலருக்கு இருப்பது. :-((((

செய்திகள் நமக்கு தெரியாத பட்சத்தில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உலகில் நடக்கும் எல்லாப் பிரச்சனைக்கும் நாம் கேள்வி /ஆதரவு/விமர்சனம் செய்ய முடியாது. ஆனால் கண் முன்னே தெரிய வரும்போது சின்ன வருத்தமாவது சொல்லலாம் சரிதானே?‌

இந்தக் கேள்வியை பதிவர் ருத்ரனிடம் கேட்டபோது அவர் சொன்னது.

//
ருத்ரன்...
http://rudhrantamil.blogspot.com/2010/01/blog-post_18.html?showComment=1264068863397#c6678334614574208605

லீனா எனக்கு நேரிடயாகப் பரிச்சயமில்லாத ஒரு பெண்.
அவருக்காக வாக்களது வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
//

இப்படித்தான் அனைவரும் இருக்கிறார்கள்.

வேண்டியவர்கள், பரிச்சயமானவர்கள் போன்றவர்களுக்காக மட்டுமே அறச்சீற்றம் வரும்.

***

முத்துகுமரன் said...

சந்தனமுல்லை

முதலில் உங்களின் கம்பீரமான சுயமரியாதைக்கு எனது வாழ்த்துகள்.
தமிழ்ச் சமூகத்திலும், எழுத்துலகிலும் மிக அரிதாகக் காணப்படும் ஆளுமையோடு உங்கள் குரலை பதிவு செய்திருக்கிறீர்கள்.

போலித்தனமான கட்டமைப்புகளை/உரையாடல்களை வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தி இருக்கிறீர்கள்.

வெளிப்பாடு என்பது மட்டும்தான் அந்த கணத்தின் முடிவே தவிர அதற்கான சேகரிப்புகள் நீண்ட நாட்களாக நடைபெறுவது. தோற்றத்தில் நல்லவனாக நடிப்பதும், இயங்குதலில் உள்மன விருப்பப்படி நடந்து கொள்வது. போலித்தனமான வார்த்தைகளின் கற்பிதங்களில் தங்களது வாழ்வியலை வைத்துக்கொண்டு புண்ணுக்கு புனுகு பூசும் இந்த கோமகன்களுக்கும் அவர்களது நட்புகளுக்கும் வார்த்தைகள் மட்டும் பொதுவெளிக்கு உகந்ததாக இருக்க வேண்டும் ஆனால் அதற்கு நேர்மாறாக இயங்குவது குறித்து எந்த கேள்வியுமில்லை. வினவின் பதிவில் வன்புணர்ச்சி என்ற வார்த்தைப்பதம் பயன்படுத்தப்பட்டதற்காக துடித்தவர்களுக்கு புனைவின் பேரால் அதே வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட போது அத்தகைய துடிப்பு வரவில்லை. சாதி இல்லை என்று பொதுவெளியில் சொல்லிக்கொண்டு சாதியத்தின் அத்தனைகூறுகளையும் தவறாது கடைப்பிடித்துக்கொள்ளுவதும், வன்முறை/ஒடுக்குமுறை என்பதை முழுமூச்சாக எதிர்ப்பதாய் பிரகடணப்படுத்திக் கொள்வதும் அவை நிகழும் போது அவற்றை நியாயப்படுத்தும் காரணிகளுக்கு தன்னை ஒப்படைத்துக் கொண்டு அறிவுரைகளோடு நகர்வதுமாய், மற்றும் வார்த்தைகளில் தேன் தோய்த்து எழுதுவதும் பேசுவதும் பின்பு வக்கிரங்களோடு இயங்கும் போலித்தனங்களை துல்லியமாக தோலுரித்துக்காட்டியிருக்கிறீர்கள்.

பல பெண் பதிவர்களின் மவுனம் நம் சமூகம் எந்தளவுக்கு ஆணாதிக்க அடக்குமுறைக்கு உட்பட்டிருக்கிறது என்பதற்கான சாட்சியாகவே இருக்கிறது. கருத்து உதித்த ஒன்றிரண்டு பதிவர்களிடம் இந்த மோசமான வன்முறையின் வீரியத்தை உணராது செய்த இந்த ஆணாதிக்க மொழி எந்தளவுக்கு ஆளுமையைச் செலுத்தியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

ஒரு பக்கம் மன்னிப்பு என்ற முகமுடியோடு சமரசம் பேசும் உரையாடலை நிகழ்த்திக்கொண்டே காயப்படுத்தப்பட்டவரை வீழ்த்திவிட யுத்திகளை முனைப்பாக கையாள்வதும் அதற்காக எத்தகைய கீழ்த்தரமான செய்கைகளை தானோ நட்பின் ஊடாகவோ தொடர்வதும்/ அல்லது அவ்வாறன செய்கைகளை கட்டுப்படுத்த தவறுவதன் பின்னியங்கும் அரசியல்தன்மையை சரியாக உணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. அத்தகைய நபர்கள் எல்லாம் அமைதி விரும்பிகளாகவும், மனித நேயர்களாக போடும் வேடங்கள் பார்க்கவே சகிக்கமுடியாததாக இருக்கிறது.

சந்தனமுல்லை என்ற பெண்ணின் மீது தொடுக்கப்பட்ட வன்மத்தை அதே தனித்த பெண்ணாக எதிர்கொள்ளும் உங்கள் துணிவும், வாழ்வியல் மற்றும் உறவுகளின் மீதான உங்கள் தெளிவும் வியக்க வைக்கிறது. நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

உங்களது போராட்டத்தில் தோழமையோடு துணை நிற்பேன்.

முகுந்த் அம்மா said...

அன்புள்ள முல்லை அவர்களே,

உங்கள் மனக்குமுறலை நன்கு வெளிபடுத்தி இருக்கிறீர்கள்.

நீங்கள் சர்ச்சையை எதிர் கொண்ட விதம் பிரமிக்க வைக்கிறது.

விரைவில் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்க பிராத்திக்கிறேன்.

ஸ்ரீதர் நாராயணன் said...

மிகச் சரியாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

கொஞ்சம் தாமதமாகவும்... :(

பாரி.அரசு said...

முல்லை உங்களுடைய போராட்ட குணத்திற்கு வாழ்த்துகளும், வணக்கமும்.

அம்பிகா said...

அன்பு முல்லை
`பூக்காரிகளுக்கும்’
உங்கள் கருத்துக்களை பதிவிட, உங்களை குறிப்பிட, நீங்களே இந்த பதத்தை உபயோகித்திருக்க வேண்டாமோ என தோன்றியது.
இந்த கருத்தை வெளியிட வேண்டுமென்ற அவசியம் இல்லை

Thekkikattan|தெகா said...

சந்தன முல்லை,

கடந்த ஒரு வார காலமாக பதிவுலகில் நடந்தேறி வரும் நிகழ்வுகளை கவனித்தே வருகிறேன். டாக்டர் ருத்ரனின் ‘’நடுநிலை’’ என்ற பதிவைத் தவிர வேறு எங்குமே இதன் பொருட்டு எனது கருத்தினை முன் வைக்கவில்லை. இருப்பினும் ‘ஓட்டுகள்’ மூலமாக ஆங்காங்கே எனது கண்டனங்களையும் பதிவு செய்தே வந்திருக்கிறேன்.

இன்னும் நம் சமூகம் கடக்க வேண்டிய தொலைவு வெகு தூரமுள்ளது. குழந்தைகளில் ’தூசியேற்றம் (தவறான பார்வைகளை பதியுதல்)’ ஓவர்நைட் நிகழ்ந்து விடுவதில்லையே! அப்படியே ஒரு மனிதன் வளர்ந்தாலும் மிக்க பிரயத்தனங்களின் பேரிலேயே அவைகளை கொஞ்சம் கொஞ்சமாக துடைத்தெறிந்து கொள்ள முடிகிறது. பல சந்தர்ப்பங்களில் அது போன்ற பார்வைகள் எட்டிப் பார்க்கும் கனம் தோறும், தன்னைத் தானே உட் நோக்கி பார்த்து சுய பரிசீலனை செய்து கொள்ள இது போன்ற நிகழ்வுகள் அமைந்து விடுகிறது (அறிந்தே செய்தால் - சொல்வதற்கு அங்கு ஒன்றுமில்லைதான், அது கணக்கில் வராது)...

தனக்கான முடிவுகளை தானே எடுத்துக் கொள்வதுதான் சுய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்... keep up the spirit!

நசரேயன் said...

உங்கள் மன உறுதிக்கு பாராட்டுக்கள்

காமராஜ் said...

அன்புச்சகோதரி.

காலையில் முதல் பதிவு படித்ததும் பிரம்மித்திருந்தேன்.இந்த பதிவு அதை இன்னும் கூடுதலாக்கியிருக்கிறது.

Roshma said...

பதிவு உலகின் புரட்சி பெண் புயலாகிய நீங்கள் எப்படியும் இதை இன்னும் ஒரு வருடத்துக்கு இழுத்து ஆண் ஆதிக்க வாதிகளுக்கும், பார்பனர்களுக்கும், எதிராக பெண் உரிமையை நிலை நாட்ட வேண்டும். உங்கள் நண்பர்கள் குழுவுக்கு சொல்லி இன்னும் ஒரு நூறு கண்டன பதிவுகளை பொட வைக்கணும். சோனியா காந்தி, ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடமும் கண்டன பதிவுகளை வாங்கி வலை உலகில் பெண் உரிமையை நிலை நாட்டனும். வினவு நண்பர்களுடன் சேர்ந்து அணைத்து ஊர்களிலும் தெருமுனை போராட்டம் நடத்தவேண்டும். விடகூடாது .... இந்த ஆண் ஆதிக்க வெறியர்களை, மேல் ஜாதி வெறியர்களை ....... நரசிமையும் கார்கியையும் ஒன்றாக சேர்ந்து தூக்கிலிடும் வரையில் ஓயகூடாது. அனைத்து பெண் பதிவர்களும் இதற்க்கு தங்கள் ஒத்துழைப்பை தருவார்கள், தரவேண்டும்...... முழங்கட்டும் நம் குரல்......

Kanchana Radhakrishnan said...

உங்களுடைய போராட்ட குணம்
என்னை பிரமிக்க வைக்கிறது.
விரைவில் உங்களுக்கு மன ஆறுதல் கிடைக்க பிராத்திக்கிறேன்.

அமைதிச்சாரல் said...

முதலில் உங்கள் மன உறுதிக்கு பாராட்டுக்கள் முல்லை.கம்பீரமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரியான நீங்கள் உங்கள் எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். மாதவராஜ் அண்ணாவின் பதிவில்தான் இதப்பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். லிங்க் பிடிச்சுப்போனா... அதிர்ச்சியும், கசப்பும் வேதனையும் மிச்சம். அதற்குள் பதிவுலகே பத்தி எரிய ஆரம்பித்துவிட்டது. இதில் இன்னும் எண்ணெய்யை ஊத்தணுமான்னுதான் நிறையப்பேர் மௌனமா இருந்திருப்பாங்க. ஆனா.. உங்களுக்காக பிரார்த்தித்தபடி.இந்தப்பதிவின் மூலம் உங்கமேல இருந்த மதிப்பு இன்னும் கூடுகிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் போர்க்குணத்திற்கு பாராட்டுகள்!

வாழ்த்துகிறேன்!

மற்றவர்களைக் கேட்பதை விட நீங்களே முடிவெடுங்கள்!

Sankari said...

வேலைகள் காரணமாக ஒரு வாரமாக இணையத்தின் பக்கம் வரவில்லை. இன்றுதான் வினவு பதிவை முழுசாக படித்தேன். பூக்காரி படிக்க விருப்பமில்லை. தேவையுமில்லை.
//நான் முகிலின் சொத்தோ கவுரவமோ அல்ல//
உங்களை வழிமொழிகிறேன். இந்தப் புரிதலுடன் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நிலவுவதுதான் உண்மைக் காதல். முகில் இதைப் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.
//அதான், மன்னிப்பு கேட்டாச்சுல்லே, ஏத்துக்கிட்டு போக வேண்டியதுதானே//
பொம்பளயாச்சேன்னு பாத்தா ரொம்பத் திமிரெடுத்தவளா இருக்கா என்பதுதான் பலர் சொல்ல நினைத்து சொல்லாத கருத்து.
நர்சிம் இனிமேல் எழுதமாட்டாராம். இப்படி ஒரு சென்டிமென்ட் தாக்குதல். எழுது, எழுதாமல் இரு அது உன் சொந்தப் பிரச்சினை. பொதுவெளியில் ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதற்கு பொதுவெளியில்தான் மன்னிப்பு கேட்கவேண்டும்.
மற்றபடி வினவு மீது காழ்ப்பு கொண்டவர்கள் முல்லையையும் லீனாவையும் சமப்படுத்துகிறார்கள். இது முல்லைக்கு இழைக்கப்படும் இன்னொரு அநீதி. ஆம்பிளைப் பொறுக்கிக்கும் பொம்பிளைப் பொறுக்கிக்கும் இடையில் பாலின வேறுபாடு பார்க்கத் தேவையில்லை என்பது என் கருத்து.
பெண்ணினத்துக்கு நாம் சுயமரியாதையை கற்றுத்தரவேண்டும். ஆணாதிக்கவாதிகளின் இரக்கத்துக்கு மசியாமலும் மயங்காமலும் இருப்பது அதற்கு அவசியம். ஆண்கள் தங்களது ஆதிக்க மனோபாவத்தைக் கூட அவர்களாகப் பார்த்துத்தான் ஒத்துக் கொள்வார்கள். நாம் சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். இது திமிர் மட்டுமல்ல, முட்டாள்தனமும்தான்.
என்ன செய்வது, பெண்களுக்கு இந்த விசயத்திலும் பொறுமை தேவைப்படுகிறதே.
எதிர்மறை அனுபவங்களும் காயங்களும் அப்போதைக்கு நமக்கு வருத்தத்தை கொடுத்தாலும், பிறகு அவையே நமக்கு பலமாகிவிடுகின்றன.
ஜெயித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள் முல்லை.
சங்கரி

Immunology said...

