Monday, July 20, 2009

கலர்...கலர்..விச் கலர் டூ யூ வாண்ட்?!

எனக்கு அப்போ அஞ்சு வயசாயிக்கும், ஒரு உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.அவர் பேரு அண்ணாதுரை. அப்போ அவருக்கு 24-25 இருக்கலாம். 'இவரை நீ சித்தப்பான்னு கூப்பிடணும்” அப்படின்னு சொன்னாங்க, ஆயா. நான் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இல்லாம, ”அப்போ சித்தி எங்கே” ன்னு கேட்டுட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. அந்த சித்தப்பாவுக்கும் செம குஷி. ”சின்னபொண்ணுக்கு கூட தெரியுது, உங்களுக்கு புரியமாட்டேங்குதே”ன்னு சொன்னார். அவருக்கு ஒரு ப்ரெண்ட். ஞானசேகரன். ரெண்டு பேரும் எப்போவும் ஒண்ணாதான் இருப்பாங்க...ஞானசேகரன் சித்தப்பா இல்லாம அண்ணாதுரை சித்தப்பா வீட்டுக்கு வர மாட்டார். எனக்கு அண்ணாதுரை சித்தப்பான்னா ஞானசேகரன் சித்தப்பாவும் ஞாபகத்துக்கு வர அளவுக்கு! அப்போ அவங்க ரொம்ப தீவிரமா நிரந்தர/அரசு வேலைக்கு முயற்சி செஞ்சுக்கிட்டிருந்தாங்க. உற்சாகமான இளைஞர்கள்! இப்போ அண்ணாதுரை சித்தப்பா வெளிநாட்டுலே இருக்கார். ஞானசேகரன் சித்தப்பா நெய்வேலில இருக்கார்.


சண்முகண்ணா, பாபுண்ணா. இருவரையும் தனித்தனியாக பார்த்ததேயில்லை..மிகையாகக் கூடத் தோன்றலாம். ஆனா நிஜம். சரி, வீட்டுக்கு வரும்போதுதான் ஒண்ணா வருவாங்கன்னு நினைச்சா, யாராவது ஒருவருக்கு போன் செஞ்சாக் கூட மற்றவரும் அருகிலேதான் இருப்பார். கலகலப்பான உற்சாகமான இளைஞர்கள். இவங்க ரெண்டு பேரும் மட்டுமில்லை..இவங்க பேட்ச் அண்ணாங்க, அக்காங்க எல்லோரும் எங்க வீட்டுக்கு எப்போவும் ஸ்பெஷல்தான். ஏன்னா, எங்க பெரிம்மாவிற்கு முதல் பேட்ச் மாணவர்கள்.

“அண்ணா, ஒரு ஆலமரம் இருக்கு, அங்கே ஒரு குருடன், ஒரு நொண்டி, ஒரு ஊமை உட்கார்ந்து இருக்காங்க. அப்போ ஒரு மாம்பழம் விழுது. யார் போய் ஃப்ர்ஸ்ட் எடுப்பாங்க...குருடனா, நொண்டியா, ஊமையா?” என்ற எனது லகலக கடிகளுக்கு இலக்காவது இவர்கள்தான்! பதிலுக்கு சொல்வதற்கு நிறைய சுவாரசியமான கதைகளுக்கு ரெண்டு அண்ணன்களிடமும்!! காப்பி அடிச்சு மாட்டிக்கிட்டது, பொண்ணுங்களை கிண்டலடிச்சு வாங்கிக் கட்டினதும்ன்னு...

சண்முகண்ணாவிற்கு கல்யாணமானப்போ, கொடைக்கானலில் படிச்சுக்கிட்டிருந்தேன். ஹனிமூனுக்கு கொடைக்கானல் வந்திருந்தாங்க...ஹாஸ்டலில் என்னை பார்க்க வந்திருந்தாங்க. கூடவே பாபுண்ணா. ”என்னண்ணா, நீங்களும் வந்துட்டீங்களா!!” -ன்னு கேட்டதுக்கு, “இவன் வந்தப்புறம் எனக்கு ரெண்டு நாளா என்ன செய்றதுன்னே தெரியலை..அதான் கிளம்பி வந்துட்டேன்”ன்னு சொல்றார் பாபுண்ணா. "அவன் கல்யாணம் ஆகி ஹனிமூன் போறான். இவன் எதுக்கு பின்னாடியே போறான்?” - அந்ததடவை ஊருக்குப் போனப்போ பெரிம்மா சொன்னது!! கடைசியா ஆம்பூருக்குப் போனப்போ வீட்டுக்கு ரெண்டு பேரும் ஒண்ணாதான் வந்திருந்தாங்க!

