Monday, July 06, 2009

'மயில்' விஜிராமின் ஐடியா!

"ஒரு ஆப்பிளுக்குள்ளே எத்தனை விதைகள் இருக்குன்னு நம்மாலே எண்ண முடியும். ஆனா, ஒரு ஆப்பிள் விதைக்குள்ளே எத்தனை ஆப்பிள்கள் இருக்குன்னு நம்மாலே எண்ண முடியுமா?” - எப்போதோ படித்தது இது. ஒவ்வொரு நாளும் நமக்குள்ளே எத்தனையோ ஐடியாக்களும், நம்மை நோக்கி பல வாய்ப்புகளும் வருகின்றன. ஆனா அதையெல்லாம் நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா? நமக்குள் ஆர்வம் இருந்தாலும், நமக்கேத் தெரியாமல் உள்ளே இருக்கும் ஒரு மெத்தனத்தினால் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

எனது அத்தை, அதிகம் படித்ததில்லை. அந்தக் காலத்து பியூசி. அவர் ஊருக்குச் செல்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்குத் தேவையான யாவற்றையும் திட்டமிட்டு அவர் இல்லாவிட்டாலும் இங்கே வீட்டில் எல்லா வேலைகளும் நடக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்வார். தோட்டத்திற்கு நீருற்றுவதிலிருந்து, மாடுகளுக்கு உணவு வைப்பது, கூண்டிலிருக்கும் பறவைகளுக்கு கவனிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டிலிருப்பவர்களுக்கு இன்ஸ்டண்ட் சாப்பாடுகளும்! அவர் மட்டும் கார்ப்பரேட் பக்கம் வந்திருந்தால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்திருப்பார் என்று வியப்பதுண்டு. அவ்வளவு ஏன்?நமது எல்லோர் குடும்பங்களிலேயும் எடுத்துக் கொள்ளுங்களேன். சரியான திட்டமிடல், உரிய நேரத்திற்கு செய்து முடிக்கும் பாங்கு, எந்த காரியம் நடக்க யாரை அணுகுவது என்று அசத்தினாலும் அவர்களது குடும்பத்தைத் தாண்டி இந்தத் திறமைகள் வெளியே வருவதில்லை.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேனென்றால், 'மயில்' விஜிராம் ஒரு நல்ல ஐடியாவுடன் வந்திருக்கிறார். அம்மாக்கள் வலைப்பூவில் சொல்லியிருப்பதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்!


”பதிவுலக நண்பர்களே!!

நம் இந்த பதிவுகளின் மூலம் எத்தனையோ கருத்துகளை பரிமாறிக்கொள்கிறோம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், மறுப்பு, கோபம் எல்லாமே. வெறும் கருத்து பரிமாற்றமாக இல்லாமல் இதை ஏன் ஒரு முதலீடாக நாம் எடுத்து கொள்ள கூடாது?

என்ன சொல்ல வருகிறேன் என்று புரியவில்லையா? ஒரு சின்ன தொழிலோ பெரிய தொழிலோ துவங்குவதும் வளர்ப்பதும் வாடிக்கையாளர்கள் தான், இங்கே நாமே வாடிக்கையாளராக இருக்கலாம், நாமே முதலாளி என்றும் ஆகலாம்.

இந்த பதிவுலகில் எத்தனை பேர் இருக்கிறோம்? நமக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கும், துணிகள், பாத்திரங்கள், கல்வி பற்றிய அறிவுரைகள், வழிகாட்டுதல், பங்கு சந்தை பற்றிய விபரம், வீட்டு மனை, திருமணம், இன்னும் பல பல...

நாம் அம்மாக்களின் வலைப்பூவில் இருந்து ஒரு தொழில் அல்லது நிறுவன வலைப்போவை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். என் ஐடியா இது, உங்கள் கருத்துகளை அறிந்த பின் மட்டுமே அடுத்த கட்டம் பற்றி விவாத்திக்க வேண்டும்.

