Tuesday, June 30, 2009

Z is for Zoo!

வண்டலுர் ஜூ. எனக்கு ஐஞ்சு வயசா இருக்கும்போது எங்க ஆயா என்னையும் இளஞ்செழியனையும் கூப்பிட்டு போனாங்க. ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தாங்க. நாங்களும் சாப்பிட்டிக்கிட்டிருந்தோம். கடைசிலே ஆயாக்கும் ஐஸ்கிரீம்-காரருக்கும் சண்டை. என்னன்னா, அவர் 'ரெண்டு அர்ரூபா' ரெண்டு அர்ரூபா' ன்னு சொன்னாராம். கடைசிலே ஐஞ்சு ரூபா கேட்டுருக்கார்.எங்க ஆயா 'ரெண்டு ஐஸ்க்ரீம் அரை ரூபா'ன்னு நினைச்சு வாங்கிக் கொடுத்திருக்காங்க!இப்போவரைக்கும் எங்க ஆயா அதை மறக்கலை..போன சனிக்கிழமை பப்புவை கூப்பிட்டு போறோம்-ன்னு சொன்னதும் அவங்க இதை திரும்ப எங்களுக்கு (10001வது தடவையா) ரி-ப்ளே பண்ணாங்க!எனக்கு இதெல்லம் ஞாபகம் இல்லை..ஆனா ஒரு யானை மேலே ஏறனும்னு அடம் பிடிச்சது மட்டும் ஞாபகம் இருக்கு!

எட்டாவது படிக்கும்போது எங்க ஸ்கூல் டூர். வண்டலூர் ஜூ, வேடந்தாங்கல் அப்புறம் மகாபலிபுரம். ரொம்ப ஜாலியா இருந்துச்சு. யாரு அனிமல்ஸை பார்த்தது...ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஃபோட்டோ எடுக்கறதும், க்ரூப்பா பாட்டு பாடறதும், ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடறதும், ஜன்னல்கிட்டே நீ எனக்கு இடம் தரலைன்னு சண்டை போடறதுமா இருந்துச்சு! உள்ளேயே ட்ரெயின் ஓடுது..அதுல போகலாம்-ன்னு டூர் ஆர்கனைசர் வேற பில்டப்! ஒரு tram-ஐ காட்டி ட்ரெயின்-ன்னு சொல்லி ஏமாத்தினாங்களே..அவ்வ்வ்...அந்த ட்ராம் இன்னும் இருக்கு!


'ட்ரெயின் புகழ்' ட்ராம்!

மிருகங்களை பயமுறுத்த மூனு வழி இருக்கு.

1.நடந்தே போய் பார்க்கலாம்
2.வாடகை சைக்கிள் கிடைக்குது.
3.அப்புறம் ‘ஜூ உள்ளேயே ஓடற ட்ரெயின்'. (ஒரு மணிநேரம் ரவுண்ட்)

சைக்கிள்லே என்னையும் பப்புவையும் வைச்சு முகில் ஓட்டினாலும் சைக்கிள் தாங்குமானு டவுட் இருந்ததாலே ட்ராம்-க்கு டிக்கெட் வாங்கினோம். எவ்வளவு சீக்கிரமா போறீங்களா அவ்வளவு சீக்கிரம் டிக்கெட் கிடைக்கும். (10 ரூபாய் - சிறாருக்கு, 20- ரூபாய் - பெரியவர்களுக்கு)நாங்க போனப்போ ரெண்டு ஸ்கூல்-லேர்ந்து வந்திருந்தாங்க.11.30 மணிக்கு போனோம், ஆனா மதியம் 2.15-க்குதான் டிக்கெட் கிடைச்சது. அன்னைக்கு வெதர் ரொம்ப நல்லா இருந்துச்சு! அதனால, கொஞ்ச நேரம் நடந்து சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். நல்லா சுத்தமா வச்சிருந்தாங்க. பப்பு அதைத்தான் காடுன்னு நினைச்சுக்கிட்டா. ”காஆஆடு, ஐஸ்க்ரீம் தீவு..நாம அப்புறம் எங்கே போறோம் டோரா'ன்னு கேட்டுக்கிட்டிருந்தா. பப்புவிற்கு ஏப்-தான் ரொம்ப பிடிக்கும். 'ஏப் வந்து எனக்கு எக் கொடுக்கபோகுதா'ன்னு கேட்டா.அவ்வ்வ்! (ஒரு மூவிலே, தன் வீட்டுக்கு வந்த ஒரு பொண்ணுக்கு ஏப் காலையில் பால், முட்டை எல்லாம் தட்டில் வைத்து எடுத்து வரும்!!)

