Wednesday, July 15, 2009

சுவாரசியமான வலைப்பதிவு விருதுகள்

எதிர்பாராமல் ஒரு கிடைத்த ஒரு பூச்செண்டு போல மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அமித்து அம்மாவிடமிருந்து கிடைத்த “சுவாரசியமான வலைப்பதிவு விருது”!

நன்றி அமித்து அம்மா !தொடங்கி வைத்த செந்தழல் ரவிக்கு நன்றிகள்!வலைப்பதிவுகளே சுவாரசியம்தானே! எனக்கு எல்லா வலைப்பதிவுகளுமே சுவாரசியம்தான். நாஸ்டால்ஜிக் இடுகைகள் பிடிக்கும் - நகைச்சுவை பிடிக்கும்- பயணக்கட்டுரைகளில்
புகைப்படம் பார்க்கப் பிடிக்கும் - மொக்கைகள் மிகவும் பிடிக்கும் -கதைகள் பிடிக்கும் -கவிதைகளும்தான் - அனுபவங்கள் பிடிக்கும் - நான் நினைப்பதை பிறர் அழகாக எழுத்தில் கொண்டுவருவதை படிக்கப் பிடிக்கும் - மொத்தத்தில் வலைப்பதிவுகளின் எல்லா சுவாரசியங்களுமே பிடிக்கும்! இதில் ஆறு பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்தான்! எனினும், ஆறு வலைப்பதிவுகளுக்கு வழங்கியிருக்கிறேன். அதைத் தொடர்வது அவரவர் விருப்பம்!

ராப் : இவரது வலைப்பதிவு மட்டுமல்ல-பிறர் பதிவுகளில் இவர் என்ன மறுமொழி இட்டிருக்கிறார் என்று பார்த்து ரசிக்கும் அளவிற்கு இவரது ஸ்டைல் பிடிக்கும். காமெடியும், அதைச் சொல்லும் பாணியும் என்னை மிகவும் கவர்ந்தவை. எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து சிரிக்கலாம்! அலுவலகத்திலே பலமுறை வாய் விட்டு சிரித்திருக்கிறேன்! ராப்- யூ ஆர் ராக்கிங்!! வாழ்த்துகள் ராப்!!

தீபா : ஒரு சுவாரசியமான வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். சமூகம்,சிந்தனைகள் என்ற லேபிளின் கீழ் வரும் இவரது, எல்லா படைப்புகளுமே என்னை கவர்ந்தவை. மிக அழகாக நாம் நினைப்பதையே எழுத்தில் கொண்டு வந்துவிடுவார். மிஷா-வை பற்றி எழுதியதில் இருந்து தொடர்ந்து இவரது பதிவுகளை வாசித்து வருகிறேன்! வாழ்த்துகள் தீபா!

கைப்புள்ள : கைப்புள்ள-இன் வலைப்பதிவில் சுவாரசியங்களுக்கு என்றுமேக் குறைவு இருந்ததில்லை. தடிப்பசங்க-லிருந்து, நாஸ்டால்ஜிக் இடுகைகள், பயணங்கள், அனுபவங்கள் என்று கலக்குவார். கலக்கலான வலைப்பூ.நெடுநாட்களாக ஒரு மௌனமான வாசிப்பாளராக இருந்து இப்போது அதையெல்லாம் மறுமொழிகளில் ஈடு கட்டிக் கொண்டிருக்கிறேன்! :-) வாழ்த்துகள் கைப்ஸ்!

ஈழத்துமுற்றம் : இது ஒரு குழு வலைப்பதிவு.மிக சுவாரசியமான வலைப்பதிவு.கானாவை எணேய் என்றால் என்ன அர்த்தம்,பாற்றரி-னே சொல்லுவீங்களா, ரீச்சர் எபப்டி கூப்பிடுவீங்க என்று நிறைய நாட்கள் தொணதொணத்து இருக்கிறேன்.அதற்கு எல்லாம் இனி இங்கே பதில் கிடைக்கும். இது ஈழத்து வாழ்க்கையை, அவர்கள் வாழ்க்கைமுறையை,
அனுபவங்களை அசைப்போடும் வலைப்பதிவு!எல்லாவற்றுக்கும் மேல் நீண்டநாட்கள் மௌனம் காத்த சிநேகிதியின் மௌனம் கலைத்த வலைப்பதிவு! எல்லாரையும் ஒருங்கிணைத்த கானாவிற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்!! தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே!!

சோம்பேறி : இவரது நகைச்சுவை பதிவுகளும் அவரது நகைச்சுவை பாணியுமே கலக்கலாக இருக்கும்! அவரது கேப்ஷன் மிகவும் பிடிக்கும்! 32 கேள்விகள் தொடர் பதிவும் , ரெண்டாப்பு படிச்சியாய்யா இடுகையும் ரசித்து படித்தவை! பள்ளி அல்லது கல்லூரி இந்தமாதிரி ஒருத்தர் இருந்தால் போதும்-சூழலை இயல்பாகவும் கலகலப்பாக்குவதற்கும்!! வாழ்த்துகள் சோம்பேறி!

சின்ன அம்மிணி : இவரது சிறுகதைகளும் அனுபவப்பகிர்வுகளும் மிகவும் பிடிக்கும்! ஆஸ்திரேலியா பற்றிய இடுகைகளும் சுவாரசியமானவை. இப்போது சமீபத்தில் மொக்கையிலும் குறைந்தவரில்லை என்று நிரூபித்திருக்கிறார். :-) வாழ்த்துகள் சின்ன அம்மிணி!


