Sunday, June 07, 2009

பப்பு டைம்ஸ்

”பப்பு, வா ஸ்கூலுக்கு போய்ட்டு வரலாம்” - பப்பு பள்ளியிலிருந்து சீருடை வாங்க வரச் சொல்லியிருந்ததால் அழைத்தேன்!

“எனக்கு வயிறு வலிக்குது!” - வேகமாக வந்தது பதில்!

பள்ளிக்கூடத்திற்கு அவளை கிளப்பப்போவதை எண்ணி திகில் கொள்கிறேன் நான்!!
பப்புவை பால் குடிக்க வைக்க முகில் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்.

“என்னை ஏன் கஷ்டபடுத்தறீங்க, கஷ்டப்படுத்தாதீங்க!” - பப்பு!

உங்கள் சுட்டியை சாப்பிட வைக்க படாதபாடு படுபவரா நீங்கள்? சாப்பிடவில்லையே என்ற
கவலை மனதை வாட்டுகிறதா? ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டதும் அப்பாடா, இன்னும் ரெண்டு மணிநேரத்துக்கு கவலையில்லை என்று நிம்மதி கொள்பவரா?இந்தக் கேள்விக்கெல்லாம் “ஆமாப்பா, ஆமா”ன்னு சொல்றீங்களா?

அப்போ நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்! ரெண்டு கிண்ணங்களில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்!
”சாப்பிடும்மா” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிராமல், நீங்கள் உண்ணத்துவங்குங்கள்! உங்களையும் கிண்ணத்தையும் மாறிமாறி பார்க்கும் குழந்தை கிண்ணத்திலிருந்து தானாக எடுத்து உண்ணும் மாயத்தை காணுங்கள்! வீட்டிலிருப்பவர்கள், “குழந்தைக்கு கொடுக்காம உன்னால எப்படி சாப்பிடமுடியுதோ, நீயெல்லாம் அம்மாவா” போன்று சிலபல டயலாக்குகளை எடுத்து விடலாம்! கண்டுக் கொள்ளாதீர்கள்! இது பரிசோதனைக்குட்படுத்தப் பட்ட முறை! சொல்ல மறந்துட்டேனே- இது பருப்புசாதம்/ரசசாதம் வகைகளுக்கு அல்ல - பழங்களை உண்ண வைக்க உகந்தது!(ஹிஹி...இப்படித்தான் பப்பு மாம்பழ/ஆப்பிள் துண்டுகளை உண்ணத்துவங்கினாள்!)

35 comments:

நட்புடன் ஜமால் said...

“என்னை ஏன் கஷ்டபடுத்தறீங்க, கஷ்டப்படுத்தாதீங்க!” - பப்பு!\\

பப்பு சொல்வதாக யோசித்து பார்த்து சிரித்து கொள்கிறேன்.

கானா பிரபா said...

ஆச்சி

சாப்பாட்டு அட்வைஸ் கலக்கல் ஆனா இதைச் சாக்கா வச்சு அம்மாக்களே குட்டீசின் சாப்பாட்டை ஏப்பம் விட்டா என்னாகிறது?

பப்பூஸ் கலக்கல்ஸ்

G3 said...

//“என்னை ஏன் கஷ்டபடுத்தறீங்க, கஷ்டப்படுத்தாதீங்க!” - பப்பு!//

avvvvvvvvvvvvv.. no comments :)))

G3 said...

//உங்கள் சுட்டியை சாப்பிட வைக்க படாதபாடு படுபவரா நீங்கள்? சாப்பிடவில்லையே என்ற
கவலை மனதை வாட்டுகிறதா? ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டதும் அப்பாடா, இன்னும் ரெண்டு மணிநேரத்துக்கு கவலையில்லை என்று நிம்மதி கொள்பவரா?இந்தக் கேள்விக்கெல்லாம் “ஆமாப்பா, ஆமா”ன்னு சொல்றீங்களா?//

Kaivasam side business edhum irukko ;)

ஆயில்யன் said...

