Saturday, June 26, 2010

Red turned green

கடந்த வெள்ளிக்கிழமையன்று பப்பு பள்ளியில் ரெட் டே . முதல்நாள் ஜூரம் வந்ததில் ஒரே ப்ளூ டேயாகி போனது வேறு கதை. ஆனால், ரெட் டேவுக்கு எப்படி போக வேண்டுமென்று ஒரு வாரமாக கனவுகள்தான்.

அதில் ஒரு பகுதி :


நான் : “பப்பு, ஆயா வாங்கிட்டு வந்த ரெட் கவுன் போட்டுக்கலாம், லாங் கவுன் இருக்கே....அது! ”

பப்பு : .....(மையமாக ஒரு பார்வை)

நான்: “அப்புறம், ஹேட், கையிலே ரெட் பாண்ட், ரெட் சப்பல்ஸ்..ஓக்கேவா! சூப்பரா இருக்கும்! அப்புறம் ஹேர் கிளிப்ஸ்...”

பப்பு: ......

பப்பு: ”இல்லப்பா, ரெட் பாவாடை பீரோலே இருக்குல்லே...அது.. போட்டுக்கலாம்.”

நான்: ......(அதே மையமான பார்வை)

பப்பு: “கையிலே ரெட் வளையல், நெத்திசுட்டி, ரெட் ஹேர் க்ளிப்ஸ்....சூப்பரா இருக்கும்ப்பா! ”

நான்(மனதிற்குள்) : வாழ்க்கை ஒரு வட்டமான்னு மீ இன் டீப் திங்க்கிங்....!?!

(ஆயா எங்க ஸ்கூல் கலர் டேவுக்கு பாவாடை சட்டை போட்டுவிட்டா அடம்பிடிச்சு ஃப்ராக் போட்டுக்கிட்டது நான். ப்ராக் போட சொன்னா பப்பு பாவாடை போட அடம் பிடிக்கிறாளே... இப்போவே.....Gen' Gapஆஆ??)ஆனால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்லி டாக்டர் விசிட். பப்புவால் எனக்கும் கிடைத்தது லீவ். டாக்டரை சந்தித்தப்பின் மறக்காமல் நாங்கள் செய்யும் இரண்டு காரியங்கள் : ஐஸ்க்ரீம் சாப்பிடுவது மற்றும் பார்க் செல்வது.

ஜுரம் வந்துவிட்டால் எப்போதும் தூக்கியே வைத்திருக்க வேண்டும் அல்லது மேலேயே வந்து ஒட்டிக்கொள்வாள். பார்க்குக்குச் சென்றதும் அவளாகவே இறக்கிவிடச் சொன்னாள். மெதுவாக நடக்கத் துவங்கினோம்.

மரங்களை தடவிப் பார்த்தோம். 'ஹார்டா இருக்கு ஆனா லீஃவ்ஸ் சாஃப்டா இருக்கு' என்றாள். இலைகள் உதிர்வதைப் பற்றியும், நிறம் மாறுவதைப் பற்றியும் பேசினோம். And then we hugged the trees (கட்டிப்புடி வைத்தியம்?!) . காதுகளை மரத்தில் வைத்து மரம் ஏதாவது பேசுகிறதாவென்று கேட்டோம். பப்பு, மரங்களைச் சுற்றி ”ரிங் அ ரிங்க் ஆஃப் ரோஸஸ்” பாட ஆசைப்பட்டாள். (ஆனால் எனக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது....geeee) ஆனாலும் சுற்றினோம்.

சோர்வெல்லாம் நீங்கி சிறிது நேரத்தில் ஓடவும் ஆரம்பித்திருந்தாள். நானும் அவளைத் துரத்திக்கொண்டு....

15 comments:

♥ ℛŐℳΣŐ ♥ said...

ரொம்ப சுவாரசியமா இருக்கு படிக்கும் போது ..

சின்ன அம்மிணி said...

