Friday, July 03, 2009

Cat & Catterpillar!

செய்தித்தாளுடன் வந்திருந்த ஃப்லையரில் இருந்த C ஐ பப்பு அடையாளம் காட்டினாள். அதை வெட்ட சொன்னேன். பின்னர், வளையலால் சார்ட் பேப்பரில் வட்டங்கள் போட வேண்டும். அதை வெட்ட வேண்டும். அதை ஒட்டி caterpillar செய்யப் போகிறோம் என்று சொல்லி ஒரு வட்டத்தைச் செய்துக் காட்டியதும், இதில் எப்படி கேட்டர்பில்லர் செய்யப் போகிறோம் என்ற குதூகலத்துடனே, மீதியைத் தானாகவே செய்தாள். ஓரிரு வட்டங்கள் வடிவம் சரியாக வரவில்லை(படத்தைப் பெரிதாக்கினால் தெரியும்!). பின்னர் வெட்டி முடித்து எல்லாவற்றையும் ஒட்டினாள். சில இடங்களில் பொருத்துவதற்கு இடத்தை நான் காட்ட வேண்டியிருந்தது. ஒட்டி முடித்ததும் கண்கள் வரையச் சொன்னேன். அவளாகவே வாலையும், காதுகளையும், மூக்கையும் வரைந்தாள்!இது ஸ்பான்ஞ் கொண்டு செய்தது. பூரிகட்டையில் அலுமினியம் ஃபாயிலை சுற்றி அதில் ஸ்பான்ஞ்ச்-ஐ ரப்பர் பான்டால் கட்டிவைத்தேன். தட்டில் அவளாகவே வண்ணங்களை குழைத்தாள். பூனை பொம்மையை மஞ்சள் சார்டில் வரைந்துத் தந்தேன். அதில் பூரிக்கட்டையால் வண்ணங்களைக் கொண்டு உருட்ட வேண்டும். ஒரு தடவை செய்துக் காட்டியதும் முழு சார்ட்டிலும் பூரிக்கட்டையால் உருட்டி வண்ணப்படுத்தினாள். பின்னர் அதை வெட்டச் சொன்னேன். வால் பகுதியில் என்னை வெட்டச் சொன்னாள். வெட்டியபின் வேறு சார்ட் பேப்பரில் ஒட்டினாள்!

அப்புறம் இந்த ABC புக்கை படித்தோம். எழுத்துகளை சொல்லித்தராம, ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கும் வாக்கியங்களை வாசித்தோம். ஒவ்வொரு எழுத்துக்கான ஒரு ஸ்டிக்கர் முதல்பக்கத்தில் இருந்தது. பப்புவின் வடலூர் ஆயா, பப்புவுக்கு கொடுத்தது இது. அவர் கொடுத்தவுடனேயே, ஸ்டிக்கரைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாத பப்பு, ஆயாவோட உதவியுடன் ஒட்டியிருந்தார். அதனாலே ஸ்டிக்கர் வேலை மிச்சம். வாக்கியங்களை சொல்லச் சொல்ல அவளும் திரும்பச் சொன்னாள்!நல்ல படங்களோட கொஞ்சம் ஃபன்னியாகவும் இருக்கு. இதன் விலை ரூ 85. உதாரணத்துக்கு, ஒரு பக்கம் இங்கே! நல்ல ABC புத்தகம் வித்தியாசமானதா உங்களிடம் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!

19 comments:

ராமலக்ஷ்மி said...

WOW! Cat & Catterpilar ரொம்ப நல்லா வந்திருக்கு பப்பு! Congrats!

G3 said...

Pudhusu pudhusa kathu thareenga ;) Pesama pappu kooda sendhu naanum kathukkalaamnu irukken ;)

//ஓரிரு வட்டங்கள் வடிவம் சரியாக வரவில்லை(படத்தைப் பெரிதாக்கினால் தெரியும்!)//

Kettaangalaa... yaaravadhu ippo idhai kettangala.. padayappa senthil stylela padikkanum :D

ஆயில்யன் said...

சூப்பரூ!

ஏபிசி அனிமேஷன்ஸ்ல எங்காயாச்சும் இருந்தா சொல்லுங்க பாஸ் :)

மயில் said...

குட். எப்படி இருந்தால் தான் குழந்தைகள் நல்ல படைப்பு திறன் உருவாகும்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

caterpillar நல்லா வந்திருக்கு.

அந்த ஸ்பான்ஞ் செய்முறை விளக்கம் எனக்கு கொஞ்சம் புரியல.

ABC book - thanks for info.

CHENNAILA எங்க கிடைக்கும்

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............இதயெல்லாம் நான் 3 ஆம் வகுப்பு படிக்கறப்போதான் செஞ்சதா ஞாபகம், நீங்க என்னடான்னா, இப்பவே சூப்பர் சூப்பரா வெட்ட கத்துக் கொடுக்கறீங்களே, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............மீ தி காம்ப்லக்சிட்டி நவ். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

rapp said...