மயில், பலவித கிளிகள், குரங்குகள், மேலும் குரங்குகள், மேலும் மேலும் குரங்குகள்-ன்னு பார்த்துட்டு, ஒரு கல்மண்டபதுலே உட்கார்ந்து கொண்டு வந்த சாப்பாடு, நொறுக்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு சரியா ரெண்டு மணிக்கு ட்ராம் வர்ற இடத்துக்கு போய்ட்டோம். அந்த ட்ராமிலே போறதும் ஜாலியாதான் இருந்துச்சு. நாம நடக்கற வேகம்தான்...;-). அங்கங்கே நிறுத்தி 10 நிமிஷம் டைம் கொடுக்கறாங்க. அதுக்குள்ளே பார்த்துட்டு வந்துடனும். பப்பு, பார்க்கிற மிருகங்களையெல்லாம் 'ஏன் அது என்கூட பேச மாட்டேங்குது' னு கேட்டுக்கிட்டிருந்தா. அவ்வ்வ்..the animated CDs n TV programs!! புலி பாட்டுக்கு அந்தப் பக்கம் போய்க்கிட்டிருக்கு. 'புலி புலி' ன்னு கூப்பிட்டா அது திரும்பி பார்க்குமா என்ன?! (நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது!!)

புலி, வெள்ளை புலி, ஹிப்போ, மான்கள், யானை, ஜீப்ரா, ஜிராஃப் எல்லாம் முடிச்சுட்டு 3.15-க்கு ஏறின இடத்துக்கே வந்துட்டோம். லேசா தூறல். வெளிலே வந்தப்புறம் செம மழை. பப்புவிற்கு வரவே மனசில்லை. நான் உள்ளேயே இருக்கேன்னு சொல்லிட்டு திரும்பி உள்ளேயே ஓடறா! ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை, நாம வீட்டுக்கே போகலாம்-ன்னு சொல்ல நினைச்சேன்..ஹிஹி்..செல்ஃப் டேமேஜாகிடும்ன்னு விட்டுட்டேன்! ;-))

நுழைவு கட்டணம் : பெரியவர்களுக்கு - 20 ரூ சிறார் - 10 ரூ
காமெரா கட்டணம் : 25 ரூ
நுழைவாயில் தாண்டி, உள்ளே ஒரு TTDC உணவகம் இருக்கு. மினரல் வாட்டர் வேணா வாங்கிக்கலாம். ட்ராம்/வாடகை சைக்கிளுக்கு கட்டணம் தனி. பொதுவான ஜூ ரவுண்ட்-உம், லயன் சஃபாரி-யும் இருக்கு. ஜூ ரவுண்ட் ஒரு மணி நேரம் - எல்லா மிருகங்களும்! லயன் சஃபாரி - 30 நிமிடங்கள் - சிங்கங்கள் மட்டும் - ஆனால் வெகு அருகில் பார்க்கலாம்! ஜு உள்ளே சென்றால் ஆவின் ஐஸ்க்ரீம் கடை இருக்கு. அது ஒன்னுதான் கொஞ்சம் ஆறுதல். மற்றபடி வேறு உணவகங்கள் எதுவும் இல்லை. குடிநீர், நொறுக்குத்தீனி, சாப்பாடு, தொப்பி கொண்டு செல்வது நல்லது!