சண்முகண்ணாவிற்கு படிக்க வேண்டுமென்று ஆசை..ஆனால் காலேஜ் முதலாண்டிலேயே அவரது அப்பா மரணமடைந்துவிட, குடும்பப்பொறுப்பு அண்ணாவின் மேல். நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி. சண்முகண்ணா இல்லாத காலேஜுக்கு பாபுண்ணா மட்டும் செல்வாரா என்ன..BRC & சன்ஸ் சவுண்ட் சர்வீஸலிருந்து ஆரம்பித்து இப்போது இருவரும் வியாபாரக் காந்தங்கள்!!

நாடோடிகள் பார்த்தேன். ஏனோ, நான் கடந்து வந்த இந்த ஜாலியான இளைஞர்களை நினைவுபடுத்தியது. காதலுக்கு உதவின அனுபவங்களை கேட்க வேண்டும்....அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது!! எனக்குச் சொல்வதற்குத்தான் நிறைய இருக்கிறதே அண்ணன்களிடம்!!

பப்புவோடு சென்றிருந்தோம்.உதயம். 'அஞ்சாதே'விற்குப் பிறகு நாங்கள் பார்த்தத் திரைப்படம். பப்புவிற்கு முதல்முறையாக தியேட்டருக்குச் சென்றது நினைவிருக்க வாய்ப்புகள் இல்லை! "எப்போ வீட்டுக்குப் போலாம்” என்று கேட்டுக்கொண்டிருந்தவள், 30 நிமிடங்களில் உறங்கிவிட்டாள். :-)

பப்பு என்ன ட்ரெஸ் போடறதுன்னு நான் முடிவெடுத்தது போக,பதிலுக்கு என்னோட உடைகளை பப்புத்தான் முடிவெடுக்கிறாள். ஆரஞ்சு வண்ண உடை போட்டிருந்தாள். என்னோட சாய்ஸ்தான். ”சேம் கலர் சேம் கலர்”ன்னு என்னையும் அதே வண்ண ட்ரெஸ் போட வச்சுட்டா!அவ்வ்வ்! ஆரஞ்சு வண்ண உடையில் ஒரு அம்மாவும் குட்டிப்பெண்ணும் கடலலையில் விளையாடிகிட்டுருந்ததை ஞாயிற்றுக்கிழமை பார்த்திருந்தீங்கன்னா...ஹிஹி..அது நாங்கதான்!!

தலைப்பு : இது ஒரு சின்னவயசு விளையாட்டு. கிளாஸ் ரூமில் கூட விளையாடலாம். எந்த கலர் சொல்கிறார்களோ அந்த கலரை தொட வேண்டும். தொட முடியாதவர்கள் அவுட்.

17 comments:

செந்தழல் ரவி said...

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

குருடனா, நொண்டியா, ஊமையா?” என்ற எனது லகலக கடிகளுக்கு இலக்காவது இவர்கள்தான்! //

அவங்க மட்டுமா ஆச்சி ??????????

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........உங்க மேலையும் பப்பு மேலையும் கண்ணு போட்டாச்சு.

//நான் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இல்லாம, ”அப்போ சித்தி எங்கே” ன்னு கேட்டுட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. அந்த சித்தப்பாவுக்கும் செம குஷி.//

ஆஹா ஆஹா அருமை:):):) எங்க வீட்லல்லாம் இதைக் கேக்குறத்துக்கே தனியா செட் அப்லாம் பண்ணி, பிஸ்கட்டு சாக்லேட்டுன்னு வாங்கிக் கொடுத்து உஷார் பண்ணுவாங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்போ வீட்டுக்குப் போலாம்” என்று கேட்டுக்கொண்டிருந்தவள், 30 நிமிடங்களில் உறங்கிவிட்டாள். :-)

கையோட போன பதிவுல சொன்ன புக்கை எடுத்துட்டு போனீங்களோ :)))))))


அந்த கலரை தொட வேண்டும். தொட முடியாதவர்கள் அவுட். //

இந்தக் கலர் கலர் வெளாட்டு எனக்கும் ரொம்ப புடிக்கும். இதுல நான் ரொம்ப தடவை அவுட் ஆகியிருக்கேன் தெரியுமா :))))))))))))

rapp said...

//எப்போ வீட்டுக்குப் போலாம்” என்று கேட்டுக்கொண்டிருந்தவள், 30 நிமிடங்களில் உறங்கிவிட்டாள்//

:(:(:( இது என்ன படம் பாக்க விடாமல் பேஜார் செய்யும் சங்கத்துக்கு வந்த சோதனை?:):):)

//
“அண்ணா, ஒரு ஆலமரம் இருக்கு, அங்கே ஒரு குருடன், ஒரு நொண்டி, ஒரு ஊமை உட்கார்ந்து இருக்காங்க. அப்போ ஒரு மாம்பழம் விழுது. யார் போய் ஃப்ர்ஸ்ட் எடுப்பாங்க...குருடனா, நொண்டியா, ஊமையா?” என்ற எனது லகலக கடிகளுக்கு இலக்காவது இவர்கள்தான்!//

அவ்வ்வ்வ்........கேட்டுட்டு ஆன்சர் சொல்லாம போனா எப்டி?

