Monday, July 13, 2009

பப்பு பள்ளியில் பெற்றோர் பட்டறை!

பப்பு பள்ளியில் கடந்த சனிக்கிழமை பெற்றோர் பட்டறை (workshop) வைத்திருந்தார்கள். காலையில் 10 மணிக்கு தொடங்கிய பட்டறை மதியம் 1 மணிக்கு முடிவுற்றது. மாண்டிசோரி முறைக்கல்வியை பற்றியும், இவர்களின் பள்ளிச் சூழலைப் பற்றியும், அணுகுமுறையைப் பற்றியும் பேசப்பட்டது. 11.30 மணிக்குப் பிறகு ஒரு மணிநேரம் - நாம் குழந்தைகளாக மாறி வகுப்பறையில் இருக்கும் உபகரணங்களை கையாளலாம். மாண்டிசோரி வகுப்பறைச் சூழலில் குழந்தைகளும் ஆண்ட்டியும் எப்படி communicate செய்துக் கொள்கிறார்கள் என்பதே நோக்கம்!

என் நினைவிலிருந்து சில பாயிண்ட்கள் :

1. மாண்டிசோரி சூழல் ஒரு prepared environment. 5 senses-ஐ அடிப்படையாகக் கொண்டது (EPL,Geography & Culture,Senses,Math etc). ஒரு வகுப்பில் 20-25 மாணாக்கர்கள் இருப்பர்.

2. 2.5 லிருந்து 3 வயது வரை குழந்தைகள் மிகவும் துறுதுறுவென்று இருக்கும். ஏனெனில் அந்தநேரம் தான் குழந்தைகளின் அறிந்துக்கொள்ளும் திறனும், மூளையும் செயல்பாடும் உச்சத்தில் இருக்கும். அதனால்தான் அவர்கள் ஒரு இடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் எல்லாவற்றையும் அறிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அந்தநேரத்தில் அவர்களுக்கானச் சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது நமது கடமை!

3.வகுப்பறையில் உபகரணங்கள் அடுக்கப்பட்டு இருக்கும். பிள்ளைகள் எதை வேண்டுமானாலும் எடுத்து உபயோக்கிக்கலாம். அவர்கள் எடுப்பது புதிதாக இருக்கும் பட்சத்தில் ஆனட்டி சொல்லித்தருவார்கள். உதவி தேவைப்படுமாயின் பெரியவர்களைக் கேட்க வேண்டுமென்று அறிந்துக்கொள்வார்கள்.

4. உபகரணங்களைக் கையாள்வது precised movements-ஆக. அதில் கட்டைவிரல்,ஆள்காட்டிவிரல், மோதிரவிரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுச் செய்யப்படுகிறது. இது பின்னாளில் எழுதத் தொடங்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். சரியான பிடிப்பு, வேகத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றை அவர்களுக்குத் தெரியாமலேயேக் கற்றுக்கொள்கிறார்கள்.

5. மலை அல்லது சூரியன் என்றதும் நாம் அதன் வடிவங்களின் மூலமே கற்பனைக் கொள்கிறோம். அதையேத்தான் மாண்டிசோரிச் சூழல் கடைப்பிடிக்கிறது. எல்லாமே வடிவங்களின் வழியாகவே - child size - குழந்தைகளின் பார்வையில்!!

6. இங்கு ஒருவருக்கொருவர் ஒப்பீடு கிடையாது. எல்லா குழந்தைகளுமே தனித்தன்மையானவர்கள் என்று நம்புகிறோம். “அந்தக் குழந்தைச் செய்யும்போது உன்னால் ஏன் செய்ய முடியவில்லை” என்று கேள்வி இங்குக் கிடையாது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் எல்லாத் திறமைகளுமே ஒளிந்திருக்கிறது. அந்தத் திறமைகளை வெளிவர வெளிக்கொண்டு வர நேரம்தான் முக்கியம்.

