Friday, July 31, 2009

”உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யாரு?”

”ஹேமா (இது இந்த ஹேமா!), சுஜா, குணா, நித்யா, ஷபீனா, ரேணு, சரளா, ஞானம்,தினேஷ்,ஷ்யாம்,ப்ரகாஷ் அப்பறம் ட்யூஷனிலே மேரி,கவிதா,அபிக்கூர் ரெஹ்மான்.....”

”இரு..இரு...பெஸ்ட் ப்ரெண்ட்னா உங்க கிளாசையே சொல்றே ? பெஸ்ட் ப்ரெண்ட்னு ஒரே ஒருத்தர்தான் இருக்க முடியும். யாராவது ஒருத்தங்ககிட்டே க்ளோஸா இருப்பே இல்ல....அவங்க பேரு சொல்லு!!”

ரொம்ப யோசிக்கிறேன்!

இப்போவரைக்கும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்/க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் குறித்து ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. எனக்கு, எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ்தான். பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு பார்த்தா எல்லோருமே எனக்கு பெஸ்ட் ப்ரெண்ட்தான் - பெஸ்ட்டா இல்லையான்னு அவங்கதான் சொல்லனும்!! எல்லோருக்கும் கொடுப்பதற்கும், எல்லோரும் கொடுப்பதற்கும் - எல்லோருக்குள்ளும் பெஸ்ட்கள் இருக்கிறதுதானே!!ஒரு புன்னகையோ ஒரு நலம் விசாரிப்போ ஒரு தலையசைப்போ இல்லாமல் எவரையேனும் கடந்துவிட முடியுமா!

ஓக்கே...புரிஞ்சுடுச்சா...அமுதா கொடுத்த இந்த நட்பு விருதை, என்னாலே சிலருக்கு மட்டும் கொடுத்துட்டு சிலருக்குக் கொடுக்காம இருக்கமுடியாது..ஏன்னா,நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்!! பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்!!தமிழ்மணத்தில் உங்கள் இடுகைகளை வாசிக்கிறேன் - உங்கள் பின்னூட்டங்களை ரசிக்கிறேன்!! இந்த 'சித்திரக்கூடம்' என்னோட இ-வீடு அல்லது இ-ஃப்ளாட் - உங்கள் பதிவுகள் அண்டைவீடு - இப்படித்தான் உங்களோடு என்னை associate செய்துக்கொள்கிறேன். எனது உலகையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்! இதில் virtual friends என்ன...real friends என்ன?! அதனாலே நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்தான்! இந்த விருதை எல்லோருக்குமே - எனது அண்டைவீட்டார் அனைவருக்குமே - நட்போடு வழங்குகிறேன்!! :-)

இதையேத்தான் கொஞ்சம் வேறமாதிரி சொல்லியிருக்கேன் போல!! அவ்வ்வ்வ்வ்!I am like that..என்ன பண்றது..எனக்கு மனிதர்களைப் பிடிக்கிறது!!

26 comments:

சின்ன அம்மிணி said...

எனக்கும் காலேஜ் வரைக்கும் பெஸ்ட் ஃப்ரெண்ட்னு ஒருத்தரை மட்டும் சொல்ல முடியலை. ஒரு கூட்டமாவே தான் இருப்போம். இப்படி குடுத்தது நல்லதாத்தான் படுது.

பைத்தியக்காரன் said...

ஆச்சி,

அனைவரையும் 'பெஸ்ட் ஃபிரெண்டா'க ஏற்க மனம் பக்குவப்பட்டிருக்க வேண்டும். உங்களுக்கு அப்படி அமைந்திருக்கிறது.

நன்றி, நட்பு வட்டத்தில் பைத்தியக்காரனையும் சேர்த்ததற்கு :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

mayil said...

நன்றி நன்றி நன்றி!! இல்ல நாமளும் கூட்டத்தில் இருக்கமில்ல, அதான்.:))

மாதவராஜ் said...

நன்று. சந்தோஷம்.

அமுதா said...

சூப்பர். நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

எல்லாருக்கும் கொடுத்து ஆச்சி,யூ த க்ரேட் எஸ்கேப்பு :))))))))))))))))))))))))

சென்ஷி said...

:-)

மங்களூர் சிவா said...

சூப்பர்

நட்புடன் ஜமால் said...

சொல்லி - ஆச்சி

கொடுத்து - ஆச்சி

நல்ல ஐடியா! நன்னி.

விக்னேஷ்வரி said...

அழகா சொல்லிட்டீங்க முல்லை. வாழ்த்துக்கள்.

தமிழ் பிரியன் said...

ஹாய் பிரெண்ட்.. எப்படி இருக்கீங்க

SK said...

எனக்கு வேற ஒரு கதை நினைவுக்கு வந்துடிச்சு.. அப்பறம் அதை பதிவா எழுதறேன்.. :)

வெ.இராதாகிருஷ்ணன் said...

அனைவருக்கும் விருது வழங்கி அனைவரையும் பெருமைப்பட வைத்து வீட்டீர்கள். மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நானும் இருக்கேனா முல்லை உங்க வட்டத்தில்:)
நன்றி.

Deepa said...

வாழ்த்துக்கள் முல்லை! :-)

ஆகாய நதி said...

நன்றி முல்லை...

எனக்கும் உங்களைப் போலவே பெஸ்ட் ஃபிரண்ட் யாரென்று இன்னும் சொல்லத் தெரியாது... சிலருடன் அதிகம் பேசுவேன் ஆனால் அதிகம் பேசாத சிலரை மிக மிக பிடிக்கும்...

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்துக்கள் முல்லை!

ஆனாலும், வாங்கிய விருதை மற்றவருக்குக் கொடுப்பதில் சூப்பர் எஸ்கேப்பிஸம்.

கலையரசன் said...

உங்க மனசு யாருக்குங்க வரும்.. வாழ்த்துக்கள்!!

நாணல் said...

வாழ்த்துக்கள் முல்லை...

☀நான் ஆதவன்☀ said...

ஓக்கே மை ஃப்ரெண்ட். டாங்ஸ் ஃபார் யுவர் அவார்ட் :)

சிங்கக்குட்டி said...

என்ன ஒரு பொது சிந்தக்னை ..வாழ்த்தக்கள் :-))

ஆயில்யன் said...

//எனக்கும் காலேஜ் வரைக்கும் பெஸ்ட் ஃப்ரெண்ட்னு ஒருத்தரை மட்டும் சொல்ல முடியலை. ஒரு கூட்டமாவே தான் இருப்போம்.//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!!

தீஷு said...

வாழ்த்துகள் முல்லை..

ராஜா | KVR said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க (முந்தைய பதிவிலும் & இப்போதும்).

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் முல்லை!

rapp said...

தோடா, ரொம்பப் புத்திசாலித்தனமா தப்பிச்சிட்டீங்களா:):):) நெனப்புதான் பொழப்பக் கெடுக்கும். இப்போ நாங்க என்னா செய்வோம் தெரியுமா? 'பாருடி, இவ, அவளையும்/அவனையும் புடிக்கும்னு சொல்றா, என்னைய ரொம்பப் பிடிக்கும்னு சொல்லலைன்னாக் கூட பரவால்ல, இப்டி சொல்லிட்டாளே'ன்னு சூனியம் வெப்போமே:):):)