Thursday, July 02, 2009

12 கேள்விகள் (குட்டீஸ் வெர்ஷன்)

'மழை' ஷ்ரேயா தான் இப்படி ஒரு ஐடியா கொடுத்தாங்க. பப்புகிட்டே இண்டர்வ்யூ செஞ்சு ஒரு போஸ்ட் போடுங்கன்னு! நன்றி ஷ்ரேயா!! இனி கேள்விகள் :


1. நீ எப்போ சந்தோஷமா இருப்பே?

உன் கூட விளையாடும்போது

2. நீ ஸ்கூல் போய்ட்டேன்னா நான் என்ன பண்ணுவேன்?

ஆஃபீஸ்

3. நான் ஆஃபீஸ் போய்ட்டா நீ என்ன பண்ணுவே?

சோகமா இருப்பேன்.

4. உனக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்?

சிக்கன், மட்டன் அப்புறம் நூடுல்ஸ்...சேமியா, இட்லில்லாம் பிடிக்காது..ப்ளக் (நாக்கை நீட்டி முகத்தை கோமாளித்தனமாக்குகிறாள்!)

5.ஸ்கூலுக்கு என்ன சாப்பாடு எடுத்துட்டு போகப் பிடிக்கும்?

நீட்டு முறுக்கு

6.அப்பா உன்னை என்ன செஞ்சு சிரிக்க வைப்பாங்க?

பேபேபேபே...மேமேமே அப்ப்டின்னா? ஆடு ஆச்சி ஆடு அப்படிதான் கத்தும். (ஏதாவது கோமாளித்தனமாக செய்திருக்க வேண்டும்!)

7. நாம ஒண்ணாயிருந்தா என்ன பண்ணுவோம்

விளையாடுவோம்

8. நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கோமா?

இல்ல! என்னோடது பழைய ட்ரெஸ்ஸா? (அவ்வ்வ்வ்..அன்னைக்கு ஒரு புது டீ-ஷர்ட் போட்டு இருந்தேன்)

9. எனக்கு உன்னை பிடிக்கும்னு எபப்டி தெரியும்?
எப்படி எப்படியோ தெரியும்!

10. நான் உன்னை என்ன செஞ்சு சிரிக்க வைப்பேன்?

ஹெஹ்ஹே...ஹிஹ்ஹிஹீ(சிரிக்கிறாள்..ஹ்ம்ம்..கேள்வி போரடிக்குது போல)

11. டீவிலெ என்ன பார்க்க பிடிக்கும்?

டோரா, புஜ்ஜி....பெஞ்சமின்

12. எந்த புக் பிடிக்கும்?

டினோசர்

பி.கு 1: பகுதி பகுதியாத்தான் பப்புக்கிட்டே கேட்டேன். ரெண்டு மூணு கேள்விகளுக்கு மேலே மேடம் விளையாட ஓடிபோய்டறாங்க... மயில் விஜி அவங்க பப்புகிட்டே இதே மாதிரி ஒரு இண்டர்வ்யூ எடுக்கணும்னு கேட்டுக்கறேன்!(கேள்விகள் இதேதான் இருக்கணும்னு கிடையாது!!) :-)மடிப்பாக்கம் செல்லம்மாள் கல்யாண மண்டபத்தில் (சதாசிவம் நகர்) pebbles CD/DVD expo நடக்கிறது ஜூலை 12 வரைக்கும்! pebbles-இன், சிறாருக்கான அனிமல் சிடிகள்(பாடல்கள்), பஞ்சதந்திர கதைகள், பாட்டி கதைகள் பப்புவை சாப்பிட வைக்க கணிசமான அளவு உதவியிருக்கின்றன. விலை 99ரூ - இப்போது டிஸ்கவுண்டில் விலை குறைந்திருக்கலாம்!
நேற்று ஒரு 94.3 எப் எம்-இல் சுச்சி “கல்பனா சாவ்லா பிறந்தநாள், அதை டாட்டர்ஸ் டே கொண்டாடுறோம்'ன்னு பெண் குழந்தைகள் இருக்கும் பாடகர்களை பேட்டி எடுத்தார். இன்னொரு எப். எம்-ல் “டாக்டர்ஸ் டே”ன்னு சொல்லி மலர் ஹாஸ்பிடல்லேர்ந்து ஒரு டாக்டரை கூப்பிட்டு பேட்டி எடுத்தார்கள்! இரண்டுமே உண்மையா?

