Friday, June 04, 2010

ரவியின் இடுகையில்

எனது பின்னூட்டம் கீழ்வருமாறு. விரிவான இடுகை நாளை!

”உங்கள் பின்னூட்டங்களையும், இடுகையும் பார்த்து தமிழ் சினிமா சென்ட்டிமென்ட் தான் நினைவுக்கு வருகிறது.

கமெண்ட் போட்டு - பாதிக்கப்பட்டவள் நான்.

பூக்காரியின் மூலமும், அவ்விடுகையின் கமெண்ட்களும் மூலம் காயம்பட்டவள் நான். இதில் என்னைவிட்டு விட்டு நீங்கள் முகிலிடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

முகிலிடம் எதற்கு தலை வணங்குகிறீர்கள்?

குறைந்தபட்சம் இந்த இடுகையை போடுவதற்கு முன்பு எனக்குத் தெரிவித்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது!


இதற்கு முன்பு எத்தனையோ பெண்பதிவர்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்! எனக்கு நடந்ததன் மூலமாக இனி எந்த பெண்பதிவருக்கும் இந்தநிலை வராது என்ற நிலை இன்று வந்திருக்கிறது!


தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்!”

9 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

முல்லை இதனை தயவு செய்து இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.. உங்களைவிட அதிகம் காயம் பட்டிருப்பது முகிலாகதான் இருக்கும்..
அதனால்தான் ரவி முகிலின் கடிதத்தை பதிவேற்றி இருக்கிறார்.. அங்கு நர்சிம்மும் மற்ற நண்பர்களும் மன்னிப்பு கேட்டு இருக்கின்றனர்..
அதனை விட வேறென்ன வேண்டும்.. எனக்கு தெரிந்தவரை மன்னிப்பதுதான் மிகப் பெரிய தண்டனை..

ILA(@)இளா said...

ஆஹா.. இந்தப் பதிவு உண்மையாகவே தேவைங்களா?

பா.ராஜாராம் said...

முதன் முறையாய் மைனஸ் ஓட்டு போட்டுட்டு போறேன்.

குடும்பத்தில் ப்ரியம் உள்ள ஒருவனால் குறைஞ்ச பட்சமாக இதுதான், இப்ப வாய்த்திருக்கிறது.

சின்ன அம்மிணி said...

பாதிக்கப்பட்டவர் நீங்கள் முல்லை. நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் என் ஆதரவு உண்டு. நீங்கள் எடுக்கும் முடிவில் முகிலையும் நினைவில் கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்!”//


அதனால்தான் என் பதிவில் இப்படி எழுதி இருந்தேன்

//முல்லை..ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து கேட்கிறேன்..இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி ஒரு பதிவிடுங்கள்..அது உங்களால் மட்டுமே முடியும்..//

SurveySan said...

என்ன நடந்ததுன்னு தெரீல. ஆனா, ஏதோ நடக்கக்கூடாதது நடந்திருக்குன்னு புரியுது.
வருத்தங்கள்.

////எனக்கு நடந்ததன் மூலமாக இனி எந்த பெண்பதிவருக்கும் இந்தநிலை வராது என்ற நிலை இன்று வந்திருக்கிறது! ///

இது பேராசை. அதெல்லாம் நடக்காது. கொஞ்ச நாள்ள இதுவும் கடந்து போகும். புதுசா ப்ரச்சனை புதுசா யாருக்காவது வரத்தான் செய்யும். :(

பூங்கோதை said...

யாருங்க புன்னகை தேசம்- அவங்களை என்ன பண்ணீங்க நீங்க..?

http://timeforsomelove.blogspot.com/2010/06/blog-post_6200.html

ரவியின் இடுகைல பார்த்திருப்பீங்க இல்லை..


//அப்பப்பா பெண் ரெளடிகளையும் பெண்ணின் காமக்களியாட்டங்களையும் இங்கு வலையில்தான் காண முடியுது...:(((
//


அம்மாடி எங்க இருந்து வர்ராங்க இவங்க எல்லாம்?

சென்ஷி said...

ஆரம்பம் இது மாத்திரமில்லை என்று தெரியும்.. ஆனால் இதுதான் கடைசியாக இருக்க வேண்டுமென்பதுதான் எனது விருப்பமும்..

நன்றி முல்லை...

JayanthiShathish said...

Akka

Solla Varthai illai.

u r great. I adore your appraoch in this issue.

Love u akka