உண்மையச் சொல்லுங்க, அந்தப் பூனை பொம்மைய இம்புட்டு அழகா வரஞ்சதும் பப்புதான, நைசா உங்கப் பேரை எடுத்துவிடறீங்களா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..................

rapp said...

அதெல்லாம் இருக்கட்டும், பப்ளிஷ் பண்ணறப்போ, டேட் மாத்த மாட்டீங்களா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................
பப்புவோட ஆர்ட் கலெக்ஷன்ஸ் போட்டதால கம்னு போறோம்.

இப்படிக்கு,
முன்னயே வந்து பாத்தா,
ஏமாந்த சோனகிரி

கவிதா | Kavitha said...

//மீ தி காம்ப்லக்சிட்டி நவ். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......//

நோ நோ..பொறாமை... !! :)

முல்ஸ் - பப்புக்கிட்ட சொல்லுப்பா கேட்டர்பில்லர் சூப்பர்..!!

//அவளாகவே வாலையும், காதுகளையும், மூக்கையும் வரைந்தாள்!//

ம்ம் அது.. பப்புன்ன்னா சும்மாவா?

ஆமா முல்ஸ் நிஜமா இவ்வளவு டைம் நீங்க அவக்கூட செலவு செய்யறீங்களா? இருக்கா? ம்ம். கிரேட் மாம்..அண்ட் கிரேட் கிட்.. :)) வாழ்த்துக்கள் !!

Deepa said...

cat & caterpillar சூப்பரா வந்திருக்கு. கங்க்ராட்ஸ் பப்புக்குட்டி!

அப்புறம் முல்லை, ஏனோ நேற்று முழுதும் இந்தப் பதிவு என் blog list -ல் தெரியவில்லை. இன்று பார்த்தால் 2 days ago என்று தெரிகிறது.

மங்களூர் சிவா said...

சூப்பர்!

Anonymous said...

great that you have time to spend with your kutty ! It nice to the work.. I am sure all kids love to play with this type of learning..

We have few books..will check and update. Bought Ist grammar and I st spelling from Scholastic India.. It was good .I sit with My 1st daughter Nisha(now 2nd st) and finish 80% the books.!! in the summer holiday !

VS Balajee
F/o Nisha and Ananya

தீஷு said...

நல்லா ஐடியாக்கள் முல்லை. நாங்களும் முயற்சித்துப் பார்க்கிறோம்.வட்டங்களை அருமையா கட் பண்ணியிருக்கிறா முல்லை.

//அவளாகவே வாலையும், காதுகளையும், மூக்கையும் வரைந்தாள்! //
சமத்து பப்பு..

பூனையும் நல்லாயிருக்கு.

வித்யா said...

very good pappu:)

நசரேயன் said...

நல்லா இருக்கு வாழ்த்துக்கள் பப்பு

குடுகுடுப்பை said...

அருமை பப்பு, படத்தில் உன் பெருமிதம் தெரிகிறது.

உங்கள் பொறுமைக்கும் கடமைக்கும் வாழ்த்துக்கள் சந்தனமுல்லை& முகில்

மாதவராஜ் said...

ரசித்தேன்...

சந்தனமுல்லை said...

நன்றி ராமலஷ்மி, பப்புவிற்கு சொல்லி விடுகிறேன்!

நன்றி g3..கண்டிப்பா வாங்க..உங்களை பப்புகிட்டே விட்டுட்டு நான் எஸ்கேப் ஆகறேன்! ஹிஹி!

நன்றி ஆயில்ஸ், ஆன்லைன்லே இருக்குமே பாஸ்!

நன்றி மயில்!

நன்றி அமித்து அம்மா, பூரிக்கட்டையிலே, ஸ்பான்ஞ் துண்டுகளை இறுக்கமா கட்டிடுங்க, வண்ணங்களில் தோய்த்து சார்டில் உருட்டனும்! புரியற மாதிரி சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்!

நன்றி ராப், அவ்வ்வ்..நான் வரைஞ்சதுதான்..பப்பு வரைஞ்சதுன்னு நினைக்கற அளவிலே இருக்கு பார்த்தீங்களா..அவ்வ்வ்! இப்போ மாத்திட்டேன் ராப்!!

சந்தனமுல்லை said...

நன்றி கவிதா! ராப் பொறாமைன்னு சொல்லலியே..காம்ப்ளக்ஸ்ன்னு தானே சொல்லியிருக்காங்க!!ஹிஹி..இது எல்லாம் அவகிட்டே ஸ்டார்ட் செஞ்சு விட்டுட்டா..நாம ஃப்ரீயா இருக்கலாமேன்னுதான்! :-)

நன்றி தீபா..டிராஃப்டி-ல் இருந்ததை அப்படியே பப்ளிஷ் செய்துவிட்டேன், இப்போது மாற்றியிருக்கிறேன்!

நன்றி சிவா!

நன்றி பாலாஜி, தங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது, புத்தகங்களை பற்றி பகிர்ந்துக் கொள்ளூங்கள்!


நன்றி தீஷூ, வித்யா, நசரேயன்!

நன்றி குடுகுடுப்பை..:-)

நன்றி மாதவராஜ்!