பார்பன ஆணாதிக்கவாதிகளை விஷம் கொடுத்து , கத்தியால் குத்தி , தூக்குல போட்டு, அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு , அப்புறம் பெட்ரோல் ஊத்தி கொளுத்தி ........... மன்னிப்பு கேட்குரங்களம்.

விடாதிங்க! வினவும், துப்பு எச்பெர்ட் மதவரசும் இருக்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இந்த ஆணாதிக்க வாதிகளை. ஸ்டார்ட் மூஜிக்.....

ஓஹ்ஹ்ஹ்ஹ .... செந்தழல் ரவியையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

Karikal@ன் - கரிகாலன் said...

எப்பொழுதாவது ஒருமுறை மட்டுமே பதிவுலகை எட்டிப்பார்ப்பதற்கு எனது வேலைப்பளு என்னை அனுமதிக்கிறது. அப்படி
ஒரு இடைவேளைக்கு பின் வந்து பலரது இடுகைகளை படிக்கையில், தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இறுதியாக வினவு பதிவின் மூலம் நடந்ததை அறிய முடிந்தது கூடவே ஆணாதிக்க திமிர் அடங்கிய, ஆபாசமும் அருவருப்பும் மண்டிய, நாத்தம் புடிச்ச பூக்காரி புனைவை படிக்கவும் நேர்ந்த்தது. .

பதிவர் நர்சிம்மிற்கு எனது கடுமையான கண்டனங்கள்

அதைப் படித்த அதிர்ச்சியோடுதான் தான் உங்கள் பதிவிற்கு வந்தேன் இந்த இடுகையையும் படித்தேன்

தங்களின் உள்ள உறுதிக்கும், தெளிவான நோக்கிற்கும், தீர்வு நோக்கி போராடும் மனத்திண்மைக்கும் ஒரு ராயல் சல்யூட்!

HAT''S OFF!

புன்னகை தேசம். said...

உங்க வருத்தம் நியாயமானது.. நர்சிம் , கார்க்கி செய்தது அருவருப்பின் உச்சம்.


வினவின் பெண்ணுரிமை மீது நம்பிக்கையில்லை..லீனாவையும் மற்றவர்களையும் அவர்கள் பேசிய விதத்தில்...

உங்க துணிவு பிடிச்சிருக்கு.

மற்றபடி உலகம் உருண்டை.. நாம் மன்னிக்காவிட்டால் நமக்கும் அப்படி ஒரு சூழல் வரலாம்..என்பது என் கருத்து ..

எங்க தமிழமுத குழுமத்தில் நேரிலேயே நண்பர் பகலவன் வேசி என்றும் தொழில் நடத்துபவர் என்றும் , உனக்கு நல்ல சாவே வராது என்றும் உமிழ்ந்துவிட்டு சென்றார்..( [[ கவனிக்க புனைவில் அல்ல. நேரிலேயே...:) ]

மேலும் பலரையும் காயப்படுத்தினார்..

மனநிலை சரியில்லாதவர் என்று மட்டும் எண்ணிக்கொண்டு விலக்கினோம்..

பின்பு அவராகவே 1 மாதம் கழித்து உணர்ந்து வந்து மன்னிப்பு கேட்டார்..

மன்னித்தேன் மனதார.. என் முதுகில் சுமையில்லை..

என்னை பொறுத்தவரை ஒருவர் செய்த தவறை உணரவைப்பதே வெற்றி.. தண்டனை கொடுப்பதல்ல...

நீங்கள் செவிசாய்க்கும் நிலைமையில் இல்லை என நன்றாக தெரியும். இருப்பினும் என் 2 செண்ட்...


மற்றபடி பப்புவை பற்றி எழுதும்போது என் மகன் சேட்டைகள்தான் நியாபகம் வரும்..:)

வாழ்த்துகள்...பப்புவுக்கும்..

தருமி said...

hats off to a very strong lady.

எம்.ரிஷான் ஷெரீப் said...

உங்கள் மன உறுதிக்கு பாராட்டுக்கள் சகோதரி!

MAHA said...

முல்லை உங்க‌ள் தைரிய‌த்தை நினைத்து பெருமித‌ப்ப‌டுகிறேன். எங்க‌ள் ( பிர‌ச்ச‌னை தெரிந்தும் மௌன‌மாயிருந்த‌ அனைத்து பெண் ப‌திவ‌ர்க‌ள்) கையாலாகாத‌ நிலைக்கு கார‌ண‌ம் ப‌ய‌ம் தான் என்ப‌தை ப‌கிர‌ங்க‌மாக‌ ஒப்புக் கொள்கிறேன். உங்க‌ள் தைரிய‌ம் எங்க‌ளுக்கு இல்லை.

K.MURALI said...

பாலோஅப்புக்காக!!!!

பூங்கோதை said...

சந்தனமுல்லை!
தங்களின் தெளிவான சிந்தனையையும் , துணிச்சலையும் பாராட்டுகிறேன். You are simply great!

யாராவது non-controversial பதிவர்கள் (முக்கியமாக பெண் பதிவர்கள்)பதிவு போடுவார்கள், அங்கு சென்று எதிர்ப்பை பதியலாம் என்று நானும் long time waiting. Nobody did.. really sad!.

பூங்கோதை said...

//Uma said...
நீங்கள் பெண்ணாக இருப்பதில் பெருமையாக இருக்கிறது. உங்கள் அமைதி புரியாமல் எங்கே பதிவு எழுதுவதை விட்டு விட்டு போன்சாய் மரம் வளர்க்கப் போய்விட்டீர்களோ என்று கவலைப் பட ஆரம்பித்தேன்.
//
அருமை உமா. சத்தியமா எனக்கு மட்டும்தான் கோபமான்னு எனக்கு ரொம்ப பெரிய சந்தேகம் இருந்துச்சு.
பூக்காரி பதிவுல “நல்ல புனைவு”ன்னு comment போட்டுட்டுதான் இவங்க போன்சாய் வளர்க்க போனாங்க. அதுல comment போட்ட ஒரே பெண்மணி இவங்கதான்னு நினைக்கிறேன்.நல்லா இருக்கட்டும்!

இனியா said...

வருத்தங்கள், நடந்துவிட்ட கேவலமான சம்பவங்களுக்கு...

தொடர்ந்து எழுதுங்கள் எதற்கும் கவலைப் படாமல்!

பூங்கோதை said...

//ramachandranusha(உஷா) said...
எழுத்தை விமர்சிக்க, கேலி, நையாண்டி செய்ய எந்த வாசகருக்கும் உரிமையுண்டு. ஆனால்
ஒரு பெண்ணின் கேரக்டரை ஆபாசப்படுத்திவிட்டு, மன்னிக்க தெரிந்துக் கொள் என்ற உபதேசங்கள் இன்னும் அசிங்கமாய் உள்ளன..
//

exactly , இந்த மக்கள் logic சுத்தமா புரிய மாட்டேங்குது. தெரியாம காலை மிதிச்சாதான் மன்னிப்பு கேப்பாங்க,மன்னிப்பாங்க. தெரிஞ்சு at least 3 hours hard work பண்ணி plan பண்ணி காலை மிதிச்சுட்டு (sorry for the poor analogy), எதிர்வினை பார்த்து பயந்து மன்னிப்பு கேட்டா அதுக்கு பேரு just escapism, ஆனா அதை கொடுத்தா அது காமடியால்ல ஆயிடும்.

Here I've got to mention something. I guess it is politically correct to comment on somebody's writing as a reader. I've been reading Narsim's blog for past 2 days including comments. Thatz really hard work I say.. அதுவும் குறிப்பா மாறவர்மனை இந்த சூழ்நிலைலயும் ஆசையா படிக்கப்போய் அதை படிச்சு கொஞ்சம் அழுது, ”நீங்கதான் அடுத்த சாண்டில்யன்”ற கமண்ட்லாம் படிச்சு ரொம்ப அழுதுட்டேன். Why I am telling this is when i browsed through his writings, I find lots of spelling mistakes, incorrect sentence constructions ,so many cliches and a combination of borrowed styles. So pookkaari doesn't seem an emotional outburst without thought. Either it is a ghost-written piece, or too much hard work and too many reviews(not just self) gone inside that.

பூங்கோதை said...

என்னத்த மன்னிப்பு. மாதவராஜ் துப்பின பிறகு கூட பூக்காரி பதிவு இருந்துச்சு, அதுல நாலு நல்ல மக்களின் வக்காலத்தும் இருந்துச்சு. அப்புறம் பிரச்சினை சூடு பிடிச்சி நிறைய பேர் (பதில் attack போட்டு character assassination பண்ணி துப்பினவங்களை discredit பண்ண முடியாத அளவுக்கு நிறைய்ய்ய்ய பேர்) துப்பின பிறகு , ஹீரோ சூப்பரா ஒரு பதிவு போட்டாரு, அதுலயும் முல்லைகிட்ட மன்னிப்பு கேக்கலை, கார்க்கி மட்டுமல்ல என் தளபதி,... அதிஷா/லக்கியையும் சேர்த்துக்குங்க துப்புற listலன்னு போட்டு கொடுத்துட்டு, சொன்னாரே ஒரு வார்த்தை - ”கொஞ்ச நாட்கள் கழித்து எழுத வேண்டும் என்று தோன்றும் பொழுது.. மீண்டும் யாவரும் கேளிர் இயங்கும்” under the super-dooper topic ”இதுக்குதானா நீங்க ஆசைபட்டீங்க”. நல்லா எழுதுறாங்கய்யா டயலாக்.
அப்புறம் வினவுல வந்து மக்கள் தாறுமாறா துப்ப ஆரம்பிச்சதுக்கப்புறம் “மனப்பூர்வ மன்னிப்பு”. நான் கூட பூக்காரி படிச்சிட்டு மனநிலை சரியில்லாதவர்னு தள்ளுபடி பண்ணலாம்னுதான் நினைச்சேன். ஆனா இவர்தான் மனம் பூர்வம்னு சொல்லிட்டாரே..

Squeezed!! said...

Neenga avungala mannikalenna , avungalukku sorgathula edama kedaikkathu, illa soru serikkatha.. over scene ..bagumaana palli paranthukitte mutta podumaam..athaan sorry kettaangalla.. ivlo arivu avungala ellam kindal panrathukku munnaidye irukkanum ippo vanthu feel pannikittu..

சின்ன அம்மிணி said...

1.உங்கள் பதிவைப்படித்துவிட்டு மீண்டும் ஆதிக்கு நர்சிம் தந்த பேட்டியைப்படித்தேன். பெண்பதிவர்கள் குறித்த கேள்விக்கு நர்சிம்முக்கு இலக்கியம் எழுதும் காயத்ரி சித்தார்த்தோ, இல்லை சுஜாதா அவார்ட்ஸ் -எஸ்.ரா. புகழ்ந்த லேகாவோ ஞாபகத்துக்கு வராமால், பெண்ணியம் மட்டும் ஞாபகம் வந்ததிருக்கிறது என்றால் யார் சிந்தனையில் பிழை. அவ்வளவு பெரிய பேட்டியில் கார்க்கியின் கண்ணுக்கு தெரிந்ததும் அது மட்டும்தான். இருவரும் உங்களை சீண்டினார்கள் என்று கொள்ளலாமா அல்லது அவர்கள் சிந்தனையில் ஏதோ பிழை என்று கொள்ளலாமா!!!