7. ஆன்ட்டி என்று ஏன் அழைக்கச் சொல்கிறோமென்றால், ஒரு பழகிய உணர்வு வருவதற்காகவே! அணுகக்கூடாதவர்களல்லவென்றோ அல்லது ஒரு பயத்தையோ உண்டாக்காமல் இருப்பதற்காகவும். இங்கு யாரும் சத்தம் போட்டுக்கூட பேசுவது கிடையாது. புது ஆக்டிவிட்டி கற்றுக்கொடுக்கும்போது, செயல்முறை மட்டும்தான். பேசுவது கிடையாது. (”வொர்க் பண்ணும்போது பேசக் கூடாது” என்று நாங்கள் விளையாடும்போது பப்பு சொல்லியிருக்கிறாள்.)
சில அடிப்படியான மாண்டிசோரி ஆக்டிவிட்டீஸை செய்துக் காட்டினார்கள்.

காயின் பாக்ஸ் :

பாக்ஸிலிருக்கும் எல்லா பிளாஸ்டிக் நாணயங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து விட்டு, அதனுள் ஒவ்வொன்றாக போடுதல் - சத்தம் வராமல் - பின்னாளில் கணிதம் கற்க இந்தமுறை உபயோகப்படும்.

போரிங் :

கீழே தண்ணீர் ஊறாத ஒரு தடுப்பினை போட்டபின், ஒரு கிண்ணத்திலிருந்து இன்னொரு கிண்னத்திற்கு மாற்றுதல் - கடைசிச் சொட்டு அடுத்தப் பாத்தரத்தில் விழும்வரை காத்திருந்து பின் எல்லாவற்றையும் அதன் இடத்தில் வைத்தல். பொறுமை, வேகத்தை கட்டுப்படுத்துதல், மேலும் தவறு செய்தால் திருத்திக்கொள்வதை அறிந்துக் கொள்கிறார்கள்.

துணிக்கிளிப்-கள் - மூன்று விரல்களை ஒருங்கிணைக்கும் பயிற்சி.

இதையெல்லாம் எப்படிச் சொல்லித்தருவார்களென்றும் செய்துக் காட்டினார்கள். அதாவது one-to-one communication. மேலுன் இந்த உபகரணங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான உபகரணத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். யாராவது உபயோகித்துக் கொண்டிருந்தால், அது வரும் வரை காத்திருந்து, விரும்பும் உபகரணம் வந்தபின் எடுத்துக்கொள்ள வேண்டும். உபயோகித்தபின் திரும்ப அதன் இடத்தில் கொண்டு வைக்க வேண்டும். freedom & discipline!

EPL : Exercises of Practical Life

இது வாழ்க்கையின் நாம் அன்றாடம் செய்யக் கூடிய வேலைகளுக்குத் தயார்படுத்துவது.
கோப்பைகளை அடுக்கி எடுத்து வருவது, பேனா, கத்தரிக்கோல் கேட்டால் கொடுக்கும் முறைகள் முதலியன. ஆண்ட்டி சொன்னது, “நீங்கள் சாப்பிடும்போது உங்கள் குழ்னதைகளையே பரிமாற்ச் சொல்லுங்கள். சாம்பார் கொட்டிடுவாங்க என்றோ ஊத்திடுவாங்க என்றோ பயப்படாதீர்கள். அவர்கள் கீழேச் சிந்தமாட்டார்கள். ஏனெனில் சிந்தினால் அவர்கள்தான் துடைக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும். இங்கேக் கூட தண்ணீர் வைத்துச் செய்யும் எந்த ஆக்டிவிட்டியிலும் கீழே சிந்த மாட்டார்கள். ஏனெனில் அந்த உபகரணத்தோடு துடைக்க ஒரு துணியும் இருக்கும். கற்றுக்கொள்ளும்போது ஓஇரு முறை சிந்தொவிடும். அந்தத் துணி ஈரமாகிவிட்டால் அதை வைத்துவிட்டு, வேறு துணி எடுத்து வைக்கவேண்டும். அதை மாற்றுவதற்குப் பதில் அவர்கள் கீழே சிந்தாமல் பொறுமையாகச் செய்வார்கள்.”

