Thursday, July 09, 2009

வாசகர் எனக்கும் கடிதம் எழுதிட்டாரே!!

இப்போ வாசகர் கடிதம் போடறதுதானே ட்ரெண்ட். வாசகர், கடிதம் போடலைன்னா என்ன, வாசகர்-கிட்டே கேட்டுடவேண்டியதுதான்னு...அமித்து அம்மாகிட்டே கேட்டேன்! பார்த்த பார்வையே சரியில்லை! அப்புறம் ராப்..எல்லோரும் முறைச்ச முறைப்பிலே..
சரி...இருக்கவே இருக்காரு முகில்! நடுவுலே ஆயாவும், பப்புவும் கூட எழுதியிருக்காங்களாம்!! ஓவர் டூ முகில்!


ஆச்சி,

உண்மையில் இதை ஒரு பதிவா எழுதத்தான் திட்டமி்ட்டு இருந்தேன்! "பிரபல பதிவரின்" கணவராயிருப்பதின் சங்கடங்கள்னு! நீயே கேட்டுட்டதாலே ஒரு கடிதமா எழுதிடறேன்! ஆச்சி, தயவுசெய்து பிளாக் எழுதறதை நிறுத்திடு..என்னாலே சாப்பிட முடியலை...காபி குடிக்க
முடியலை..பின்னே நான் சமைச்ச சாப்பாட்டை எவ்வளவு நாள்தான் சாப்பிடறது! நம்ம சமையலறை பக்கம் நீ வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு கொஞ்சம் நினைச்சு பாரு? நீ செஞ்ச ஒரே டிஷ் தயிர்.அதைக்கூட விட்டுவைக்காம நீ பிலாகிலே போட்டுகிட்டே! அவ்வ்வ்!

எங்களாலே இதுக்கும் மேலேயும் கொடுமையை தாங்க முடியாது! நீ எழுதறதை படிச்சியா படிச்சியான்னு கேக்கறே, படிச்சேன்னு சொன்னாலும் நம்பாம பிரிண்ட் அவுட் எடுத்து
உன் முன்னாலே படிக்கச் சொல்றே! அதைக்கூட தாங்கிக்கலாம். ஆனா இன்னொரு கொடுமை இருக்கே!உன் போஸ்ட்-க்கு நீ ஓட்டு போட்டுக்காலாம்! ஆன்னா என்னோட யாஹூ ஐடிலேருந்தும் போடனும்னு அடம் பிடிக்கிறியே..உனக்கே மனசாட்சி இல்லையா? அப்படி ஓட்டு போட்டது இப்போ ஒரு லெட்டர் எழுதறதுலே வந்து நிக்குது! அன்னைக்கு அப்படித்தான் நடுராத்திரியிலே எழுந்து லாப்டாப்போட உட்கார்ந்து இருக்கே! கேட்டா பிரபல பதிவருக்கு கணவரா இருக்கறது ஒன்னும் சாதரணமான விஷயம் இல்லேங்கறே! ஹ்ம்ம்!அப்புறம் நேரிலே பேசும் போது கூட "அவ்வ்வ்வ்" ன்னு சில சமயம் ஊளையிடறியே..கமெண்ட்-லே போடலாம்..அதுக்காக நேரிலயுமா?! அவ்வ்வ்வ்! ஏதாவது சொன்னா பிரபல பதிவரோட கணவரா இருக்க கத்துக்கோன்னு சொல்றே!

இரு, ஆயாவும் ஏதோ சொல்லணுமாம்..." ஆனந்த விகடனே எங்க பிலாக்கர் -சோடதுதான்....இனிமே வாங்க வேண்டாம்னு நிறுத்திட்டு, கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க, பிலாக்லே போட்டதும் பிரின்ட் அவுட் எடுத்து தர்றேன்னு ரெண்டு வாரம் கழித்து கதைகளை எடுத்துக்கிட்டு வந்துத் தர்றே...ஏதோ ஒரு சில சமயங்களில், ஆவியை நான் திட்டியிருக்கேந்தான்..அதுக்காக,60 வருஷமா படிச்சுக்கிட்டு இருக்கேனே...இப்படி திடீர்ன்னு நிறுத்தினா!இது உனக்கே நல்லாருக்கா?!!"

