Saturday, July 04, 2009

லேடி இன் ரெட்!!

பப்புவின் பள்ளியில் கடந்த 26ஆம் தேதி - ரெட் டே! எல்லோரும் ரெட் வண்ண் உடையில் வர வேண்டும். யதேச்சையாக வாங்கிய சிவப்பு-மஞ்சள் பாவாடை சட்டை இருந்தது! அதையே போட்டு அனுப்பலாம் என்று நினைத்திருந்தேன். என் அலுவலகத் தோழியிடம் சொன்னபோது, ”எவ்ளோ அழகழகா ட்ரெஸ் இருக்கு, ஆரெம்கேவிலே! வாங்கி போடேன்” என்றாள். நான் கொடுத்த லுக் பார்த்துவிட்டு, ”நீ கண்டிப்பா வாங்க போறதில்லே, எனக்கு நல்லாத் தெரியும்! சே, பையனை வச்சிக்கிட்டு எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா, பொண்ணை எவ்ளோ அழகா அனுப்பலாம். ரெட் கலர் வளையல், ஹேர்பின், மணியெல்லாம் போட்டு அனுப்பு, எங்க அக்கா ப்ரீத்தாக்கு அப்படிதான் பண்ணுவா” என்று சொல்ல, அவளது உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. புதுஉடையெல்லாம் வாங்கவில்லை...ஆனால் ரெட் நெய்ல்பாலிஷ், நெத்திசுட்டி, ஹேர் க்ளிப்ஸ் வாங்கினோம். வளையலும் கழுத்தில் போட்டுக்கொள்ளும் மணி அம்மா வாங்கி வந்தது வீட்டிலேயே இருந்தது!

ரெட் டே அன்று இப்படித்தான் இருந்தாள் பப்பு. கைகளில் நகப்பூச்சு இருப்பதால் நீண்டநேரம் அப்படியே வைத்திருந்தாள். முந்தினநாளிரவே கைகளில் பூசியாயிற்று.நகப்பூச்சு போயவிடுமென்று காலையில் பல்துலக்க மறுத்துவிட்டாள். மறுபடியும் போட்டுக்கொள்ள அனுமதித்தபிறகே குளியலறைக்குள் நுழைந்தாள். தீம் டே அன்று பள்ளி நேரம் முடிந்ததும் நாமும் பள்ளிக்கு சென்று பார்க்கலாம், ஆன்ட்டியை சந்திக்கலாம். பள்ளியில் எல்லாமே ரெட் கலர்தான் - பூக்கள், காய்கறிகள், செய்த கலரிங் வேலை ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி வில்லை என்று!

ஆண்ட்டியிடம் பேசினேன். வகுப்பில் மற்றவருக்கு தொல்லை தருவதில்லை. மிகவும் நல்ல பெண் . வர்ஷினியோடு சேர்ந்துதான் எதையுமே செய்ய பிரியப்படுகிறாள். இப்போதும் அழுவது தொடர்கிறது, ஒருசில நாட்களில். செய்ய விருப்பமில்லாவிட்டால் சொல்லி விடுகிறாள் என்றார்கள். குறிப்பிட்ட ஒரு சில நண்பர்களுடன் மட்டுமே பழகுகிறாள்.அவள் இன்று மிக அழகாக வந்திருந்ததாக சொன்னார்! (என்னை உற்சாகபடுத்திய என் தோழி அபிக்கு நன்றிகள்!:-))

பப்புவைக் கேட்டபோதோ,'நான் அழவேயில்லே' என்றும் 'வர்ஷினிதான் அழுதுச்சு, பப்பு அம்மா வேணும்னு சொல்லுச்சு' என்றும் சொல்கிறாள்! ஆனால், காலையில் செல்லும் போது எந்த அறிகுறியும் இருப்பதில்லை. பள்ளியில் அழுதேனேன்றும் சொல்வதுமில்லை. :-(

பப்பு பள்ளியில் பெற்றோர்கள் - ஆசிரியர்களின் முதல் சந்திப்பு இந்த வருடத்தில்! என்னைக் கவர்ந்த ஒரு சில விஷயங்கள்:


* ஆன்ட்டி சொன்னது, குழந்தைகளை அடிக்காதீர்கள், தயது செய்து அடிக்காதீர்கள். நாங்களும் அடிப்பதில்லை. எதுவானாலும் அவர்களுக்கு சொல்லுங்கள். விளக்குங்கள்.They are ready to accept. ஆனாl நாmதான் சொல்வது இல்லை. வெளியில் போனாலும், எங்கே போகிறீர்கள் என்று சொல்லுங்கள். “டாக்டர்கிட்டே போறேன், ஊசி போட்டுடுவார்னு பயமுறுத்தாதீங்க. நாளைக்கு நிஜமாவே, டாக்டர்கிட்டே போலாம்னு சொன்னா அந்த குழந்தை வரமாட்டேன்னு பயந்து அழும்”.

