Saturday, July 25, 2009

ஃபேமிலி டே @ பப்புஸ் ஸ்கூல்!
பப்புவின் பள்ளியில் நேற்று “ஃபேமிலி டே”.

நுழைந்த உடனே, வரவேற்ற ஆன்ட்டி எனக்கும், முகிலுக்கும் ரெட் கலர் சாட்டின் ரிப்பனை கையில் கட்டி விட்டார். வெண்மதியின் அம்மா, ஆயா, வெண்மதி இருந்ததைப் பார்த்து, ஹாய் சொல்லிவிட்டு அடுத்த வரிசையில் அமர்ந்துக்கொண்டோம். ஒரு குட்டிபெண், பப்புவை பார்த்துச் சிரித்தாள். பப்புவும் சிரிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு சிரிப்பு. ஆனால் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அதுதான் வர்ஷினியாம். பின், வர்ஷினி அவளது அம்மா பக்கத்தில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

”நீ போய் வர்ஷினி பக்கத்துலே உக்காந்துக்கோ” - பப்பு, பக்கத்து இலைக்கு பாயாசம்!

பப்புவும் வர்ஷினியும் அருகருகில் அமர்ந்துக்கொள்ள நானும் முகிலும் அவர்களுக்கு முன் வரிசையில். விழா ஆரம்பித்தது. ”எப்போதும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு, பிரச்சினைகள், பரிந்துரைகள் என்று மட்டுமே பேசுகிறோம், இந்தமுறை அதையெல்லாம் விடுத்து, கொஞ்சம் மகிழ்ச்சியாகக் கழிப்போம். பிரச்சினைகள், ப்ளஸ்கள், மைனஸ்கள் பேசுவதானால் உங்களுக்குள் பேசிக்கொள்ளுங்கள். ஆனால், இன்று அதைக் கேட்க நாங்கள் விரும்பவில்லை” - பெரிய ஆன்ட்டி.

(உண்மைதான், அந்த சந்திப்புகளில் பொதுவாக யாராவது கேள்விகள் கேட்பார்கள். சந்தேகம் கேட்பார்கள். அதைத்தாண்டி பேசிக்கொண்டதில்லை. சந்திப்பு முடிந்தவுடன், ஆர்வமுள்ள சிலர் ஆன்ட்டியிடம் கேள்விகளெழுப்பிக் கொண்டிருப்பார்கள். ஒருசில சமயங்களில் நானும் ஒப்புக்குச் சப்பாணியாக நின்று என்னத்தான் கேக்கறாங்கன்னு பார்த்திருக்கிறேன். மற்றபடி, வெண்மதி அம்மா, வர்ஷினி அம்மா,நந்தக்கிஷோர் அம்மாவோடு முடிந்துவிடும்!)


”சரி, நேரமாகுது, முடிஞ்சவுடனேக் கூப்பிடு, வர்றேன்” - முகில் எஸ்கேப்!

”ரெட் ரிப்பன் கட்டியவர்கள் எல்லோரும் வாங்க, உங்க மெமரியை டெஸ்ட் பண்ணனும்”

ஒரு ட்ரேயில் 25 பொருட்கள் வைத்து ஒரு நிமிஷம் பார்க்க அனுமதிப்பார்கள். இரண்டு நிமிடங்களில் எழுதித்தரணும். அவ்வ்வ்வ்! நான் பப்புவை மெமரிக்காக இன்னும் திட்டவே ஆரம்பிக்கலையே, ஏன் எனக்கு இப்படி சோதனை!! எப்படியோ பதினைந்து பொருட்களை எழுதித்தந்தாயிற்று. வெண்மதி அம்மா எனக்குப் பக்கத்தில். அது வேறு டென்ஷன். அவங்க அதிகமா எழுதினமாதிரி வேற இருந்துச்சு!! :-)

“சரி, போய் உக்காருங்க, உங்க ரிசல்ட் எல்லாம் கடைசிலதான் சொல்வோம்!” - ஆன்ட்டி!