சரி, ஆயாவைத்தான் இப்படி பண்றேன்னு பார்த்த சின்ன குழந்தை பப்பு..அதுக்கூட நீ விளையாடணும்னு இந்த் ஆக்டிவிடிலலாம் செய்றியா இல்ல ப்லாக்லே போடணும்கிறதுக்காக செய்றியா..எனக்கு ஒன்னும் புரியலை....இதோ பப்புவே சொல்றா..."ஆச்சி, தயவு செஞ்சு ப்லக் எழுதறதை நிறுத்திடு..நீ எழுதறதுக்காக என்னை விளையாட விடாம, அதைச் செய், இதைச் செய்-னு என்னை எவ்ளோ படுத்தறேன்னு எனக்குத்தான் தெரியும். அதுக்குமேலே பப்புவுக்கு கடிதங்கள்-னு எனக்கு லெட்டர்ல்லாம் வேறே எழுதறியாமே..உனக்கு என்ன குச் குச் ஹோதா ஹே ராணி முகர்ஜின்னு நினைப்பா?! இதுலே 12 கேள்விகள்-ன்னு வேறே படுத்தினே!
இதுக்கு மேலேயும் நீ திருந்தப் போறியா இல்லையா?!!"

பப்பு விளையாட போய்டுச்சு. நாந்தான் எழுதறேன் இப்போ! போஸ்டை போட வேண்டியது.. கமெண்ட் வருதா வருதான்னு நொடிக்கொரு தடவை பார்க்கவேண்டியது..வரலைன்னா
நான் எனக்காகத்தானே எழுதறேன்னு சொல்லிக்க வேண்டியது....கமெண்ட்ஸ் வந்துச்சுன்னா உடனே "பிரபல பதிவர்"ன்னு சொல்லிக்கவேண்டியது! யாரை ஏமாத்தறே நீ!!

இந்த லெட்டரைக்கூட நீ பிலாக்கிலே போட்டுப்பேன்னு எனக்குத் தெரியும், கொஞ்சம்கூட சங்கோஜப்படாம! எப்போதான் திருந்தப் போறியோ?!! பிலாக்கரை இனிமே காசு கொடுத்துதான் உபயோகிக்கணும்னு சொல்லிட்டா அப்போத் தெரியும் உன் நிலைமை....:-))

வாசகராக மாற்றப்பட்ட
உன் கணவன்
முகில்!

76 comments:

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............வாத இஸ் திஸ், இந்தக் கடிதம் பற்பல குமுறல்களை நைசாக கொறைச்சு பப்ளிஷ் செய்யப்பட்டுள்ளதுன்னு சில விசாரணைக் கமிஷன் தகவல்கள் தெரிவிக்கின்றன:):):)

rapp said...

//பின்னே நான் சமைச்ச சாப்பாட்டை எவ்வளவு நாள்தான் சாப்பிடறது! நம்ம சமையலறை பக்கம் நீ வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு கொஞ்சம் நினைச்சு பாரு?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... இப்டி வாசகர் கடிதம் போடுறதே சுயபுராணம் பாடத்தான் அப்டிங்கற கான்செப்டெல்லாம் ஓகே, ஆனா உங்க சமையல இப்டி நீங்களே கன்னாபின்னாவென பாராட்டறத்துக்காக, நீங்க சமைச்ச சாப்பாட்டை கைல வெச்சுக்கிட்டு, சாப்ட வெச்சிடுவேன்னு மிரட்டி, முகிலை இப்டி எழுத வெக்கறீங்களே இது நியாயமா? டூ மச்சி, திரி மச்சி:):):)

rapp said...