silent hour : தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி முதலில் கைகளை கீழே தரையில் ஊன்றிக்கொண்டு, கண்களை மூடுயபடி அமர்ந்திருக்க வேண்டும். அது பழக்கமானபின் கைகளை கட்டிக்கொண்டு கண்கள் மூடியபடி. இது பழகியபின் உலலையும் மனதையும் மெதுவாக ஒருங்கிணைக்கும் பயிற்சி. (பப்பு என்னை சில சமயங்களில், close your eyes என்று சொல்லியிருக்கிறாள். அவளுக்கு முன் கைகளை கட்டி ஒற்றைக்கண்ணால் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். அவளும் ஒற்றைக்கண்ணால் நான் கண்கள திறந்திருப்பதை கண்டுபிடித்துவிடுவாள்!!)


Sensory : சிலிண்டர் ப்ளாக்ஸ், பிங்க் டவர் முதலியன்

இவை எல்லாமே ஒரு செமீ-யிலிருந்து 10 செமீ பரிமாணத்தில் அமைந்தவை - 10 பொருட்கள். உபயோகிக்க வேண்டும் பட்சத்தில் அதன் இருப்பிடத்திலிருந்து ஒவ்வொன்றாக குழந்தைகளின் இடத்திற்கு எடுத்து வர வேண்டும். அதைச் செய்து முடித்தபின் ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று அதன் இடத்தில் வைக்க வேண்டும்.

டச் போர்ட் : இது சொரசொரப்பான பகுதியும் மெதுவாக பகுதியும் கொண்ட ஒரு போர்டு. அதனை கைகளால் தடவிப் பார்த்து உணர்ந்துக்கொள்வதற்காக - இதில் வெர்ஷன்களும் உண்டு. இரு விரல்கள் கொண்டு உபயோகிப்பது முதல் நான்கு விரல்களைக் கொண்டு உபயோகிப்பது வரை. அதன்பின் geometric tray, binomial cube முதலியன் பற்றி.


மொழி : முதலில் எல்லா எழுத்துகளும் சப்தங்களின் மூலமே கற்றுத் தரப்படும். சப்தங்களைக் கொண்டு வார்த்தைகளை அவர்கள் சொல்வது, எழுத்துகளை சாண்ட் பேப்பரில் தொட்டு உணரச் செய்வது முதலியன. உங்கள் குழந்தை வீட்டுப்பாடத்தில் முடிந்தவரை நேரடியாக உதவுவதைத் தவிருங்கள். (எ.கா-ஆக, e-இல் ஆரம்பிக்கும் 5 வார்த்தைகள் என்றால் உடனே சொல்லி விடாதீர்கள். அவர்களாகவே யோசித்து சொல்லட்டும்.)

எண்கள் : தீஷூ சொல்லியிருந்தது போல மணிகளைக் கொண்டுதான் எண்கள் பயிற்றுவிக்கபபடுகிறது. பத்து பத்தாக கோர்க்கப்பட்டவை, அவற்றைக் கொண்டு கோர்க்கப்பட்ட 100 மணிகள் கொண்டவை, பத்து நூறுகள் சேர்ந்த 1000 மணிகள் கொண்டவையென்று. எண்கள் அதன் அளவுகளை கொண்டு கற்றுக்கொடுக்கப்படுவதால் apacus க்கு அனுப்ப வேண்டாமென்று சொன்னார் ஆண்ட்டி.

பெற்றோர்களின் கேள்விகள் :

பெற்றோர் 1 : ரொம்ப கொஞ்சமா ஹோம்ஒர்க் கொடுக்கறீங்க. அதிகம் டீவி பாக்கறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் அதிகமா ஹோம்-ஒர்க் கொடுத்தீங்கன்னா அவங்க அதிலியே நேரம் செலவழிப்பாங்க.