27 comments:

மயில் said...

நான் எங்க பப்புவ கேள்வி கேக்கறது.. அவதான் என்னை கேள்வி கேட்டே கொன்றுவா.. இருந்தாலும் இன்னைக்கு கேள்விய இல்லாம உரையாடல கேட்டு சொல்லறேன்.

மயில் said...

இன்னைக்கு நானும் பப்பு புராணம் தான் பாடியிருக்கேன்..

மயில் said...

முதல் டாட்டர் டே உண்மையானு தெரியாது.. டாக்டர் டே உண்மைதான்..ஒவ்வொரு வருடமும் ஜூலை முதல் நாள் டாக்டர் டே மற்றும் அந்த வாரம் முழுதும் அவங்களுக்கு தான்.

சின்ன அம்மிணி said...

நான் உன்னை கேள்வி கேட்டேனே. நீ என்ன கேக்கணும்னா என்ன கேள்வி கேப்பே - இப்படி ஒரு கேள்வி கேட்டுப்பாருங்க. ஒரு வேளை சூப்பரா ஏதாச்சும் கேள்வி வந்தாலும் வரும்.

G3 said...

//அவ்வ்வ்வ்..அன்னைக்கு ஒரு புது டீ-ஷர்ட் போட்டு இருந்தேன்)//

Pappuvukku pudhu dress pottu vidaadha aachikku kandanangal !!!

Pappu peravai,
Chennai kilai :)

ஆயில்யன் said...

வாரா வாரம் ஆச்சித்தான் பேப்பரும் கையுமா திரியுறாங்கன்னு நினைச்சா இனி பப்புவுமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

நட்புடன் ஜமால் said...

ப்ளக் (நாக்கை நீட்டி முகத்தை கோமாளித்தனமாக்குகிறாள்!)\\


ஹா ஹா ஹா

சூப்பர் பப்பு!

\\நீட்டு முறுக்கு\\

ஆயில்ஸ் அங்கிள் உனக்கும் தெரியுமா!

\\ஹெஹ்ஹே...ஹிஹ்ஹிஹீ\\

கற்பனை செய்து சிரித்து கொள்கிறேன் ...

அமுதா said...

நல்ல கேள்வி-பதில்

தீஷு said...

நல்ல கேள்வி பதில்..

கல்பனாவுக்கானது daughters day. பெங்களூரிலும் ஒரு நிகழ்ச்சி இதை ஒட்டி நேற்று நடந்திருக்கு.
மயில் சொன்னதிலிருந்து டாக்டர் டேடும் ஜுலை ஒண்ணுனால இரண்டும் ஒரே நாள். :-))

மங்களூர் சிவா said...

July 1st Doctors day

rapp said...

டாக்டராகப் போற டாட்டர்களுக்கான டேவா இல்லாதவரைக்கும் ஓகே.

//
சிக்கன், மட்டன் அப்புறம் நூடுல்ஸ்//

ஹே அது:)

//ஆடு ஆச்சி ஆடு அப்படிதான் கத்தும்.(ஏதாவது கோமாளித்தனமாக செய்திருக்க வேண்டும்!)//

உங்களுக்கு ஓவர் நக்கலு, நெஜமாவே ஆடு அப்டித்தான கத்தும்? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........

//
9. எனக்கு உன்னை பிடிக்கும்னு எப்டி தெரியும்?
எப்படி எப்படியோ தெரியும்!//

உங்களுக்கு வேற யாராச்சும் பிளேடு போட்டா, எனக்குத் தலைவலிக்குமே, அதாலத் தெரியும்:):):)

கோபிநாத் said...

;-))) 32க்கு இந்த 12 கலக்கல் தான் ;)

மாதவராஜ் said...

ஆஹா....

வித்யா said...

ஸ்வீட் அண்ட் நைஸ்:)

☼ வெயிலான் said...

பப்பு தான் வழக்கமா கேள்வி கேப்பா... இப்ப நீங்க பப்புட்ட கேள்வி கேக்கிறீங்களா? என்ன தைரியம் உங்களுக்கு.... :)

" உழவன் " " Uzhavan " said...

