பவர் கட்டான ஒரு இரவில், மாடியில் உணவுண்டோம், எமர்ஜென்சி விளக்கின் துணையோடு. அதோடு தெளிவான வானம். பப்புவிற்கு மிகவும் பிடித்திருந்தது போல. நிலாவை வரச்சொல்லு, நிலாவை வரச்சொல்லு என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.(மாதவராஜ் ஐயா இந்த இடுகையை முன்பே வெளியிட்டிருந்தால் அந்த ஐடியாவை ஃபாலோ செய்திருப்பேன்..!! ):-). ஒரு சார்ட் பேப்பரில் கருநீலத்தை முழுவதுமாக வண்ணம் தீட்டினாள். நட்சத்திரங்களையும், வெவ்வேறு அளவுகளில் நிலாக்களையும் வரைந்தேன். அதை வெட்டிக் கொடுக்கச் சொன்னேன். (ஒரு நட்சத்திரத்தின் ஐந்தாம் கை வெட்டுபட்டு போயிற்று!கண்டுக்காதீங்க!) ஒரு சிலவற்றை நுணுக்கமாக வெட்ட உதவி தேவைப்பட்டது. அனைத்தையும் ஒட்டினாள். ஒட்டுவது மிக விருப்பம் பப்புவிற்கு!
முடிவில் எங்கள் வானம் - இப்படிதான் இருந்தது!
கொஞ்ச நாட்களாக நாங்கள் ஒரு புத்தகம் வாசிக்கிறோம்...பெரும்பாலும் தூங்கச் செல்லுமுன்!! Good Night Moon. பழமையான புத்தகம்தான்.எளிமையானது.திண்மையான பக்கங்கள் கொண்டது.விக்கியில் வாசிக்க.. Bedtime Stories சொல்லி நாந்தான் தூங்கிப் போயிருக்கிறேன்...பலமுறைகள்...ஆனால் இந்தப்புத்தகத்தை வாசித்து 5-10 நிமிடங்களில் பப்பு உறங்கிவிடுகிறாள்! நல்ல புத்தகம்தான்!!
21 comments:
நல்ல பதிவு. :-) ரசித்தேன்.
இரவு நேர வானம் படத்தை
அழகாகச் செய்திருக்கிறாள் பப்பு.
:)
super வானம்!!!
நல்ல யோசனை. சூப்பர் வானம் :)
நன்றாக உள்ளது.
அருமையான பதிவு,பகிர்வு.
நன்றாக உள்ளது.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................திரும்பத் திரும்பச் சொன்னாலும் நீங்க எங்களாட்டம் கொயந்த மனசுக் காரங்களுக்கு காம்பிளக்சிட்டிய உண்டு பண்றீங்க, சொல்லிட்டேன்:):):)
கரண்ட் போனா, வாட் இஸ் திஸ்? ஆற்காட்டாருக்கு இப்டி ஒரு சவாலா:):):)
:))))))))))))))))
Nila illadha nila sora ;) asathals :D
முடிவில் எங்கள் வானம் - இப்படிதான் இருந்தது! //
ஒரு குட்டிக் கவிதை மாதிரி இருந்தது இந்தப் பதிவு படிக்க...
குட் பப்பு & வெரி குட் ஆச்சி
...ஆனால் இந்தப்புத்தகத்தை வாசித்து 5-10 நிமிடங்களில் பப்பு உறங்கிவிடுகிறாள்! //
எனக்கு கொஞ்சம் ஃரெபர் செய்ங்களேன் அந்த புக்கை :))))))))))))))))
புக்கு படிச்சு நீங்க தூங்கிப் போய்டுவீங்களா? சூப்பர் :)
அழகான வானம்
\\முடிவில் எங்கள் வானம் - இப்படிதான் இருந்தது///
கவிதாயினி முல்லைக்கு பாராட்டுக்கள்.. :)
// முத்துலெட்சுமி/muthuletchumi said...
\\முடிவில் எங்கள் வானம் - இப்படிதான் இருந்தது///
கவிதாயினி முல்லைக்கு பாராட்டுக்கள்.. :)//
ஆகா உசுப்பேத்தி விடுறாங்களே!!!
முல்லை,
பப்புவின் வானம் அழகு.
ரசித்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்! :-)
வசப்பட்ட வானம் அழகு.
//ஒரு நட்சத்திரத்தின் ஐந்தாம் கை வெட்டுபட்டு போயிற்று!கண்டுக்காதீங்க!//
தேடிக் கண்டு பிடித்து, கண்டுக்கலை:))!
நன்றி .. நானும் முயற்சி செய்றேன்
வானம் நல்லாயிருக்கு.. Good night moon தீஷுவிற்கும் பிடித்திருக்கிறது. ரைமிங் வார்த்தைகளுக்காக..
நட்சத்திரம் பக்கதுல வாழைப்பழம்லாம் இருக்கு :-)
Post a Comment