//(ஆயா எங்க ஸ்கூல் கலர் டேவுக்கு பாவாடை சட்டை போட்டுவிட்டா அடம்பிடிச்சு ஃப்ராக் போட்டுக்கிட்டது நான். ப்ராக் போட சொன்னா பப்பு பாவாடை போட அடம் பிடிக்கிறாளே... இப்போவே.....Gen' Gapஆஆ??)//

முடி நீளமா ஏன் இல்லை, ஏன் வெட்டி விட்டீங்கன்னு கேப்பா பாருங்க :)

வல்லிசிம்ஹன் said...

பெண் குழந்தைகள் மாறாது முல்லை.
என் பெண் நான் சொல்லும்போது பாவாடை மட்டும் போடுவதாகச் சொல்லுவாள். அவளுக்கு ஸ்கூல் யூனிஃபார்ம் ஸ்கர்ட் என்று வந்ததும் எனக்கு அண்ணா மாதிரி ட்ரௌசர் தான் வேணும்னு ஒரே அடம்.
இப்ப ரெண்டு பசங்களும் அவளைப் படுத்தும் பாடு,:))))))
பப்புமா கெட் வெல் ராஜா.

பின்னோக்கி said...

மரங்கள் பேசுவதை கவனிக்கும் போட்டோ அழகு. வித்தியாசமான புகைப்படம்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ஆச்சி, நீங்களும் குழந்தை ஆகிடீங்களே!!!

மயில் said...

முல்லை இது கிறுக்குதனம் அல்ல, அவர்கள் உலகத்தில் நாம் ஒட்டிக்கொள்ளக் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம். நானும் வர்ஷா பப்புவுடன் தண்ணீர் என்ன பேசும் என்று கற்பனை செய்வோம். அடிவாங்கும் ரோட்டில் போகும் மாடு, அரிவாள்மனை அருகில் காத்திருக்கும் கத்தரிக்காய், ஜீராவில் மிதக்கும் குலாப்ஜாமுன் வாய்க்குள் போவதற்க்குள் சொல்லும் குட்பை... எல்லாம் ரொம்ப சுவாராஸ்யமாக இருக்கும் ...:))

Badhil said...

நன்று...நன்று...!!!

நிஜமா நல்லவன் said...

/முடி நீளமா ஏன் இல்லை, ஏன் வெட்டி விட்டீங்கன்னு கேப்பா பாருங்க :)/

Repeattuuu...

தீஷு said...

ப்ளூ டே பயங்கர சுவாரஸ்யம்..

அம்பிகா said...

\\முல்லை இது கிறுக்குதனம் அல்ல, அவர்கள் உலகத்தில் நாம் ஒட்டிக்கொள்ளக் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம்.\\
மிகச் சரி.

அமைதிச்சாரல் said...

//எங்க ஸ்கூல் கலர் டேவுக்கு பாவாடை சட்டை போட்டுவிட்டா அடம்பிடிச்சு ஃப்ராக் போட்டுக்கிட்டது நான். ப்ராக் போட சொன்னா பப்பு பாவாடை போட அடம் பிடிக்கிறாளே.//

so nice பப்பு.. ஹிஸ்டரி ரிட்டர்ன்ஸ் :-)))))))

مكتب said...

intha generationpa wow nice!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

ராமலக்ஷ்மி said...

Nice title:)!

Deepa said...

படம், இடுகை, இர‌ண்டுமே க‌விதைக‌ள். ர‌சித்துக் கொண்டே இருக்கிறேன்.

//டாக்டரை சந்தித்தப்பின் மறக்காமல் நாங்கள் செய்யும் இரண்டு காரியங்கள் : ஐஸ்க்ரீம் சாப்பிடுவது மற்றும் பார்க் செல்வது.
//
ஆஹா! சூப்ப‌ர். ஆனாலும் உட‌னே
ஐஸ்க்ரீம் என்ப‌து கொஞ்ச‌ம் டெர‌ராக‌த் த‌ன் ப‌டுகிற‌து என‌க்கு.