* இங்கே இருக்கும் உபகரணங்களை சில குழந்தைகள் தெரியாமல் எடுத்து பையிலே வைத்துக்கொள்ளலாம். அப்படி ஏதாவது உங்கள் குழந்தைகள் பையில் பார்த்தீர்களென்றால் எதுவுமே சொல்லாதீர்கள். கண்டிக்காதீர்கள். ‘ஆன்ட்டிக்கிட்டே கொடுத்துடு' என்று சொல்லி கொடுத்தனுப்பி விடுங்கள். குழந்தைகள் இதையெல்லாம் பார்த்து ஈர்க்கபபடுவது இயல்பு. அதுக்காக, 'திருடிட்டு வந்துட்டியா' என்றோ அல்லது 'இனிமே திருடக் கூடாது' என்றோ சொல்லாதீங்ர்கள். நாங்களும் அப்படி சொல்வது இல்லை. அந்த வார்த்தையை உங்கள் குழந்தை மேல் உபயோகிக்காதீர்கள்! உபகரணத்தின் நிறத்தையும் அந்த ஆக்டிவிட்டியைப் பார்த்து ஈர்க்கப்படுவது இயல்புதான்!

* கடந்தவாரத்தில் ஏதோ உபகரணத்தின் சிறியதுண்டு காணாமல் போய்விட்டது. கிளாஸ் முழுவதும் எல்லோரும் சேர்ந்து ஒரே தேடலாம். ஆன்ட்டியால் கட்டுப்படுத்த முடியவில்லையாம். எங்கிருந்தோ கண்டுபிடித்ததும் ஒரே குதூகலமாம். கிடைத்துவிட்டது ஆன்ட்டி என்று எல்லாரும் ஒருவரையொருவர் கட்டிபிடித்துக்கொள்கிறார்களாம். அதாவது அவர்கள் உபயோகப்படுத்தும் உபகரணத்தை எந்தளவு நேசிக்கிறார்கள் என்று சொல்லி முடித்தார் ஆண்ட்டி. காணாமல் போன ஷேப்பர்ஸூம், கரப்பான் பூச்சி வீடும் ஏனோ நினைவுக்கு வந்தது!! ;-)சித்திரக்கூடத்திற்கு இன்றோடு மூன்று வயது! இன்று யதேச்சையாக கண்டுபிடித்தேன். உங்களனைவருக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்! சித்திரக்கூடத்திற்கும், தமிழ்மணத்திற்கும் எனது நன்றிகள்! :-)

34 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :)

மாதவராஜ் said...

வாழ்த்துக்கள்....!

நாணல் said...

:)) வாழ்த்துக்கள்...

கல்கி said...

வாழ்த்துக்கள் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்க்கு... :-)

ஆயில்யன் said...

அழகாய் இருக்கு பப்பு டிரெஸ்!

போட்டோ எடுத்த இடம் சரியாக தேர்வு செய்யவில்லை என்பது ஒரு மைனஸ் !

பை தி பை சித்திர கூடத்துக்கு 3 வயசாயிச்சு வாழ்த்துக்கள் :)))

சின்ன அம்மிணி said...

அதுக்குள்ள மூணாவது வருஷமா, வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

Lady in Red is so cute!

சித்திரக் கூடத்தின் மூன்று வருட நிறைவுக்கு என் முத்தான வாழ்த்துக்கள்!!!

பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் கூறப்பட்டவை கவனத்தில் கொள்ள வேண்டியவை. நல்ல பகிர்வு முல்லை!

நானானி said...

//* இங்கே இருக்கும் உபகரணங்களை சில குழந்தைகள் தெரியாமல் எடுத்து பையிலே வைத்துக்கொள்ளலாம். அப்படி ஏதாவது உங்கள் குழந்தைகள் பையில் பார்த்தீர்களென்றால் எதுவுமே சொல்லாதீர்கள். கண்டிக்காதீர்கள். ‘ஆன்ட்டிக்கிட்டே கொடுத்துடு' என்று சொல்லி கொடுத்தனுப்பி விடுங்கள். குழந்தைகள் இதையெல்லாம் பார்த்து ஈர்க்கபபடுவது இயல்பு. அதுக்காக, 'திருடிட்டு வந்துட்டியா' என்றோ அல்லது 'இனிமே திருடக் கூடாது' என்றோ சொல்லாதீங்ர்கள். நாங்களும் அப்படி சொல்வது இல்லை. அந்த வார்த்தையை உங்கள் குழந்தை மேல் உபயோகிக்காதீர்கள்! உபகரணத்தின் நிறத்தையும் அந்த ஆக்டிவிட்டியைப் பார்த்து ஈர்க்கப்படுவது இயல்புதான்!//

என்னவொரு அருமைதான தெளிவான சிந்தனை, விளக்கம்!!
எல்லா பள்ளிகளும் பெற்றோரும் கவனத்தில் கொள்ளவேண்டியவை.

