எப்போதும் தமிழ் வகுப்புகள் கடைசி பீரியடாகத்தான் இருக்கும். எப்போது பெல் அடிப்பார்கள் எனஎல்லாரும் காத்து கொண்டு இருக்கும் மகத்தான தருணம். அப்பொது மிஸ் ஹொம்வொர்க் செய்தாயா..கேள்வி பதில் எழுதினாயா என்று கேட்கும் போது ரொம்ப restless-ஆக இருக்கும். ஆனால் என்ன செய்வது...class-ஐ விட்டு ஓட முடியாதே..So...நேரத்தை கடத்திக் கொண்டு இருப்போம். புக்கில் உள்ள கேள்விக்கு நோட்டில் பதில் எழுத வேண்டும். அனேகமாக எல்லாரும் இதே நடைமுறையை தான் கடந்து வந்திருப்போம்.
ஹோம்வொர்க் நோட்டை எல்லாம் கலெக்ட் செய்து மிஸ் அருகில் உள்ள மேஜை-இல் வைக்க வேண்டும். அப்படி ஒருதடவை correction-க்கு வைக்குமுன்பு என் நோட்டில் எழுத்து பிழை இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது..மேலும் correct செய்யவும் தோன்றவில்லை. ஆனால் correction முடிந்து பார்த்த போது மிஸ் அதில் சுழிக்காதது பெரிதும் மகிழ்ச்சியை தந்தது. அப்படி என்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்கிறீர்களா....ஒன்றும்..இல்லை.."விடை தருக" என எழுதுவதற்க்கு பதில், " வடை தருக" என எழுதி இருந்தேன்..!
இதே போல் ஒரு நாள்....பெல் அடிக்க கடைசி 10 - 15 நிமிடங்களே இருந்தன. அப்போது மிஸ் வந்து H.W நோட்டை தரும்படி கேட்டார்கள். எனக்குத்தான் பயங்கர மறதி ஆயிற்றே! அப்போதுதான் ஞாபகம் வந்தது....முந்தின நாள் H.W பற்றி..!! இனி என்ன செய்ய முடியும்....சரி...கடைசி பென்ச் வருவதற்குள் பெல் அடித்து விடும் என நம்பிக்கையோடு அமர்ந்திருந்தேன். மிஸ் கேட்டதும்..செய்துவிட்டேன் என பொய் சொல்லி விட்டேன்....! (நான் முதன்முதலில் சொன்ன பொய்.அதாவது நினைவு தெரிந்து!!)
மிஸ் நோட்டை கலெக்ட் செய்து கொண்டு போய் விட்டார்கள். ஒவ்வொரு நோட்டை மிஸ் எடுத்து திருத்தும் போதும்....ஐயோ...பெல் அடித்துவிட வேண்டும்...அடித்து விட வேண்டும் என மனம் பதைத்து கொண்டிருந்தேன்!! ஆனால் நடந்த கொடுமை என்னவெனில் மிஸ் நான் H.W செய்யாததை நோட் செய்து அதை எழுத வைத்து விட்டார், பெல் அடித்தபின்பும் என்னை விடாமல்...!!! H.W பண்ணாமலும் சிலர் இருந்தார்கள்..அவர்களோடு அமர்ந்து செய்து முடித்தேன். அதன் பின் நடந்தது அதை விட கொடுமை....!
அந்த மிஸ் என் பெரிம்மாவின் ஸ்டுடென்ட். மேலும் பெரிம்மா மாலையில் அவர்கள் பள்ளி முடிந்து போகும் போது என்னை அழைத்து கொண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். நான் நோட்டை வைத்துவிட்டு கிளம்பும்போது பெரிம்மாவும் மிஸ்-உம் பேசி கொண்டிருந்ததை பார்த்து விட்டேன். ஒருவாறு பின்விளைவுகளை ஊகித்த நான் பெரிம்மாவுக்கு முன் வீடு வந்து சேர்ந்தேன். அவசர அவ்சரமாக பால் மற்றும் பேரிச்சம்பழத்தை உண்டு முடித்து விட்டு, விளையாட சென்ற நான் பெரிம்மாவின் டியுஷன் முடிந்ததும் நீண்ட நேரம் வீடு திரும்பாமல் தெருவிலேயே விளையாடிக்கொண்டிருந்தேன்.
பின்பு பாட்டி வந்து அழைத்ததும் சென்..றேன்...எனக்கோ..பயம்..மேஜை முன்பு பெரிம்மா..!!
ம்ம்..நமக்கு நைஸ் பண்ன கற்று தரவா வேண்டும்..அவர்களை பார்த்து ஒரு புன்சிரிப்பு..அட...பெரிம்மாவும் கூட..!
"என்ன செஞ்ச இன்னைக்கு..?" பெரிம்மா.
ஆனால் நான் எதிர்பார்த்தவாறு ஒன்றும் நடக்கவில்லை....!
ஒருவேளை நடந்திருந்தால், நான் அதிகம் பொய் சொல்லியிருப்பேனோ என்னவோ..???
7 comments:
//.."விடை தருக" என எழுதுவதற்க்கு பதில், " வடை தருக" என எழுதி இருந்தேன்..!//
வீட்டிலே அன்னைக்கு வடை கிடைச்சுதா?
உங்கள் பெரியம்மா ஒரு நல்ல ஆசிரியை என்று நினைக்கிறேன்.
/*.."விடை தருக" என எழுதுவதற்க்கு பதில், " வடை தருக" என எழுதி இருந்தேன்..!*/
ஹஹஹ :)
/*ஒருவேளை நடந்திருந்தால், நான் அதிகம் பொய் சொல்லியிருப்பேனோ என்னவோ..???*/
கண்டிப்பாக...பொய்கள் இப்படித்தானே ஆரம்பிக்கின்றன
test
Testing
சந்தனமுல்லை நல்லாத்தான் இருக்குங்க உங்க கடைசி பெஞ்ச் அனுபவம் ! :) நானும் கடைசி பெஞ்ச் தான் ! ஆமா நீங்க என்ன பெய்யே சொன்னது இல்லையா ? அதென்ன 'ரொம்ப பொய் சொல்லியிருப்பேனோ'ன்னு ஒரு வார்த்தை ?? :))
akka chancey illa.enna arumaiya ezhidhi irukkeenga......enakku romba pidithirukkiradhu.
enna
naanum ippadi maattiyadhundu adhaivida kodumai thiru thiruvena muzhithadhum undu.......
//வடை தருக//
:-))))
//எனக்குத்தான் பயங்கர மறதி ஆயிற்றே!//
same blood :-(
Post a Comment