ஆன்ட்டி : பள்ளியில்தான் அவர்கள் நிறைய வொர்க் செய்ய வேண்டுமேத் தவிர ஹோம் ஒர்க் கொடுப்பதில் விருப்பம் இல்லை. நீங்கள் குழந்தையுடன் நேரம் செலவிடுங்கள். கார்ட்டூன்கள் அதிகம் பார்க்க விடாதீர்கள். (குறிப்பு : ஹோம்ஒர்க் 5 வயதுக்கு மேலிருந்துதான் ஆரம்பமாகிறது!)


பெற்றோர் 2 : ரொம்பச் சேட்டை பண்றான்.வீட்டுலே சமாளிக்க முடியலை. ஏதாவது க்ளாஸ்-க்கு அனுப்பலாமா?

உங்க பிள்ளைக்கு 2.5 தானே ஆகுது. அப்படித்தான் இருப்பாங்க. க்ளாஸ் எல்லாம் டூ யர்லி. வெளிலே எங்கேயாவது கூட்டிட்டு போங்க. பெயிண்டிங் க்ளாஸ் அனுப்பலாம்.

(இன்னும் நிறைய கேட்டாங்க, மனதில் நின்றது இந்தக் கேள்விகள்தான்!நான் என்னென்ன ஆக்டிவிட்டீஸ் செய்து பல்பு வாங்கினேன் என்பதை பிறிதொரு இடுகையில் எழுதுகிறேன்!)

23 comments:

ஐந்தினை said...

அருமை முல்லை அவர்களே, நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி

நிஜமா நல்லவன் said...

/நான் என்னென்ன ஆக்டிவிட்டீஸ் செய்து பல்பு வாங்கினேன் என்பதை பிறிதொரு இடுகையில் எழுதுகிறேன்!/


:)

சின்ன அம்மிணி said...

என்ன ஆச்சு ரெண்டு லிங்க் இருக்கு ஒரே தலைப்புல.

கிருஷ்ணமூர்த்தி said...

ஒரு வித்தியாசமான, நல்ல பதிவு. கல்விமுறைகளில், ஏகப்பட்ட மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை யோசித்துக் கொண்டே படித்து முடித்தேன். நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

EPL பயிற்சி நானும் எடுத்துக்கனும்ன்னு நினைக்கிறேன்.. எப்பவும் சிந்தாம பரிமாறினதா சரித்திரமே இல்லை.. :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு ரொம்ப உபயோகமான பதிவு முல்லை

(இன்னும் நிறைய கேட்டாங்க, மனதில் நின்றது இந்தக் கேள்விகள்தான்!நான் என்னென்ன ஆக்டிவிட்டீஸ் செய்து பல்பு வாங்கினேன் என்பதை பிறிதொரு இடுகையில் எழுதுகிறேன் //

சீக்கிரம் ஆச்சி கலாய்க்க கை பர பர ந்னு இருக்கு :)))))))))))))))))

G3 said...

/நான் என்னென்ன ஆக்டிவிட்டீஸ் செய்து பல்பு வாங்கினேன் என்பதை பிறிதொரு இடுகையில் எழுதுகிறேன்!//

aavaludan waiting :))))))

பைத்தியக்காரன் said...

ஆச்சி,

அவசியமான நல்ல பதிவு. மாண்டிசோரி கல்வி முறை குறித்து மேல் விவரங்களை தெரிந்து கொள்ள சில பெற்றோர்கள் ஆர்வம் கொள்ளலாம். அவர்களுக்காக ஒரு நண்பரின் தொலைபேசியை பொதுவில் தருகிறேன்.

அவர் பெயர் ரொக்சானா. அவரது கைப்பேசி எண்கள் 9444606443, 9382999994.