பப்பு அழகான செப்பு!!
பதிவுக்கு வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

மூன்றாம் வருடத்திற்கான வாழ்த்துக்கள்.. பதிவும் அருமை!

G3 said...

வாழ்த்துக்கள் !!

பப்பு வழக்கம் போல செம க்யூட் :) திருஷ்டி சுத்தி போடுங்க :)

மாதேவி said...

சித்திரக் கூடத்தின் மூன்றாம் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்.

கவிதா | Kavitha said...

வாழ்த்துக்கள்!! :)

பப்பு போட்டோவில் சூப்பர்.. !! :))))

வித்யா said...

பப்பு அழகு:)
முல்லை நினைவிருக்கிறதா பார்க்கில் ஆண் குழந்தைகளின் உடை பற்றி பேசிக்கோண்டிருந்தது. ஆண்ட்டி சொன்னவை எல்லாமே கரெக்ட் தான்:)

வித்யா said...

வாழ்த்துகள் 3 ஆண்டுகளுக்கு:)

மங்களூர் சிவா said...

மூன்றாமாண்டுக்கும் பப்புவுக்கும் வாழ்த்துக்கள்.

என்ன இருந்தாலும் உங்க ப்ரெண்டு சொன்னா மாதிரி ஒரு புது ட்ரெஸ் ஆரெம்கேவி-ல வாங்கியிருக்கணும் பப்புவுக்கு
:)))

மயில் said...

சித்திர கூடத்திற்கு வாழ்த்துகள். பப்புக்கு சிறப்பு வாழ்த்துகள்..

ஒவ்வொரு முறை இந்த மாதிரி அனுப்பும் போதும் அவர்கள் முகத்தில் வரும் வெக்கம், பெருமை எல்லாம் கலந்த சிரிப்பை இன்னைக்கு முழுதும் பார்க்கலாம்.

Deepa said...

முல்லை!

அந்தப் பள்ளி எங்கு இருக்கிறது? நேஹாவை அங்கு தான் சேர்க்க விரும்புகிறேன். அட்வைஸ் அனைத்துமே ரொம்ப முக்கியமானவை.

சித்திரக்கூடத்திலிருந்து மேலும் அழகழகான சொற்சித்திரங்கள் பெருகி எங்களைக் களிப்படையச் செய்ய வாழ்த்துகிறேன்!

பப்புக்குட்டிக்கு மறக்காமல் சுற்றிப் போடுங்கள்!
:-)

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள்

மணிநரேன் said...

லேடி இன் ரெட் ஸ் ப்யூடிபுல்.

பெற்றோர்கள் - ஆசிரியர்களின் சந்திப்பில் கூறப்பட்ட விடயங்கள் மிகவும் யோசிக்க வேண்டியது. நன்றாக உள்ளது.

மூன்று வயதிற்கு வாழ்த்துக்கள்..:)

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :)
ஓ நீங்க வலைப்பூவில் எனக்கு சீனியரா?
வாழ்த்துக்கள் :)

ச.பிரேம்குமார் said...

வாழ்த்துகள்

அமுதா said...

லேடி இன் ரெட் - ரொம்ப க்யூட்

வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

பப்புவுக்கு திருஷ்டி சுத்தி போடுங்க, அவ்ளோ அழகு, அந்தப் பாவடை, சட்டை + மணி, நெத்திச்சுடியில.

மேலும், நீங்கள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் மிகவும் உபயோகமான ஒன்று பெற்றோர்களுக்கு.

நன்றிகள்

மூன்றாம் வருடத்துக்கு வாழ்த்துக்கள்.

ஜானி வாக்கர் said...

குழந்தை கொள்ளை அழகு.

//பப்பு பள்ளியில் பெற்றோர்கள் - ஆசிரியர்களின் முதல் சந்திப்பு இந்த வருடத்தில்! என்னைக் கவர்ந்த ஒரு சில விஷயங்கள்:
//

அத்தனை விசயங்களும் உளவியல் ரீதியாக கொடுக்கப்பட்ட அறிவுரைகள். நிச்சயம் பயனுள்ளதாக இருந்தது.