2. அவ கூட இருக்காங்களே அவளுங்க யாருன்னு எனக்கு தெரிஞ்சுக்க ஆசை. அந்த அவளுங்கள்ல நான் இல்லாட்டியும் வேறு யார் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசை. கார்க்கியும் அந்தப்பதிவில் இதையோட்டி ஒரு பின்னூட்டம் இட்டார். அவராவது பொதுவெளியில் தெளிவு படுத்துவார் என்று நம்புகிறேன். ஏன் என்றால் நான் உங்களுக்கு பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தியதைப்போலவே நர்சிம்முக்கும், கார்க்கிக்கும் பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தியிருக்கிறேன்.

பூங்கோதை said...

நடுநிலைமை மக்களுக்கெல்லாம் மிக பெரிய பிரச்சினை, வினவு வந்ததுதான். வினவுல எந்த விஷயத்துக்கு சாதி சாயம் பூசல, அது அரசியல், அதுக்காக முக்கியமான் பிரச்சினையை விட்டுட்டு அதையே புடிச்சி தொங்கினா? நீங்க வேணும்னா, வினவும் போலி சாதீயமும்னு போன மாசமோ போன வாரமோ அடுத்த வாரமோ பதிவு போடுங்க (OUTSIDE POOKKARI ISSUE), எல்லாரும் வந்து கருத்து சொல்றோம். பதிவுலகில நிறைய பேர் சமத்துவவாதிங்கதான். But don't drag that into this issue. Just by discrediting the medium, the subject matter cannot be discredited.
பிரச்சினையை பெருசாக்கனும்னா வினவு( any other choice, இட்லிவடை?) மாதிரி நாலு பேர் வந்துட்டு போற இடத்தில போட்டுதான் ஆகணும். போஸ்டர் ஒட்டியே ஆகனும், ஆனா குப்பத்தொட்டி மட்டும்தான் இருக்கு, அதுல ஒட்டினா என்ன பெரிய தப்பு.
In fact, வினவுல வந்தது ரொம்ப நல்லது. அதுல இருந்துதான் பிரச்சினை பெரிசு ஆச்சு. அதுனாலதான் மக்களுக்கு கோபம். பிரச்சினை பெருசாக கூடாதுன்னு , ரொம்ப decent நடுநிலை bloggersலாம் ரொம்ப பாடுபடுறாங்க. ஏன் பெரிசாக கூடாது, வினவுல வரலனா நிறைய பேருக்கு, சாக்கடை எங்க இருக்கும்னு தெரியாமயே போயிருக்கும்.
நம்ம ஹீரோ பதிவுல சொன்ன பன்ச்-டயலாக் -“அவ கூட இருக்கற , ரெண்டு மூனு சில்வண்டகளை கவனிச்சேன், இருக்கு அவளுகளுக்கும் ஒரு நாளு” க்கு ஏற்ப, நமக்கு இன்னும் சிறு இலக்கியங்கள் கிடைச்சிருக்கும். மாபெரும் எழுத்தாளர் விடை பெற்று இருக்க மாட்டார்.

பூக்காரியை pdf ல போட்ட வினவுக்கு நன்றி..
அவரு பதிவ எடுத்துட்டாறாம் அவங்க இன்னும் எடுக்கலையாம். இதுதான் தளபதிகளின் சீஃப் propaganda. பதிவை எடுத்தது சந்தனமுல்லைக்காகவா? நீங்க எடுக்கலைன்னா பாதிக்க பட போறது சந்தனமுல்லையா என்ன? எப்படிங்க அது? ஆஹா- உலகத்திலயே புத்திசாலிங்க இவங்க மட்டும்தான்.

சின்ன அம்மிணி said...

3. நர்சிம்மின் அந்தக்கேவலமானபதிவைப்படித்த என் கணவரிடம் கேட்டேன். என்னைப்பற்றி வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று. என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை என்றார். எல்லாரும் அதற்கு எதிர்வினையாற்றவில்லை என்பதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்ததும் ஒரு காரணம். மலத்தை மிதித்த உணர்வில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது நிஜம். பதிவு போட்டால் மேலும் அதற்கு எதிர்வினை வந்தால் உங்களைப்போல துணிவுடன் நிற்க மற்ற பெண்பதிவர்களால் முடியுமா என்று சந்தேகமே!!!! நான் உட்பட.

4. எங்கோ தூரத்தில் இருந்து கொண்டு நர்சிம்மை மன்னித்துவிடுங்கள் என்றோ, சட்டப்படி நடவடிக்கை என்றோ என்னால் சொல்லமுடியாது. மன்னித்துவிடுங்கள் என்று சொன்னால் எப்படிப்பட்ட மன உளைச்சலில் நீங்கள் இருந்திருப்பீர்கள் என்று எனக்குத்தெரியவில்லை என்று பொருள். சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்றால் இது போன்றவற்றில் சட்டம் எந்த அளவுக்கு செல்லுபடியாகும் என்று தெரியவில்லை. போலி டோண்டு கைதானானா? இல்லையா? தெரியவில்லை.

ஆனால் முகிலிடம் இது பற்றி விவாதியுங்கள். உங்களுக்கு துணைநிற்பவர்களுள் முக்கியமானவர் என்று நினைப்பதால் இந்த வேண்டுகோள்.

சின்ன அம்மிணி said...

5. துணிவுடன் எதிர்த்து நிற்பதைப்பாராட்டுகிறேன். உங்களுக்கு என் ஆதரவு என்பதைத்தவிர வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை.

கயல்விழி said...

அன்புள்ள சந்தன முல்லை

தாமதத்துக்கு மன்னிக்கவும், என்னுடைய நேரமின்மையால் நான் நினைப்பதை சரியாக எழுதமுடியவில்லை. உங்களுடைய மன உறுதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

அனாமிகா துவாரகன் said...
This comment has been removed by the author.
பூங்கோதை said...

நிறைய பேர் மன்னிப்பு-மன்னிப்பு -அதுதான்-கேட்டாச்சில்ல ன்னு பேசறதுனால , ஒரு புள்ளி விபரத்துக்காக, இதை சொல்றேன். Otherwise i dont think so, Santhanamullai will want any "sorry" from them.
முதல் நாள் வரை வரிஞ்சுக்கட்டிக்கிட்டு, எல்லா இடத்தலயும் propaganda பண்ணி வந்த கார்க்கி, இன்னும் முல்லைக்கிட்ட மன்னிப்பு கேக்கலை. ஏன் முகில்கிட்ட இவ்வளவு அழகா கேட்டார்னு சத்தியமா புரியலை.
pookkari இடுகையையும் அதற்கு அவர் இட்ட பின்னூட்டங்களையும், இது தொடர்பாக மற்ற இடங்களில் அவர் இட்ட பின்னூட்டங்களையும் தொகுத்து ஒரு இடுகையாக”அவர் பதிவு”ல போட்டு, இந்த மாதிரியெல்லாம் நான் உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன், ஆனா இப்ப நல்லவன் ஆயிட்டு, முல்லையின் உரிமையாளரான முகிலிடம் மன்னிப்பு கேட்டுட்டேன்னு போட்டா நல்லா இருக்கும். Actually இவ்வளவு காரசாரமா தேடி தேடி எல்லா இடத்திலயும் பக்கம் பக்கமா பேசனவரு, தன் பதிவுலயும் ஏதாவது சொல்லியிருந்தாருன்னா, இவரின் அடையாளத்தை இவர் கடைக்கு வருபவர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும்.
அப்புறம் அபி அப்பா , இவரும் எஜமானர்கிட்ட ஒரு ஒரு வரிக்கும் அழுது கொண்டே மன்னிப்பு கேட்டுக்கொணடார். ஆனா எதுக்குன்னு சொல்லலையே, அங்கிங்கு அவர் போட்ட அற்புதமான பின்னூட்டங்களுக்காகவா? இல்லை முகில் ஆத்திரப்பட்டு கொதித்து அழுதாரே, அநத மாதிரி, feelingsல இருக்கிறவங்களை பார்த்து Englishல சும்மாக்காச்சும் சொல்வாங்களே ..I'm sorry ன்னு - அதோட தமிழ் மொழி பெயர்ப்பா?

பூங்கோதை said...

//இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானோ, முகிலோ மட்டும் முடிவு செய்வது நியாயமாக இருக்காதோ என்று தோன்றுகிறது. தோழர்களும், நண்பர்களும் கூறட்டும்!//
நான் உங்களின் நட்பு வட்டாரத்தில இல்லை, அதுனால நான் சொல்லலாமான்னு தெரியலை.
இருந்தாலும் சொல்றேன். தப்பா நினைச்சுக்காதீங்க.
- legal action எடுக்கலாம்... ஆனா அது நம்ம ஊர்ல உச்சபச்ச காமடியாயிடும். இன்னும் ருச்சிகா- க்கே ஒன்னும் பண்ணலியாமே.
- அவங்க வீட்ல அம்மா/அக்கா/பொண்டாட்டிக்கிட்ட போய் விஷயத்தை சொல்லி, அவங்களையும் கொஞ்சம் துப்ப சொல்லலாம். ஆனா துப்புவாங்களான்னு தெரியலையே, இங்க பழகின பாசத்துக்கே 3 பெண்கள் அவங்களுக்கு கொடி தூக்கிட்டு நிக்கிறாங்க :-(
வீட்ல மட்டும் என்ன நீதி நியாயம் பார்க்க போறாங்க?
அப்ப என்னதான் பண்றது? ஒன்னும் பண்ண வேண்டாம்.
just ignore.

யாராவது ஒரு நல்லவங்க ஒரு attendance sheet மாதிரி வச்சா, சுயமரியாதை உள்ள ஆண்/பெண் பதிவர்கள் வந்து நாங்கள் நர்சிம் மற்றும் கார்க்கியை புறக்கணிக்கிறோம்னு வந்து பதிவு பண்ணலாம்.

இது எப்படி தண்டனைல சேர்த்தின்னு கேக்கிறவங்களுக்கு - உலகின் கேவலமான பிறவிகளை எல்லாம் தண்டிக்கிற சக்தியும் அதிகாரமும் நமக்கு இல்லை. ஆனா சாக்கடை புழுக்கள் நம் வீட்டு வரவேற்பறையில் இல்லன்னு நம்ம கொஞ்சம் சந்தோஷ/பெருமை பட்டுக்கலாம்.

பதிவேடு எதற்கு - ஒரு அடையாள சின்னம்தான், to make it official and to mark solidarity.

சந்தனமுல்லை, உங்களுக்கு நான் சொல்றது ஒத்து வந்து , ஆனா நல்லவங்க யாரும் படிவேடு போடலைன்னா, நீங்களே போட்ருங்க, ஓட்டு போடவாவது மக்கள் கூச்ச படாம வருவாங்கன்னு நெனைக்கிறேன்.

பூங்கோதை said...

//இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானோ, முகிலோ மட்டும் முடிவு செய்வது நியாயமாக இருக்காதோ என்று தோன்றுகிறது. தோழர்களும், நண்பர்களும் கூறட்டும்!//
நான் உங்களின் நட்பு வட்டாரத்தில இல்லை, அதுனால நான் சொல்லலாமான்னு தெரியலை.
இருந்தாலும் சொல்றேன். தப்பா நினைச்சுக்காதீங்க.
- legal action எடுக்கலாம்... ஆனா அது நம்ம ஊர்ல உச்சபச்ச காமடியாயிடும். இன்னும் ருச்சிகா- க்கே ஒன்னும் பண்ணலியாமே.
- அவங்க வீட்ல அம்மா/அக்கா/பொண்டாட்டிக்கிட்ட போய் விஷயத்தை சொல்லி, அவங்களையும் கொஞ்சம் துப்ப சொல்லலாம். ஆனா துப்புவாங்களான்னு தெரியலையே, இங்க பழகின பாசத்துக்கே 3 பேர் அவங்களுக்கு கொடி தூக்கிட்டு நிக்கிறாங்க :-(
வீட்ல மட்டும் என்ன நீதி நியாயம் பார்க்க போறாங்க?
அப்ப என்னதான் பண்றது? ஒன்னும் பண்ண வேண்டாம்.
just ignore.

யாராவது ஒரு நல்லவங்க ஒரு attendance sheet மாதிரி வச்சா, சுயமரியாதை உள்ள ஆண்/பெண் பதிவர்கள் வந்து நாங்கள் நர்சிம் மற்றும் கார்க்கியை புறக்கணிக்கிறோம்னு வந்து பதிவு பண்ணலாம்.

இது எப்படி தண்டனைல சேர்த்தின்னு கேக்கிறவங்களுக்கு - உலகின் கேவலமான பிறவிகளை எல்லாம் தண்டிக்கிற சக்தியும் அதிகாரமும் நமக்கு இல்லை. ஆனா சாக்கடை புழுக்கள் நம் வீட்டு வரவேற்பறையில் இல்லன்னு நம்ம கொஞ்சம் சந்தோஷ/பெருமை பட்டுக்கலாம்.