26 comments:

ஆயில்யன் said...

மீ த .......

ஆயில்யன் said...

மீ த ஸ்டார்ட் கும்மி :)))))

ஆயில்யன் said...

//மிருகங்களை பயமுறுத்த மூனு வழி இருக்கு. 1.நடந்தே போய் பார்க்கலாம்///


நடந்தே போய் பயமுறுத்துறதுன்னு வரணும்! இது என்னாடா நம்மளை அடைச்சு இங்க போட்டுட்டு இதுங்கள வெளியில சுத்தவிட்டிருக்காணுவோன்னு அப்புறம் மிருகங்கள் எல்லாம் கூட்டம் போட்டு ஃபீல் பண்ணும்!:))

ஆயில்யன் said...

//சைக்கிள்லே என்னையும் பப்புவையும் வைச்சு முகில் ஓட்டினாலும் சைக்கிள் தாங்குமானு டவுட் இருந்ததாலே//

ஆண்டவனுக்கு நன்றி - டவுட் மாதிரி வந்து சைக்கிளை காப்பாத்துனதுக்கு

ஆயில்யன் said...

//ஏப் காலையில் பால், முட்டை எல்லாம் தட்டில் வைத்து எடுத்து வரும்!//

அதுக்கு யார் கொடுப்பா பாஸ்????

ஆயில்யன் said...

//குரங்குகள், மேலும் குரங்குகள், மேலும் மேலும் குரங்குகள்-ன்னு பார்த்துட்டு, ஒரு கல்மண்டபதுலே உட்கார்ந்து கொண்டு வந்த சாப்பாடு, நொறுக்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு சரியா ரெண்டு மணிக்கு ட்ராம் வர்ற இடத்துக்கு போய்ட்டோம்.//

பாக்க வந்தது எங்களை தின்னு தீர்த்தது நீங்களான்னு
எதாச்சும் ஒரு பாட்டி அல்லது தாத்தா ஃபீல் பண்ணியிருக்குவாங்க :(

ஆயில்யன் said...

//(நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது!!)//

கடுமையாக கண்டிக்கிறேன்!

ஆச்சி நீங்க இப்படி நெறையா நெறையா பப்புவுக்கு சொல்லிக்கொடுங்க !

ஆயில்யன் said...

//நான் உள்ளேயே இருக்கேன்னு சொல்லிட்டு திரும்பி உள்ளேயே ஓடறா!///

அட நாங்களே வெளியில இருக்கோம் நீங்க எங்கம்மா போறன்னு ஒரு டைமிங் கமெண்ட் நானா இருந்தா கொடுத்திருப்பேன்! :))))

ஆயில்யன் said...

//நுழைவாயில் தாண்டி, உள்ளே ஒரு உணவகம் இருக்கு. மினரல் வாட்டர் வேணா வாங்கிக்கலாம். //

ஒன்லைன்ல TTDC டோட்டல் டேமேஜ்

துபாய் ராஜா said...

//"நுழைவு கட்டணம் : பெரியவர்களுக்கு - 20 ரூ சிறார் - 20 ரூ
காமெரா கட்டணம் : 25 ரூ
நுழைவாயில் தாண்டி, உள்ளே ஒரு TTDC உணவகம் இருக்கு. மினரல் வாட்டர் வேணா வாங்கிக்கலாம். ட்ராம்/வாடகை சைக்கிளுக்கு கட்டணம் தனி. பொதுவான ஜூ ரவுண்ட்-உம், லயன் சஃபாரி-யும் இருக்கு. ஜூ ரவுண்ட் ஒரு மணி நேரம் - எல்லா மிருகங்களும்! லயன் சஃபாரி - 30 நிமிடங்கள் - சிங்கங்கள் மட்டும் - ஆனால் வெகு அருகில் பார்க்கலாம்! ஜு உள்ளே சென்றால் ஆவின் ஐஸ்க்ரீம் கடை இருக்கு. அது ஒன்னுதான் கொஞ்சம் ஆறுதல். மற்றபடி வேறு உணவகங்கள் எதுவும் இல்லை. குடிநீர், நொறுக்குத்தீனி, சாப்பாடு, தொப்பி கொண்டு செல்வது நல்லது!"//

உபயோகமான தகவல்கள்.