”ப்ளூ ரிப்பன் வாங்க”

யானைக்கு வால், லெமன் அன்ட் ஸ்பூன், பாட்டிலில் நீரை நிரப்புதல், பந்தை கடத்துதல் இன்னபிற. மெயின்பார்ட் வந்து அம்மா, அப்பாக்கு டெஸ்ட் - குழந்தையைப் பற்றி - ஜாலியாகத்தான் - கேள்வி கேட்பாங்க, ரெண்டு பேரும் தனித்தனியாக விடைகள் எழுதிக்கொடுக்கணும், எந்தளவுக்கு விடைகள் ஒத்து போகுதுன்னு! நல்லவேளை, முகில் இல்லை!! இல்லன்னா, ரெண்டுபட்டிருக்கும்!!

பவன் கார்த்தி, தேவிகா, யோகருத்ரன்,ப்ரனேஷ், சாகர், நந்தகிஷோர், தனுஷ் என்று வீட்டில் பப்பு சொல்லும் அனைவரையும் அவரவர் அம்மாக்களோடு சந்தித்தாயிற்று. அவரவர் குழந்தைகளின் பெயர்களே முகவரியாயின! தொலைபேசி எண்கள் பரிமாறிக்கொண்டோம்.

”எங்கவீட்டுலே எப்பவும் குறிஞ்சி, வெண்மதி புராணந்தான்”

"எங்கவீட்டுலேயும் அதேதான், வர்ஷினையையும், வெண்மதியையும் எங்கவீட்டுலே எல்லாருக்கும் தெரியும்!!”

“வீட்டுக்குக் கூட்டிட்டு வாங்க,குறிஞ்சியை!”

குட்டீஸ் எல்லாம் அவரவர் ப்ரெண்ட்ஸோடு! வர்ஷினியும், பப்புவும் கைக்கோர்த்துக்கொண்டு வலம் வந்தனர். சிற்றுண்டி. முடிந்ததும், பரிசு அறிவித்தல். மெமரியில் மீ த ஃப்ர்ஸ்ட்! அவ்வ்வ்வ்வ்! பப்பு சென்று வாங்கினாள். நன்றியுரை.

”ஏதாவது பரிந்துரைகள்?' - ஆண்ட்டி!

“வீக்எண்ட்-லே வச்சிருக்கலாம்” - கூட்டத்திலிருந்து!

“எங்களை நம்பியும் ஒரு குடும்பம் இருக்கிறதே!! - ஆன்ட்டி!

அதுவும் சரிதான்!

இது ஒரு சின்ன ஸ்கூல்தான். சாதாரண கட்டிடம். மொத்தமே 150 மாணவர்கள்தான்.எல்லா ஆன்ட்டிகளுக்கும் எல்லா பிள்ளைகளையும் தெரியும், எல்லா பிள்ளைகளின் பெற்றோரையும் தெரியும். பப்புவுக்கு ஒரு பெரிய பள்ளியிலே, நிறைய மாணாக்கர்களுடன் படிக்கும்/விளையாடும் அனுபவத்தைத் தராமல், இப்படி வைச்சுருக்கோமே என்று எனக்குள் அவ்வப்போது ஒரு எண்ணம் எழுவதுண்டு. ஆனால், அது ஒன்றும் பெரிய குறையில்லை என்பதுபோல சில சமயங்களில் தோன்றும். நேற்றும் அந்த சிலசமயங்களில் ஒன்றானது!!இப்போதான் நானும் சுதா கான்வெண்டிலே வாராய்..நீ..வாராய்-ன்னு ஸ்போர்ட்ஸ் டேக்கு ஓடின மாதிரி இருக்கு. எங்க பெரிம்மாவும் கலா டீச்சரும் ஒண்ணா உக்கார்ந்து சிரிச்சு பேசிக்கிட்டிருந்தது, ”எல்லோரையும் துரத்திக்கிட்டு ஓடினியான்னு” கேட்டது, பிரேமா பன்னை எட்டி எட்டி சாப்பிட்டது, சாக்குக்குள்ளே காலை விட்டுக்கிட்டு அசோக் ஓடமுடியாம ஓடி விழுந்தது, ஓடிப்போய் மிஸ்ஸைத் தொடணும், அந்த விசில் சத்தம், ஆரஞ்ச், மஞ்சள், வெள்ளை நிறக்கொடிகள்-ன்னு எல்லாம் இப்போ நடந்தமாதிரி இருக்கு!! அப்படியே இருந்திருக்கலாமோ, பச்சை வெள்ளை பினஃபார்ம் போட்டுக்கொண்டு பெரிம்மாவோடு கூட நடந்தபடி!!