ஒரு event management கம்பெனி ஆரம்பித்தால் என்ன? அதற்கு தேவை நெறைய தொடர்புகள், புதிதாக யோசிக்கும் தன்மை, பேச்சு திறன், திட்டமிடல், குறித்த நேரத்தில் செய்து தருதல் போன்றவை. இதற்கு நாம் பெரிதாக பண முதலீட்டு தேவை இருக்காது. கம்ப்யூட்டர் மற்றும் நெறைய ஆட்கள் தொடர்பிருந்தால், அந்தந்த ஊரில் நாம் செய்யலாம்.

ஒரே பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம், அதில் யார் எந்த ஊரில் இருக்கோமோ அதை கிளைகளாக கொள்ளலாம், புதிய பொருள் அறிமுகம், சிறிய மற்றும் பெரிய நிறுவன நிகழ்ச்சிகள், கல்லூரி கலை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோ, குழந்தைகள் பிறந்த நாள் விழா, இன்னும். வேலைக்கு ஆட்கள் என்பது நெறைய மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்க்க கிடைப்பார்கள். முதல் ஒரு வருடம் நாம் லாப நோக்கு இல்லாமல் உலத்தல் கண்டிப்பாக பெரிய அளவில் வளரலாம். event management என்பது மட்டும் இல்லாமல் ஒரு HR, என்றும் கூட விரிவு படுத்த வாய்ப்புள்ளது. கண்டிப்பாக நம் வலையுலக நண்பர்கள் அனைவரும் உற்சாக படுத்துவார்கள், வாய்ப்புகளும் தருவார்கள்.

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
www. ojasvi.co.in - பார்வையிடுங்கள், அல்லது info@ojasvi.co.in , மெயில்பண்ணுங்கள், அல்லது சந்தன முல்லையின் மெயில் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.”

11 comments:

மயில் said...

thanks mullai..

நட்புடன் ஜமால் said...

நல்ல ஐடியா.

முதல்ல ஒரு குழுமம்(GOOGLE GROUPS) துவங்களாம். அல்லது வேறு எதாவது ஒரு பொது இடம் வைத்து கொண்டால்(like orkut), எளிதாக கருத்துகளை பரிமாறி கொள்ளலாம் ...

நட்புடன் ஜமால் said...

இதற்கென ஒரு பொதுவான ஐடி கிரியேட்டலாம்,

அதை technical people can handle.

anyway these are my suggestions,

this is a good start thanks to Mayil and you.

மங்களூர் சிவா said...

good idea.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பேசிப் பகிர்ந்து ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டுவிடாமல், அதையும் பயனளிக்கும் வகையில் கொண்டு செல்லும் வழிவகுக்கும் விஜியின் இந்த ஐடியா.

விக்னேஷ்வரி said...

I don't get your concept Mayil and Mullai. You mean to say that we could start Event Management? But the link you have mentioned here is about apparels and textiles, right?
It is really good and motivating idea. But would be better if u can explain in better words. Sorry for the trouble if any.

மயில் said...

விக்னேஷ்வரி, அந்த இணைப்பு இ.மெயில் முகவரிக்காக தரப்பட்டது. மேலும் ஒரு நிறுவனம் ஏற்கனவே இருப்பதால், இதையும் நம்மால் நடத்த முடியும் என்பதற்கு ஒரு சிறிய அறிமுகம். நன்றி.

ஆயில்யன் said...

நல்லா இருக்கே !!!

நிறைய நிறைய பேர் பல்வேறு திறமைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டு தமிழ் பதிவுகளால் ஒன்றிணைந்திருக்கும் பதிவுலகில் இது போன்ற முயற்சிகளே முதலில் பாராட்டுகளுக்குரியவையாகின்றன!

மேலும் பலரின் கருத்துக்களோடு பயணிக்க வாழ்த்துக்கிறேன்! :))

நசரேயன் said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

rapp said...

super:):):) வாழ்த்துக்கள்:):):)

வல்லிசிம்ஹன் said...

நல்ல யோசனை கொடுத்திருக்கிறார்கள் மயில். செயல் படுத்தினால் நல்லதொரு பலன் கிடைக்கும்.
முன்னேற வாழ்த்துகள்.