Wednesday, July 05, 2006

நினைவுகள்...: மயிலிறகே...மயிலிறகே..

வரவேற்புக்கு நன்றி..நண்பர்களே..!

நாங்கள் குடியிருந்தது கிருஷ்ணாபுரம் என்ற ஏரியாவில். அந்த வீட்டில் 5 குடித்தனக்காரர்கள் மற்றும் ஒரு முற்றம். அதில் முதல் பகுதி வீடு எங்களுடயது. நான், என் பெரிம்மா (பெரியம்மா என்பதை விட பெரிம்மா எனபது எனக்கு இன்னும் நெருக்கத்தை தருவதாக உணர்கிறேன்.) மற்றும் பாட்டி!!

எனக்கு பள்ளி செல்லும் பருவம் வந்ததும்,வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார்கள். அதன்படி தேர்வானது சுதா convent. அதன் எதிரில் fire office இருக்கும். (அதன் significance பின்பு!) பெரிம்மா ஆம்புரில் இருந்த இந்து மேல் நிலை பள்ளியில் english teacher. அவர்கள் பள்ளிக்கு போகும் வழியில் cஒன்வென்ட் இருந்தது கூடுதல் சிறப்பு அம்சமாக அமைந்தது. அதே வீட்டில் பக்கத்து போர்ஷனில் இருந்த இன்னொரு குடும்பத்தில் என் வயதை ஒத்த சிறுமி இருந்தாள். அவள் பெயர் "ஜில்லு". அது என்ன காரணம் என்று இதுவரை யாருக்கும் தெரியாது! அவளையும் அங்கு சேர்ப்பதாக அவர்கள் வீட்டிலும் முடிவு செய்யபட்டது.

நான் 3- 1/2 வயது வரை வீட்டில் இருந்து விளையாடி பொழுதைக் கழித்து வந்ததால் பள்ளிக்கு போவது ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. அதோடு, பெரிம்மாவும் பாட்டியிடம், போய் விசாரித்துவிட்டு வாருங்கள் என்று கூறி இருந்தபடியால் ஒரு தைரியம்...உடனே சேர்த்து விட மாட்டார்கள் என்று! பின், பெரிம்மா அந்த பள்ளி நிர்வாகியான மேடம் (பெயர் Mithra) -ஐ பார்த்து பேசி விட்டு வந்துவிட்டார்கள்.

அதன்படி, ஒரு நல்ல நாள் பார்த்து பாட்டி, வீட்டுக்கார அத்தை,ஜில்லுவின் அம்மா மற்றும் பலியாடுகளாக நானும் ஜில்லு-வும்! Mithra மேடம் ரூமுக்கு அழைக்கபட்டோம். அந்த ரூமை மற்றும் மேடத்தை மிரட்சியுடன் நான் பார்த்து கொண்டிருந்தது இன்னும் நினைவு இருக்கிறது. அங்கு நிறைய விளையாட்டு பொருட்கள், globe, பறவை பொம்மைகள், மரத்தாலான பொம்மைகள், செவ்வக, வட்ட சதுர வடிவ பொருட்கள், எண்கள், உருவ பொம்மைகள் எல்லாம் கண்ணாடி கூண்டுக்குள் அடைபட்டு இருந்தன. நமக்கு வேடிக்கை பார்க்க சொல்லியா தர வேண்டும்? அதன் அருகில் வாயை பிளந்தவாறு நின்று பார்த்து கொண்டிருந்தேன். இதையெல்லாம் நமக்கு விளையாட கொடுப்பார்களா என என் கண்களில் மிளிர்ந்த ஏக்கத்தை உணர்ந்தவராக,அந்த மேடம் "school-இல் சேர்ந்தவுடன் இதை எல்லாம் உஙகளுக்கு விளையாட தருவோம்" என்றார்..!

அந்தோ பாவம்...அதை அப்படியே நம்பிய எனக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அந்த பொம்மைகள் எல்லாம், சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கு ஈர்க்க பயன்படுத்தபடுபவை..ஒருநாளும் அவை வெளியில் வாரா...என!!

பள்ளியில் சேர்ந்தாகிவிட்டது...நான் வீட்டிலேயே abcd..மற்றும் அ..ஆ அதாவது LKG க்கு தேவையானவற்றை கற்றிருந்ததால் என்னை UKG -லும் ஜில்லுவை LKG-லும் சேர்ப்பதாக மித்ரா மேடம் அறிவித்தார்கள். UKG-இல் பிரச்சினை ஒன்றும் பெரிதாக இல்லை..

1-st ஸ்டன்டார்ட் வந்த பின் முழு நாள் பள்ளி தொடங்கியது. என் கிளாஸில் நான் தான் உயரம்..( அன்று ஆரம்பித்தது..ஸ்கூல் இறுதி வரை அதுவே தொடர்ந்தது) ஒரு சின்ன டெஸ்க்.....அதாவது நாங்கள் தரையில், நான்கு பேர் அமர்ந்து அந்த டெஸ்க்கை ஷேர் பண்ணி கொள்ள வேண்டும்..பார்க்க அழகாக இருக்கும்..வீட்டுக்கு கொண்டு போய் விடலாம் போல..! நான், பிரேமலதா, ஹேமலதா மற்றும் அஷோக்.