ஆமா,ஆயாவை ஏன் கூட்டிட்டு போகலை ??!!.

நட்புடன் ஜமால் said...

\\நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது!!\\

தெலீவ்வ்வ்வ்வ்வ்வாஆ இருக்கீங்க ...

Deepa said...

நல்ல பதிவு. ஜூவை அழகா சுத்திக் காமிச்சிட்டீங்க. நேஹா கொஞ்சம் பெரியவளாகணும் கூட்டிட்டுப் போறதுக்கு!

//மிருகங்களையெல்லாம் 'ஏன் அது என்கூட பேச மாட்டேங்குது' னு கேட்டுக்கிட்டிருந்தா. //

அச்சச்சோ!

//பப்புவிற்கு ஏப்-தான் ரொம்ப பிடிக்கும். 'ஏப் வந்து எனக்கு எக் கொடுக்கபோகுதா'ன்னு கேட்டா.//
:)))))

ஆயில்யன் said...

//ஆமா,ஆயாவை ஏன் கூட்டிட்டு போகலை ??!!.//

உடல்நிலை தொடர்பில் பல காரணங்கள் இருக்கலாம்!

பட் பொதுவாகவே மனதினை தொட்டுச்செல்லும் கேள்வி :(

அமுதா said...

/*நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..*/
:-))

வித்யா said...

இப்போ பாட்டரி ஆபரேட்டட் கார் இருக்கு என கேள்விப்பட்டேன். போய்ப் பார்க்கனும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

hee

நாங்களும் போயிருந்தோம், சனி இல்ல ஞாயிற்றுக்கிழமை.

அமித்து நல்லா எஞ்சாய் செஞ்சா.

ஆனா ஒரு யானை மேலே ஏறனும்னு அடம் பிடிச்சது மட்டும் ஞாபகம் இருக்கு! //

யானையைப் பார்த்ததும், அமித்து அவள் அப்பாவிடம், அத்ல உக்காரலாமா, போலாமா, கேட்டது ஞாபகம் வருகிறது. ஒருவேளை அவள் பின்னாளில் ப்லாக் எழுத நேரிட்டால், இந்த சொற்றொடர்கள் வரும் முல்லை :)-

அமித்து கிளி, புலி யைப் பார்த்து பேசியெதெல்லாம் சீக்கிரம் அமித்து அப்டேட்ஸில் வரும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது!!)

:)))))))))))))))))))))))))))))

நாணல் said...

:))

தீஷு said...

//நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது//

:-)))

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

//நான் உள்ளேயே இருக்கேன்னு சொல்லிட்டு திரும்பி உள்ளேயே ஓடறா! ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை, நாம வீட்டுக்கே போகலாம்-ன்னு சொல்ல நினைச்சேன்..ஹிஹி்..செல்ஃப் டேமேஜாகிடும்ன்னு விட்டுட்டேன்! ;-)) //

//(நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது!!)//

he he he...

சந்தனமுல்லை said...

நன்றி ஆயில்ஸ்...நீங்கதான்...//இது என்னாடா நம்மளை அடைச்சு இங்க போட்டுட்டு இதுங்கள வெளியில சுத்தவிட்டிருக்காணுவோன்னு அப்புறம் மிருகங்கள் எல்லாம் கூட்டம் போட்டு ஃபீல் பண்ணும்!:))//

LOL!