பதிவேடு எதற்கு - ஒரு அடையாள சின்னம்தான், to make it official and to mark solidarity.

சந்தனமுல்லை, உங்களுக்கு நான் சொல்றது ஒத்து வந்து , ஆனா நல்லவங்க யாரும் படிவேடு போடலைன்னா, நீங்களே போட்ருங்க, ஓட்டு போடவாவது மக்கள் கூச்ச படாம வருவாங்கன்னு நெனைக்கிறேன்.

அனாமிகா துவாரகன் said...
This comment has been removed by the author.
பூங்கோதை said...

Blogger அனாமிகா துவாரகன் said...
//*********//


அனாமிகா, chance-ஏ இல்லை :-)) , என்னங்க பச்ச புள்ள மாதிரி இருக்கீங்க? Roshma- வை விட்டுடுங்க. அவங்களும் நீங்க சொல்றததான் சொல்றாங்க. ஆனா with sarcasm.

பூங்கோதை said...

//'அதான், மன்னிப்பு கேட்டாச்சுல்லே, ஏத்துக்கிட்டு போக வேண்டியதுதானே' என்பது உங்களின் வாதமெனில், பிரச்சினையை எப்படியாவது முடித்து வைக்கவேண்டுமென்பதுதான் உங்கள் பிரச்சினையாக இருந்தால், தயவு செய்து தள்ளிப் போங்கள்!

இந்த இடுகை உங்களுக்கானதில்லை. //

இது புரியாம இங்கு பேசுபவர்களுக்கு..
தமிழ்லதான எழுதியிருக்காங்க. தள்ளிப் போங்கன்னு சொல்றது அவங்க உரிமை. அதுக்கு மரியாதை கொடுங்க.
சொந்த பதிவுலயோ , இல்லன்னா இந்த பிரச்சினைக்கான நிறைய இடுகைகள் இருக்கு அங்க போய் உங்க பொன்னான கருத்துகளை பதியுங்க.

தீஷு said...

அன்பின் முல்லை,

தங்களிடம் தெரிவித்த மாதிரி தமிழ்மணத்தை தினமும் படிக்கும் வழக்கம் எனக்கு இல்லை. நான் படித்த பொழுது எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் உங்களின் இந்த பதிவு படித்தவுடன் ஓரளவு புரிந்து கொள்ளமுடிந்தது.

படித்து சமூகத்தில் சற்று மேல் நிலையில் இருக்கும் மக்களும், பெண்களை எதிர்ப்பதற்கு இந்த மாதிரி ஆயுதம் தான் எடுக்கிறார்கள் என்னும் பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

உங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. நான்கு நாட்கள் பொறுமை காத்த தங்கள் பொறுமைக்கும் தலை வணங்குகிறேன்.

இந்நிகழ்ச்சி மூலம் யார் எப்படிபட்டவர்கள் என்று புரிந்து விட்டது.

இது போல் இன்னுமொரு பெண் தமிழ்மணத்தில் அவமதிக்கப்பட மாட்டாள் என்று நம்புவோமாக.

smart said...

உங்கள் கணவரிடமே தலையிட வேண்டாம் தானே தன் பிரச்சனையை பார்த்துக் கொள்வதாக தைரியமாக சொன்ன நீங்கள் வினவின் வலைக்குள் வராமல் செய்திருந்தால் நான் உங்களை ஆதரித்திருப்பேன். ஏன் இதை பைத்தியக்காரனிடம் சொல்லவில்லை? எந்த இகோ உங்களை தடுத்தது என்று சொல்ல முடியுமா?

Vetrimagal said...

Hi, I am a regular reader of your blog and always admired your writing.

Sorry about all the latest developments. Ramachandran Usha has put it very nicely.
This is the way women are treated by people who refuse to grow with the changing times.

Please accept my "hats off" to you and Mugil for your courage and conviction.

Gene said...

சந்தன முல்லை:

வினவு சம்பந்தமில்லாமல் சந்தனமுல்லைக்கு நிகழ்ந்த அநீதி என்று இதர பதிவர்களை வம்புக்கிழுப்பது அவர்கள் கூறும் காரணப்படியே எந்த விதத்திலும் சரியில்லை. உங்களின் வினவு மக்கள் இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் நர்சிம்மின் ஜாதியே என்று அவர்களின் பார்ப்பனீய‌ பிஸினஸை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். எவன் எக்கேடு கெட்டால் என்ன, யார் குடி நாசமானால் என்ன என்று செக்ஸ் டார்ச்சருக்கு ஆளானவர்கள் என்று எந்த பொறுப்பும் இன்றி சில பெண் பதிவர்களின் பெயரையும் எழுதியிருக்கிறார்கள். நர்சிம்மின் புனைவு வன்புணர்ச்சி என்று சொல்லிக் கொண்டே இவர்கள் அதை விட கேவலமாக இறங்கிப் போகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி அவர்களின் பெயரை வெளியிட இவர்கள் யார்? இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் வினவு பொறுப்பேற்குமா அல்லது நீங்கள் தான் இதுக்கு கண்டனம் தெரிவித்தீர்களா? உங்களை சொன்னால் வலிக்குது அனால் மற்றவர்களுக்கு என்றால் அதே வலி என்றல் உங்களுக்கு அது கண்ணுக்கு தெரிவதில்லை. உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

எங்கே நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் - நீங்கள் நக்கலாக தனிமனித தாக்குதலை தொடுக்கவில்லையா? ஒரு திட்டமிடலுடன், நரித்தனத்துடன், நர்சிம்மைச் சீண்டவேண்டும் என்ற நோக்குடன், வெள்ளியிரவே பலரின் வேண்டுகோளைப் புறக்கணித்து கும்மியபோது இதற்குத் தயாராகவே இருந்திருக்கவேண்டும். வினையை விடு. விளைவைக் கிழி என்பது என்ன நியாயம்?

ஜெய்லானி said...

உங்களுடைய தைரியத்தை பாராட்டுகின்றேன் .

செல்வநாயகி said...

பலமுறை முயன்றும் பின்னூட்டம் ஏற்றுக்கொள்ளப்படாத பிரச்சினை இருந்ததால் இப்போதுதான் சொல்ல முடிந்தது.

முல்லை,
திங்களன்றுதான் வினவை வாசித்து நான் நிகழ்வுகளை அறிந்துகொண்டேன். அதற்குப் பிறகும் நான் வினவில் இட்ட பின்னூட்டங்கள் தாண்டி உங்களுக்குத் தனி மடல்கூட இடவில்லை. உங்களுக்குச் சொல்லவில்லை என்பதாலேயே உங்களோடு இல்லை எனப் புரிந்துகொள்ளக்கூடியவர் அல்ல நீங்கள் என நம்புகிறேன். தவிரவும் உறுதியாகக் களத்தில் இதை எதிர்க்க வினவு நண்பர்கள் பிரச்சினையைக் கையிலெடுத்த பின் அவர்களோடிருந்தாலே போதும் எனவும் நினைத்தேன்.

வினவு சாதியை உள்ளிழுத்து விட்டது என்ற குற்றச்சாட்டை வைக்கும் நல்லவர்களுக்கு (நான் சொல்வது திறந்த மனதோடு அணுகியும் ஏன் எனப் புரிந்துகொள்ள முடியாத நல்லவர்களை. எல்லாம் முடிந்த பிறகு பொந்துக்குள்ளிருந்து தலை நீட்டி வினவு அப்படிப் ப்ண்ணீருச்சா அதான் புடிக்கலை என்று நீதி சொல்லும் பிறவி நல்லவர்களை அல்ல)
ஆணாதிக்கம் என்பதற்கு சாதியோ, நிறமோ, மொழியோ, மதமோ கிடையாதுதுதான். ஆனால் அது சில இடங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதற்கு அல்லது கட்டுப்படுத்திக் கொள்வதற்கு மேற்குற்பிட்ட காரணிகளும் பங்கு வகிக்கின்றன. இங்கே ஒரு பெண்பதிவரை "அழகாக இருக்கிறீர்கள்" என ஒரு ஆண் சொல்கிறபோது அதையே அநாகரீகமென்றும் யாரும் கண்டிக்கவில்லை என்றும் பதிவெழுதுகிற நர்சிம், "பெண் இயம், சுயம்" எழுதிச் சங்கப் புலவனின் "கலம் செய் கோவே" வைச் சிலாகித்து எழுதுகிற நர்சிம் (நானும் நர்சிமின் அந்த இடுகையைப் பாராட்டியவள்) இன்னொரு பெண் பதிவரைக் காரணம் என்னவாக இருப்பினும் அவுசாரி முண்டையாக்கித் திட்டுகிறாரே ஏனென்று பார்த்தால் நமக்குச் சொல்ல விர்ப்பமே இல்லாவிட்டாலும் "சாதி" என்பதுதான் இந்த இரட்டைத்தன்மையின் பின்னே உள்ளே உறங்கிக்கொண்டிருந்திருக்கிறது எனப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

செல்வநாயகி said...

ஆழ்மனப் பதிவுகள் ஒருவர் தனக்குத் தெரியாமலே தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வைக்கின்றன. அவற்றைக் களைய வேண்டும் என்றால் அதை வெளியே இழுத்துப்போட்டு ஒருவர் தானேவும் விமர்சித்து வெளியே அனுப்பிவைப்பதுதான். அதை இன்னொருவர் செய்யும்போது அந்த ஒருவருக்கு வலிக்கும்தான், ஆனால் வேறு வழியில்லை. இந்த விசயத்தில் அதுதான் நடந்திருக்கிறது. வெளியே இழுத்தால் நாறுகிறது என மூக்கைப் பொத்திக்கொண்டால் உள்ளேயே மூடிவைத்துக்கொண்டிர்ப்பது அப்படி வைத்திருப்பவருக்கேகூட ஆரோக்கியக் கேடானது, ஏனென்றால் களையப்படாதவரை அது இன்னொரு இடத்தில் தன்னை அப்படியே வெளிப்படுத்தவும் செய்யலாம். புரிந்துகொள்ள முடிந்தால் இந்தச் சாதி இழுப்பு வைத்தியத்திற்குத்தானன்றி நோய் உண்டாக்கவல்ல எனப் புரியலாம்.

மற்றபடி முல்லை, பெண் பதிவர்கள் எல்லாரும் ஒன்றாகத் திரளவில்லையே என நீங்கள் அங்கலாய்த்திருக்கிறீர்கள். அரசியல் ஆண்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா என்ன? பெண்களுக்கும், பெண் பதிவர்களுக்கும் இருக்கிறது. ஒருவேளை அந்த அரசியலும்கூட ஆழ்மனப்பதிவுகளாகவே அவர்களையுமறியாமல் படிந்து கிடக்கலாம். இங்கே நீங்கள் என்ன எழுதுகிறீர்கள்? எங்கே எழுதுகிறீர்கள்? யாருக்குப் பின்னூட்டமிடுகிறீர்கள்? என்பதையெல்லாம் ஒரு புலனாய்வுத் திறனோடு கவனித்துப் பிறகு உங்களுக்கு ஒரு அநியாயம் நடக்கிறபோது கைதட்டலாமா அல்லது கைகொடுக்கலாமா என முடிவு செய்யும் நியாயவாதிகள் இருக்கலாம்

செல்வநாயகி said...

அதிலும் "வினவு" போன்ற தளங்களில் அல்லது பெரியாரின் பேரைச் சொல்லுகிற தளங்களில் ஒரு உண்மையான அவலத்திற்கு எதிராகவே நாம் நம் பின்னூட்டத்தைப் பகிர்ந்தாலும்கூட சில நல்லவர்கள் அசூயை அடைந்து நம்மைவிட்டுப் பத்தடி தள்ளி நிற்பார்கள். பிறகு நாம் அவர்களைப் போன்ற நல்லவர்கள் அல்ல என்பதால் சுத்த பத்தமான தமது திருக்கரங்களில் சேற்றை ஒரு பாலீத்தன் கவரில் சுற்றி வைத்து எங்கேனும் சந்து பொந்துகளில் வாய்ப்பிருந்தால் அடித்துவிடலாம் எனக் குளித்து நிற்பார்கள்:)) அதில் இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். அப்படியே சேறடிப்பவரை நீங்கள் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டாலுமேகூட "ஐயோ பாவி என்ன சொல்கிறாள் பார், நானா சேறடித்தேன்? என் கையில் ஏதும் சேற்றுக்கான தடயம் இருக்கிறதா பாருங்கள்" எனக் கையை விரித்துக் காட்டுவார்கள். அப்படியானவர்கள் ஆதரவு தந்தால் என்ன? த்ராவிட்டால் என்ன? . இவர்களைத்தவிர எதற்குப் பிரச்சினை என்று விலகிக்கொள்ள நினைக்கிறவர்கள் இருக்கலாம். அப்படியே எல்லாம் புரிந்தாலும் முன் நின்று சொல்வதில் சொந்தத் தயக்கங்கள்கூட இருக்கலாம். எதுவுமின்றி இநிகழ்வை மட்டுமே கவனித்து அதன் வன்மத்தை உணர்ந்து உங்களை யாரெனத் தெரியாத நிலையிலும்கூட இதைக் கண்டித்திருக்கிற பெண்களும்கூட இருக்கலாம். எது எப்படி இருப்பினும் எதிர்ப்பதற்குக்கூடத் தேவையில்லாத புழுக்களைத் துச்சமென மிதித்தும், தேவைப்படுகிற இடங்களில் தீப்பந்தம் ஏந்தவும் நமக்குச் சாகும்வரை நாமிருப்போம் என்கிற சுய தைரியத்தை விடவும் நமக்குப் பெரிய ஆதரவு இருக்கிறதா என்ன?
அது உங்களுக்கு இருப்பதறிகிறேன். அத்துணிவுக்கு மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும். இந்நிகழ்வில் அடுத்து என்ன என்பதில் உங்கள் சுதந்திரத்தை மதிக்கிறேன்.