//எங்களாலே இதுக்கும் மேலேயும் கொடுமையை தாங்க முடியாது! நீ எழுதறதை படிச்சியா படிச்சியான்னு கேக்கறே, படிச்சேன்னு சொன்னாலும் நம்பாம பிரிண்ட் அவுட் எடுத்து
உன் முன்னாலே படிக்கச் சொல்றே! //

முகில் இது ஒரு தவறான ஆட்டிட்யூட் என்பதை மட்டும் இங்கு எடுத்தியம்பக் கடமைப்பட்டுள்ளேன். இப்போ என் கணவரையே எடுத்துக்குங்க, அவருக்கு தமிழ் எழுதப்படிக்கக் கூடத் தெரியாது, ஆனாலும் தினமும் விடாம, நான் புதுசா எதையும் எழுதலைன்னாக் கூட பழசையாவது படிக்க வெக்குறேன். இதுக்காக அவரு வாயத் தொறந்திருக்காரா(ரெடியா நான் சமைச்சு வெச்சு, வாய்ல போட்டிருவேன்னு பயத்தால வாய மூடிக்கிட்டு இருக்காருன்னு நீங்க நெனச்சா அது உங்க அறியாமை என்பதை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்)

rapp said...

//அன்னைக்கு அப்படித்தான் நடுராத்திரியிலே எழுந்து லாப்டாப்போட உட்கார்ந்து இருக்கே! கேட்டா பிரபல பதிவருக்கு கணவரா இருக்கறது ஒன்னும் சாதரணமான விஷயம் இல்லேங்கறே! ஹ்ம்ம்!
//

இங்கதான் நீங்க முள்ளயோட மென்மையான மனசை புரிஞ்சிக்கணும். அப்டி நடுராத்திரி எழுந்து உக்காந்தவங்க, தெம்புக்கு உங்கள காபி கலந்து எடுத்துவர எழுப்பவில்லையே...........(திரிசூலம் கே.ஆர்.விஜயா வாய்சில் கஷ்டப்பட்டு படிச்சிக்கவும்). அந்த நல்ல மனச நெனச்சு நீங்க குதூகலிக்கனும்:):):)

rapp said...

//அப்புறம் நேரிலே பேசும் போது கூட "அவ்வ்வ்வ்" ன்னு சில சமயம் ஊளையிடறியே..//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................

he he, itz all in the game cat on the wall:):):)

//உனக்கு என்ன குச் குச் ஹோதா ஹே ராணி முகர்ஜின்னு நினைப்பா?!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............ஹே அது:):):)

கோபிநாத் said...

அய்யோ...யாராச்சும் வாங்கப்பா...என்னால தனியாக உட்கார்ந்து சிரிக்க முடியல ;))))))))))))))


அட்டகாசமான பதிவு ;))

நீங்க பதிவு போடுறதை விட முகில் சாரை போட சொல்லுங்க...செம காமெடி ;))

கோபிநாத் said...

\\அப்புறம் நேரிலே பேசும் போது கூட "அவ்வ்வ்வ்" ன்னு சில சமயம் ஊளையிடறியே\\

நீங்க செய்யுறமாதிரி கற்பனை செய்து பார்த்த ஒரே சிரிப்பு சிரிப்பாக வருது....;))))))))))))))

பாவம் முகில் சார் நிலைமை ;)))

ராமலக்ஷ்மி said...

முகிலின் புகார்..

:))))))))))))))!

ஆயாவின் புகார்..

:))))))))))))))))))))))!

பப்புவின் புகார்..

:))))))))))))))))))))))))))))))))))!

எங்கள் வேண்டுகோள்..

இதற்கெல்லாம் பயந்து எழுதுவதை நிறுத்திடாதீங்க ஆச்சி!

[பி.கு: அப்பாடி, ஆயில்யன் ஊருக்குப் போய் விட்டதால் அவர் பாணியில் நானும் முயற்சிக்க முடிந்தது:)!]

சென்ஷி said...

