Thursday, July 16, 2009

பப்பு டைம்ஸ்

அம்மா, எனக்கு மருந்துக் குடுக்கக் கூடாதும்மா..குடுத்தீங்கன்னா அடிக் குடுத்துடுவேங்கம்மா!!

எவ்ளோ மரியாதை?!!தட்டிலிருந்த தோசைகளை மூவரின் தட்டுகளிலும் பகிர்ந்துக் கொண்டிருந்தேன்.

இது my plate!

இது அப்பாவோட my plate!

இது உன்னோட my plate!!

சிலசமயங்களில், what is mugil appa-வோட my name?!!ஆச்சி, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்!

எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் பப்பு!

எனக்கு பிடிக்கும்னு சொல்லும்போதுதான் உனக்கு என்னை பிடிக்குமா!?!

பவ்வ்வ்வ்வ்வ்!ஒரு மரத்துக்கீழே ஒரு புலி இருந்துச்சாம். அப்போ வர்ஷினி புலியை பார்த்துட்டு ஓடிபோய்டுச்சாம். அதுதான் கதை!


ஒருநாள் ஸ்டார் கீழே விழுந்துச்சாம். வர்ஷினி ஸ்டாரை எடுத்து சாப்பிட்டுச்சாம். ஸ்டாரை சாப்பிடலாமா? சாப்பிட்டா என்னா ஆகும்? பூச்சிதான வரும்! சாப்பிட்டுடுச்சு ஆச்சி, வர்ஷினி! அதான் கதை!


ஒரு காட்டுலே ஒரு புலி இருந்துச்சாம். அது எல்லா அனிமல்ஸையும் சாப்பிட்டுட்டே இருந்ததாம். செகண்டா ஒரு முயல் வந்துச்சாம். உன்னை மாதிரியே ஒரு புலி பாத்தேன்ன்னு கூப்டுச்சாம். கிணத்துலே ஒரு புலி இருந்துச்சாம். புலி, உன்னை கொல்றேன்ன்னு உள்ளே குதிச்சுதாம். அப்புறம் புலி செத்துபோச்சாம்!


இன்னொரு கதை சொல்லு பப்பு என்றதற்கு, அதே டெம்ப்ளேட்டில் புலிக்கு பதில் சிங்கமாக மாற்றிச் சொன்னாள்!ஹ்ம்ம்...அதோட நிறுத்தியிருக்கணும்!!ஹ்ம்ம்

கிஷோர் ஒரு நாள் ஒரு வொர்க் பண்ணிட்டு ரோல் பண்ணானாம். ஆன்ட்டி ரோல் பண்ணாதேன்னு சொன்னாங்களாம். கிஷோர் எப்போ வீட்டுக்கு போறதுன்னு அழுதானாம். வர்ஷினியும் கூட சேர்ந்து அழுதுச்சாம். அப்புறம் தூக்கிபோடவான்னு கேட்டேனாம். வர்ஷினியும் கிஷோரையும் தூக்கிப் போடவான்னு கேட்டேன். வர்ஷினின் அழுது முடிச்சுடுச்சு. கிஷோர் அழுதுட்டே இருந்தானாம். ”தூக்கிப் போடவா” ந்னு கிஷோரை தூக்கி போட்டுட்டேன்!

சரி, வன்முறை அதிகமாகுதுன்னு கதை கேட்டது போதும்னு விட்டுட்டேன்!விஜயின் பேட்டி ஏதோவொரு சேனலில் ஓடிக்கொண்டிருந்தது. விஜயின் ஒரு சில பாடல்காட்சிகள் தவிர வேறு எதையும் பார்த்திருக்கவில்லை, பப்பு! பேசிக்கொண்டிருந்த
விஜயைப் பார்த்த பப்புக் கேட்டாள்,

“ அந்த அங்கிள் சாஃப்டா இருப்பாரா?!”

அவளுக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம் வந்ததென்றுத் தெரியவில்லை.

38 comments:

G3 said...

//எனக்கு பிடிக்கும்னு சொல்லும்போதுதான் உனக்கு என்னை பிடிக்குமா!?!//

ROTFL :)))))

G3 said...

//சரி, வன்முறை அதிகமாகுதுன்னு கதை கேட்டது போதும்னு விட்டுட்டேன்!//

avvvvvvvvvvvvvv

பைத்தியக்காரன் said...

ஆச்சி,

வழக்கம் போல் குட் & ஸ்வீட் அப்சர்வேஷன்.

//what is mugil appa// - பப்புவோட தாத்தா பேரா? :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

நட்புடன் ஜமால் said...

துவக்கமே கலக்ஸ் பப்பு!

[[இது my plate!

இது அப்பாவோட my plate!

இது உன்னோட my plate!!]]


இது ரொம்ப கலக்ஸ்

கோபிநாத் said...

