ஒரு ஈகிள் பறந்து வந்து நம்ம வீட்டுக் கதவை தட்டுச்சாம்.
“இங்கே யாராவது சோம்பேறி இருக்காங்களா, பால் டம்ளரை கையிலே வாங்கிக் குடிக்காம யாராவது இருக்காங்களா? அவங்களுக்கு ஒரு பார்சல் வந்துருக்கு”
(பால் டம்ளரை கையிலே வாங்கிக் குடிக்காம - அப்படின்னு வர்ற இடத்துலே என்ன வேணா போட்டுப்பேன்..அந்த நேரத்துக்குத் தகுந்த மாதிரி! அதாவது எந்த வேலை செய்ய வைக்க வேண்டுமோ அதைக் கொண்டு நிரப்பி விடுவது! சாக்ஸ் யாராவது போடாம இருக்காங்களா இல்லன்னா தலை சீவாம இருக்காங்களான்னு! உடனே பப்பு அதை செய்யவாரம்பிப்பாள்.ஹ்ம்ம்..அதெல்லாம் ஒரு காலம்! பால் டம்ளரைக் கையில் வாங்கியபின், குடிக்க வைக்க வேண்டுமே...கதை தொடர்கிறது!)
“இல்லையே, டம்ளரை வாங்கி பப்புவேதான் குடிக்கும்” அப்படின்னு சொன்னதும் டி2-க்கு போச்சாம் ஈகிள்.
ஜானகி ஆன்ட்டியோட அம்மா கதவைத் திறந்தாங்களாம். ஜானகி ஆன்ட்டி இட்லி சாப்பிட மாட்டேன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்களாம்.
“இங்கே யாராவது சோம்பேறி இருக்காங்களா, இட்லி சாப்பிடமாட்டேன்னு சொல்றாங்களா, அவங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” - ஈகிள் சொல்லுச்சாம்.
உடனே ஜானகி ஆன்ட்டி கடகடன்னு இட்லி சாப்பிட ஆரம்பிச்சாங்களாம்!
உடனே ஜானகி ஆன்ட்டியோட அம்மா ”இல்லையே, இங்கே அப்படி யாரும் இல்ல, ஜானகி ஆன்ட்டி இட்லி சாப்பிட்டுட்டாங்களே”ன்னு சொன்னாங்களாம்!
அப்புறம் ஈகிள் ஈ1-க்கு போச்சாம்.
அங்கே ஆதி “நான் யூனிஃபார்ம் போட்டுக்க மாட்டேன்”ன்னு சொல்லிக்கிட்டிருந்தானாம்.
“இங்கே யாராவது சோம்பேறி இருக்காங்களா, யூனிஃபார்ம் போட்டுக்க மாட்டேன்னு சொல்றாங்களா, அவங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” - ஈகிள் சொல்லுச்சாம்.
உடனே ஆதி யூனிஃபார்ம் போட்டுக்க ஆரம்பிச்சானாம்!
உடனே ஆதியோட அம்மா, “இல்லையே, ஆதி பாருங்க யூனிஃபார்ம் போட்டுக்கிட்டுருக்கான், நீங்க சொல்ற மாதிரி யாருமே இல்லையே இங்கே” ன்னு சொன்னாங்களாம்.
ஈகிள் இப்போ ஈ2 க்கு போச்சாம். அங்கே மோனேஷ் குளிக்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டிருந்தானாம். நவீன் தூங்கிக்கிட்டே இருந்தானாம்.
“இங்கே யாராவது சோம்பேறி இருக்காங்களா, குளிக்க மாட்டேன், பெட்-லேர்ந்து எழுந்துக்க மாட்டேன்னு சொல்றாங்களா, அவங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” - ஈகிள் சொல்லுச்சாம்.
ஈகிள் சொன்னதைக்கேட்டவுடனே மோனேஷ் பாத்ரூம்க்கு ஓடறானாம். நவீன் தூக்கத்தேலேருந்து எழுந்துட்டானாம்.
அவங்க அம்மா, “இல்லையே ஈகிள், எல்லாரும் ஸ்கூலுக்கு ரெடி ஆகிட்டிருக்காங்க”ன்னு சொன்னாங்களாம்!