எனக்கும் பிரேமலதா-வுக்கும் எப்பொதும் ஆகவே ஆகாது..!ஆனால் ஹேமலதா எங்களை சேர்த்து வைப்பாள்.! அவளுக்கு சுருள் முடி....நிறைய நாட்கள் அவளை பார்த்து பொறாமை பட்டு இருக்கிறேன்..! எனக்கோ ஸ்ட்ரெய்ட் ஹேர். அதுவும் பாப் பண்ன பட்டு இருக்கும்.(பேன் வந்து விடுமாம்..பாட்டிந் ஆர்டர்)! அது போகட்டும்!! எதற்கு சண்டை என்கிறீர்களா... எனக்கும் பிரேமாவுக்கும்..யார் அஷோக் பக்கதில் உட்கார்வது என்று..தான்! ஹேமலதா..அஷோக்கை நடுவில் அமர செய்து, எங்கள் இருவரை மாற்றி அமர செய்வாள்..! அவள் எதாவது ஒரு ஓரத்தில் அமர்ந்துகொண்டு!!

[பின்னாளில் அதே அஷோக்கை +1-இல் பார்த்த போது வெட்கம் பிடுங்கி தின்றது. ஹேமா, ஐந்தாவது முடிந்து அவளது அப்பாவின் ட்ரன்ச்fஎர் காரணமாக சேலம் சென்றுவிட்டாள். ப்ரேமா அதே ஸ்கூலில் வேறு செக்க்ஷன்..! ]

இப்படி எங்கள் நால்வர் கூட்டனி form ஆயிற்று..! பிரேமா தான் புதுது புதிதாக எதாவது சொல்வாள்..அப்படி தான் ஒரு நாள் சொன்னாள்..பென்சில் சீவி அந்த தோலை மண் தோண்டி புதைத்து, தொடர்ந்து 7/15 நாட்கள் பால் ஊற்றினால் ரப்பர் கிடைக்கும் என்று. இதை நான் நம்பி ரப்பர் செய்ய முனைந்தேன்....

இப்போது எல்லா ஊரிலும் பாக்கெட் பால் போல அப்பொது கிடையாது.. ஒரு பால்காரர் வந்து சைக்கிளில் கேன் வைத்து ஹார்ன் அடிப்பார். எல்லா குடித்தனகாரர்களும் போய் வாங்க வேண்டும்....எங்கள் வீட்டிற்கு நான் அந்த பொறுப்பை ஏற்று இருந்தேன்..இது எனக்கு ரப்பர் செய்ய வசதியாக போயிற்று..! பால் வாங்கிய பின் எல்லாரும் போனதும், வாசலில் புதைத்து வைத்திருந்த பென்சில் தோலுக்கு பால் ஊற்றுவேன்..!

இது 4 நாட்கள் இனிதே தொடர்ந்தது....5-ஆம் நாள் சற்று உணர்ச்சிவச பட்டு அதிகமாகவே பால் ஊற்றிவிட்டேன் போலும்! தினமும் பால் குறைவதை எங்கள் பாட்டி கவனித்து வந்தாரகள் போல! இன்று அதிகமாய் காணாமல் போனதும் சந்தேகம்..! கேட்டவுடன் என் ரப்பர் விஷயத்தை உளறி விட்டேன்! அதன்பின் என்ன நடந்திருக்கும் என்பதை நான் சொல்லவா வேன்டும்..உங்கள் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன். .. சரி..பாதி ரப்பர்-ஆவது கிடைக்கட்டும் என்று மண்ணை தோண்டி பார்த்ததில்....அங்கு பென்சில் தோல்ல் கூட இல்லை ரப்பருக்கு எங்கு போவது!! அதன் பின் பிரேம மயில் (இறகு) குட்டி போடும் என்று சொன்னதை நான் நம்பவே இல்லையே!!

7 comments:

துளசி கோபால் said...

அப்பக் குழந்தைகள் உலகப் பொது விஷயங்களான ரப்பர் செய்யறது, மயிலிறகு குட்டி போடறது
எல்லாம் எப்படிங்க ஒரே சமயத்துலே எல்லாப் பள்ளீக்கூடத்துக்கும் பரவுச்சு?
நினைச்சுப் பார்த்தா ஆச்சரியமா இருக்கில்லையா?

இப்பக் குழந்தைங்க இதையெல்லாம் நம்பறதில்லை(-:

KVR said...