செல்வநாயகி said...

நம் எழுத்துக்களில் பல நேரங்களில் காணக்கிடைக்கிற கருத்தொற்றுமையின்பாற்பட்ட நட்பின் உரிமையோடு ஒரு திருத்தம் சொல்ல விரும்புகிறேன் முல்லை, எதிர்காலத்தில் இதுபோல் யாருக்கு நடந்தாலும் வினவுத் தோழர்களோடு இணைந்து போராடுவேன் எனச் சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா? அதை வினவுத் தோழர்களே செய்தாலும் எதிர்ப்பைச் சொல்வேன் எனவும் சொல்லுங்கள்!

அதோடு நான் மனதில் நினைத்துக்கொண்ட இன்னொன்று பதிவுகள் தாண்டி பெண்பதிவர்களுக்குப் பாலியல் தொந்தரவு தருவதாகச் சில ஆண் பதிவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படிக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவற்றை மறுக்கிறார்கள். அவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த நேரத்திலாவது தைரியமாக்ச் சொல்லலாம். அப்படி இல்லாத போது பெயர் குறிப்பிட்டு மொட்டையாகக் குற்றச்சாட்டை மட்டும் சொல்வது ஒருவேளை அந்த ஆண்பதிவர்கள் அப்படியானவர்களாக இல்லாதிருக்கும்படசத்தில் அவர்களுக்குச் செய்யப்படுகிற அநீதியுமாகும். அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கும் மங்களூர் சிவாவைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.

இப்படியான தகவற்பிழைகளோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களோடோ, அவர்களாலோ சொல்லப்படாத ஒன்றையும் இடுகையில் சேர்க்கப்பட்டதோவெல்லாம் இப்போது எட்டுத் திசைகளிலும் இடுகையின் பொருளைவிட்டு விலகி இழுத்துக்கொண்டுபோகின்றனவே என்ற ஆதங்கத்தில்தான் இதைப் பதிகிறேன்.

Gene said...

நரசிம்மை புறம் தள்ளுங்கள். நரகலை கிண்டி கிண்டி எவ்வளவு நாள் நாற்றம் எடுக்க வைக்க போகிறோம்? நரசிம்மின் நெருங்கிய நண்பர்கள் உள்பட யாரும் அவரின் செய்கையை நியாயப்படுத்தவில்லை. பாதிக்கப்படவர்கள் வலி அதிகம். இதை நான் நன்கு அறிவேன். நீங்களோ அல்லது இப்போ உங்களுக்கு கொடி பிடிக்கும் ரவி, மற்றும் இதர பெண் பதிவர்களோ வினவு கும்பலின் இழி செயலுக்கு எதிராக குரல் கொடுப்பீர்களா?

ஒரு வேலை நாமோ அல்லது நமக்கு தெரிந்தவர் பாதிக்க பட்டாலோ தான், பண்பாடு, நீதி, நேர்மை எல்லாம் கண்ணுக்கு தெரியுமோ?

செல்வநாயகி said...

கல்வெட்டு,

பதிவுலகில் உங்களின் பல பின்னூட்டங்களை வாசித்து அதற்கு நன்றி என்று மட்டும்கூட சில இடங்களில் நான் பின்னூட்டமிட்டதுண்டு. தெளிவாகவும், நடுநிலையாகவும் எழுதப்பட்டிருக்கும் அவை, அதுதான் காரணம். ஆனால் இவ்வளவு மோசமான இந்தப் பிரச்சினையில் எல்லா இடுகைகளிலும் வினவுக்கு எதிரான விமர்சனப் பாட்டையும் பாடித்தான் ஆரம்பிப்பது அல்லது முடிப்பது என்று இருந்தால் எப்படி? லீனா விசயத்தில் வினவு மேல் பெண்பதிவர்களால் விமர்சனமே வைக்கப்படவில்லை என்று வேறு கூறிக்கொண்டிருக்கிறீர்கள். கடுமையான விமர்சனங்களைத் தனிப்பட்ட முறையிலும் ஏன் இப்போதுகூட அதை மீண்டும் சுட்டியும் அவர்களிடமே பேசுகிற அதற்கான சுதந்திரத்தை அவர்களும் வழங்கியிருக்கிற சூழலும்தான் இருக்கிறது. வினவில் எல்லாப் பின்னூட்டங்களையும் படித்தீர்களா?

எனக்கு வினவின் சமூகப் பொறுப்பு நிறைந்த துணிச்சலான கட்டுரைகளும் செயல்பாடுகளும் பிடிக்கும். அவர்களே தவறு செய்கிறார்கள் என்றால் கேட்கவும் முடிந்திருக்கிறது. ஆனால் உண்மையான அக்கறை எடுத்து ஒரு தேவையான, இதுவரை யாரும் இப்பிரச்சினைக்கு இவ்வலவு தீர்க்கமாகப் பேசியிருக்காத இடுகையை எழுதித் தூங்குகிற பல கண்களைக் கொஞ்சமேனும் விழிக்க வைத்திருக்கிற வினவை இந்தக் காரியத்தில் அது எடுத்துக்கொண்ட சிரத்தையை நீங்களும்கூட அதன் மேலான வேறு விமர்சனங்களைக் காட்டி நீர்த்துப்போகவே செய்கிறீர்கள் கல்வெட்டு அதுவும் பெண்பதிவர்கள் யாருமே லீனாவுக்காகப் பேசவேயில்லை என்கிற தவறான தகவல்களோடு:)) பேசலாம் ...கொஞ்சம் பொறுத்து அல்லது இடம், காலம் கருதி.

சங்கரி,

லீனா விசயத்தில் எனக்குக் கடுமையான மாற்றுக்கருத்து உண்டு வினவோடு. ஆனால் அதைப் பிறகொரு நாள் வேறு தளத்தில் பேசுவோம்.

செல்வநாயகி said...

கல்வெட்டு,

பதிவுலகில் உங்களின் பல பின்னூட்டங்களை வாசித்து அதற்கு நன்றி என்று மட்டும்கூட சில இடங்களில் நான் பின்னூட்டமிட்டதுண்டு. தெளிவாகவும், நடுநிலையாகவும் எழுதப்பட்டிருக்கும் அவை, அதுதான் காரணம். ஆனால் இவ்வளவு மோசமான இந்தப் பிரச்சினையில் எல்லா இடுகைகளிலும் வினவுக்கு எதிரான விமர்சனப் பாட்டையும் பாடித்தான் ஆரம்பிப்பது அல்லது முடிப்பது என்று இருந்தால் எப்படி? லீனா விசயத்தில் வினவு மேல் பெண்பதிவர்களால் விமர்சனமே வைக்கப்படவில்லை என்று வேறு கூறிக்கொண்டிருக்கிறீர்கள். கடுமையான விமர்சனங்களைத் தனிப்பட்ட முறையிலும் ஏன் இப்போதுகூட அதை மீண்டும் சுட்டியும் அவர்களிடமே பேசுகிற அதற்கான சுதந்திரத்தை அவர்களும் வழங்கியிருக்கிற சூழலும் இருக்கிறது. வினவில் எல்லாப் பின்னூட்டங்களையும் படித்தீர்களா?

எனக்கு வினவின் சமூகப் பொறுப்பு நிறைந்த துணிச்சலான கட்டுரைகளும் செயல்பாடுகளும் பிடிக்கும். அவர்களே தவறு செய்கிறார்கள் என்றால் கேட்கவும் முடிந்திருக்கிறது. ஆனால் உண்மையான அக்கறை எடுத்து ஒரு தேவையான, இதுவரை யாரும் இப்பிரச்சினைக்கு இவ்வலவு தீர்க்கமாகப் பேசியிருக்காத இடுகையை எழுதித் தூங்குகிற பல கண்களைக் கொஞ்சமேனும் விழிக்க வைத்திருக்கிற வினவை இந்தக் காரியத்தில் அது எடுத்துக்கொண்ட சிரத்தையை நீங்களும்கூட அதன் மேலான வேறு விமர்சனங்களைக் காட்டி நீர்த்துப்போகவே செய்கிறீர்கள் கல்வெட்டு அதுவும் பெண்பதிவர்கள் யாருமே லீனாவுக்காகப் பேசவேயில்லை என்கிற தவறான தகவல்களோடு:)) பேசலாம் ...கொஞ்சம் பொறுத்து அல்லது இடம், காலம் கருதி.

சங்கரி,

லீனா விசயத்தில் எனக்குக் கடுமையான மாற்றுக்கருத்து உண்டு வினவோடு. ஆனால் அதைப் பிறகொரு நாள் வேறு தளத்தில் பேசுவோம்.

சரவணன் said...

உங்கள் உறுதிக்கும் துணிச்சலுக்கும் தலை வணங்குகிறேன். இந்த விஷயத்தில் மன்னிப்புக்கோ சமாதானத்துக்கோ இடமில்லை.

சாம்ராஜ்ய ப்ரியன் said...

இந்த பதிவிற்கான என் கண்டன பின்னூட்டம்: http://3.ly/cbCx

பாச மலர் / Paasa Malar said...

சந்தனமுல்லை,

உங்கள் படைப்புகளை அவ்வப்போது படித்திருக்கிறேன். அவ்வப்போது பின்னூட்டமும் இட்டிருக்கிறேன்..இன்று இந்த இடுகையைப் பார்த்தபின் தான் ஏதோ நடந்திருக்கிறது
என்று புரிந்து கொண்டேன்...இது தொடர்பான 'பூக்காரி' படிக்க முயன்றேன்...அப்பக்கம் கிடைக்கவில்லை...

என்ன நடந்தது என்று சற்றும் புரியாத நிலையில்..ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது..உங்கள் தைரியத்துக்கும்....உறுதிக்கும்..வாதத்துக்கும் வாழ்த்துகள்...

உங்கள் பணிகள் / பதிவுகள் வழக்கம்போல் தொடர வாழ்த்துகள்..

மலர்.

சினேகன் said...

நியுட்டனின் மூன்றாம் விதி

Gene said...

சரவணன் said... // உங்கள் உறுதிக்கும் துணிச்சலுக்கும் தலை வணங்குகிறேன். இந்த விஷயத்தில் மன்னிப்புக்கோ சமாதானத்துக்கோ இடமில்லை //

மன்னிக்கவும் ......... இது போன்ற சொறிதல்கள் கண்டு மிகுந்த ஆயாசமாக இருக்கிறது.

வேறு என்ன செய்யலாம் சரவணன்? உங்களை போன்ற நீதிபதிகளுக்ககுத்தான் காத்து இருந்தோம். மன்னிப்போ அல்லது சமாதானமோ வேண்டாம் .... சரி ... வேறு என்ன செய்யலாம்? கார்கி மற்றும் நரசிம் மீது போர் தொடுத்து செல்வோமா? வினவு கும்பலின் அதரவு வேறு இருக்கிறது. அனைத்து பர்பாங்களையும் ஒழித்து விடலாமா? அனைத்து ஆண் ஆதிக்கவாதிகளையும் துக்கில் இட்டுவிடலாமா? நரசிம் மற்றும் அவர் நண்பர்களை நாடு கடத்தலாமா? அல்லது மேலே ஒரு பின்னுட்டத்தில் சொல்லியதை போல பார்பன ஆணாதிக்கவாதிகளை விஷம் கொடுத்து , கத்தியால் வெட்டி, தூக்குல போட்டு, அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு , பெட்ரோல் ஊத்தி கொளுத்தி எரித்து சாம்பலாக்கி, சாம்பலை பொது கழிவறை அருகே புதைத்து, அதன் மேல் சிறுநீர் கழித்து, மதவராஜூ குழுவை எச்சில் துப்ப சொல்லி, வினவு கும்பலை கக்கா போக சொல்லலாம். அப்படியும் உங்களை போன்ற வன்மவாதிகளின் வெறி அடங்காவிட்டால் பார்பன இனத்தையும் (உங்களை போல கும்மி அடிக்காத) ஆண் பதிவர்களையும் மேலே சொன்னது போல செய்யலாம்.

