Tuesday, June 15, 2010

மீண்டும் பள்ளிக்கு போகலாம்....

கோடை விடுமுறை ஆரம்பித்த முதல் வாரத்தில், பள்ளிக்கூடம் இல்லையென்ற நினைப்பில் ஒரு சில நாட்கள் ஜாலியாக கழிந்தது. எல்லோருக்கும்தான். காரணம் காலை தூக்கம். பிறகு ,”எப்போடா ஸ்கூல் ஆரம்பிக்கும்” என்ற கதைதான். எனக்கல்ல. பப்புவுக்கு!அதுவும் காலையில் 6.30 மணிக்கு! காலையில் எழுவதே “இன்னைக்கு ஸ்கூல் இருக்கா, வேன் வருமா” என்ற கேள்வியுடன் தான். 'இன்னைக்கு ஸ்கூல் இருக்கு' என்றதுமே உற்சாகத்துடன் எழுந்துவிடுவாள். பாலும் காலை உணவும் கடகடவென்று இறங்கி விடும். இந்த உற்சாகத்தை எனக்கு சாதகமாக பயன்படுத்தி முதல் இரண்டு வாரங்கள் கழிந்தது. அலுவலகத்திற்கு கிளம்பியதும் முகம் வாடி விடும். கொஞ்ச நேரம்தான். அப்புறம், அக்கம்பக்கத்து வீடுகளில்தான் அவளைத் தேட வேண்டும்.

மே மாதத்தின் கடைசி வாரங்களில்,காலையில் 8.45 க்கு “எழுந்துக்கோ பப்பு” என்றால் தூக்கத்திலே பதில் வரும் “எனக்கு சம்மர் ஹாலிடேஸ் இல்லே, ஏன் என்னை எழுப்பறே?”. அப்போதே எனக்கு கிலி பிடித்துக்கொண்டது, ஜூன் 2ஆம் தேதியை நினைத்து. பப்புவுக்கு பள்ளி ரீ ஓபன் ஆச்சே!

பெரிம்மா,அம்மா, குட்டி என்று எல்லோரும் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பிக்க நான் மட்டுமே எதிர்கொள்ள போகும் ஜூன் 2 கொஞ்சம் பயமாகவே இருந்தது - ஏதோ எனக்கே பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது போல.அதுவும், அந்த ஒழுங்கை/ ரொடினை கொண்டு வருவது குறைந்த பட்சம் பள்ளி ஆரம்பித்த முதல் வாரத்தில் - டெரர்தான். அதுவும் வேன் வேறு மே மாத இறுதியில் ஒரு ட்ரையல் ரன் வந்து, இனி பப்புவுக்கு காலை பிக்கப் 7.40க்கு என்று டரியலாக்கியிருந்தது.

சரி, கடைசி சனி,ஞாயிறுகளில் காலையில் எழுப்பி விடலாம், இரண்டு நாட்கள் பழக்கத்தில் மூன்றாம் நாள் எளிதாக இருக்கும் என்ற நினைப்பில் மண் அள்ளி போட்டுக்கொண்டது நானேதான். சனி -ஞாயிறுகளில் நான் எழுந்தாலல்லவா அவளை எழுப்புவதற்கு! கடைசியில் எந்த ஹோம் ஒர்க்கும் செய்யாமலேயே விடிந்தது ஜூன் 2. காலையில் நல்ல மூடிலேயே எப்படி எழுப்புவது என்ற கவலையோடே உறங்கச் சென்றேன் - 6.15 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு. முதல்நாளே பப்புவுக்கு எல்லாம் ரெடியாக இருந்தது அவளுக்கு உற்சாகத்தை தந்திருக்க வேண்டும்.

”ஆச்சி, பெரிய பெரிய தவளை ஆச்சி” பப்புதான்.

ஜன்னலைப் பார்த்தேன். இன்னும் விடியவில்லை. அரைக்கண்ணைத் திறந்து...நேரம்...5.30 மணி.

”ம்ம்..தூங்கு பப்பு, தவளை இங்கே வராது”

ம்..ஹூம்!

”ஆச்சி, லைட் போடு ” சொல்லி சொல்லி பார்த்துவிட்டு அவளாகவே லைட்டை போட்டு ”வா, கதவுக்கிட்டே பாரு ” என்று இழுக்கத் தொடங்கினாள்.

எழுப்பும் கவலை விட்டது என்று ஒருபக்கம் நிம்மதியாக இருந்தாலும் அதிகாலை தூக்கத்தை இழக்க மனம் வரவில்லை.வேறு வழியில்லாமல், எழுந்து அவளுடன் சென்றேன். படுக்கையறை கதவை திறக்கச் சொன்னாள் - என் கையை பிடித்தபடி நின்றுக்கொண்டு.

”ஆச்சி, எவ்ளோ பெரிய தவளை தெரியுமா” - அவள் சொன்னதைப் பார்த்தால் அந்த தவளை ஒரு கடலாமை அளவுக்கு இருந்திருக்க வேண்டும். சற்றே பெரிய தவளைதான் போல.