//“எனக்கு வயிறு வலிக்குது!” - வேகமாக வந்தது பதில்!///


அன்றொரு நாள் என்னிலிருந்தும் வந்த அதே பதில் :))

குழந்தைங்கன்னாலே இப்படித்தான் போல :))))))

ஆயில்யன் said...

//நீங்கள் உண்ணத்துவங்குங்கள்! உங்களையும் கிண்ணத்தையும் மாறிமாறி பார்க்கும் ///

பப்பு:-

அடி ஆத்தி ஆச்சி நம்ம சாப்பாட்டை காலி பண்ணிடும் போல...! :(

ஆயில்யன் said...

குழந்தைக்கு கொடுக்காம உங்களால எப்படி சாப்பிடமுடியுது

நீங்கெல்லாம் .....?பப்பு பேரவை

தோஹா கத்தார்

ஆயில்யன் said...

//(ஹிஹி...இப்படித்தான் பப்பு மாம்பழ/ஆப்பிள் துண்டுகளை உண்ணத்துவங்கினாள்!)//

துவங்கியது பப்புவாக இருந்தாலும் முடித்து ஏப்பம் விட்டது ஆச்சி!


என்ன கொடுமை பப்பு !

ஆயில்யன் said...

இப்பூடே மா கமெண்ட்டு ரீலிசு செய்யண்டீ...............

ஆயில்யன் said...

எந்தா ஆச்சி இது, கொமொண்டை ரிஸீஸ் பண்ணோலும்

கானா பிரபா said...

எந்தா ஆச்சி இது, கொமொண்டை ரிஸீஸ் பண்ணோலும்

ஆயில்யன் said...

ஹாய் ஆச்chi! குட் யூ பிளீஸ் ரிலீஸ் தோஸ் காமெண்ட்ஸ்...?

ஆயில்யன் said...

pourriez-vous s'il vous plaît la libération de mes commentaires

ஆயில்யன் said...

Könnten Sie bitte meine Freilassung Kommentare

ஆயில்யன் said...

तुम मेरी टिप्पणी को रिहा कृपया सकता है

ஆயில்யன் said...

அவ்ளோதான் மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்!

ராமலக்ஷ்மி said...

//(ஹிஹி...இப்படித்தான் பப்பு மாம்பழ/ஆப்பிள் துண்டுகளை உண்ணத்துவங்கினாள்!)//

அதுதானே பார்த்தேன், என்ன ஒரு உலக மகா அதிசயமான டெக்னிக்காக இருக்கிறதே என்று:))!

தீஷு said...

//“என்னை ஏன் கஷ்டபடுத்தறீங்க, கஷ்டப்படுத்தாதீங்க!” - பப்பு!\\

:-)

//எனக்கு வயிறு வலிக்குது!” - வேகமாக வந்தது பதில்!
//

இந்த வயிறு வலி மேட்டர் எங்க வீட்டிலேயும் நடக்குது முல்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) சபாஷ் சரியான போட்டி..

சரவணகுமரன் said...

சூப்பரு...

ஆகாய நதி said...

//
அப்போ நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்! ரெண்டு கிண்ணங்களில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்!
”சாப்பிடும்மா” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிராமல், நீங்கள் உண்ணத்துவங்குங்கள்! உங்களையும் கிண்ணத்தையும் மாறிமாறி பார்க்கும் குழந்தை கிண்ணத்திலிருந்து தானாக எடுத்து உண்ணும் மாயத்தை காணுங்கள்! வீட்டிலிருப்பவர்கள், “குழந்தைக்கு கொடுக்காம உன்னால எப்படி சாப்பிடமுடியுதோ, நீயெல்லாம் அம்மாவா” போன்று சிலபல டயலாக்குகளை எடுத்து விடலாம்! கண்டுக் கொள்ளாதீர்கள்! இது பரிசோதனைக்குட்படுத்தப் பட்ட முறை! சொல்ல மறந்துட்டேனே- இது பருப்புசாதம்/ரசசாதம் வகைகளுக்கு அல்ல - பழங்களை உண்ண வைக்க உகந்தது!(ஹிஹி...இப்படித்தான் பப்பு மாம்பழ/ஆப்பிள் துண்டுகளை உண்ணத்துவங்கினாள்!)