20 comments:

ஐந்திணை said...

கடைசில வத்தி புகை சுத்தி பிளாஷ்பேக் போயீட்டீங்களே :-)

மாதவராஜ் said...

//இது ஒரு சின்ன ஸ்கூல்தான். சாதாரண கட்டிடம். மொத்தமே 150 மாணவர்கள்தான்.எல்லா ஆன்ட்டிகளுக்கும் எல்லா பிள்ளைகளையும் தெரியும், எல்லா பிள்ளைகளின் பெற்றோரையும் தெரியும்.//

இப்படியான சூழல் இருப்பதுதான் நல்லது என நினைக்கிறேன். பிரத்யேக கவனமும், அக்கறையும் குழந்தைகளிடம் செலுத்த முடியும்.

சின்ன அம்மிணி said...

//மெமரியில் மீ த ஃப்ர்ஸ்ட்//

Welldone, Congrats

சின்ன அம்மிணி said...

//அவங்க அதிகமா எழுதினமாதிரி வேற இருந்துச்சு!! :-)//

அக்காங்க், அவங்க எழுதனதை பாத்து எழுதிட்டு மீ த பர்ஸ்ட் வேறயா :0

நாணல் said...

//மெமரியில் மீ த ஃப்ர்ஸ்ட்! அவ்வ்வ்வ்வ்! பப்பு சென்று வா//

வாழ்த்துக்கள் :))

நட்புடன் ஜமால் said...

ஒரு கொ.வ மாட்டிக்கிச்சி ...[[”நீ போய் வர்ஷினி பக்கத்துலே உக்காந்துக்கோ” - பப்பு, பக்கத்து இலைக்கு பாயாசம்!]]

சூப்பர் பப்பு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

”me the first” க்கு வாழ்த்துக்கள்..
அந்த அப்பா அம்மா கேள்விகளை வீட்டில் வந்து ஒரு டெஸ்ட் வச்சிப்பார்த்தீங்களா .. பாத்துட்டு சொல்லுங்க :P

மங்களூர் சிவா said...

ஹா ஹா
very nice!

கடைசில சுத்தின கொசுவத்தியும் nice!

Deepa said...

விழாவுக்கு நாங்களும் வந்த அனுபவத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். அருமையான பதிவு.

அங்கிள் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன். சின்ன பள்ளியில் தான் தனிப்பட்ட கவனமும் அக்கறையும் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

கானா பிரபா said...

பேமிலி டே கவரேஜ் கலக்கல், சைக்கிள் கேப்பில் கொசுவர்த்தியும் போட்டுட்டீங்க பாஸ்

☀நான் ஆதவன்☀ said...

:)

//”me the first” க்கு வாழ்த்துக்கள்..//

ரிப்பீட்ட்ட்ட்ட்டு

பழமைபேசி said...

நல்லா இருக்குங்கோய்...

rapp said...