ம்ஹூம். உங்க குடும்ப விசயத்துல ஏதும் கருத்து சொல்ல முடியாது. சீக்கிரம் முகில் சாரையும் ப்ளாக் ஆரம்பிக்க சொல்லிடுங்க! :)

rapp said...

//போஸ்டை போட வேண்டியது.. கமெண்ட் வருதா வருதான்னு நொடிக்கொரு தடவை பார்க்கவேண்டியது..வரலைன்னா
நான் எனக்காகத்தானே எழுதறேன்னு சொல்லிக்க வேண்டியது....கமெண்ட்ஸ் வந்துச்சுன்னா உடனே "பிரபல பதிவர்"ன்னு சொல்லிக்கவேண்டியது! யாரை ஏமாத்தறே நீ!!
//

சிங் இன் தி ராயின், ஐ அம் சிங்கிங் இன் தி ரெயின் :):):)

மாதவராஜ் said...

பிரபலபதிவரின் கணவர் முகிலுக்கு என் வாழ்த்துக்களும், அனுதாபங்களும்.(வாழ்க்கைனா இன்பம், துன்பம் சேர்ந்ததுதானே)
ரசித்தேன்.

நட்புடன் ஜமால் said...

இந்த லெட்டரைக்கூட நீ பிலாக்கிலே போட்டுப்பேன்னு எனக்குத் தெரியும், கொஞ்சம்கூட சங்கோஜப்படாம! எப்போதான் திருந்தப் போறியோ?!! பிலாக்கரை இனிமே காசு கொடுத்துதான் உபயோகிக்கணும்னு சொல்லிட்டா அப்போத் தெரியும் உன் நிலைமை....:-))

வாசகராக மாற்றப்பட்ட
உன் கணவன்
முகில்!\\\

ஹா ஹா ஹாபாவம்ங்க அவரு ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீ செஞ்ச ஒரே டிஷ் தயிர்.அதைக்கூட விட்டுவைக்காம நீ பிலாகிலே போட்டுகிட்டே! அவ்வ்வ்!

ஆச்சி நீங்க செம க்ரேட், உங்களுக்கு தயிர் எப்படி செய்யுறதுன்னு கூட தெரிஞ்சிருக்கு பாருங்க :)-

அப்புறம் ஆச்சி தயிரை 2006 ல செஞ்சிருக்கீங்க, ரொம்ப புளிச்சிடுச்சி :)-


அன்னைக்கு அப்படித்தான் நடுராத்திரியிலே எழுந்து லாப்டாப்போட உட்கார்ந்து இருக்கே! கேட்டா பிரபல பதிவருக்கு கணவரா இருக்கறது ஒன்னும் சாதரணமான விஷயம் இல்லேங்கறே //

ஹைய்யோ பாவமே, ப்லாகோஃபோபியா வாஆஆஆஆஆஆஆ

நீ எழுதறதுக்காக என்னை விளையாட விடாம, அதைச் செய், இதைச் செய்-னு என்னை எவ்ளோ படுத்தறேன்னு எனக்குத்தான் தெரியும் //

அப்பூடியாஆஆஆஆஆஅ
ரொம்ப நல்லவங்க ன்னு நம்பி.......... பாஃலோ செஞ்சா
ம்
இப்படி ரகசியத்த உடைச்ச பப்புவுக்கு
ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துடுங்க என் சார்பில

பிலாக்கரை இனிமே காசு கொடுத்துதான் உபயோகிக்கணும்னு சொல்லிட்டா அப்போத் தெரியும் உன் நிலைமை....:-))

அய்யோ அப்ப எங்க நிலைமையெல்லாம் என்ன ஆவுறது, பாருங்க இப்ப கூட ஒரு கவுஜ எழுதி போஸ்ட் பண்ணிட்டு வந்திருக்கேன்.
தயவு செய்து இதையெல்லாம் யாரும் நோட் பண்ணிறாதீங்கப்பா

Anonymous said...

