Thursday, July 06, 2006

நினைவுகள் : தூங்காய்...கண்..தூங்காய்...!!

பள்ளி ஆரம்பித்து கொஞ்ச நாட்கள், அரைநாட்களாக இருந்த பள்ளி பிறகு முழு நாளாகமாறியது..! வீடு அருகில் இருந்த காரணத்தால் மதியம் வீட்டிற்க்கு போய் சாப்பிட்டுவிட்டு வரும்படி ஆயிற்று.

லன்ச்-க்கு பின்னர் சிறிது நேரம் பெஞ்சில் படுத்து தூங்க வேன்டும்..அதன் பின் 3 மணிக்கு தான் கிளாஸ் ஆரம்பம் ஆகும்..!ஆனால் 'துருதுரு' என்று இருக்கும் எங்களுக்கு ஏது தூக்கம்? பென்ச்-இல் படுத்தபடி நாங்கள் கதைத்து கொண்டு இருப்போம்!

எங்களை கண்காணிக்க ஒரு ஆயா கையில் குச்சியோடு ரவுண்ட்ஸ்..! ஆயா வரும் போது மட்டும் நாங்கள் ஸ்மார்ட்-ஆக கண்களை இறுக்கமாக ( ;-) )மூடி கொள்வோம்...தூங்குவதாக பாவனை செய்கிறோமாம். ஆனால் ஆயா அதற்கு மசியாமல், ஒரு அடி கொடுத்து விட்டு போவாள்.!!

கதை படிப்பதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம். பப்பா மஞ்சரி, கோகுலம், அம்புலிமாமா மற்றும் இந்து-இல் வரும் heathcliff போன்றவற்றை படிப்பேன்.அப்போது TV எல்லாம் அவ்வளவு பிரபலமாகாத காலம்.புத்தகங்கள் தான்பொழுதுபோக்கு..!பெரியவர்கள் படிக்கும் புத்தகஙலான ஆனந்தவிகடன், கல்கி போன்றவற்றை படிக்க அனுமதி இல்லை. ஆனந்த விகடன் படிக்க மிகவும் ஆசையாக இருக்கும்.ஆனால் தொட்டால் கூட கண்டு பிடித்து விடுவார்கள்...!

என் வீடு இருந்த தெரு முனையில் பப்ளிக் லைப்ரரி இருந்தது.என் பெரிம்மா teacher-ஆனபடியால் நிறைய அண்ணன்கள் tuition-க்கு வருவார்கள்..சாயங்காலவேளையில்...! வீடு முழுக்க கூட்டமாக இருக்கும்.அப்போது ஒரு அண்ணாவிடம் பெரிம்மா என்னை லைப்ரரிக்கு அழைத்து போக சொன்னார்கள்..

லைப்ரரிக்கு சென்றது ஒரு புதிய அனுபவமாக இருந்தது...உள்ளே நுழையும் முன் கையெழுத்திட வேண்டும். அதை ரொம்ப பெருமையாக உணர்ந்தேன்..!உள்ளே சென்றால் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள். .எங்கும் ஒரே நிசப்தம்..அந்த சூழல் வேறு புதிதாக இருந்தது.. சிறுவர் பகுதியிலிருந்து நான் ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு பென்ச்-இல் அமர்ந்தேன்.

அதை வாசிக்க தொடங்கினேன்...அதன்பின் எல்லாரும் என்னையே பார்ப்பதாக உணர்ந்தேன்......ஆம் எல்லாரும் என்னைதான் உற்று பார்த்து கொண்டிருந்தார்கள்.!!!எனக்கு அப்போது மனதிற்குள் படிக்கும் வழக்கம் ஏற்படாததினால்..வீட்டில் படிப்பது போலவே சத்தம் போட்டு படித்து கொண்டிருந்தேன்.!! இப்போது தெரிந்ததா ஏன் எல்லாரும் என்னையேபார்த்துகொண்டிருந்தார்களென்று?

என்னை கூட்டி கொண்டு வந்திருந்த அண்ணாவோ லைப்ரரியனை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தார்...பின் நாங்கள் வெளியே வந்து விட்டோம்..! வீட்டில் நீண்ட நாட்களுக்கு இதுவே பேச்சாக இருந்தது

3 comments:

துளசி கோபால் said...

ரொம்பச் சின்னதா இருக்கும்போதே லைப்ரரியா?

பேஷ் பேஷ்.

KVR said...

எனக்கு சத்தம் போட்டு படிக்கும் பழக்கம் சிறு வயது முதலே இல்லாததால், இந்த அனுபவம் இல்லை :-).

ஆனால் நூலகத்தில் வேறு விதமான அனுபவம் உண்டு. நான் செல்லும் நூலகம் எப்பொழுதும் நல்ல கூட்டமாக இருக்கும். நான் படிக்க விரும்பும் புத்தகம் வேறு யார் கையிலாவது இருந்தால் அவருக்கு அருகில் வேறு எதாவது ஒரு வெட்டி புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்துகொள்வேன். அவர் அந்தப் புத்தகத்தை முடிக்கும் வரையில் அவர் புத்தகத்திலேயே கண்ணை வைத்திருப்பேன். அவர் புத்தகம் மூடி வைத்த அடுத்த நொடி அது என் கைக்கு வந்துவிடும். கொக்கு மீனைப் பிடிக்கிற மாதிரி ;-)

கையேடு said...

எங்கேயோ துவங்கி, சித்திரக்கூடத்தினுள் இருக்கும் லைப்ரரியில் விழுந்துவிட்டேன்.

இப்போதான் புரியுது.. :)