//
”நீ போய் வர்ஷினி பக்கத்துலே உக்காந்துக்கோ” - பப்பு, பக்கத்து இலைக்கு பாயாசம்!//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......அடுத்த வாரம் பப்புக்கு பிரியாணி வேணுமாம்னு ஆம்பூருக்கு போன் பண்ணும்போது இருக்கு உங்களுக்கு.

rapp said...

//”எங்கவீட்டுலே எப்பவும் குறிஞ்சி, வெண்மதி புராணந்தான்”

"எங்கவீட்டுலேயும் அதேதான், வர்ஷினையையும், வெண்மதியையும் எங்கவீட்டுலே எல்லாருக்கும் தெரியும்!!”

“வீட்டுக்குக் கூட்டிட்டு வாங்க,குறிஞ்சியை!”//

//மற்றபடி, வெண்மதி அம்மா, வர்ஷினி அம்மா,நந்தக்கிஷோர் அம்மாவோடு முடிந்துவிடும்!//

இப்பவும் நீங்கல்லாம்தான செட் சேர்ந்திருக்கீங்க? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........... எப்புடி? நாங்கெல்லாம் ரிவால்வர் ரீட்டாவாக்கும்:):):)

rapp said...

//
“வீக்எண்ட்-லே வச்சிருக்கலாம்” - கூட்டத்திலிருந்து!

“எங்களை நம்பியும் ஒரு குடும்பம் இருக்கிறதே!! - ஆன்ட்டி!//

நியாயமான பேச்சு, எங்கம்மா அப்பப்போ புலம்பறது. நம்மள மாதிரி டீச்சர் வீட்டுக் கொயந்தைங்களப் பத்தி மக்கள் கண்டுக்கறதேயில்ல :(:(:( கடசீல நாங்க அவங்க புள்ளைங்களுக்கே பிரெண்ட் ஆகி பாடம் புகட்ட வேண்டியிருக்கு:):):)

rapp said...

ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........நினைவாற்றலில் நீங்க பர்ஸ்ட் பிரைசா, அங்க வந்திருந்தவங்கல்லாம் கஜினி சூர்யாவுக்கு அண்ணன் தங்கச்சியா:):):) ஹி ஹி, வாழ்த்துக்கள் முல்லை:):):)

மாதேவி said...

//மெமரியில் மீ த ஃப்ர்ஸ்ட்!// பாராட்டுக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வெண்மதி அம்மா எனக்குப் பக்கத்தில். அது வேறு டென்ஷன். அவங்க அதிகமா எழுதினமாதிரி வேற இருந்துச்சு!! :-)

எட்டி எட்டி பாத்துட்டே இருந்தீங்களோ

முடிந்ததும், பரிசு அறிவித்தல். மெமரியில் மீ த ஃப்ர்ஸ்ட்!
வாழ்த்துக்கள் ஆச்சி :)))))))))))

அப்படியே இருந்திருக்கலாமோ, பச்சை வெள்ளை பினஃபார்ம் போட்டுக்கொண்டு பெரிம்மாவோடு கூட நடந்தபடி!! //

:(( ப்பீலிங்க்ஸு

" உழவன் " " Uzhavan " said...

//இரண்டு நிமிடங்களில் எழுதித்தரணும்//
 
இன்னமும் இதே போட்டிதான் நடக்குதா? :-)
 
//மெமரியில் மீ த ஃப்ர்ஸ்ட்//
பரிசு என்னனு சொல்லவேயில்லையே

தீஷு said...

அருமையான பதிவு முல்லை. சின்ன ஸ்கூலில் இருக்கும் வசதிகளை பெரிய ஸ்கூலில் எதிர்பார்க்க முடியாது முல்லை. ஆனால் ப்ரீஸ்கூலிலேயே சேர்த்தால் தான் பெரிய பள்ளியில் இடம் கிடைக்கும் என்பது தான் சேர்க்கத்தூண்டுகிறது.

//மெமரியில் மீ த ஃப்ர்ஸ்ட்//
வாழ்த்துகள்!!!