Friday, July 17, 2009

என்ன கொடும குள்ளநரி இது!!!

யார் உங்கள மொட்ட அடிச்சா, முகிலப்பா?! - அவள் தூங்கிக்கொண்டிருக்கும் சமயம் முடித்திருத்திக்கொண்டு வந்த முகிலைப் பார்த்து!

“குள்ளநரி, பப்பு” - முகில்! (நான் புஜ்ஜி என்பதை நினைவிற் கொள்க!!)

”அதுக்குத்தான் ஓரத்துலே படுக்கக்கூடாது, அப்பா ஓரத்துலே படுத்திருந்தாங்க இல்ல, அதான் குள்ளநரி வந்து கட் பண்ணிடுச்சு”- இது நான்!

அதிலிருந்து பப்புவை காலையில் எழுப்பவும் சில சமயங்களின் கட்டிலின் மறுஓரத்தில் படுக்க அடம் பிடிக்க பப்புவை சமாளிக்கவும் “குள்ளநரி” உதவி செய்தது.

காலை 6.15-க்கு அப்படி சத்தம் கொடுத்துவிட்டு (யாராவது ஒருவர்தான்...ஹிஹி!) "குள்ளநரி வந்துடுச்சு போலிருக்கு” என்று சொன்னதும் எழுந்து உட்கார்ந்து விடுவாள்-குள்ளநரிதான் வந்துவிட்டது என்று நம்பி்!அப்புறம் என்ன...குள்ளநரியை தேடுகிற படலம் பாத்ரூமில் முடியும்!!

எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு, இன்றுக்காலை ஏழு மணிக்கு அவள் என்னை எழுப்பும் வரை -

”ஸ்ஸ்..ஸ்ஸ்...குள்ளநரி வந்திருக்கு பாரு!!"

..என்று குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!

குறிப்பு :

இன்று பப்பு அவளது பள்ளியிலிருந்து முதல் ஃபீல்ட் ட்ரிப் சென்றுவிட்டு வந்திருக்கிறாள். (அதைப்பற்றி பிறிதொரு இடுகையில்!)

24 comments:

தமிழ் பிரியன் said...

ஹா ஹா குள்ள நரி கட்சி மாறிடுச்சு போல இருக்கு..:))

பப்புக்கே அல்வாவே?

பப்பு பேரவை
சவுதி அரேபியக் கிளை

ராமலக்ஷ்மி said...

//குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!//

:))!

குடுகுடுப்பை said...

நீதி என்ன? நாம் பொய் சொன்னால் நம் குழந்தைகளும் அதையே செய்யும். இது சம்பந்தமாக எங்கள் வீட்டில் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் ஹரிணி கேட்கும் பல கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. அவங்க அம்மா தான் சமாளிப்பாங்க.

Deepa said...

:-)) என்றும் மனதுக்கு ரம்மியமானது பப்பு டைம்ஸ்.

//ஃபீல்ட் ட்ரிப் சென்றுவிட்டு வந்திருக்கிறாள். //
பதிவுக்கு வெயிட்டிங்

மாதவராஜ் said...

ஆஹா......
குள்ள நரிகள் எவ்வளவு நல்லவை?

நிஜமா நல்லவன் said...

:)

தாரணி பிரியா said...

:)))))))))

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

சூட்டிகைதான் உங்கள் செல்லப் பப்பு

anbudan vaalu said...

//எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு, இன்றுக்காலை ஏழு மணிக்கு அவள் என்னை எழுப்பும் வரை -

”ஸ்ஸ்..ஸ்ஸ்...குள்ளநரி வந்திருக்கு பாரு!!"

..என்று குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!//

பப்புக்கு என்னோட ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...சூப்பர் பப்பு....

சென்ஷி said...

// தமிழ் பிரியன் said...

ஹா ஹா குள்ள நரி கட்சி மாறிடுச்சு போல இருக்கு..:))//

:)))))

மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...

ஹா ஹா குள்ள நரி கட்சி மாறிடுச்சு போல இருக்கு..:))
/

ரிப்பீட்டு
:)))))))))))

Anonymous said...

First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.

http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
பப்பு இம்புட்டு நாள் நம்புறாப்டி நடிச்சா, பாவம் நீங்கல்லாம் ஏமாந்திருக்கீங்க. அவளும் எவ்ளோ நாள்தான் நடிக்கிறது:):):)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............பீல்டு டிரிப்பா, நானெல்லாம் இந்த வார்த்தையக் கேட்டதே ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போதுதான்.

rapp said...

//
அதிலிருந்து பப்புவை காலையில் எழுப்பவும் சில சமயங்களின் கட்டிலின் மறுஓரத்தில் படுக்க அடம் பிடிக்க பப்புவை சமாளிக்கவும் “குள்ளநரி” உதவி செய்தது.//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............என்ன ஒரு வில்லத்தனம்:):):)

rapp said...

//”அதுக்குத்தான் ஓரத்துலே படுக்கக்கூடாது, அப்பா ஓரத்துலே படுத்திருந்தாங்க இல்ல, அதான் குள்ளநரி வந்து கட் பண்ணிடுச்சு”- இது நான்!
//

//”ஸ்ஸ்..ஸ்ஸ்...குள்ளநரி வந்திருக்கு பாரு!!"

..என்று குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!
//

நீங்க புக்கு படிக்க, 'ஆச்சி இங்க இல்லன்னு' பப்புவ பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஆக்க பாத்தப்பவே பப்பு உஷாராகியாச்சே:):):)

நட்புடன் ஜமால் said...

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்

பப்பு-வுக்கு சமீபத்தில் பிடித்த பாடல்

:)

ஆ.ஞானசேகரன் said...

//எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு, இன்றுக்காலை ஏழு மணிக்கு அவள் என்னை எழுப்பும் வரை -//


குள்ள நரி பப்புக்கு நண்பானாயிருச்சு

கானா பிரபா said...

பப்பு வச்ச ஆப்புன்னு தலைப்பு போடவும் ;)

பாட்டி பேரவை
சிட்னி

கோமதி அரசு said...

//குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!//


இனி குள்ளநரிக்கு பப்பு பயப்பட வேண்டியது இல்லை.

பழமைபேசி said...

அஃகஃகா....

தீஷு said...

//”ஸ்ஸ்..ஸ்ஸ்...குள்ளநரி வந்திருக்கு பாரு!!"

..என்று குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!
//

நல்ல பல்பா இருந்திருக்குமே :-)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

பப்புகிட்டயே இல்ல இல்ல பப்பு கிட்ட கூட பல்பா. ஆச்சி !!!!!!!!!!!!!!!

பைத்தியக்காரன் said...

ஆச்சி,

குழந்தைகளிடம் பல்பு வாங்குவதில் இருக்கும் சுகமும், திருப்தியுமே தனிதான் இல்லையா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்