//அப்பக் குழந்தைகள் உலகப் பொது விஷயங்களான ரப்பர் செய்யறது, மயிலிறகு குட்டி போடறது
எல்லாம் எப்படிங்க ஒரே சமயத்துலே எல்லாப் பள்ளீக்கூடத்துக்கும் பரவுச்சு?
நினைச்சுப் பார்த்தா ஆச்சரியமா இருக்கில்லையா?//

துளசியக்கா, இன்னொரு விஷயம் கவனிச்சு இருக்கிங்களா? ஆண்டு விடுமுறை நேரத்திலே விளையாடப்படும் விளையாட்டுகள் எல்லா ஏரியாவிலும் ஒரே நேரத்தில் மாறும். கிரிக்கெட், கிட்டிபுல், பட்டம், கைவண்டி, சைக்கிள் ரிம், பம்பரம் இப்படி மாறக்கூடிய விஷயங்கள் எல்லா ஏரியாவிலும் ஒரே மாதிரி இருக்கும். அது எப்டிடா நாம விளையாட நினைச்சதையே இவனுங்களும் செய்றானுங்க என்று ஆச்சர்யப்பட்டது உண்டு.

//இப்பக் குழந்தைங்க இதையெல்லாம் நம்பறதில்லை(-: //

ஐயோ நீங்க வேற, நியூசிலாந்தில் வேண்டுமானால் நம்பாமல் இருக்கலாம். நம்மூரு குழந்தைகள் அப்படியே தான் இருக்காங்க. என் மருமகளோடு உட்கார்ந்து அவளது பள்ளி கதைகள் கேட்டால் இது போன்ற பல விஷயங்கள் கிடைக்கும்.

சந்தனமுல்லை, நல்லா எழுதுறிங்க. நினைவோடைகள் என்றுமே சுகமானது. அதுவும் குழந்தைப்பருவ நினைவுகளை அதன் வாசனையோடே எழுதும்போது எளிதாக ஒன்ற முடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள். அஷோக் எங்கே இருக்கார் இப்போ :-)?

சே உங்க ஸ்கூல்ல வந்து படிச்சிருக்கலாம், ரெண்டு பொட்டப்புள்ளைங்களுக்கு நடுவிலே உட்கார வச்சிருப்பாங்க. என்னையும் +1/+2விலே பார்த்து எதுனா ஒரு பொண்ணு வெக்கப்பட்டிருக்கும். ஹ்ம்ம்ம் அதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும் :-).

பாவூரான் said...

நான் பள்ளிக்கூடம் சென்று திரும்பும் வழியில் என் பாட்டி வீடு ( வளத்தம்மைனு சொல்லணும் , வளத்தம்மைக்கு பேரு பாட்டின்னு எனக்கு தெரிய ரொம்ப நாள் ஆச்சு) இருக்கும்.

பாட்டி வீட்டுல பளபளன்னு ஒரு தூண் இருக்கும். தூண் உச்சியில ஒரு கொக்கி இருக்கும். அந்த கொக்கியில என் பையை ( school bag ) மாட்டிட்டுதான் நான் எங்க வீட்டுக்கு வருவேன்.

அப்புறம் ஒரே விளையாட்டுதான், இருட்ட தொடங்கினா, ஒவ்வொரு அம்மாவா பிள்ளையை தேடி வருவாங்க, சாப்பாடு கொடுத்து தூங்க வைக்க.

இப்போ பிள்ளைங்கல்லாம் பாவம், வீட்டு பாடம் எழுத சொல்லி கொடுமைப்படுத்துறாங்க.

Anonymous said...

Kewl mullai.. I just remembered my school days.. We make Pal rubber. When u have the "penicl - sharp pannadhu" along wiht milk in a thottankuchi.. and boil it after some days u wud get vellai rubber. Sadha rubberkku no paal :) lol

Also i ( okay wiht out friends) use to dig coins in a place..( coins means 5 paisa and ten paisas) saying that it will multiply and to our dismay after a week or so.. Ulladhum pochudaa nolla kanna :)

And we invented theories like how coudl that have dissappeared.. Probably because of the earths rotation. It woudl have moved somewhere.. Now dont ask me the logic.. But i was a strong believer in that...

Thanks for making me revisit my school days Mullai :)

Suresh C Nair

சுதர்சன்.கோபால் said...

கொசுவர்த்தியா சுத்தவச்சிட்டீங்களே முல்லை....

அமிர்தவர்ஷினி அம்மா said...

மயிலிறகு குட்டி போடறதும்,
ரப்பர் செய்யறதும்

இதெல்லாம் பள்ளிக்கால நம்பிக்கையில் சில.

அப்போது செய்த இவைகளை இப்பொது நினைத்தாலும் இனிக்கும்.
உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் தான் நம் வாழ்க்கையை சுவாரசியமாய் வைத்திருக்கின்றன்.

ராமலக்ஷ்மி said...

அருமையான நினைவுகள். முன்னரே துளசி மேடத்தின் பள்ளி நினைவுகளைப் படித்ததிலிருந்து எனக்கும் எனது பள்ளி நினைவுகளைப் பகிர்ந்திடும் எண்ணம் இருந்து வருகிறது. உங்கள் பதிவு அதை ’சீக்கிரம் செய்’ என்கிறது:)!

அந்த வயதிலேயே நீங்க செம உஷார்தான் முல்லை. துளசி மேடம் சொன்ன மாதிரி இந்தக் கால குழந்தைகள் இதையெல்லாம் நம்பவே மாட்டாங்க. பார்க்கலாமே பப்பு என்ன செய்யப் போறான்னு:))?