:)))


:)))))
மின்னுது மின்னல் !

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்புறம் நேரிலே பேசும் போது கூட "அவ்வ்வ்வ்" ன்னு சில சமயம் ஊளையிடறியே..கமெண்ட்-லே போடலாம்..அதுக்காக நேரிலயுமா?! அவ்வ்வ்வ்! ஏதாவது சொன்னா பிரபல பதிவரோட கணவரா இருக்க கத்துக்கோன்னு சொல்றே!

ஹைய்யோ சாமீ, எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு பெரிய் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மயில் said...

சிரிச்சுட்டே இருக்கேன்...

☼ வெயிலான் said...

அவ்வ்வ்வ்!

அருமையாயிருக்கு ஆச்சி!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹைய்யோ டைம் பார்த்து ஆயில்ஸ் எஸ்கேப் ஆகிட்டாரே.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கோபிநாத் said...


நீங்க பதிவு போடுறதை விட முகில் சாரை போட சொல்லுங்க...செம காமெடி ;))

ஆச்சி, முதலுக்கே மோசமாகிடும் போல, போங்க.

ஜீவன் said...

நல்ல வேளை! காப்பாத்திடீங்க! நன்றி!

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்....இதுவரை வந்த கடிதத்திலேயே இது தான் சூப்பர்ர்ர்ர்ர்ர்

செந்தழல் ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

60 வருசமா இல்ல இருவது வருசமா ? முகிலு அம்புட்டு வயசாளியா...

:))))

Deepa said...

அசத்தல்!

:-)))))

சிரிச்சு சிரிச்சு.. முடியல முல்லை!

//rapp said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............வாத இஸ் திஸ், இந்தக் கடிதம் பற்பல குமுறல்களை நைசாக கொறைச்சு பப்ளிஷ் செய்யப்பட்டுள்ளதுன்னு சில விசாரணைக் கமிஷன் தகவல்கள் தெரிவிக்கின்றன:):):)
//

வழிமொழிகிறேன்! :)

நிஜமா நல்லவன் said...

:))))))))))))))))))))))

"அகநாழிகை" said...

:-))))

பாசகி said...

அவ்வ்வ்வ்....

கைப்புள்ள said...

//சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்....இதுவரை வந்த கடிதத்திலேயே இது தான் சூப்பர்ர்ர்ர்ர்ர்//

ரிப்பீட்டேய் :)

கைப்புள்ள said...

என்னிக்கோ ஒரு வேளை கெடைச்ச தயிருக்கும் ஆப்பு வச்சிக்கத் தயங்காத அந்த வாசகரின் வீரத்தைக் கண்டு பிரமித்து விக்கித்து வாயடைத்து நிற்கிறேன்.

Joe said...

உண்மையிலேயே உங்க கணவர் ரொம்ப நல்லவரு. ;-)

Anonymous said...

பெண்ணடிமைத்தனம் பற்றி பேசுகிற மக்கா..இங்கே பாருங்க ஒரு அபலை ஆணின் துயரத்தை!கணவனாய் வாக்கப்பட்டதேலே என்னன்ன கொடுமைகள் ஒரு அப்பாவிக்கி...
முகிலுக்கு அனது ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!

அனுதாபத்துடன்,
மொண்டி சப்பாணி..

தீஷு said...

சிரிச்சி சிரிச்சி முடியல முல்லை..

//அப்புறம் நேரிலே பேசும் போது கூட "அவ்வ்வ்வ்" ன்னு சில சமயம் ஊளையிடறியே..கமெண்ட்-லே போடலாம்..அதுக்காக நேரிலயுமா?!//

மிகவும் ரசித்தது..

தமிழ் பிரியன் said...

கலக்குறீங்க ஆச்சி.. முகிலின் குமுறல்களை எல்லாம் பாசிட்டிவா எடுத்துக்குங்க.. ;-))
இன்னும் இது போல் நிறைய பதிவு எழுதி கொடுமைப்படுத்த வாழ்த்துக்கள்! :)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

excellent...innum sirichutu irukken :) :) :)

கானா பிரபா said...