:))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிலசமயங்களில், what is mugil appa-வோட my name?!!

haahaaa

அம்மா, எனக்கு மருந்துக் குடுக்கக் கூடாதும்மா..குடுத்தீங்கன்னா அடிக் குடுத்துடுவேங்கம்மா!! //

குழந்தை அடிக்கறத கூட எவ்ள பவ்யமா சொல்லுது, அதைப்போய் கொஸ்டின் மார்க்கெல்லாம் போட்டு சொல்றீங்க. :)))))

ஒரு மரத்துக்கீழே ஒரு புலி இருந்துச்சாம். அப்போ வர்ஷினி புலியை பார்த்துட்டு ஓடிபோய்டுச்சாம். அதுதான் கதை!

ஹே! செம ஸ்டோரி. நீங்களும் சொல்றீங்களே, ஈகிளாம், சோம்பேறியாம். ஆனாலும் இந்தக் கதை விஷயத்துல நீங்க பப்புவ அடிச்சிக்க முடியாது ஆச்சி !!!!!!!!


இந்தப் பதிவ படிச்சவுடனே எனக்கு வர்ஷினியோட நேத்து பேசின டயலாக் ஒன்னு ஞாபகம் வருது.

நான்: பாப்பா யாரு
அமி: அர்ச்சினி

குட் கேர்ள் யாரு
அமி : அர்ச்சினி

பேட் கேர்ள் யாரு
அமி : ஆயா

எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சென்ஷி said...

//சிலசமயங்களில், what is mugil appa-வோட my name?!!//

பப்புவோட அப்பா :)))

rapp said...

//இது my plate!

இது அப்பாவோட my plate!

இது உன்னோட my plate!!
//

நான்கூடத்தான் ஊர்ல இருக்க நகைக்கட கவுண்டர்ல நின்னுக்கிட்டு, இது என் நகை, இது உங்களோட என் நகை, அப்டின்னு ஒரு அருமையான கணக்கு சொல்றேன்.

எவ்ளோ தெகிரியம் இருந்தா இப்டி எங்கள கலாய்ப்பீங்க:):):) கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............

ஆயில்யன் said...

//பவ்வ்வ்வ்வ்வ்!//

பாஸ் இது ரைமிங்கா இல்லியே!!!!!


வவ்வவ்வவ்வ

rapp said...

//எனக்கு பிடிக்கும்னு சொல்லும்போதுதான் உனக்கு என்னை பிடிக்குமா!?!

பவ்வ்வ்வ்வ்வ்!//

பாருங்க எவ்ளோ சோக்கா சொல்றாங்க பப்பு, நீங்களா ஒரு தொடரை பிளாக்லதான் ஆரம்பிக்கல, அட்லீஸ்ட் வீட்ல பப்புக்கிட்ட அடிக்கடி இந்த தொடர் வெள்ளாட்டு வெள்ளாடலாம்ல :):):)

rapp said...

//
ஒரு மரத்துக்கீழே ஒரு புலி இருந்துச்சாம். அப்போ வர்ஷினி புலியை பார்த்துட்டு ஓடிபோய்டுச்சாம். அதுதான் கதை!
//

பாருங்க, பப்பு இதே மாதிரி நாலஞ்சுக் கத சொன்னா போதும், அவங்க யாரோட பொண்ணுன்னு கூட சொல்லத் தேவையில்ல, தானா தெரிஞ்சிடும்:):):) முல்லையா கொக்கா:):):) கத சொல்றேன் கத சொல்றேன்னு இப்டி நம்ம ஒளிமயமான சந்ததியையே டெர்ரராக்குறாங்க:):):)

சென்ஷி said...

//எனக்கு பிடிக்கும்னு சொல்லும்போதுதான் உனக்கு என்னை பிடிக்குமா!?!//

சூப்பர்!!!!!!! :)))

ஆயில்யன் said...

//ஒரு மரத்துக்கீழே ஒரு புலி இருந்துச்சாம். அப்போ வர்ஷினி புலியை பார்த்துட்டு ஓடிபோய்டுச்சாம். அதுதான் கதை!//

என்ன கதை வுடுறீங்களா??
:))))

சின்ன அம்மிணி said...

//எவ்ளோ மரியாதை?!!//

ஹஹஹா

rapp said...

//“ அந்த அங்கிள் சாஃப்டா இருப்பாரா?!”

அவளுக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம் வந்ததென்றுத் தெரியவில்லை.//

இங்க எதுக்கு ஒழுங்கா ஒரு 'ஃ' அடிச்சீங்க? ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டிருந்தா, நாங்க ஒரு மொக்க ஜோக் அடிச்சிருப்போம்ல, சாப்டா எப்டி இருப்பாரு, வயித்துகுள்ள போய், டான்ஸ் ஆடிட்டிருப்பாரேன்னு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

rapp said...

