Thursday, November 23, 2006

தயிர் செய்வது எப்படி...

தயிர் செய்வது எப்படி...
பால் வாங்கி (தேவைக்கு ஏற்றபடி) காய்ச்சி கொள்ளவும். அதை பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.உறை மோர் ஒரு டம்ளரில் அல்லது சிறு கிண்ணத்தில் பக்கத்து வீட்டில் சென்று வாங்கவும். (சில வீடுகளில் சாயங்காலம் 6 மணிக்கு மேல்/செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரமாட்டார்கள். )உறை மோரை பாலோடு சேர்த்து ஊற்றவும். 6 அல்லது 8 மணி நேரம் சென்றபின் பால் தயிராகிருக்க காண்பீர்கள்!!
தயிரின் குணாதிசயங்கள் :
1. சாதத்தோடு பிசைந்து உணணலாம்.
2. வடையை ஊற வைக்கலாம்.
3. சர்க்கரை கலந்து தயிரை அப்படியே உணணலாம். (ப்ரீட்சை எழுத போகும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது..!!)


பி.கு : சும்மா ஜோதியில ஐக்கியமாகலமேன்னுதான்....நானும் ஒரு பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே.!!

5 comments:

சந்தோஷ் aka Santhosh said...

ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.

Sivabalan said...

வாங்க.. ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிங்க.... வந்தவுடன் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டீங்க... நல்லது

துளசி கோபால் said...

வருக வருக.

கூட்டத்தில் சேர்ந்ததுக்கு நன்றி:-))))

ஆனா தயிரோட செய்முறை இங்கே இன்னும் கொஞ்சம் இருக்கு.
அவெனில் 45 C டிகிரி வச்சுட்டு, உறையூத்தின பாலை அதுக்குள்ளே வச்சு
ஒரு 6 மணி நேரம் ஆச்சுன்னாத்தான் 'தயிர்':-))

பொன்ஸ்~~Poorna said...

தமிழ்மணம் பிரச்சனையா? பீட்டாவுக்கு மாறியதில்? நீங்க தான் எனக்குப் பின்னூட்டம் போட்டீங்களா?

சுந்தரி said...

இந்த செய்முறை பனிக்காலங்களுக்கு சரியா வராது.குளிர் பிரதேசங்களில்வாழ்வோர் என்ன செய்யலாம் எண்டா "அவிண்"ஐ சிறிது நேரம் சூடாக்கி பின் நிப்பாட்டிவிட வேணும் சில நிமிடங'களின்பின் ஒரு சிலிவர் பாத்திரத்தில் உறையுடன் பாலைச்சேர்த்து அவிணில் இரவில் வைத்தால் விடிய தயிர் வந்திடும். வெளிநாடுகளில் வாழ்வோர் உறைக்கு என்ன செய்யலாம் எண்டா "பட்டர்மில்க்" கொஞ்சம் காச்சி ஆறிய பாலில் சேர்க்கலாம்.