பெண்ணடிமைத்தனம் பற்றி பேசுகிற மக்கா..இங்கே பாருங்க ஒரு அபலை ஆணின் துயரத்தை!கணவனாய் வாக்கப்பட்டதேலே என்னன்ன கொடுமைகள் ஒரு அப்பாவிக்கி...
முகிலுக்கு அனது ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!//

றிப்பீட்டேஏஏஏ

கானா பிரபா said...

முகில் அண்ணன் நிலமையை நினைச்சு மனம் வெதும்பி ஆபீஸில் ஒழுங்கா தூங்க முடியாம ஒரே அழுகாச்சியாயிட்டு. ஆச்சி முகில் அண்ணனின் வேண்டுகோளை பரிசீலனை செய்யவும்

கானா பிரபா said...

பாட்டியின் மனக்குமுறலையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்

பாட்டி பேரவை

மணிநரேன் said...

மிகவும் நகைச்சுவையாக உள்ளது.
ரசித்தேன்...

(வீட்டு மக்கள் எல்லாம் பாவம்தான் போல!!!)

ஆயில்யன் said...

me the ullen ayya

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
முகில் அண்ணன் நிலமையை நினைச்சு மனம் வெதும்பி ஆபீஸில் ஒழுங்கா தூங்க முடியாம ஒரே அழுகாச்சியாயிட்டு. ஆச்சி முகில் அண்ணனின் வேண்டுகோளை பரிசீலனை செய்யவும்
//

boss Mr.Mugil nilamaiye ippudinaa pappu nilamaiya konjam ninaichi parunga boss sollavum kuda theriyatheeeeeeeeeeeeeeeeeeeee

perum sogathudan
PAPPU PERAVAI
HEAD OFFICE

ஆகாய நதி said...

oh my god!!! Its very very funny mullai!

:)))

அன்புடன் அருணா said...

முகில் அவர்களுக்கு ஒரு ஐடியா...ஒரு ப்லாக் ஆரம்பித்து முல்லையைப் படுத்துங்களேன்!

ராமலக்ஷ்மி said...

//PAPPU PERAVAI
HEAD OFFICE/

ஆயில்யன், உடனுக்குடன் தகவல் தர எல்லா ஊரிலும் ப்ராஞ்ச் வைத்துள்ளீர்கள் போலிருக்கிறதே:))))!

பதி said...

:))))))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவ்வ்வ் !

( நான் ப்ரபல பதிவரின் தோழியாக்கும் - ப்ளீஸ் முல்லை ஒத்துக்குங்க ..ஒத்துக்குங்க)

Mrs.Menagasathia said...

இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்..

கவிதா | Kavitha said...

பிரபல வலைபதிவர் முல்ஸ் கணவர் முகில் வாழ்க.!!

அவரின் தவபுதல்வி பப்பு வாழ்க வாழ்க !!

அவரின் அன்புமிக்க ஆயா வாழ்க வாழ்க வாழ்க..!!

இப்படிக்கு

முகில் , பப்பு, ஆயா வாசகர் சங்கம்
மடிப்பாக்கம் கூட்டு ரோடு
மடிப்பாக்கம்

நசரேயன் said...

வீட்டுக்கு வீடு வாசப்படி.. முகில் பதிவு எழுத வேண்டுமென பதிவராக முயற்சி செய்து கொண்டு இருக்கும் மொக்கை வாசகனின் வேண்டுகோள்.. கடைசியா ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.அப்புறமா யோசித்து சொல்லுறேன்

ச.பிரேம்குமார் said...

ஆகா, இது என்ன சொந்த செலவுல சூனியமா? முல்லை, பேசாம முகிலையும் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுட சொல்லுங்க ;-) சிக்கலே இல்லை...ஆவ்வ்வ்வ்வ்

குடுகுடுப்பை said...