உங்களை போன்ற வன்மவாதிகள் ஏன் இவ்வாறு கொம்பு சீவி விடுகிறீர்கள்? இந்த இடுகையில் இருக்கும் பெரும்பாலான பின்னுட்டங்கள் இப்படிதான் இருக்கின்றன. என்ன செய்வது என்று பாதிக்கபட்ட இரு தரப்புக்கும் தெரியும் அல்லது அவர்களே முடிவு செய்வார்கள். அதுவரை பதிவு உலக நட்டாமைகளும், சொறிந்து விடுபவர்களும் தூர நில்லுங்கள். ஓநாய்களுக்குத்தான் ரத்தத்தின் மீது எவ்வளவு ஆசை? அதிலும் பதிவு உலகில் இத்தனை ஓநாய் கும்பல்களா?

முல்லை ...... உங்களின் மீது நம்பிக்கையும் மரியாதையும் இருக்கிறது. தேவையில்லாதவற்றை புறம் தள்ளி மேலே செல்லுங்கள். உங்களை சொறியும் கும்பலில் இருந்து வெளியே வாருங்கள். வாதிகள், வர்க்க கும்பல்கள் வலையில் மாட்டி கொள்ள வேண்டாம். உங்களின் வலியை மறந்து வலிமையை காட்டுங்கள். தலித்துகளுக்கென்று ஏன் தனிப்பட்ட நீதிகள் இல்லை என்பது போன்ற தரமான ஆய்வு கட்டுரைகளை எழுதுங்கள். காலம் உங்களுக்கு பல உண்மைகளை எடுத்துரைக்கும். பின்னுட்டங்களை அனுமதிதற்கு நன்றிகள் பல.

My apologies if I have written anything wrong. Hope my views are not hurting your sentiments and they are not intended to advise you. It is your wish to allow this feed-back. You are in my prayers.

பாச மலர் / Paasa Malar said...

முல்லை..அப்பதிவைப் படிக்க நேர்ந்தது..உங்கள் உறுதியை மீண்டும் பாராட்டுகிறேன்..

tamil said...

’@ Perundevi

///// நர்சிம்-மின் ஆபாசமான ‘புனைவுக்கும்’ தமிழச்சி இங்கு குறிப்பிடும் ஜெயஸ்ரீ போன்றவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இதுபோன்ற தொடர்பில்லாத பேச்சுகளை வினவு அனுமதிப்பது விவாதத்தை திசை திருப்பவே உதவும்.
நர்சிம்-மின் ’புனைவு’ மற்றும் அதை ஆதரிப்பவர்களைப் பற்றிய விமரிசனங்கள் எந்தக் குவிப்புமின்றி, ப்ளாட்டிங் காகிதத்தில் பரவும் மை போல இன்னும் தெளிவற்றுப்போவதற்கே இத்தகைய பின்னூட்டங்கள் துணைசெய்யும்./////

உங்களுடைய கருத்துக்களை சொல்ல உங்களுக்கு எவ்வளவு உரிமையுண்டோ அதே உரிமை எமக்கும் இருக்கிறது.

நர்சிம் பிரச்சனைக்கும் ஜெயசிறிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்கள். சுகுணா திவாகரும், சோபா சக்தியும் நர்சிம் பிரச்சினையை வேறு திசைக்கு திருப்பாதவரை நர்சிம் பிரச்சினையாகத்தான் போய் போய்க்கொண்டிருந்தது.

உண்மை தமிழன் குழலி போன்ற சில பதிவர்களும் வினவு தோழர்கள் மீது விம ர்சனம் வைத்திருக்கின்றனர். அது வேறு கோணம். இவர்களோ நர்சிம் – சந்தனமுல்லை பிரச்சைனையோடு லீனா பிரச்சினையாக மாற்றி இருக்கின்றனர். லீனாவுடன் அயோக்கியத்தனமாக நடந்து கொண்டாயே
அவர் பெண்ணில்லையா? என்ற பொருளிள் கருத்துக்களை திசைமாற்றி இருக்கின்றனர். இங்கே தோழர் அசுரனும் அதற்கான பதில்களைதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். படித்துப்பாருங்கள்.

வினவு தோழர்கள் லீனாவிடம் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்? லீனா மற்றும் லீனாவுக்கு ஆதரவாக கருத்து சுதந்திரம் கூட்டத்தில் பேசிய பெண்கள் எப்படிப்பட்ட யோக்கியவான்கள் இப்படிப்பட்ட பெண்களை நுக ர்வுப் பொருளாக உபயோகித்துக் கொண்டிருக்கும் சிற்றிலக்கிய ஆண்களைக் குறித்தும் விரிவாக வினவில் கட்டுரை வரும். தற்போது ஜெயசிறி ஒரு முன்னோட்டம் மட்டும்.

எந்த சம்பவத்தையும் நீர்த்துப்போகச் செய்யவோ வேறு திசைக்கு கொண்டு செல்லும் ஆளோ இல்லை நான். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். வினவின் நடத்தை இன்று பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டிருக்கும் நிலையை உருவாக்கியது சோபா சக்தியின் எழுத்தும் சுகுணாவின் எழுத்தும் தான். ஆக மீண்டும் லீனா சங்கதிக்கே வரவேண்டிய சூழல். இந்த ஜெயசிறி அந்த கூட்டத்தில் வினவுக்கு எதிராக பேசிய போலி பெண்ணியவாதி தான்.

விரைவில் விரிவான கட்டுரை வரும்.’

http://www.vinavu.com/2010/06/04/mullai-justice/

அதற்கு முன் தமிழச்சி என்ன எழுதினார் என்பதை நீங்களே படியுங்கள்.

உங்களுடைய வினவு தோழர்கள் பிற பெண்களை இழிவுபடுத்த உங்களுடைய விவகாரத்தினை சாதகமாக்கிக்கொள்கிறார்கள்.மோனிகா (எ) ஜெயஸ்ரீக்கும் தமிழச்சிக்கும் பிரச்சினை,தமிழச்சிக்கும் ஷோபாசக்திக்கும் பிரச்சினை என்றால் அதை இங்கே கொண்டு வந்து தமிழச்சி ஏன் ஜெயஸ்ரீயைப் பற்றி அவதூறு செய்ய வேண்டும்.அதை ஏன் வினவு அனுமதிக்க வேண்டும். லீனா விவகாரத்தில் ராஜன குறையும்,அவர் மனைவி ஜெயஸ்ரீயும் வினவு தோழர்களை விமர்சித்தார்கள் என்பதற்காக இப்படியா எழுதுவார்கள்.


சுகுணா திவாகர் கேள்வி எழுப்பினார் என்பதற்காக எதற்கு அவரைப் பற்றி அப்படி எழுத வேண்டும். அவர் அடியாள் என்று எழுதுவத சரியா.
அவர் என்றைக்காவது நர்சிம்மை புகழ்ந்து எழுதியுள்ளரா.

பெண்களை குறித்த தங்கள் வக்க்கிர எண்ணங்களை எழுத வினவு அனுமதிப்பதை கண்டியுங்கள்.

இதுவரை மங்களூர் சிவா எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லை. குறைந்த பட்சம் அது என்னுடைய
கருத்து அல்ல என்று கூட ஏன் எழுத ம்றுக்கிறீர்கள்.இல்லை வினவில் வெளியானது சரிதான்,இதோ ஆதாரம் என்றாவது எழுதுங்கள்.

பூங்குழலி said...

அன்பின் சந்தனமுல்லை ,

உங்களின் தெளிவிற்கும் துணிவிற்கும் என் பாராட்டுகள் .பெண்ணை பலவீனப்படுத்த எல்லா வெளிகளிலும் எடுக்கப்படும் ஆயுதம் இதுதான் .அதை கண்டு அழுது சுருண்டு விடாமல் துணிந்து எதிர்கொண்டிருக்கிறீர்கள் .அதற்கு என் வாழ்த்துகள் .


ஒரே ஒரு வேண்டுகோள் ,பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் வரும் போது ,தோள் கொடுக்கிறோம் குரல் கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு வரும் பலரும் அந்த பெண்ணை exploit செய்யவே முற்படுகிறார்கள் .இது என் சொந்த அனுபவத்தில் நான் கண்ட உண்மை .அதனால் உங்களின் முடிவுகள் நீங்கள் சொன்ன படி உங்களின் முடிவுகளாக மட்டும் இருக்கட்டும் .

V said...

Vinavu is helping you but Vinavu creating politics so be carefull..

ponraj said...

மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் எழுதியிருக்கிறீர்கள்!!!

உலகம் உருண்டை!!!
கவலைக் கொள்ள தேவை இல்லை!!
உங்களின் மன உறுதி மற்றும் உங்கள் துணிச்சலுக்கு என் பாராட்டுக்கள்
புதுமை பெண்னே!!
தொடருங்கள்....

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

i don't have any words, my dear sister. shame abt me, i do hesitate to talk abt the things, what happened last week.
அக்கா, எப்படி ஆரம்பிப்பதென்று கடந்த நான்கு நாட்களாய் தயக்கம் எனக்கு.
ஆனால், உங்களது இந்த பதிவின் மூலம், தங்கள் நிலைப்பாட்டை தெரிந்துகொண்டேன்.
என் ஆதரவு தங்களுக்கு எப்போதும் உண்டு.
Balakumaran.N

அகல்விளக்கு said...

:-)

மதி.இண்டியா said...

இந்த புரூனே வெண்ணை அப்படி கேவலமாக சொன்னதை ஏன் நீங்கள் வெளிப்படுத்தவில்லை ?

http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post.html

சென்ஷிக்கு பாராட்டுக்கள்.

பின்னோக்கி said...

சென்ஷியின் பதிவை இப்பொழுதுதான் படித்தேன். ஒரு பெண்னை எதிர்க்க, அவளது கருத்துக்கு பதிலடி, ஆண்களால் இப்படி பட்ட வழிகளில் மட்டுமே தரமுடியும் என்ற நிலை கேவலமானது.

பூங்கோதை said...

\\உண்மைத் தமிழன்(15270788164745573644) on Saturday, June 05, 2010 6:33:00 PM said...

இப்போது இதனால் சந்தனமுல்லைக்குத்தான் சங்கடங்கள் விளையப் போகின்றன..! \\

பயமா இருக்கு சந்தனமுல்லை, உங்களுக்கு வர போகும் சங்கடங்களை நினைத்து. பார்த்து பத்திரமாக இருந்துக்குங்க..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்களின் மனோதைரியம் வியக்க வைக்கிறது முல்லை! பாராட்டுக்கள்!

அன்னு said...

ஏதோ ஒரு பிரச்சனை நடந்துக்கிட்டிருக்குன்னு தெரிஞ்சாலும் அது என்னன்னு தெரியாமலே இருந்துட்டேன்...பிரச்சினைகள்ல மூணாவது ஆளா நின்னு வேடிக்கை பார்ப்பதோ அல்லது அவல் மெல்வதோ என் சுபாவம் கிடையாது. இருவர் பற்றியுமே தெரியாமலிருந்த்தால் சரி, நமக்கெதுக்கு என்று இருந்து விட்டேன். தற்செயலாய் வினவை படிக்கப்போய், பின் உங்களின் இந்த இடுகையையும் படித்த பின்னே அந்த கதையை படிக்க நேர்ந்தது. அவர் கதையாகவே எழுதியிருக்கிறார் என்று வாதம் கற்பித்தாலும் அதன் கொச்சைத்தனம் அவரின் இழிவு மனப்பான்மையை பறை சாற்றுகிறது. இதை இப்படியே விட்டு விடாமல், காலம் கடத்தாமல் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும். ஏனெனில், நாளை வரும் பெண்களுக்கு அது ஒரு பாதுகாப்பாய் அமையும், இன்றைய பெண் பதிவர்கள் உட்பட. அதே நேரம், மூன்றாவது நபர் யாரையும், உங்கள் கணவரை தவிர இதில் கொண்டு வர வேண்டாம். அது வீண் கேலிக்கூத்துகளுக்கு இடமளிப்பது போல் ஆகிவிடும். மன்னிப்பதும், மறப்பதும், தண்டிப்பதும், அம்பலப்படுத்துவதும் என எல்லா உரிமைகளும் உங்களுக்கு உண்டு. அதில் சரியானதை தேர்ந்தெடுப்பதுவே சிரமமானதே ஆனாலும் விடாமல் முயற்சி செய்யுங்கள். முஹம்மது நபியின் (ஸல்) வாழ்க்கை காலத்தில் ஒரு முஸ்லிம் பெண்ணை கீழ்த்தரமாக அவமானப்படுத்தியவனுக்கெதிராக அன்றைய முஸ்லிம் சமுதாயமே கொதித்தெழுந்தது, அந்த ஆளை தண்டிக்கவும் செய்தது. அத்தகைய ஓர் பலம் நமக்கு மீண்டும் கிட்டாதா என எதிர் நோக்குகிறேன். உங்களுக்கு வெற்றி கிட்ட இறைவன் வழி செய்வானாக, இன்ஷா அல்லாஹ்