அட.. நம்மளும் இந்த மாதிரி வீட்டுல ஒரு பிரஸ்மீட் வைச்சிரவேண்டியதான் :-)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நன்றி ஆச்சி . கேட்டுப் போட்டதுக்கு :O)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

என் சொந்த யோசனை இல்லை என்று சொல்லிக் கொள்கிறேன். (ஆயில்ஸ் கவனிக்க!!)

ஆங்கிலப்பதிவு ஒன்றில் கண்டது.

நசரேயன் said...

//
10. நான் உன்னை என்ன செஞ்சு சிரிக்க வைப்பேன்?

ஹெஹ்ஹே...ஹிஹ்ஹிஹீ(சிரிக்கிறாள்..ஹ்ம்ம்..கேள்வி போரடிக்குது போல)//
நீங்க பேசுறது எல்லாம் காமெடியா இருந்திருக்கும் பப்புக்கு

வருங்கால முதல்வர் said...

சிக்கன், மட்டன் உங்க வீட்டிக்கு விருந்துக்கு வரலாம் போல இருக்கே.

குடுகுடுப்பை

ராமலக்ஷ்மி said...

நல்ல பதில் சொல்லியிருக்கிறாள் பப்பு:)!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கோபிநாத் said...
;-))) 32க்கு இந்த 12 கலக்கல் தான் ;)


REPEAT

ரமேஷ் வைத்யா said...

சுவாரசியமாக இருந்தது. அசோகமித்திரனின் 'ரிஸ்கா' கதை ஏனோ நினைவுக்கு வந்தது.

சந்தனமுல்லை said...

நன்றி மயில், தங்களின் இடுகை சுவாரசியம்!

நன்றி சின்ன அம்மிணி,கேள்வி..கேட்டு துளைச்சு எடுப்பாங்களே! ஐடியாவிற்கு நன்றி, இடுகை கூடிய விரைவில்!

நன்றி g3, ஹிஹி..என்னைத்தாங்க யாரும் கண்டுக்கமாட்டேங்கறாங்க..நம்புங்க ப்ளீஸ்!

நன்றி ஆயில்ஸ்..எல்லாம் ஒரு சேஞ்சுக்குத்தான்! :-)

நன்றி ஜமால், அமுதா!

நன்றி தியானா, தெளிவுபடுத்தியமைக்கும்!

நன்றி சிவா!

நன்றி ராப், அது நானே எதிர்பார்க்கல..சாப்பாடு பத்தி இப்படி ஒரு பதில் சொல்வான்னு! அன்னைக்குன்னு பார்த்து சேமியா உப்புமாதான் டிபன்! :-)))

நன்றி கோபிநாத்!
நன்றி மாதவராஜ்!

நன்றி வித்யா, ஜூனியர்கிட்டேயும் கேளுங்களேன்!!

சந்தனமுல்லை said...

நன்றி வெயிலான், :-) ஏதோ என்னாலானது! கேள்வி கேக்கறது ஈசி!

நன்றி உழவன், அகமதி பேசறாங்களா..கலக்கல்தான்!

நன்றி ஷ்ரேயா, :-)

நன்றி நசரேயன், போதுமா டேமேஜ்?!

நன்றி குடுகுடுப்பை, தாராளமா வாங்க, ஹரிணியோட வாங்க!! :-)


நன்றி ராமலஷ்மி, அமித்து அம்மா!

நன்றி ரமேஷ் வைத்யா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ நான் உன்னை என்ன செஞ்சு சிரிக்க வைப்பேன்?

ஹெஹ்ஹே...ஹிஹ்ஹிஹீ(சிரிக்கிறாள்..ஹ்ம்ம்..கேள்வி போரடிக்குது

போல)//
போரடிக்குது போலயா.. அவ வேறெதோ அர்த்தத்துல சிரிக்கலயா.. :)

விக்னேஷ்வரி said...

பாப்புவோட பதில்களெல்லாம் டாப். உங்க கேள்விகள் இன்னும் இம்ப்ரூவ் ஆகணும் ஆச்சி. பப்பு கிட்ட இருந்து கத்துக்கோங்க.