முகில் நல்லா நகைச்சுவையா உண்மைய அள்ளித்தெளிச்சிட்டார்.

(தமிழ்மணம் ஓட்டு இருக்கே அது பெரிய காமெடி)
எனக்கு நான் 2 ஓட்டு,நசரேயன் 2, நீங்க 1, அது சரி 1) இதுக்கு பேரு வாசகர் பரிந்துரை.

குடுகுடுப்பை said...

ன்னா என்னோட யாஹூ ஐடிலேருந்தும் போடனும்னு அடம் பிடிக்கிறியே..//

என்னது முகிலோட பாஸ்வோடு தெரியாதா உங்களுக்கு. இது புதுசா இருக்கே.

கோபிநாத் said...

49 :))))

கோபிநாத் said...

50 ;))

எம்புட்டு நாள் ஆச்சு இந்த மாதிரி 50 போட்டு ;)))

ஐய்ய்ய் ஜாலி ;))

gulf-tamilan said...

:)))

அமுதா said...

:-)))))))))))))))))))))))))

நாணல் said...

:)))

மங்களூர் சிவா said...

வரிக்கு வரி ரசித்து சிரித்தேன்.
:))))

மங்களூர் சிவா said...

/
பிலாக்கரை இனிமே காசு கொடுத்துதான் உபயோகிக்கணும்னு சொல்லிட்டா அப்போத் தெரியும் உன் நிலைமை....:-))
/

பலபேரின் நிலைமை அப்பதான் தெரியும்
:))))))))))))

jothi said...

வேண்டாம் ஆச்சி. ஒரு ஆணின் பாவம் புண்ணானது.ச்சீ பொல்லாதது,..

G3 said...

:)))))))))))))

Pesaama vaasagara maathina mugila seekiramae pathivara maathidunga.. idhu maadiri oru 4 pathivu potta podhum.. appuram prabala pathivarin kanavarngara pattam avaridamirundhu parikkapattu prabala pathivarin manaivinu ungalukku pattam kuduthuduvom :D

G3 said...

//rapp said...

அப்டி நடுராத்திரி எழுந்து உக்காந்தவங்க, தெம்புக்கு உங்கள காபி கலந்து எடுத்துவர எழுப்பவில்லையே...........//

Enna oru villathanam !!!

G3 said...

//ஆயில்யன் said...

//கானா பிரபா said...
முகில் அண்ணன் நிலமையை நினைச்சு மனம் வெதும்பி ஆபீஸில் ஒழுங்கா தூங்க முடியாம ஒரே அழுகாச்சியாயிட்டு. ஆச்சி முகில் அண்ணனின் வேண்டுகோளை பரிசீலனை செய்யவும்
//

boss Mr.Mugil nilamaiye ippudinaa pappu nilamaiya konjam ninaichi parunga boss sollavum kuda theriyatheeeeeeeeeeeeeeeeeeeee

perum sogathudan
PAPPU PERAVAI
HEAD OFFICE//

Repeatae..

Adhae sogathudan,
Pappu peravai,
Chennai kilai :)

ஜோ/Joe said...

:)))))))))))))))))))))))))))))

Thiru said...

லெட்டர் சூபரு. எப்ப முகில் ப்ளாக் ஆரம்பிக்க போறாரு? ரோல்ஸ் மாத்தி பாருங்களேன்

//இதுக்கு மேலேயும் நீ திருந்தப் போறியா இல்லையா//
நெம்ப ஞாயமான கேள்விங்கோவ்!!

Thiru said...

ஆச்சி, நீங்க நெறைய எடிட் பண்ணிட்டிங்களா ?

"கத்தி முனையில் மிரட்டப்பட்டு" வாசகராக மாற்றப்பட்ட
உன் கணவன் - ன்னுதானே முகில் எழுதனதா சொன்னாரு.

" உழவன் " " Uzhavan " said...

அட எல்லாமே கரெக்ட்தான்.. கலக்கல்:-)

வால்பையன் said...