அடுத்து அவள் சொன்னதுதான் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

”ஒரு தவளை ஆச்சி, அதுக்கு தவளை மாதிரி உடம்பு இருந்தது, ஆனா வாய் இல்லே, எப்படி இருந்துச்சு தெரியுமா..க்ரோக்கடைல் மாதிரி இப்படி இருந்தது”

கடலாமை சைசில் தவளை உடல். அதற்கு முதலை முகம். வாசலில் இருந்ததாம்.
வாசல் கதவை திறந்து அங்கே நிற்கிறதாவெனத் தேடினோம்.

காணோம்!

பாலை சுட வைத்துவிட்டு, தோசை செய்ய ஆயத்தமானேன். அவளது நாற்காலியை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு வந்தவள் அதன் மேலேறி சமையலறை மேடையில் அமர்ந்துக் கொண்டாள்.


கடைசியில், தவளைக்கதைகளை அவளே சொல்லியபடி ஒரு டம்ளர் பாலும், ஒரு தோசையும் உள்ளே சென்றது.

கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. காலை தூக்கம் விடுபட்டாலும், அரக்கபரக்க இல்லாமல் நிதானமாக எல்லா வேலையும் முடிந்தததை நினைத்து சந்தோஷமாகவும் இருந்தது. 'அவளோ கஷ்டம் இல்லை போலிருக்கே, இனிமே பிரச்சினை இருக்காது போல' என்றும் தோன்றியது.

(முதல் நாள் - முதல் டெர்ம் - வேனை நோக்கி ஓடுவதற்கு ரெடியாக பப்பு!)

அவளை வேனுக்கு அனுப்பியபின் எழுந்த கேள்வி, ”தவளை நாளைக்கும் உதவுமா?”!

இரண்டு நாட்கள் முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது!


சட்டென்று மனதுக்குள் மின்னல்!


யெஸ்...

”தூங்கும்போது குரங்கு-முதலை-நாவல்பழம் கதை சொன்னால் தவளை நிச்சயம் உதவும்!

யே!!

17 comments:

மயில் said...

அவ்வ்வ்வ்வ்வ். குழந்தையை எப்படியெல்லாம் ஏமாத்தராங்க.. பப்பு நீ கவலைப்படாதே செல்லம் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பொண்ணு .

மாதேவி said...

இன்று தவளை நாளை வேறொன்றாகலாம் குழந்தைஉலகமே விந்தைதான்.
வாழ்த்துகள் பப்பு.

பின்னோக்கி said...

என்னங்க இது. பொண்ண, பையன் மாதிரி டிரஸ் பண்ணிவிட்டுடீங்களே. பாவங்க..

ராமலக்ஷ்மி said...

யே:))!

நிஜமா நல்லவன் said...

:)

ஜெயந்தி said...

மகளை பள்ளிக்கு அனுப்ப எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு.

shaali said...

sry to ask this mullai, aachina enna relation ammava paatiya? nejamana doubtpa.... :)

சின்ன அம்மிணி said...

//வாசல் கதவை திறந்து அங்கே நிற்கிறதாவெனத் தேடினோம். //

டைனோசர் கதை படிச்சு காட்டுங்க. வீட்டு வாசல்ல டைனோசர் நிக்கும் :)

தீஷு said...

பாவ‌ம் ப‌ப்பு.. ஆனா 7:40 ரொம்ப‌ சீக்கிர‌ம் முல்லை.

ஆயில்யன் said...

//பாலை சுட வைத்துவிட்டு, தோசை செய்ய ஆயத்தமானேன்./

ஆச்சி நீங்க பொய்தானே சொல்றீங்க #கண்டுபுடிச்சுட்டோமேய்ய்ய்ய்ய்

ஊருல இருக்கற எல்லா மம்மீஸும் தோசையை சுடத்தான் ஆயத்தமாகுவாங்க! ஆனா ஆச்சி மட்டும் செய்வாங்களாமாம்!

ஆயில்யன் said...

// shaali said...

sry to ask this mullai, aachina enna relation ammava paatiya? nejamana doubtpa.... :)///

எங்க ஊரு பக்கம் கூட ஆச்சின்னு கூப்பிடுவாங்க பொதுவா 6-60 வயது வரையான பெண்களை குறிப்பதாக இருக்கும்! பட் இங்கே ஆச்சி = வயசானவங்க மாதிரின்னு அர்த்தம் :))

நசரேயன் said...

//
எங்க ஊரு பக்கம் கூட ஆச்சின்னு கூப்பிடுவாங்க பொதுவா 6-60 வயது வரையான பெண்களை குறிப்பதாக இருக்கும்! பட் இங்கே ஆச்சி = வயசானவங்க மாதிரின்னு அர்த்தம் //

ஆமா .. ஆமா

கோமதி அரசு said...

பள்ளி செல்ல விரும்பு,பாடம் வெல்ல கரும்பு என்று உணர்ந்த பப்பு வாழ்க!

jawahar said...

dear mullai hw can i join with "ammakalin valaipoo"
coz i`m a mom n also want to share with all of u

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நாளை நாம் விரும்பினாலும் கிடைக்கப்போவதில்லை இந்த குழந்தைபருவம் ~!

பா.ராஜாராம் said...

வாவ்!

அம்மா-மகள்!

என்ன அருமையான உலகம்!