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் ஏன் கணவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் . முல்லைக்கு என்று தனித்துவம் உள்ளதே வணங்குகிறேன்

problogger said...

roshma said : பதிவு உலகின் புரட்சி பெண் புயலாகிய நீங்கள் எப்படியும் இதை இன்னும் ஒரு வருடத்துக்கு இழுத்து ஆண் ஆதிக்க வாதிகளுக்கும், பார்பனர்களுக்கும், எதிராக பெண் உரிமையை நிலை நாட்ட வேண்டும். உங்கள் நண்பர்கள் குழுவுக்கு சொல்லி இன்னும் ஒரு நூறு கண்டன பதிவுகளை பொட வைக்கணும். சோனியா காந்தி, ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடமும் கண்டன பதிவுகளை வாங்கி வலை உலகில் பெண் உரிமையை நிலை நாட்டனும். வினவு நண்பர்களுடன் சேர்ந்து அணைத்து ஊர்களிலும் தெருமுனை போராட்டம் நடத்தவேண்டும். விடகூடாது .... இந்த ஆண் ஆதிக்க வெறியர்களை, மேல் ஜாதி வெறியர்களை ....... நரசிமையும் கார்கியையும் ஒன்றாக சேர்ந்து தூக்கிலிடும் வரையில் ஓயகூடாது. அனைத்து பெண் பதிவர்களும் இதற்க்கு தங்கள் ஒத்துழைப்பை தருவார்கள், தரவேண்டும்...... முழங்கட்டும் நம் குரல்

haha sema comedy..

பின்னோக்கி said...

மயில் அவர்கள் எழுதிய புனைவு, அதற்கு எதிர்வினையான பதிவு, பிறகு பாதிப்பு என்ற அளவில், கடும் கண்டனம் தெரிவித்திருந்தேன்.

இந்தப் பிரச்சினையை, மயில் பதிவில் இருந்து பார்த்தால் (அதற்கு முன் என்ன நடந்தது என்று தெரியாது எனக்கு), மயில் மற்றும் உங்களின் பின்னூட்டத்திற்கு, மிகவும் கிண்டலான, உங்களை மற்றும் மயிலை தாக்கி அவர் ஒரு பதிவைப் போட்டிருந்தால், அதனை ஆதரித்திருப்பேன். அந்த அளவுக்கு உங்கள் கமெண்ட் மற்றும் மயில் புனைவு இருந்தது. ஆனால், அவர் கண்டனத்திற்கு உரிய அளவில் எழுதியதால், மயில் எழுதிய புனைவு நீர்த்துப் போய்விட்டது. அவர், மிகவும் எளிதான வாய்ப்பையும், முக்கியமான தருணத்தில் தவறிழைத்துவிட்டதாக இப்பொழுது நம்புகிறேன்.

vidamaatendaadei said...

பார்ப்பன ஆணாதிக்க மலத்தை தலையில் கொண்டுள்ள நரசிம்மிற்கும் அவனுக்கு வால் பிடிக்கும் உண்மைத்தமிழன் போன்ற ஜால்றாக்களுக்கும் ஒரு சரியான ஆப்பு உங்கள் பதிவு ...

தப்பாட்டம் said...

முதுகு சொறிதல் இது தானோ ::)

தமிழ் மதுரம் said...

வணக்கம் சகோதரி! தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். கொஞ்சம் பிசி. அது தான் தாமதம். புதுமைப் பெண்கள்! புரட்சியின் சின்னங்கள் என்பதனை நிரூபித்திருக்கிறீர்கள். உங்களது கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன். நியாயம் என்றும் தோற்காது என்பது எனது வாதம். தொடரட்டும் உங்களின் பயணம்!

ராஜ நடராஜன் said...

பதிவிட நேரமின்மையாலும்,வாய் மூடி மௌனியாக இருக்க முடியாமலும் பின்னூட்டமாகவாவது சொல்ல நினைக்கிறேன்.

தூர தேசத்திலிருந்து பதிவுகளையும்,எழுத்துக்களை மட்டுமே தேடுவதால் பதிவுலகில் அவ்வப்பொழுது தொடர்ந்து நிகழும் மாறான பதிவுலக பிரதிபலிப்புக்கள் வருத்தத்தை மட்டுமே தருகிறது.

சுவரெழுத்துக்களாய் கிறுக்கியவர்கள் தவிர்த்து நர்சிம் பதிவு குறித்த எனது கருத்தை துவக்கப்புள்ளியான தாமிராவின் இடுகையில் குறிப்பிட்டுள்ளேன்.இறுதியாக நேற்று முகிலுக்கும் இன்று அதுசரியின் இடுகைக்கும்.

உங்கள் தன்னம்பிக்கையை மதிக்கும் அதே நேரத்தில் உங்கள் மீதே சேறு பூசுவது மாதிரியான வினவு பக்கத்தின் எழுத்துக்கள் உங்கள் ஒப்புதலுடனே வெளியிடப்பட்டிருக்கிறது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட மாதிரி,நீங்கல் மனதளவில் இயலாமல் இருக்கும் மனநிலையில் வினவுதளத்தார் உதவிக்கரம் நீட்டிய காரணம் கொண்டு அதன் பின்நோக்கங்கள்,பிரித்தாளும் தன்மை போன்றவைகளை நீங்கள் அப்புறப்படுத்தி விட்டு பொதுப்பார்வைக்கு கொண்டு வர அனுமதியளித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.அந்த ஒரு இடுகையின் எழுத்து நிறம் கொண்டும்,இன்னும் எழுதியவர்களுக்கே தெரிந்த காரணம் கொண்டும்,அதுவும் நீங்கள் அறிந்தே இந்தப் பிரச்சினை திசை மாறிப்போய் விட்டதென்பதே உண்மை.

My regrets to the ill feelings developed between bloggers.

Sanchu said...

அன்புள்ள அக்கா,
உண்மையில் இந்த பிரச்சினை எங்கே ஆரம்பமானது என்றோ அல்லது யார் தொடக்கத்தில் தவறு விட்டார்கள் என்றோ தெரயாது. ஆனால் வினவில் வாசித்தவற்றைக் கொண்டும், உங்களுடைய இந்த பதிவைக்கொண்டும் இதற்கு கிடைத்த பதில் கருத்துக்களைக் கொண்டும் நர்சிம் மீதுதான் தவறு என்று உணர்கின்றேன்.
இதற்கு நீங்கள் ஏன் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கூடாது?
இன்று உண்மையாகவோ அல்லது தற்செயலாகவோ தனக்கு எதிராக திரும்பிய கூட்டத்தை பார்த்து சமாளிப்பதற்காக மன்னிப்பு கேட்பவா் உண்மையில் திருந்தப் போவதில்லை.
இப்படியே விட்டால், நாளை தங்களது கருத்துக்கு ஒத்துவராத இன்னொரு பெண் பதிவரை போட்டுத்தாக்குவார்கள். எப்பவுமே ஒதுங்கி ஒதுங்கி போகாமல் யாராவது ஒருவா் துணிந்து எதிக்கத்தான் வேண்டும். இதனால் எதிர்கால சகோதரிகளுக்கு நச்சயம் பாதுகாப்பு ஏற்படும்.

விரைவில் நானும் பதிவுலகில் உங்களை சந்திக்கிறேன்.

_சஞ்சுதன்

காசி - Kasi Arumugam said...

அன்புள்ள சந்தனமுல்லை,

உங்கள் மன உறுதியைப் பாராட்டுகிறேன். இந்த இடுகையையே இப்போதுதான் வாசிக்க இயலும் அளவுக்கு என் வாழ்வின் பொழுதுகள் செலவிடப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் பெரிதாய் எதையும் எழுத எந்த யோசனையும் இல்லை. நர்சிம்மின் பூக்காரி புனைவுக்கு என் முழுக் கண்டனங்கள். அதற்குமேல் அதற்கு முன் பின் நடந்தவை முழுமையும் தெரியாது. அவை என்னவாயிருப்பினும் நர்சிம் செய்திருப்பது மன்னிக்க முடியாததே.

ட்விட்டரில் புருனோ எழுதிய ஒரு ட்விட்டில் என் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதால் சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன். என்னோடு சேர்த்து எழுதப்பட்ட இவன் சிவன் என்ற நபர் கட்டமைக்கும் அளவுக்கு அதற்கு அரத்தம் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. அப்போது எனக்குப் புரியவில்லை என்றுதான் ’ஙே’ என்று புருனோவுக்கு எழுதினேன். மறுநாள் புருனோ எழுதியிருந்ததும் காணோம். சரி என்று விட்டுவிட்டேன். இதற்குமேல் விளக்கம் எதுவும் புருனோதான் தர இயலும். இதில் பஞ்சாயத்து பண்ணும் பலர் பற்றியும் ஏற்கனவே பட்டறிவு உள்ளதால் பெரிய மரியாதையோ நம்பிக்கையோ எனக்கில்லை. எனவேதான் என் இந்தக் குறிப்பை இங்கே எழுதுகிறேன்.

வாழ்த்துகள்.

பி.கு.: இந்த ‘பதிவுலகு’ங்கிறது எங்கிருக்கிறது? இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணி அதற்கு ஒருமையில் ஒரு பெயரையும் கொடுத்து அது என்னவோ ஒரு ஜந்து போல கட்டப்பட்டிருக்கும் பிம்பத்தை முதலில் விட்டொழியுங்கள். அப்படி ஒரு ஒற்றைப் பரிமாணப் பொருள் ஒன்றும் இல்லை, இருக்கமுடியாது. பதிவுகள் பதிவர்கள் பலவிதம், ஒவ்வொன்றும் தனித்துவமானவை, ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். இந்த சங்கம், நாட்டாமை எல்லாம் ஹம்பக்!:-)

முகிலன் said...

முல்லை - உங்கள் மன உறுதியை இங்கே பாராட்டியே தீர வேண்டும். நானெல்லாம் இப்படி ஒரு எதிர்ப்பு வந்தால் எந்த அளவுக்கு எதிர்த்து நிற்பேன் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை.

எனக்கு உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் உள்ளது - லீனா மணிமேகலை என்ற பெண்ணுக்கு அவர் எழுதிய கவிதைக்காக அவரது தன்மானத்தையும் குடும்ப வாழ்க்கையையும் மிகக் கேவலமாக ம.க.இ.க மற்றும் வினவு வன்புணர்ச்சி செய்த போது உங்கள் பெண்ணியம் என்ன செய்து கொண்டிருந்தது? உங்களுக்கு ஆதரவாக உங்கள் பெண் நட்புகள் பதிவிடவில்லை குரல் கொடுக்கவில்லை என்று ஏங்கும் நீங்கள் அன்று என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

superlinks said...

முல்லை உங்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள். நீங்கள் உறுதியுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன், இருக்க வேண்டும். இப்பிரச்சினை உங்களுடன் முடிகிற ஒன்றல்ல பதிவுலக 'பெண்'களின் பிரச்சினை எனவே, போராட்டத்தில் நீங்கள் உறுதியுடன் நிற்க வேண்டும். சக பதிவராக உங்களுக்கு எப்போதும் தோழர்களாகிய நாங்கள் துணை நிற்போம். பதிவுலகில் ஆணாதிக்க பார்ப்பனீயமா நாமா என்பதை ஒரு கை பார்த்து தான் விடுவோமே !

மீண்டும் எனது வாழ்த்துக்கள் தோழர்.

vidamaatendaadei said...

சமீபத்தில் பதிவுலகில் கணினித் திரைகளின் பின்னால் இருந்த பல முகத்திரைகள் கிழிந்து கொண்டிருக்கின்றன.பல வலைப்பூ பதிவர்களின் முகத்திரை சந்தனமுல்லை என்ற வீராங்கனையின் மனோதிடத்தால் உரித்துக் காட்டப்பட்டுக் கொண்டிருந்த போது , ஒரு தெருப்பொறுக்கி நாய் , டாக்டரின் பட்டம் என்ற போர்வைக்கு பின்னே ஒழிந்திருந்த ஒரு சைக்கோ ஓநாய் தானாக ட்விட்டரின் மூலம் தன் போர்வையை தானே விலக்கி தன்னை அடையாளப் படுத்திக்கொண்டுள்ளது.
அந்த சைக்கோ ஓநாய் வேறு யாரும் இல்லை , டாக்டர் புரூனோ என்ற மகாபுருஷன் . இந்த திருட்டு பொறுக்கியின் ட்விட்டர் பதிவை எடுத்து நேர்மையாக வெளியிட்ட சென்சி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்

http://vidamaatendaadei.blogspot.com/2010/06/blog-post_07.html

Dr.Rudhran said...