//

இதையெல்லாம் செய்து நல்ல பலன் கண்டு இப்போது நான் காண்பது... நான் உண்ண ஆரம்பித்தாலும் கண்டு கொள்ளாத பொழில் :(

சில நேரங்களில் உண்கிறான் அவனே எடுத்து... ஆனால் பல நேரங்களில் நான் உண்பதயும் கீழே தட்டிவிடுகிறான் :(

இந்த முறையில் தான் இன்று அவனே முட்டை கரு சாப்பிட்டான்... அதோடு அவ்வளவு தான்... தாய்ப் பால் தவிர தண்ணீர் கூட குடிக்காமல் விளையாடுது... :( என்ன செய்ய...
Help me

ஆகாய நதி said...

பள்ளிக்கு செல்லாமல் இருக்க வயித்து வலி... ம்ம்ம்... சூப்பர் காரணம்... :)) பப்புக்கு "என் தங்கைக்கு நான்" போல் ஒரு அக்கா இல்லை... :)

velji said...

my wife wrote 'diary of events'of our AMMU!it ran some pages and all are sweets!you are creating a treasure for your PAPPU!..go ahead!

ஆயில்யன் said...

/ராமலக்ஷ்மி said...

//(ஹிஹி...இப்படித்தான் பப்பு மாம்பழ/ஆப்பிள் துண்டுகளை உண்ணத்துவங்கினாள்!)//

அதுதானே பார்த்தேன், என்ன ஒரு உலக மகா அதிசயமான டெக்னிக்காக இருக்கிறதே என்று:))!///

அக்கா உலக மகா அதிசயமோ அதிசயம் இது!

ஆம்பூர் பிரியாணி வர்ற சமயத்திலயும் இப்படித்தான் ஆச்சி செய்யுறாங்களான்னு கேளுங்க?

ஆச்சி மனசாட்சி என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம்?????

ஆயில்யன் said...

//கானா பிரபா said...

ஆச்சி

சாப்பாட்டு அட்வைஸ் கலக்கல்///


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!

ஆயில்யன் said...

//இதையெல்லாம் செய்து நல்ல பலன் கண்டு இப்போது நான் காண்பது... நான் உண்ண ஆரம்பித்தாலும் கண்டு கொள்ளாத பொழில் :(///


சாப்பிடுங்க அம்மா சாப்பிடுங்கன்னு பொழில் அன்பு பொழிய ஆரம்பிச்சிட்டாங்களா நோ சோகம்! (தமிழ்ல சொல்லணும்ன்னா டோண்ட் ஓர்ரி)

வித்யா said...

கலக்கல் முல்லை.
உங்கள் சாப்பட்டு அட்வைஸ் எனக்கு செல்லுபடியாகது. ஜூனியர் அவன் கிண்ணத்திலிருப்பதையும் எனக்கு ஊட்டிவிட்டுவிடுவான்.

தாரணி பிரியா said...

பப்பு சூப்பரு...

ஆகாய நதி said...

//
சாப்பிடுங்க அம்மா சாப்பிடுங்கன்னு பொழில் அன்பு பொழிய ஆரம்பிச்சிட்டாங்களா நோ சோகம்! (தமிழ்ல சொல்லணும்ன்னா டோண்ட் ஓர்ரி)
//

:)))

//
ஜூனியர் அவன் கிண்ணத்திலிருப்பதையும் எனக்கு ஊட்டிவிட்டுவிடுவான்.
//

அதேதாங்க... நான் அவன் வாயிட்க்ட போயி நீட்டுற மாதிரியே அவன் ம்மா ம்மானு சாப்பாட கைல எடுத்து என் வாய்கிட்ட நீட்டுறான் :)) இது சந்தோஷம் தான் ஆனால் அவன் சாப்பிடாமல் டிமிக்கி அடிப்பது கஷ்டமா இருக்கு.. :(((

அமிர்தவர்ஷினி அம்மா said...