ஈகிள் சோகமா ஈ3 க்கு போச்சாம், சிந்து வீட்டுக்கு. பார்த்தா... சிந்து, புத்தகம் தண்ணி பாட்டிலெல்லாம் எடுத்து வைக்காம அம்மாவை எடுத்து வைங்கன்னு சொல்லிக்கிருந்துச்சாம்.
“இங்கே யாராவது சோம்பேறி இருக்காங்களா, பேகை ரெடி பண்ண மாட்டேன்னு சொல்றாங்களா, அவங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” - ஈகிள் சொல்லுச்சாம்.
உடனே சிந்து பேகை எடுத்து வைக்குதாம். தண்ணி புடிச்சு பாட்டிலை ரெடி பண்ணுதாம்.
அவங்க அம்மா, “இல்லையே, இங்கே அப்படி யாரும் இல்லையே, சிந்து பாருங்க, ஸ்கூலுக்கு ரெடி ஆகிட்டிருக்காங்க”ன்னு சொன்னாங்களாம்!
உடனே ஈகிள் , “ இங்கே சோம்பேறின்னு யாரும் இல்லையா? அவங்க வீடு எங்கே இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?”ன்னு கேட்டுச்சாம்.
சிந்து அம்மா, இந்தத் தெருல்லாம் அப்படி யாரும் இல்லே, இங்கே சுறுசுறுப்பான குழந்தைங்கதான் இருக்காங்க,”ன்னு சொன்னாங்களாம்.
ஈகிள் பார்சலை எடுத்துக்கிட்டு வேற தெருலே சோம்பேறி யாராவது இருக்காங்களானு பார்த்துக்கிட்டு இருக்காம்!
குறிப்பு: இந்தக் கதை, “பரவாயில்ல ஆச்சி, நான் சோம்பேறியாவே இருக்கேன், பார்சல எனக்குக் கொடுக்கச் சொல்லு “ அப்படின்னு சொல்ற ஸ்டேஜ் வந்துட்டா உதவாது! இரண்டரை வயதிலிருந்து இந்தக் கதையைச் சொல்லிச் சொல்லி இப்போது பப்பு அந்த ஸ்டேஜுக்கு வந்துவிட்டாள்!! அவ்வ்வ்வ்!
26 comments:
“பரவாயில்ல ஆச்சி, நான் சோம்பேறியாவே இருக்கேன், பார்சல எனக்குக் கொடுக்கச் சொல்லு “ அப்படின்னு சொல்ற ஸ்டேஜ் வந்துட்டா உதவாது! இரண்டரை வயதிலிருந்து இந்தக் கதையைச் சொல்லிச் சொல்லி இப்போது பப்பு அந்த ஸ்டேஜுக்கு வந்துவிட்டாள்!! அவ்வ்வ்வ்!\\
இதத்தான் தேடிக்கிட்டு இருந்தேன் ‘ஈ’ மாதிரி ...
:)
பப்பு எப்பவுமே ஷார்ப்!
நல்ல கதை. ஆமா அது என்ன பார்சலுங்க...
சீக்கிரமே வேற கதை தயார் பண்ணுங்க.
பார்சலில் என்ன இருந்ததுன்னு கடைசிவரை சொல்லலையே.. .. ;)ரொம்ப நல்ல கதையா இருக்கு..
பாவம் ஈகிள்.. உங்க அபார்ட்மெண்ட்ல எல்லாரும் நல்லவங்களா இருக்கீங்க..
கொயந்தைங்க லிஸ்ட்ல எங்கருந்து ஜானகி ஆண்டி வந்தாங்க? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................இதை நீங்க மாத்தவே வேணாம். பேசாம இதையே தொடர்ச்சியா சொல்லுவேன்னு சொல்லி, ஒரு ரெண்டு மணிநேரம் விடாம சொல்லி வெள்ளாடக் கூட விடாம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......... ஆக்குங்க, அப்புறம் பாருங்க. கதைன்னு நீங்க ஆரம்பிச்சாலே, எப்டி ஒவ்வொரு வேலையும் நடக்குதுன்னு:):):)
//“பரவாயில்ல ஆச்சி, நான் சோம்பேறியாவே இருக்கேன், பார்சல எனக்குக் கொடுக்கச் சொல்லு”//
:)))!