இது இந்தப் பதிவிற்கு தேவையில்லை. இதே போல சம்பந்தமில்லாமல் பேசவேண்டாம் என்றே இதைப் பதிக்கிறேன்.

பூங்கோதை said...
This comment has been removed by the author.
Surjeet said...

Your courage is amazing. Legal action can be considered.

If this has happened in any other country, this man would have been behind bars.

Ramki said...

Hi, I have been a vivid follower of your blog, more for the updates on Pappu who happens to share same birthday as our daughter. It reflected everything a blog of mine on my daughter would have :)

As the title of your blog reads, "ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...", it would do good to just to stick to what you intended to do with this blog when you started it off. I am sure your daughter too will enjoy it that way, if and when she happens to read your blog on her.

I do not fully understand the issue that is going on but as a selfish reader, would like to see this blog free from such controversies to make it pleasant reading for your own daughter later, and for all the Pappus around the world. At least let the world of our little ones be free of all this caste, religion, etc.,

You might want to consider having a separate blog to voice your personal opinions on interests other than your Little one :) My sincere suggestion.

M.S.E.R.K. said...

" சாமி என்ற கோல்கேட் .... பாதுகாப்பு வளையம் !" என்ற உங்களின் பதிவை மீண்டும் பிரசுரிக்க வேண்டுகிறேன். இதுவரை அதைப் படிக்காத சிலர், இப்போது அதை படித்தால் உங்களைப்பற்றி தெரிந்துக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்! அப்படியும் திருந்தாதவர்களை, ஒன்றும் செய்ய முடியாது.
' Courage is what it takes to stand up and speak; Courage is also what it takes to sit down and listen.' - Winston Churchill.
Keep going....Good people are with you!

இரா.எட்வின் said...

அன்பின் சந்தனமுல்லை,
வணக்கம்.

என்னைப் பொருத்தவரை தெருவிலே கவனிப்பாரற்று திரியும் பைத்தியக்காரத் தோழிக்கும் அல்லது பைத்தியக்காரத் தோழனுக்கும் சுய மரியாதை உண்டு என்றே நிணைக்கிறேன்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மகனாகவோ மகளாகவோ இருந்தவர்கள்தான் யாரும்.

உங்களிடம் நேரடியாக கேட்காமல் உங்கள் கணவரிடம் மன்னிப்பு கேட்டமைக்காக தெறித்த உங்களது கொதிப்பின் நியாமே என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

ஆணும் பெண்ணும் சமம் என்பதில்கூட எனக்கு உடன்பாடு இல்லை முல்லை. இருவரும் எதிர் சமம்.

இணையத்தில் நான் தத்தக்கா பித்தக்கா இன்னமும். எனது வலை தளத்தை என்னை தவிர யாரும் பார்த்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.

அதால்தான் எனது வலையில் நான் இது பற்றி போடவில்லை

உங்களது வலியின் கொடூரம் புரிந்து உங்களை ஆறுதல் படுத்த அல்ல என்னை மனுஷப் படுத்திக் கொள்ளவே இந்தப் பதிவு.

எனது ப்ளாக்
www.eraaedwin.blogspot.com

எனது மின்னஞ்சல்
eraaedwin@gmail.com

வாண்டுக் குட்டிக்கு அன்பும் முத்தங்களும்

உங்களுக்கும் தோழர் முகிலுக்கும் என் அன்பும் வணக்கமும்

இரா.எட்வின்

seetha said...

முல்லை,

நான் எழுதுவது என் அனுபவங்களைப்பற்றி.

25 வருட்னகள்ள்உக்கு முன் தமிழ் சினிமா மாதிரி ஆரம்பிக்க வேண்டியுள்ளது..மன்னிக்கவும், நான் மருத்துவக்கல்லூரியில் படித்தபோது எனக்கு பல தொந்தரவுகள் ஏற்ப்பட்டன. என் அப்பா என்னை "பெண் ' அப்படி சொல்லி எந்த கட்டுப்படும் இல்லாமல் வளர்த்தார்.எனக்கு அதனால் கல்லூரியில் என் தோழிகள் எல்லாம் 'பெயர் கெட்டுடும்' என்று எதர்க்கெடுத்த்ஆலும் பயப்படும்ப்ஓது எரிச்சலாக வரும். ஆனால் அதர்க்கெல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக 5 வருட்னகள் கஷ்ட்டப்பட்ஏன்.நான் நானாக இருந்ததே காரணம்.இத்தனைக்கும் எனக்கு ஆண் துணை போன்றவையெல்லாம் கிடையாது.உடலுறவு பற்றி physiology படித்தது மட்டுமே தெருய்ம்.ஆனால் எனக்கு ஏகப்பட்ட பட்டபெயர்க்அளும் என்னைபற்றி புரளிகளும் எக்கசக்கம்.

என் வகுப்பில் சிலர் என்னை நஙு புரிந்திருந்த்அதால் என்னிடம் அன்பாக இருப்பார்கள்.அவர்களுக்கும் என்னிடம் எல்லார் முன்னிலயிலும் பேச பயம்(ஆண்கள்). மற்ற சீனியர்கள் பார்த்தால் தொந்தரவாகிவிடும் என்று.ஒரு முறை மெஸ் தம்பியிடம் ஒரு சிகரெட் அட்டையில்,"வார்ட்டுக்கு வா , உல்லாசமாக இருக்கலாம்' என்று என் நண்பன் சம்பத் எழுதியது போல ஒரு சீட்டி கொடுத்துவிட்டார்கள். எனக்கு தெரியும் சம்பத் ஒரு நாளும் அப்படி செய்யகூடிய நண்பன் இல்லை.அபடி கொடுத்தவர்க்அள் எங்கள் கல்லூரிய்ன் ரௌடி கும்பல் சேர்ந்த்தவத்கள்.யார் அவர்களை எதிர்த்து பேசினாலும் அந்தபெண்ன்உக்கு தேவடியா பட்டம் கிடைக்கும்.மேலும் எங்கள் கல்லூரியில் பிற்ப்பட்டவர்க்அள் vsதாழ்த்தபட்டவர்கள் என்று பிரிவினை வேறு. நான் s.f.i. உருப்பினர் ஆனதால் தாழ்த்தப்பட்ட மாண்வர்கள் பெரும்பாலும் எனக்கு துணையாக நின்றார்கள்.நான் தாழ்தப்பட்ட வகுப்பை சேரவில்லையென்றாலும் கூட.
காலம் காலமாக ,பெண் வாயை 'ஒழுக்கம்' பற்றி பேசினால் போதும் என்பதே கதை.

அவ்வாறு பேசிய பல ஆண்களும் ,சில பெண்களும் பெற்றோர் இல்லாதபோது வச்தியாக ஒன்ற்றாக தங்கியாதை அறிந்தபோது எனக்கு ஆச்சரியம் துக்கம் எல்லாமே.ஏனென்றால் அந்த கும்பலில் அனைத்து பெண்கள் மற்றும் ஆண்களின் கற்பனைதிஅனுக்கு நான் பலியாகீருக்கிறேன்.

எனக்கு மிகவும் னல்ல பெற்ர்ரொர்.ஆகையால் எனக்கு எப்போதும் வீட்டில் எல்லா சப்பொர்ட் கிடைக்கும்.

கவலை படாத்தீர்கள் முல்லை.தைரியமாக இருங்கள்.உங்கள் பாப்புவும் அப்போதான் தைரியமாக வருவாள்.

வேல்முருகன் அருணாசலம் said...

வள்ளூவர் மிகத் தெளிவாக சொன்னார்,

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

அப்படிதான் தோழர் முல்லைக்கு ஏற்பட்ட வடு, அவரே மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார் மறக்கவும் மன்னிக்கவும் இயலாது. அவர் துணைவரின் வேதனையும் அப்படியே. நண்பர்கள் ஆற்றுப் படுத்துகின்றனர். ஆயினும் நிகழ்ந்தது நிகழ்ந்ததே..

யாரையும் அறியாத, கடந்த ஆறு மாதங்களாக வலைத் தளத்தில் சிலரின் எழுத்துக்களை கண்டவன் என்ற முறையில் அப்புனைவு வரைந்தவர்க்கு கண்டனம் தெரிவிக்கும் மற்றவர்களோடு என்னையும் இணைத்துக் கொள்கிறேன்

எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு புதினத்தில் தவறுகள் குற்றங்கள் அல்ல என்றொரு பதத்தை பயன் படுத்தியுள்ளார். இது தவறாக தெரியவில்லை திருத்திக் கொள்ள வாய்பளிக்க. குற்றங்களுக்கு தண்டணையுண்டு. அனுபவித்து ஆக வேண்டும்.

பஞ்சாயத்து, நாட்டாண்மை, என்றே காலம் கடந்து கொண்டிருக்கிறது. தீர்வு எட்டப்படவில்லை. வினவு போன்றவர்கள் பிரச்சனையை கையில் எடுத்ததால்தான் அம்பலப்பட்டு மன்னிப்பு என்ற நிலைபாடு தெரிகிறது. இல்லையென்றால் இப்படியொரு பிரச்சனையை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஏனென்றால் புனைவு வந்த இரண்டு நாட்களில் நடந்த நிகழ்வுகள் இதை உணர்த்துகிறது.

இது இரண்டு நண்பர்களுக்குள்ளோ அல்லது உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்கல்ல நான்கு சுவர்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள. விட்டுக் கொடுத்து வாழ்வோம், நட்பை தொடர்வோம் என்று நினைக்க. இது திறந்தவெளியில் நடைபெற்ற தனி மனித தாக்குதல். ஆக தண்டனை எதுவாயினும் திறந்தவெளி அறிய வேண்டும். அதுதான் நேர்மை.

வினவு போன்றோர் இப்பிரச்சனையை மிக கராறாக அணுகுவதால் மற்றவர்களுக்கு ஏகப்பட்ட வருத்தம். அதேபோன்று இப்பிரச்சனை தொடர்பாக வேறு சிலர் பெயர்களும் அடிபட அவர்களும், அவர்களின் ஆதாரவாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் வாசிப்பதற்கே நன்றாக இல்லை. எனினும் பாதிக்கப்பட்டதாக கூறும் அவர்கள் ஆதாரத்தை கேட்கிறார்கள். அதை திறந்தவெளியில் இல்லையென்றாலும் தனிபட்ட முறையில் தெரிவிப்பது வினவின் கடமை என்பது எனது கருத்து.

எது எப்படியாயினும் வடு என்பது நிலைப்பெற்ற ஒன்று. ஆனால் தோழர் முல்லையின் குழந்தை அவ்வடுவை போகும் என நம்புகிறேன்.

புலவன் புலிகேசி said...

//கவலை படாத்தீர்கள் முல்லை.தைரியமாக இருங்கள்.உங்கள் பாப்புவும் அப்போதான் தைரியமாக வருவாள்.// இந்த வார்த்தைகளுக்கே இடமில்லை. அவரது தைரியம் அவரின் எழுத்துக்களிலேயேத் தெரிகிறது. புதுமைப் பெண் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்கள் தான் உண்மையில் பெண். வருத்தம் தெரிவிக்க மாட்டேன். பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவன்னியன் said...

It is more than 2 years since I visited the blogs.Looks like history repeats.
Inga blog padikka varuvadhu, ingulla vivadhangal, arasiyal, ilakiyam patri varuvadhanal thaan.
Aanal sila vishamigal thangal kudimiyay avvaopodhu nilai natta thudipadhu tamizhukkae ulla sabakedu.
Blogil karuthu sudandhiram vendum thaan, anaal avaravar personal lifai thottu baadikadhu varaiyil.
Anyway just disregard these rogues and continue your blog.
I was greatly frustrated but then gone into deep surprise after seeing the boldness and maturity you have shown.
As my name indicate I'm from Villupuram too. I used to frequently visit Kuzhali's blogs. I'm proud there is someone from my town shining there.

Regards,
Balaji

புன்னகை தேசம். said...

சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் விட்டதுதான் தப்பு..

மன்னிப்புகூட மனம் திருந்துபவருக்குத்தான் என்பதை உணர்ந்தேன் முல்லை..

" உங்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்ன தண்டனிஅ வேணுமானால் கொடுங்கள் " என்றதும் மனம் இளகிவிட்டது நிஜம்தான்..

ஆனால் அதை நம்பியமைக்காக என் வருத்தங்களை பதிகிறேன் முல்லை..

யோவ் said...

நன்றாக இருக்கிறது, தமிழ் மணத்தில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..