//கமெண்ட் வருதா வருதான்னு நொடிக்கொரு தடவை பார்க்கவேண்டியது..வரலைன்னா
நான் எனக்காகத்தானே எழுதறேன்னு சொல்லிக்க வேண்டியது....கமெண்ட்ஸ் வந்துச்சுன்னா உடனே "பிரபல பதிவர்"ன்னு சொல்லிக்கவேண்டியது! யாரை ஏமாத்தறே நீ!!//

எல்லாமே செம காமெடி!
முக்கியமா இந்த பஞ்ச்!

கலக்குங்க!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆஹா..

இந்தக் கூத்தை இன்னிக்குத்தான பார்த்தேன்..!

முகில் ஸாரின் வேதனையில் பங்கெடுத்துக் கொள்கிறேன்..

பாவம்.. என்ன செய்றது..? வாங்கி வந்த வரம் அப்படின்னு நினைச்சு மனசைத் தேத்திக்குங்க ஸார்..!

நேசமித்ரன் said...

சிரிச்சு சிரிச்சு
நல்ல பதிவுங்க...

நாஞ்சில் நாதம் said...

அவ்வ்வ்வ்!

Suresh said...

//கமெண்ட் வருதா வருதான்னு நொடிக்கொரு தடவை பார்க்கவேண்டியது..வரலைன்னா
நான் எனக்காகத்தானே எழுதறேன்னு சொல்லிக்க வேண்டியது....கமெண்ட்ஸ் வந்துச்சுன்னா உடனே "பிரபல பதிவர்"ன்னு சொல்லிக்கவேண்டியது! யாரை ஏமாத்தறே நீ!!//

ஹா ஹா ஹா :)

Suresh said...

//பின்னே நான் சமைச்ச சாப்பாட்டை எவ்வளவு நாள்தான் சாப்பிடறது! நம்ம சமையலறை பக்கம் நீ வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு கொஞ்சம் நினைச்சு பாரு?//

ஹீ ஹீ

Rithu`s Dad said...

இப்ப தான் நிறைய எழுத ஆரம்பிச்சிருக்காங்க.. இதுக்கே இப்படியா முகில்.. இன்னும் நிறையா எதிர்பார்க்கிறோம் “சித்திரக்கூடத்தில்”.. !!

முல்லை எல்லாம் சரி.. இதுக்கும் ஓட்டு போடனுமா???

சின்ன அம்மிணி said...

எங்க வீட்டு ரங்கமணி சொல்லற மாதிரியே இருக்கு. சூப்பர்

சினேகிதி said...

ஐயோ சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. அதும் இரவு 12 மணிக்கு மெல்லமா சிரிக்க வேண்டியிருக்கு ...ஆனால் இந்தப்பதிவு சூப்பர் stress reliever :)

பப்புட லெற்றர் மிஸ்ஸிங்...பப்புவும் எழுதியிருந்தால் இன்னும் கலக்கலா இருக்கும்.

அம்மா நீ என்னைப்போட்டு படுத்தின பாடெல்லாம் போதும். நீ பளாக்ல போறதுக்காக என்னப் படம் பிடிச்சு பிடிச்சு இப்பல்லாம் நீ எப்ப எனக்குத்தெரியாம படம் பிடிப்பியோ என்டு பார்க்கிறதே எனக்கு வேலையாப்போச்சு.

நீ சின்னன்ல என்னெல்லாம் செய்யணும் என்டு நினைச்சியோ அதெல்லாத்தையும் என்னை ஆக்கினப்பண்ணி பாட வைச்சு ஆட வைச்சு ஹையோ ஹையோ.

சந்தனமுல்லை said...

ரசித்து சிரித்த அனைவருக்கும் நன்றிகள்!

S.A. நவாஸுதீன் said...

தல ஜீவனுக்கு நன்றி, ஒரு அருமையான பதிவினை அறிமுகப்படுத்தையதற்கு.

இன்னும் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்