விக்னேஷ்வரி said...

Pappu is very cute and sweet in classical clothes.

பப்பு ஆச்சிய மாதிரியே தைரியமான பொண்ணு பா. அழ மாட்டா.

ஆன்ட்டியின் அறிவுரைகள் சரிதானே.

வாழ்த்துக்கள் முல்லை, சித்திரக் கூடத்திற்கும், உங்களுக்கும்.

தீஷு said...

லேடி இன் ரெட் - சூப்பர். பட்டு பாவாடைக்கென்றே ஒரு அழகு இருக்கிறது முல்லை. பப்பு அழகா இருக்கா.

வாழ்த்துக்கள் மூன்றாம் ஆண்டுக்கு...

சந்தனமுல்லை said...

நன்றி முத்துலெட்சுமி!

நன்றி மாதவராஜ்!!

நன்றி நாணல்!

நன்றி கல்கி!

நன்றி ஆயில்ஸ்..நீங்க ஃபோட்டோவைத்தான் சொல்றீங்களா...kirrr..நான் பெயிண்ட் பண்ண மரத்துக்கு கீழே நிக்க வச்சிருக்கேன்னு சொல்றீங்களா?!!

நன்றி சின்ன அம்மிணி!

நன்றி ராமலஷ்மி!

நன்றி நானானி!

நன்றி சென்ஷி!

நன்றி g3!!

நன்றி மாதேவி!

நன்றி கவிதா!

நன்றி வித்யா, உண்மைதான். அலுவலகத் தோழியும் அதையேத்தான் சொல்கிறாள்! :-)

நன்றி சிவா! அவ்வ்வ்!

நன்றி மயில்!

சந்தனமுல்லை said...

நன்றி தீபா!உங்கள் வீட்டுக்கருகிலேயே இருக்கும் மாண்டிசோரி பள்ளிகளை ஒரு ரவுண்ட் பார்த்து விசாரியுங்கள்! நேஹா இன்னும் குட்டிதானே! இரண்டு வயதுக்கு மேல் இருக்கவே இருக்கிறது இந்தக் கவலை!

நன்றி குடுகுடுப்பை!

நன்றி மணிநரேன்!

நன்றி அருணா! ;-)

நன்றி பிரேம்!

நன்றி அமுதா!

நன்றி அமித்து அம்மா! அம்மா வந்ததும் சுத்திப் போட சொல்கிறேன்!

நன்றி ஜானி வாக்கர்!

நன்றி விக்னேஷ்வரி!

நன்றி தீஷூ!

ஆகாய நதி said...

My best wishes Mullai! :)

Pappu u r looking so cute and beautiful da! :)

☼ வெயிலான் said...

சித்திரக்கூடத்திற்கும் சிவப்பு பப்புவிற்கும் வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

3வது வருடத்திற்க்கு வாழ்த்துக்கள் ;)

பப்பு அம்மணி சூப்பரு ;)

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

rapp said...

நாலாவது வருஷமும் முந்தைய வருஷங்களப் போலவே கலக்க வாழ்த்துக்கள் முல்லை:):):)

ஏங்க இப்டி இருக்கீங்க? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............எங்கண்ணன் போன்னுலருந்து, ஊர்ல இருக்க குட்டி பெண் குழந்தைகளுக்கு டிரெஸ் வாங்கிக் கொடுத்து அழகுப் பாக்குறதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். நீங்க காது குத்த யோசிக்கும்போதே அவ்ளோ சொன்னோம்ல, இன்னமும் இப்டியா? கிர்ர்ர்ர்ர்ர்...........

பாருங்க பப்பு போஸ் கொடுக்குறதை, உங்க பிரென்ட் சொல்லலைன்னா, இதை மிஸ் பண்ணிருப்பீங்க.

rapp said...

வாலி படத்துல, ஒத்தக்காலோட பிச்சஎடுக்குற விவேக்குக்கு பத்து பைசா போட்டுட்டு, இஷ்டத்துக்கு டீட்டெயில்ஸ் கேக்குற அலப்பறை பார்ட்டியாட்டம், குழந்தைய எல்கேஜில சேத்துட்டு, பத்தாங்கிலாசு மேத்ஸ் டீச்சர் வீட்டு கரண்ட் பில்லை கேக்குற இம்சை புடிச்ச பெற்றோருக்கு மத்தியில, சென்சிபிளான விஷயங்களை கருத்தில் கொண்டு செயல்படுற காரணத்துக்காக உங்களை நான் கன்னாபின்னாவென பாராட்டுகிறேன்:):):)