“குழந்தைக்கு கொடுக்காம உன்னால எப்படி சாப்பிடமுடியுதோ, நீயெல்லாம் அம்மாவா” போன்று சிலபல டயலாக்குகளை எடுத்து விடலாம்! கண்டுக் கொள்ளாதீர்கள்! இது பரிசோதனைக்குட்படுத்தப் பட்ட முறை! சொல்ல மறந்துட்டேனே- இது பருப்புசாதம்/ரசசாதம் வகைகளுக்கு அல்ல - பழங்களை உண்ண வைக்க உகந்தது!(ஹிஹி...இப்படித்தான் பப்பு மாம்பழ/ஆப்பிள் துண்டுகளை உண்ணத்துவங்கினாள்!)

ஆச்சி இந்த டெக்னிக்கை, நான் வர்ஷினி மாம்பழம் சாப்பிடுவதற்காக யூஸ் பண்ணேன், விளைவு, வர்ஷினி அதன் தட்டிலிருக்கும் மாம்பழத்தையும் எனக்கே ஊட்டிவிட்டாள்.

??????????


“என்னை ஏன் கஷ்டபடுத்தறீங்க, கஷ்டப்படுத்தாதீங்க!” - பப்பு!

!!!!!!!

நசரேயன் said...

சாப்பாட்டு யோசனை நல்லா இருக்கு

rapp said...

இது சூப்பர் விஷயம். பழம் ஊட்டறத்துக்கு, நீங்க சொல்லிருக்கறது சரியான மாற்று. அது சிலப் பேருக்கு ஏன் ஒத்துவரலைன்னு தோணுதுன்னா, சிலப் பேர் வீட்ல பசங்களுக்கு அம்மா மாதிரி இருக்கணும்னு ஆசை இருக்கும், சிலப் பேர் வீட்ல அப்பா மாதிரி, அது தாத்தா பாட்டின்னு கூட மாறுபடும். அதால, அந்த ஆட்கள் அப்டி சாப்டும்போதுதான் இவங்க அவங்களாட்டமே செய்ய ஆரம்பிப்பாங்க. அது ஒரு காரணமாயிருக்கும்னு தோணுது.

rapp said...

//பள்ளிக்கூடத்திற்கு அவளை கிளப்பப்போவதை எண்ணி திகில் கொள்கிறேன் நான்//

எங்கம்மாப்பா என்னை பள்ளிக்கு அந்நாட்களில் கிளப்பியதை எண்ணி திகில் கொள்கிறேன் (இப்போவோம்) நான்:):):)

rapp said...

//“என்னை ஏன் கஷ்டபடுத்தறீங்க, கஷ்டப்படுத்தாதீங்க!” - பப்பு//

ஞாயமானப் பேச்சு, பாலை குடிக்கச் சொல்லி கொழந்தைங்கள டார்ச்சர் பண்ற அம்மாப்பாக்களை நான் வகதொகயில்லாமல் கண்டிக்கிறேன். அதை உங்கள குடிக்க வெச்சாத்தான் தெரியும். நீங்கல்லாம் டேஸ்டா ஆம்பூர் பிரியாணி சாப்பிட்டு கொழந்தைங்களுக்கு மட்டும் பால் சாதம்லாம் கொடுத்து டார்ச்சர் பண்றது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............

மங்களூர் சிவா said...

ஹிஹி இப்படி பல செய்முறைகளை செய்து என் குடும்பத்தில் என்னைவிட பல வயது சிறிய திருமணமான பெண்கள் பயங்கர குண்டாக ஆகிவிட்டார்கள். சாக்கிரதை.


/
”பப்பு, வா ஸ்கூலுக்கு போய்ட்டு வரலாம்” - பப்பு பள்ளியிலிருந்து சீருடை வாங்க வரச் சொல்லியிருந்ததால் அழைத்தேன்!

“எனக்கு வயிறு வலிக்குது!” - வேகமாக வந்தது பதில்
/

ஹா ஹா
:))))