முதல் முறையாக இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற மாண்டிசோரி ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பள்ளியை நடத்துபவர் இவர். பெற்றோர்கள், இவரை தொடர்பு கொண்டால், மாண்டிசோரி கல்வி முறை குறித்தும், குழந்தைகளுக்கு அதன் வழியே கல்வியை கற்பிப்பது குறித்தும் சொல்வார்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

(ஆச்சி, உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே இந்த பின்னூட்டத்தை வெளியிடுங்கள். இல்லாவிட்டால் பரவாயில்லை)

மணிகண்டன் said...

Good recollection mullai.

எனக்கு சாப்பாடு சிந்தாம பரிமாறுவாங்கன்னு சொல்றது மட்டும் :)- அனுபவம்.

கானா பிரபா said...

G3 said...

/நான் என்னென்ன ஆக்டிவிட்டீஸ் செய்து பல்பு வாங்கினேன் என்பதை பிறிதொரு இடுகையில் எழுதுகிறேன்!//

aavaludan waiting :))))))
//

கன்னாபின்னான்னு றிப்பீட்டேஏ

மணிநரேன் said...

நல்லதொரு பதிவு.

இவ்வாறான பெற்றோர் கேள்விகள்... எப்போதான் மாறுமோ????

ஆகாய நதி said...

Great informations mullai... thanks for it! :)

செல்வநாயகி said...

பகிர்வுக்கு நன்றி சந்தனமுல்லை. மான்டீசரிக் கல்வி முறை மேல் ஏற்பட்ட ஈடுபாட்டால் கொஞ்சகாலத்தை அதன் நுணுக்கங்கள், பயன்கள் அறியும் பொருட்டு ஒரு நிறுவனத்தில் இங்கே தன்னார்வலராகச் செலவழித்தேன். இம்முறையை அப்படியே நம்மூர்ச் சூழலுக்குப் பொருத்துவதில் உள்ள நிறை, குறைகளையும் சிந்தித்து வருகிறேன். இந்நிலையில் நம்மூரிலும் இம்முறை இப்போது பரவலாகச் செயல்திட்டம் பெற்று வருவதறிந்து மகிழ்வாக இருக்கிறது.


நீங்கள் பப்புவைச் சேர்த்திருக்கும் பள்ளியில் எதுவரையான வகுப்புகள் உள்ளன? கட்டணம் எவ்வளவு? எவ்வள‌வு நேரம் தினம் வகுப்புகள்? தேர்வுமுறை எதன் அடிப்படையில் செயல்படுகிறது? இங்கே படித்துப் பின் மற்றைய பொதுவான பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைய நேர்ந்தால் சமாளித்து விடுவார்களா? உங்களுக்குச் சிரமம் இல்லையென்றால் என் கேள்விகளுக்குப் பதில்கள் தர வேண்டுகிறேன்.

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................முக்கியமான பல்பு மேட்டர் ஒய் மிஸ்ஸிங்? கன்னாபின்னாவெனக் கண்டிக்கிறேன்.

rapp said...

//
2. 2.5 லிருந்து 3 வயது வரை குழந்தைகள் மிகவும் துறுதுறுவென்று இருக்கும். ஏனெனில் அந்தநேரம் தான் குழந்தைகளின் அறிந்துக்கொள்ளும் திறனும், மூளையும் செயல்பாடும் உச்சத்தில் இருக்கும். அதனால்தான் அவர்கள் ஒரு இடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் எல்லாவற்றையும் அறிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அந்தநேரத்தில் அவர்களுக்கானச் சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது நமது கடமை!
//

ஹி ஹி ஹி, யாரோட குழந்தைக்கெல்லாம் இப்போ இரண்டரை வயசுப்பா? கி கி கி:):):) பயங்கர சந்தோஷமாக இருக்கிறது உங்களோட நிலையை நெனச்சு:):):) அவசரத்துக்கு லேன்லைன் டெலிபோனும், ரிமோட்டும் தேடும்போது அதிருக்கும் இடத்தை நினைத்தால் ஆனந்தமாக இருக்கிறது:):):)

rapp said...

