Tuesday, July 04, 2006

நினைவுகள்....

ஆம்பூர் என்றொரு சிற்றூர். பலருக்கு பிரியாணி மற்றூம் தோல் பதனீட்டு தொழிற்சாலைகளும் தான் நினைவுக்குவரும்...! எனக்கோ அது சொந்த ஊர்...சொந்த ஊர் என்பது எது என்பதில் எனக்கு மாற்றூக்கருத்து உண்டு.இது, என்னை போல, ஊர் மாறி பெற்றோர் வேலை மற்றூம் குடும்ப சூழல் நிமித்தம் வேற்று ஊரில் வளர நேரும் எல்லாருக்கும் இது ஒரு பிரச்சினை.

ஆம்புரில் அச்சு madras பாஷை பேசுவார்கள். நாங்கள் நல்ல அழகு தமிழில் (தென்னார்க்காடு தமிழில்)பேசுவோம் ..2 வார்த்தை பேசிய உடன் நீங்க எந்த ஊரு என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் (இது college வரை தொடர்ந்தது...(சேமை கிழங்கு, கருணை கிழங்கு , இருக்கு ..கீது)so,என்னை பொறுத்தவரை... ஒரு ஊரில் நாம் பிறப்பதினால் மட்டும் அது சொந்த ஊராகி விடாது..! எங்கு அதிக நண்பர்கள், பரிச்சயம், வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், வளர்ச்சிகள் நடைபெறுகிறதோ அதுவே சொந்த ஓர்..என்பது என் கருத்து! அப்படி பார்த்தால் நான் பிறந்த ஊராகிய தாய் வழி ஊரான வடலூர்-ஐ விட ஆம்புர் தான் என் சொந்த ஊராக இருக்க முடியும்..!

அப்படி என் பள்ளி படிப்பு, பால்யக்காலம், சுவாரசியம்மான நிகழ்ச்சிகள், நண்பர்கள்கூட்டம் இவை எல்லாம் எனக்கு ஆம்புர் -ல்யே வாய்த்தது.ஆம்புர்-ஐ என் சொந்த ஊர் என்பதில் என்க்கு பெருமை கூட! என் ஊரை தவிர முழுமையான ஊர் இருக்கவே முடியாதுயென நான் நீண்ட நாட்களாக நம்பி கொண்டிருந்தேன்..! கல்லூரிக்கு சென்று மற்ற பெரு நகரங்களை சேர்ந்தவர்களுடன் பழகும் வரை..! மேலும், vacation எங்காவது சென்று திரும்பி வரும் போது, Ambur Gate அல்லது Jolarpet Junctionவந்துவிட்டால் ஒரு பரபரப்பு என்னை தொற்றி கொள்ளும்..வீடு வர போகிறது என நானும் என் தம்பியும் பேசி கொள்வோம்!

மழை பெய்தால் கூட அது எங்கள் ஊருக்கு மட்டும் தான் பெய்யும்..என ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தேன்..! ஆம்புரை தாண்டி மழை பெய்யும் என கனவிலும் நினைக்க முடியாத நாட்கள் என் வாழ்விலுண்டு..!அது நான் சுதா convent-இல் 3வது நான்காவது படித்து கொண்டு இருந்தபோது..!
சரி! என் நினைவுகள் தொடரில், சுதா convent நாட்கள், Higher Sec பள்ளி நாட்கள், Hindi Tuition, பரிட்சை லீவுகள், Summer class, ரயில் பயணங்கள் என நான் ரசித்த எல்லாவற்றையும் எழுத போகிறேன். அவை அடுத்த Blog-ல்!!!

7 comments:

சுதர்சன்.கோபால் said...

வாங்க....வாங்க...முல்லை.

//எங்கு அதிக நண்பர்கள், பரிச்சயம், வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், வளர்ச்சிகள் நடைபெறுகிறதோ அதுவே சொந்த ஓர்..என்பது என் கருத்து//

ஒத்துக்கிறேன்.

//திரும்பி வரும் போது, Ambur Gate அல்லது Jolarpet Junctionவந்துவிட்டால் ஒரு பரபரப்பு என்னை தொற்றி கொள்ளும்..வீடு வர போகிறது என நானும் என் தம்பியும் பேசி கொள்வோம்!//

தோடா..நம்ம கேசு..

//மழை பெய்தால் கூட அது எங்கள் ஊருக்கு மட்டும் தான் பெய்யும்..என ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தேன்..! ஆம்புரை தாண்டி மழை பெய்யும் என கனவிலும் நினைக்க முடியாத நாட்கள் என் வாழ்விலுண்டு//

:-)

அடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

KVR said...

ஜோலார்பேட்டையில் இருக்கும் ஒரு நண்பனின் வீட்டிற்கு கல்லூரி விடுமுறையில் வந்திருந்தோம். நல்ல ஊர், மலையடிவாரத்தில் வீடு. ஆனால் ஊர் வந்து சேர்ந்தது தான் ஒரு பெரிய கதை. நாங்கள் கிளம்பும் அன்றா திமுக ஜெயலலிதாவை கைது செய்யவேண்டும், வழி முழுவதும் பயணத்திற்கு இடையூறுகள். இருந்தாலும் பின்வாங்காமல் பயணித்தோம்.

உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஏலகிரி மலை எனக்கு மிகப் பிடித்த இடம். அதனை பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள்.

எனது மற்றொரு நண்பன் ஆம்பூர்காரன் தான். தற்பொழுது வசிப்பது சிங்கப்பூரில்.

தொடர்ந்து எழுதுங்கள்.

ப்ரியன் said...

வாங்க முல்லை வாங்க

/*
மழை பெய்தால் கூட அது எங்கள் ஊருக்கு மட்டும் தான் பெய்யும்..என ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தேன்..! ஆம்புரை தாண்டி மழை பெய்யும் என கனவிலும் நினைக்க முடியாத நாட்கள் என் வாழ்விலுண்டு
*/

அட நான் மட்டும்தான் இப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன்...

நான் இருக்கும் ஊரில் மட்டுமே இயக்கங்கள் உண்டு என்று நம்பியவன் நான் :)

துளசி கோபால் said...

என்னங்க பேரே ரொம்ப கவிதையாவும் ஒரே வாசனையாவும் இருக்கு.


சொந்த ஊர் பற்றிய கருத்து ரொம்பச் சரி.

ப்லொக் உலகத்துக்கு வரவேற்கின்றேன்.

வாழ்த்து(க்)கள்.

இளவஞ்சி said...

தமிழ்ப்பதிவுலகில் உங்கள் வருகை இனிதே அமைய வாழ்த்துக்கள்! :)

செந்தழல் ரவி said...

வணக்கம் !!!

நிஜமா நல்லவன் said...

/இளவஞ்சி said...

தமிழ்ப்பதிவுலகில் உங்கள் வருகை இனிதே அமைய வாழ்த்துக்கள்! :)/

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்....