Monday, July 10, 2006

நினைவுகள் : வாராய்..நீ...வாராய்

3-வது STD வந்ததும், ஒவ்வொரு வெள்ளிகிழமையும் prayer முடிந்து GK டெஸ்ட் இருக்கும். இதன் கேள்விகளை முதல் நாளிலேயே கொடுத்து விடுவார்கள் பதிலையும் சேர்த்து! அதை படித்து (மனப்பாடம் செய்து) அடுத்த நாள் எழுத வேண்டும். இதில் ஒன்றும் பெரிதாக விஷயம் இல்லை..தான்!

ஆனால், அதன் பின்பு, ஒவ்வொருவரும் Assembly முன்னால் வந்து நின்று,ஒரு ப்ரொவெர்ப்-ஐ சொல்ல வேண்டும். எனக்கோ பயங்கர மறதி.....எதையாவது வீட்டிலிருந்து படித்து கொண்டு வருவேன்..ஆனால் அங்கு வந்து நின்றதும் மறந்து போய்விடும்....! ஆனால் அஷோக் மட்டும் புதிதாக, ஆனால் நீளமாக ப்ரொவெர்ப்-ஐ சொல்வான்!!

நான் எப்பொதும் ஒரே ப்ரொவெர்ப்..""Old is Gold..".."..!Mithra மேடம்-க்கு ஒருமுறை ரொம்ப கோபம் வந்து விட்டது...Assembly நான் Old is Gold-ஐ சொல்லிவிட்டு திரும்பி வர எத்தனித்த போது பிடித்து கொண்டு விட்டார்கள்..உன் பெரிம்மா இங்கிலிஷ் டீச்சர் தானே.....வேறு ஒரு ப்ரொவெர்ப் சொல்லிவிட்டு இடத்திற்கு போ என்று"..(அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்..??) அவமானமாக போய் விட்டது...!

அதன்பின் நீண்ட நேரம் யோசித்து, all that glittters is not gold என்று சொல்லி விட்டு ஒடி வந்து விட்டேன்..அதை கேட்டதும் அவர்கள் முகத்தில் ஒரு புன்சிரிப்பு...ஒருவேளை இந்த பெண் gold -ஐ விடாது என நினைத்தார்கள் போலும்..!ஆனால், இன்றுவரை நான் gold மீது ஆசைபட்டது இல்லை என்றாலும்..!

ஆனால், இது கூட பரவாயில்லை எனும்படி, sportsday என்ற பெயரில் ஒரு பெரிய அவமானம் காத்து கொண்டு இருந்தது எனக்கு அப்பொது தெரியாது..! பள்ளிக்கு எதிரில் ஒரு ffire office இருக்கும் என்று சொன்னேன் அல்லவா? fire office முன்பு ஒரு பெரிய கிரௌண்ட் இருக்கும்..அங்கு தான் எங்கள் sportsday ...நடந்தேறியது..!

ஸ்போர்ட்ஸ் என்றால்..ஏதோ டென்னிஸ்...ஸ்குவாஷ்..சைக்கிள் ரேஸ் என்று நினைத்து விடாதீர்கள்...emon n spoon...sack race, running race...bun eating!( bun eating என்பது..சணலில் பன் -களை கட்டி தொங்க விடுவார்கள்..இரு பக்கமும் அதை உயர்த்தி பிடித்து கொள்வார்கள்..போட்டியாளர்கள் அதை எக்கி எக்கி உண்ண வேண்டும்..யார் முதலில் உண்டு முடிக்கிறார்களோ அவர்கள் தான் first..மேலும், விக்கிக் கொண்டால் குடிக்க தண்ணீர் எல்லாம் பக்கத்தில் வைத்திருப்பார்கள்....! !) இதை பார்க்க எல்லா பேரன்ட்ஸ் மற்றும் பேரன்ட்ஸ்-இன் நணபர்கள்...அக்கம்பக்கத்து வீட்டார்..என எங்களை cheerup பண்ண ஒரு பெரிய ரசிகர் கூட்டம்..!

நானோ என் திறமை மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து ரன்னிங் ரேஸில் கலந்து கொண்டேன்.. விசில் சத்தம் கேட்டதும், எல்லாரும் ஓடினார்கள்..கூடவே நானும்..ஆனால்..நானோ கடைசியாக முதலில்...!

high school level-இல் 100-Meter இல் முதலாவாதாக வந்தாலும், (தோல்வி என்பது வெற்றி-இன் முதல் படி என்று நான் நிரூபித்து காட்டியதை ஒத்துகொள்ளாமல்)..இன்றும் அவ்வபோது அதை பற்றிய Comedy ஓடும்...எல்லாரையும் நான் துரத்திக்கொண்டு ஓடியதாக!!

3 comments:

சுதர்சன்.கோபால் said...

//ஆனால், இன்றுவரை நான் gold மீது ஆசைபட்டது இல்லை என்றாலும்..!//

ஓக்கே..ஓக்கே...

விறுவிறுப்பாகப் போகுது முல்லை...

KVR said...

//நானோ என் திறமை மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து ரன்னிங் ரேஸில் கலந்து கொண்டேன்.. நான் பேராசைப்பட்டு அதிலெல்லாம் கலந்து கொள்ளாமல், ரன்னிங் ரேஸ்-இல் மட்டும் கலந்து கொண்டேன்..! //

இந்த வரிகள் கொஞ்சம் இடிக்குது பாருங்க.

எங்கள் பள்ளியிலும் இந்த எக்கிச் சாப்பிடும் போட்டி இருந்தது, ஆனால் மேரி பிஸ்கட்.

Anonymous said...

Amazing mullai.. You have got a good hand in saying things comically.. defintiely you make me remember the good old days....Nice write up..

Suresh C Nair