நன்றி துபாய் ராஜா, //ஆமா,ஆயாவை ஏன் கூட்டிட்டு போகலை ??!!// எதுக்கு..அந்த ஐஸ்கிரீம்-காரர் இருந்தா சண்டை போடவா?!! :-))

நன்றி ஜமால், நாங்க எப்போவுமே அப்படிதான்!

நன்றி தீபா..ஆமா..ஒரு ரெண்டு வயசு ஆகும்போது கூட்டிட்டு போனீங்கன்னா நல்லா ஜாலியா எஞ்சாய் பண்ணுவாங்க!!

நன்றி ஆயில்ஸ், ஆமா, ஆயாவாலே வீட்டுக்குள்ளே நடக்கறதுன்னா சமாளிச்சுப்பாங்க! எங்களுக்கும் ஆசைதான்..அந்த ஐஸ்க்ரீம்காரர் அங்கேயே இருக்கணுமே! :-)

நன்றி அமுதா!

நன்றி வித்யா, ஆமா, ஜூனியரை கூட்டிட்டு போங்க..ஜாலியா இருக்கும்!!

நன்றி அமித்து அம்மா, சீக்கிரம் அமித்து அப்டேட்ஸ் போடுங்க..:-)

நன்றி நாணல், தீஷூ!

பாசகி said...

//ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை, நாம வீட்டுக்கே போகலாம்-ன்னு சொல்ல நினைச்சேன்..//

ஹிஹி்..

மங்களூர் சிவா said...

/
புலி, வெள்ளை புலி, ஹிப்போ, மான்கள், யானை, ஜீப்ரா, ஜிராஃப் எல்லாம் முடிச்சுட்டு 3.15-க்கு ஏறின இடத்துக்கே வந்துட்டோம். லேசா தூறல். வெளிலே வந்தப்புறம் செம மழை. பப்புவிற்கு வரவே மனசில்லை. நான் உள்ளேயே இருக்கேன்னு சொல்லிட்டு திரும்பி உள்ளேயே ஓடறா! ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை, நாம வீட்டுக்கே போகலாம்-ன்னு சொல்ல நினைச்சேன்..ஹிஹி்..செல்ஃப் டேமேஜாகிடும்ன்னு விட்டுட்டேன்! ;-))
/

ROTFL
:)))))))))

மங்களூர் சிவா said...

/
காஆஆடு, ஐஸ்க்ரீம் தீவு..நாம அப்புறம் எங்கே போறோம் டோரா'ன்னு கேட்டுக்கிட்டிருந்தா.
/

சுட்டி டிவியா? நல்லது நல்லது. ஜாக்கிசான்லாம் பாத்துட்டு தலைகீழா நிக்காம குதிக்காம இருந்தா சரிதான்.

குடுகுடுப்பை said...

நான் இது வரைக்கும் போனதில்லை,இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டிருக்கலாமே?

இரண்டு சைக்கிள் எடுத்துட்டு ஒன்னுல பப்புவை வெச்சி முகில் ஓட்டிட்டு போயிருக்கலாம்

நீங்க ஒரு சைக்கிள் எடுத்து தள்ளிக்கொண்டே சென்றிருக்கலாம்.

புதுகைத் தென்றல் said...

சென்னையிலிருந்தப்போ ஆஷிஷ்,நான், ஸ்ரீராம் 3 பேரும் அந்த ஜூவுக்கு போனோம்.

நடந்து நடந்து கால் வலி. அம்புட்டு கஷ்டப்பட்டு நடந்து போனா ஒரு புலி முதுகை காட்டிகிட்டு எங்கயோ..... படுத்துக்கிட்டிருக்கு...

பறவைகள் பக்கம் கொஞ்சம் பரவாயில்லை.

காஞ்சு போன மரம், விலங்குகள் இல்லாத கூண்டுக்கள் 10 வருஷம் முன்னாடி நான் பார்த்த வண்டலூர் ஜூ இப்படித்தான் இருந்துச்சு.

நானும் ஆஷிஷும் அந்த ஜூவுக்கு வைத்த பெயர் ”வரண்டலூர்”