//அம்மா, எனக்கு மருந்துக் குடுக்கக் கூடாதும்மா..குடுத்தீங்கன்னா அடிக் குடுத்துடுவேங்கம்மா!!//

எப்போ அவங்க ஆச்சி அப்டிங்கறதுலருந்து, அம்மான்னு திடீர்னு சொன்னாங்களோ, அப்பவே எதிர்பாத்திருக்கணும்:):):)

மயில் said...

பாருங்க, பப்பு இதே மாதிரி நாலஞ்சுக் கத சொன்னா போதும், அவங்க யாரோட பொண்ணுன்னு கூட சொல்லத் தேவையில்ல, தானா தெரிஞ்சிடும்:):):) முல்லையா கொக்கா:):):) கத சொல்றேன் கத சொல்றேன்னு இப்டி நம்ம ஒளிமயமான சந்ததியையே டெர்ரராக்குறாங்க:):):)repeatuuuuuuuuu

விக்னேஷ்வரி said...

ஒவ்வொன்றையும் ரசித்துப் படித்து சிரித்தேன். Sweet pappu.

ஆகாய நதி said...

So sweet of u pappu! :)

Anonymous said...

pappu is sweet and intelligent!!

VS Balajee

ராமலக்ஷ்மி said...

நீங்க ‘அவ்வ்வ்..’ன்னு சொன்ன காலம் போய் ‘பவ்வ்வ்ன்னு’ அவ கேள்விக்குப் பதுங்குற அளவுக்கு வளர ஆரம்பிச்சிட்டாங்க பப்பு:)!

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

//பவ்வ்வ்வ்வ்வ்!//

பாஸ் இது ரைமிங்கா இல்லியே!!!!!


வவ்வவ்வவ்வ/


Repeattuuuuu...!

நாஞ்சில் நாதம் said...

:):):):):):):):):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பப்பு டைம்ஸ் ல் இனி பவ்வ்வ் டைம்ஸ் அதிகரிக்கும் என்று தெரிகிறது.. :))

வெரிகுட்..
நான் படிச்ச ஒரு பூந்தளிர் கதையில் “நம சிரஹ “ ந்னா சம்ஸ்கிருதத்தில் என் தலைன்னு அர்த்தமாம்.பையன் வீட்டுல வ்ந்து வாத்தியார் தலை வாத்தியார் தலைன்னு படிப்பான்.. ஏன்ன வாத்தியார் தான் நம சிரஹன்னு சொன்னார்.. :) அப்படி இருக்கு இந்த மை ப்ளேட்..

" உழவன் " " Uzhavan " said...

//இது my plate!
இது அப்பாவோட my plate!
இது உன்னோட my plate!!
சிலசமயங்களில், what is mugil appa-வோட my name?!!//
 
:-)))))))

மணிகண்டன் said...

பப்பு டைம்ஸ் ஸ்வீட்.

செல்வநாயகி said...

உங்கள் பதிவில் எனக்கு அதிகம் பிடித்தமான பகுதி "பப்புவின் நேரம்" தான்:)) மிக ரசித்தேன்.

சென்ற பதிவில் நான் நம்மூர் மாண்டீசரி பள்ளி பற்றிக் கேட்டிருந்த கேள்விகளுக்குப் பொறுமையாகவும், விவரமாகவும் பதில் அனுப்பியிருந்தீர்கள். மிக்க நன்றி அதற்கு முல்லை.

அமுதா said...

:-))

மங்களூர் சிவா said...

//எனக்கு பிடிக்கும்னு சொல்லும்போதுதான் உனக்கு என்னை பிடிக்குமா!?!//

very nice and intelligent question!
:))))))

மங்களூர் சிவா said...

//அம்மா, எனக்கு மருந்துக் குடுக்கக் கூடாதும்மா..குடுத்தீங்கன்னா அடிக் குடுத்துடுவேங்கம்மா!!//

haa haa
:))))))))

நிலாவும் அம்மாவும் said...

so cute...

தமிழ் பிரியன் said...

வாவ்! நைஸ் பப்பு!

வல்லிசிம்ஹன் said...

முல்லை ,பப்பு தான் ஸ்டார்.

இந்த மேட்சிலயும் எல்லா சந்திப்புகள்ளிலேயும் அவங்கதான் வின்னர்.
வே டு கோ பப்பு.

ச.முத்துவேல் said...

எல்லாமெ ரொம்ப நல்ல பகிர்வுகள். முதல் மூனும் டாப்.

தமிழ்நதி said...

மிகவும் ரசித்தேன் சந்தனமுல்லை... நாங்கல்லாம் என்ன கதை எழுதுறோம் போங்க... அவங்க சொல்றாங்க பாருங்க அது கதை!!!

நசரேயன் said...

ரசனையா இருக்கு

இரசிகை said...

:))

nice