குறிப்பு:

நீங்களும் எல்லோருக்கும் இந்த விருதை பகிர்ந்துகொள்ளுங்கள், முக்கியமாக அந்த விருதுப் படத்தை உங்கள் ப்லாகில் இட்டுக்கொள்ளுங்கள்.

29 comments:

குடுகுடுப்பை said...

எல்லாருக்கும் வாழ்த்துக்கள். நான் ஆறு பேர கண்டுபிடிக்கனும் அதுவே பெரிய சுவராஸ்ய வலைப்பதிவர் தேடல் ஆயிடும்னு நினைக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஈழத்துமுற்றம் இப்பத்தான் பார்த்தேன்..
எல்லாரைப் பற்றியும் அழகா சொல்லிட்டீங்க.. :)

கானா பிரபா said...

விதவிதமான பாணியில் எழுதுவோருக்கு விருது கொடுத்திருக்கீங்க, நன்றியும் வாழ்த்துக்களும்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனைவருக்கும் வாழ்த்துகள்

சென்ஷி said...

விருது பெற்றமைக்கும் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..!

கலையரசன் said...

//முக்கியமாக அந்த விருதுப் படத்தை உங்கள் ப்லாகில் இட்டுக்கொள்ளுங்கள்.//

நீங்க எங்க போட்டுருக்கீங்க இந்த படத்தை? கண்னுக்கு தெரியலையே!!

பதக்கம் கொடுத்த உங்களுக்கும், அதை வாங்கிய அனைவருக்கும், நம்ம வாழ்த்துகள்!!

rapp said...

எங்க விருது எங்க விருது? ஹா ஹா ஹா, ஹாய் ஜாலி, இந்த வாட்டி நான் பரிதாபமா அங்க இங்க சுத்திப் பாக்கறத்துக்கு முன்ன எனக்குக் கெடச்சிருச்சி:):):) முல்லை ரொம்ப ரொம்ப நன்றி:):):)

rapp said...

//ஈழத்துமுற்றம் இப்பத்தான் பார்த்தேன்..//

me too:(:(:(
எப்டித்தான் மிஸ் பண்றமோ?:(:(:(

வந்தியத்தேவன் said...

எங்கள் ஈழத்துமுற்றத்துக்கு விருதுகள் கொடுத்ததற்க்கு நன்றிகள். அடிக்கடி அந்தப்பக்கம் வாங்கோ நிறைய விசயம் இருக்கு.

rapp said...

//காமெடியும், அதைச் சொல்லும் பாணியும் என்னை மிகவும் கவர்ந்தவை. //

ஐ ஆம் எ சீரியஸ் பெர்சன் யு னோ? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..................:):):)

இப்படிக்கு,
பேரிச்சம் பழ போஸ்டை ரசிப்போர் சங்கம்.

சின்ன அம்மிணி said...

நன்றி முல்லை.

G3 said...

Vaazhthukkal viruthu vaangiya ungalukkum unga kitta irundhu vaangikitta makkalukkum :)))

செந்தழல் ரவி said...

விருது பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...

!!!!!!!!!

நிஜமா நல்லவன் said...

விதவிதமான பாணியில் எழுதுவோருக்கு விருது கொடுத்திருக்கீங்க, நன்றியும் வாழ்த்துக்களும்.

கோமதி அரசு said...

"சுவாரசியமானவலைப்பதிவு விருது” பெற்ற முல்லைக்கு வாழ்த்து.
விருது பெற்ற மற்ற எல்லோருக்கும்
வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

உங்களுக்கும்...உங்களிடம் இருந்து விருது பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள் ;)

கைப்புள்ள said...

அடடா! விருது எனக்குமா? ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க முல்லை. மிக்க நன்றி.
:)

வண்ணத்துபூச்சியார் said...

விருது பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...

மாதவராஜ் said...

உங்களுக்கும், உங்களுக்கு விருது கொடுத்தவருக்கும், உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

ஆகாய நதி said...

My best wishes to all! :)

Congratulations!

ஆகாய நதி said...

விருது பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்... :)

Deepa said...

நன்றி முல்லை!

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

நிஜமா நல்லவன் said...
விதவிதமான பாணியில் எழுதுவோருக்கு விருது கொடுத்திருக்கீங்க, நன்றியும் வாழ்த்துக்களும்.//

avvv en comments ai copy adichuddaare ;-))

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள்

விக்னேஷ்வரி said...

வாழ்த்துக்கள் விருது வாங்கிய உங்களுக்கும், உங்களிடமிருந்து அதை வாங்கியவர்களுக்கும்.

♫சோம்பேறி♫ said...

ரொம்ப சந்தோஷம் சந்தனமுல்லை.. ஊரிலயிருந்து இப்போ தான் வந்தேன்.. லேட்டான நன்றிக்கு ஸாரி.

தீஷு said...

விருதுக்கு வாழ்த்துகள் முல்லை.

சினேகிதி said...

\\எல்லாவற்றுக்கும் மேல் நீண்டநாட்கள் மௌனம் காத்த சிநேகிதியின் மௌனம் கலைத்த வலைப்பதிவு! எல்லாரையும் ஒருங்கிணைத்த கானாவிற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்!! தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே!!\\

உண்மை உண்மை :) நன்றி நன்றி :)