ஹை கதை நல்லா இருக்கே
ஹே அந்த பார்சல எனக்கு திருப்பி விடுங்கப்பா :)))))))))
//“பரவாயில்ல ஆச்சி, நான் சோம்பேறியாவே இருக்கேன், பார்சல எனக்குக் கொடுக்கச் சொல்லு “ அப்படின்னு சொல்ற ஸ்டேஜ் வந்துட்டா உதவாது! இரண்டரை வயதிலிருந்து இந்தக் கதையைச் சொல்லிச் சொல்லி இப்போது பப்பு அந்த ஸ்டேஜுக்கு வந்துவிட்டாள்!! அவ்வ்வ்வ்!\\
இதத்தான் தேடிக்கிட்டு இருந்தேன் ‘ஈ’ மாதிரி ...//
Repeatae :))))))
என் கிட்டயும் அந்த ஈகிள் வந்துச்சி ஆச்சி பதிவு போட்டு இருக்காங்க இங்க யாரும் அவங்களுக்கு கமென்ட் போடாம இருக்கீங்களா? அவங்களுக்கு ஒரு பார்சல் வந்து இருக்குன்னு சொன்னிச்சு! நான் கமென்ட் போட்டுட்டேன்பா!!!
அந்த பார்சல்ல அப்படி என்ன தான் இருக்கு!
நானும் சோம்பேறி தான் கொடுக்க சொல்லுங்க!
ஒரே கதையை திருப்பி எத்தனை வாட்டி சொல்லி பப்புவை கடுப்பேத்தி இருக்கீங்க..
//நானும் சோம்பேறி தான் கொடுக்க சொல்லுங்க!//
enakkum...
:)))))))))))))
சந்தனமுல்லை,
ஆச்சிக்கு,புத்தி சொல்லும்
காலம் இப்போது. எனக்கும் பார்சலில்
என்ன இருக்கு என்று பார்க்க ஆசை.
/இரண்டரை வயதிலிருந்து இந்தக் கதையைச் சொல்லிச் சொல்லி/
பப்புவை ரொம்ப படுத்தி எடுத்த ஆச்சிக்கு கண்டனங்கள்!
பப்பு பேரவை
/இரண்டரை வயதிலிருந்து இந்தக் கதையைச் சொல்லிச் சொல்லி/
பப்புவை ரொம்ப படுத்தி எடுத்த ஆச்சிக்கு கண்டனங்கள்!
பப்பு பேரவை
(சவூதி மற்றும் தோஹா சார்பாக இந்த பின்னூட்டம் )
சுவாரஸ்ய வலைப்பதிவர் விருதுக்கு வாழ்த்துக்கள்...!!!
நோ வெயிட்டிங். நீங்க ஆறுபேரை செலக்ட் செஞ்சு விருது கொடுத்தாகனும்....
நானும் பார்சல்ல என்னதான் இருக்குன்னு பார்த்திரலாம்னு நினைச்சேன். முடியாம போச்சு:-(
சூப்பர் ஸ்டோரி.... பப்புவுக்கு ஏத்தா மாதிரி அடுத்த கதையை எழுதிட்டு பதிவுல ஏத்துங்க.. வெயிட்டிங்!
//“இல்லையே, டம்ளரை வாங்கி பப்புவேதான் குடிக்கும்” அப்படின்னு சொன்னதும் டி2-க்கு போச்சாம் ஈகிள். //
சிறுவயது ஞாபகங்கள் நினைவில் வந்து விட்டது... நன்றி முல்லை
புதுக் கதையா யோசித்து சொல்லுங்க பப்புவுக்கு
ஆமா அந்த பார்சல என்ன இருக்கு ?
/
“பரவாயில்ல ஆச்சி, நான் சோம்பேறியாவே இருக்கேன், பார்சல எனக்குக் கொடுக்கச் சொல்லு “ அப்படின்னு சொல்ற ஸ்டேஜ் வந்துட்டா உதவாது!
/
haa haa
இப்ப விவரமான புள்ளைங்க பார்சலை வாங்கிக்கிட்டு இப்ப பால் குடிக்கிறேன் என்று சொல்லிட்டு எப்பூடி ஈகிளை ஏமாற்றினேன் என்று சொல்லும்:)
இப்படியெல்லாம் ஈகிள் கதை சொல்லி பப்புவை பயமுறுத்தினா நாங்க ஆச்சிய பூச்சாண்டிகிட்ட பிடிச்சு குடுத்திடுவோம்.
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.. ஆனா பார்சலுக்குள்ள என்ன இருக்குனு கேட்டா?
Post a Comment