//”சேம் கலர் சேம் கலர்”ன்னு என்னையும் அதே வண்ண ட்ரெஸ் போட வச்சுட்டா!அவ்வ்வ்! ஆரஞ்சு வண்ண உடையில் ஒரு அம்மாவும் குட்டிப்பெண்ணும் கடலலையில் விளையாடிகிட்டுருந்ததை ஞாயிற்றுக்கிழமை பார்த்திருந்தீங்கன்னா.//

இனி பஞ்சுமிட்டாய்க் கலர் டிரெஸ் போட்டு, பால் குடிக்க அடம்பண்ணத்துக்கு எல்லாம் பழிவாங்கினா, பப்புவும் டெர்ரரா டிரெஸ் செலெக்ட் செய்வாப்டி, ஜாக்கிரதை:):):)

வண்ணத்துபூச்சியார் said...

:):)

Anonymous said...

மிகவும் செயற்கையாக இருக்கிறது

சின்ன அம்மிணி said...

நாடோடிகள் படம் பாத்தப்போ, நான் சின்னதா இருக்கும்போது பசங்க எல்லாம் சேந்து ஒரு திருமணத்தை , இதே மாதிரி பாலக்காட்டில நடத்திக்காட்டினாங்க. அதான் ஞாபகம் வந்துச்சு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டக்டக் யாரது திருடன் என்ன வேண்டும் கலர் வேண்டும் என்ன கலர்ன்னு நாங்க வெளயாடுவோம். :)
அந்த லகலக கடிக்கு விடை சொல்லிடுங்க .. :)

G3 said...

Naan innum padam paakalae :((( Paathuttu soldren :))))

//”சேம் கலர் சேம் கலர்”ன்னு என்னையும் அதே வண்ண ட்ரெஸ் போட வச்சுட்டா!அவ்வ்வ்! //

Chamathu pappu :))))))))))))))))))))))

Anonymous said...

முகில் ஆரஞ்சு கலர் பேண்டு வெச்சிருந்தாரா?

குடுகுடுப்பை

Deepa said...

அருமையான பதிவு. இரண்டு மூன்று பதிவுகளுக்கான மேட்டர் இருக்கே இதில்.

உங்கள் அண்ணன்களின் நட்பு நெகிழ வைக்கிறது.

கலர் கலர் வாட் கலர் - ஜாலியான விளையாட்டு.

//பப்பு என்ன ட்ரெஸ் போடறதுன்னு நான் முடிவெடுத்தது போக,பதிலுக்கு என்னோட உடைகளை பப்புத்தான் முடிவெடுக்கிறாள். //

:-))

தீஷு said...

// முத்துலெட்சுமி/muthuletchumi said...
டக்டக் யாரது திருடன் என்ன வேண்டும் கலர் வேண்டும் என்ன கலர்ன்னு நாங்க வெளயாடுவோம். :)
//

நாங்களும் இது தான் விளையாடுவோம்.

அமுதா said...

/*அமிர்தவர்ஷினி அம்மா said...
குருடனா, நொண்டியா, ஊமையா?” என்ற எனது லகலக கடிகளுக்கு இலக்காவது இவர்கள்தான்! //

அவங்க மட்டுமா ஆச்சி ??????????
*/
அதானே!!!!

ஆயில்யன் said...

//// முத்துலெட்சுமி/muthuletchumi said...
டக்டக் யாரது திருடன் என்ன வேண்டும் கலர் வேண்டும் என்ன கலர்ன்னு நாங்க வெளயாடுவோம். :) //

ரிப்பிட்டோய்ய்ய்ய்ய் பட் நாங்க டொக் டொக் அப்படின்னு சொல்லுவோம் :)))

coolzkarthi said...

//நான் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இல்லாம, ”அப்போ சித்தி எங்கே” ன்னு கேட்டுட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. அந்த சித்தப்பாவுக்கும் செம குஷி.//

ஆஹா ஆஹா அருமை:):):) எங்க வீட்லல்லாம் இதைக் கேக்குறத்துக்கே தனியா செட் அப்லாம் பண்ணி, பிஸ்கட்டு சாக்லேட்டுன்னு வாங்கிக் கொடுத்து உஷார் பண்ணுவாங்க.//

ha ha ha...

கானா பிரபா said...

ஆகா நீங்க கூட தமிழ் படம் பார்க்கிறீங்களா ;0