//இங்கு ஒருவருக்கொருவர் ஒப்பீடு கிடையாது. எல்லா குழந்தைகளுமே தனித்தன்மையானவர்கள் என்று நம்புகிறோம். “அந்தக் குழந்தைச் செய்யும்போது உன்னால் ஏன் செய்ய முடியவில்லை” என்று கேள்வி இங்குக் கிடையாது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் எல்லாத் திறமைகளுமே ஒளிந்திருக்கிறது. அந்தத் திறமைகளை வெளிவர வெளிக்கொண்டு வர நேரம்தான் முக்கியம்.//

சூப்பர்:):):)

rapp said...

//”வொர்க் பண்ணும்போது பேசக் கூடாது” என்று நாங்கள் விளையாடும்போது பப்பு சொல்லியிருக்கிறாள்//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டூ மச் நக்கலு:):):)

நட்புடன் ஜமால் said...

”வொர்க் பண்ணும்போது பேசக் கூடாது” என்று நாங்கள் விளையாடும்போது பப்பு சொல்லியிருக்கிறாள்.\\


ஹா ஹா சூப்பர் பப்பு.

நட்புடன் ஜமால் said...

(இன்னும் நிறைய கேட்டாங்க, மனதில் நின்றது இந்தக் கேள்விகள்தான்!நான் என்னென்ன ஆக்டிவிட்டீஸ் செய்து பல்பு வாங்கினேன் என்பதை பிறிதொரு இடுகையில் எழுதுகிறேன்!)\\

உங்களை கலாய்க்கும் அளவுக்கு பரிட்ச்சியம் இல்லையென்றாலும், ஆயில்ஸ் மற்றும் அமித்துஅம்மா கலாய்த்தலை இரசிப்பதுண்டு

சீக்கிரம் பதிவேற்றுங்க சகோதரி

சுரேகா.. said...

நல்லா படிச்சிருக்கீங்க! :)

ஆனா இதைப்பத்தி சூப்பரா சொல்ல நம்மக்கிட்ட ஒரு பதிவர் இருக்காங்களே!

புதுகைத்தென்றல் !

அவங்ககிட்ட கேளுங்க ! அற்புதமா சொல்வாங்க!

http://pudugaithendral.blogspot.com/

சந்தனமுல்லை said...

நன்றி ஐந்தினை, நிஜம்ஸ்!

நன்றி சின்ன அம்மிணி, தமிழ்மணத்துலே சேர்க்கறதுல பிரச்சினை, அதான்!

நன்றி கிருஷ்ணமூர்த்தி!

நன்றி முத்துலெட்சுமி..:-)

நன்றி அமித்து அம்மா...அவ்வ்வ்!

நன்றி g3!

நன்றி பைத்தியக்காரன்!

நன்றி மணிகண்டன்!

நன்றி கானாஸ்!

நன்றி மணிநரேன்!

நன்றி ஆகாயநதி!

நன்றி செல்வநாயகி, தங்களுடைய பதிவிலே மறுமொழி கொடுத்துள்ளேன்!

நன்றி ராப்..அவ்வ்வ்!

நன்றி ஜமால், :-) நீங்களுமா அவங்க கூட!

நன்றி சுரேகா..இது அந்தப் பள்ளியில் நடந்த முன்னுரை !

" உழவன் " " Uzhavan " said...

எல்லாத்தையும் மைண்ட்ல ஏத்திக்கிட்டேன்

தீஷு said...

அருமையான பதிவு முல்லை. மாண்டிசோரி அம்மை எவ்வளவு intelligent என்பது ஒவ்வொரு முறை அவர்களை பற்றி படிக்கும் பொழுது, வியந்தது உண்டு.

//நான் என்னென்ன ஆக்டிவிட்டீஸ் செய்து பல்பு வாங்கினேன் என்பதை பிறிதொரு இடுகையில் எழுதுகிறேன்!//

சீக்கிரம் ப்ளீஸ் :-)))