Wednesday, June 17, 2009

குட்டீஸ் கதைகள்!

கதை - I

ஆகாஷ் வந்து சைக்கிளை எடுத்துக்கிட்டு ”அம்மா, பை, நான் பீச்சுக்கு போறேன்”னு சொல்லிட்டு சைக்கிள் ஓட்டிகிட்டு போனான். அப்போ நாய்குட்டியும், நானும் வர்றேன்-ன்னு சொன்னதும் நாய்க்குட்டியை பின்னால உட்கார வைச்சிக்கிட்டு ஆகாஷ் பீச்சுக்கு போனான்! கூடையிலே ஒரு பால், பிஸ்கட், தண்ணி எல்லாம் ஆகாஷோட அம்மா சைக்கிள்லே வச்சிருந்தாங்க! பீச்சுக்கு போனா, அங்கே நிறைய அலை வந்ததாம். ஆகாஷூக்கு அதைப் பார்த்ததும் ரொம்ப ஜாலியாகிடுச்சாம்! ஆகாஷும் நாய்க்குட்டியும் பால் விளையாடினாங்களாம்! அப்புறம் அலைக்கிட்டேயும் தூக்கிப் போட்டாங்களாம். அலையும் திரும்ப அவங்களுக்கு பாலை கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்ததாம். ஒரு தடவை அலை பாலை கொண்டு வந்துக் கொடுக்கலையாம். ஆகாஷ், பால் எங்கே, நாம விளையாடணுமேன்னு கேட்டப்போ, அலை சொல்லிச்சாம், பால் உள்ளே போய்டுச்சுன்னு! அப்போ நாய்க்குட்டி சொல்லிச்சாம், ஆகாஷ் எனக்கு நீந்தத் தெரியும், நான் போய் பார்த்து எடுத்துக்கிட்டு வர்றேன்-ன்னு சொல்லிட்டு போச்சாம்! அங்கே போனா ஒரு பால் வந்து ஒரு மீன்கிட்டே இருந்துச்சாம். அது நாய்க்குட்டிக்கிட்டே சொல்லிச்சாம், நாந்தான் ஆகாஷ்க்கிட்டே பாலை கொண்டு வந்து கொடுப்பேன், நாந்தான் கொடுப்பேன்-ன்னு சொல்லிச்சாம்! நாய்க்குட்டி மீனுக்கிட்டே சொல்லிச்சாம்,நீ தண்ணிலே இருந்து வெளிலே வந்தா நடக்க முடியாது, நானே போய் கொடுக்கிறேன்,மிக்க நன்றின்னு சொல்லிட்டு வாங்கிட்டு வந்து ஆகாஷ்கிட்டே கொடுத்துச்சாம்! அப்புறம் ஆகாஷூம் நாய்க்குட்டியும் மீனும் அலையும் ஜாலியா பால் விளையாடிட்டு அவங்களுக்கு பை சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்களாம்!!




கதை - II

ஒருநாள் ஆகாஷ் பட்டம் விடலாம்னு பட்டம் செஞ்சு எடுத்துக்கிட்டு ஒரு க்ரவுண்டுக்கு போனான். அங்கே எல்லோரும் கலர் கலரா பட்டம் விட்டுக்கிட்டு இருந்தாங்க! ஆகாஷோட பட்டம் வேகமா பறந்து மேலே போச்சா, போய் ஒரு மரத்துலே மாட்டிக்கிச்சு. அப்போ நாய்க்குட்டி, மரத்து மேலே போய் எடுக்கலாம்னு பார்த்தா அதாலே மேலே ஏறவே முடியல. அப்போ ஆகாஷும் நாய்க்குட்டியும்,(birdie) பேர்டீக்கிட்டே போய் எங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா, எங்க பட்டம் மரத்துலே மாட்டிக்கிச்சு, அதை உன்னாலே எடுத்துக் கொடுக்க முடியும்னு சொன்னதும் பேர்டீயும் பறந்து போய் மேலே இருந்த பட்டத்தை எடுத்துக் கொடுத்துச்சு. ஆகாஷும் நாய்க்குட்டியும், ரொம்ப தாங்ஸ், பேர்டி, ன்னு சொல்லிட்டு ஜாலியா பட்டம் விட்டாங்க!! பேர்டீயும் பை பை ஆகாஷ், நாய்க்குட்டின்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சு!




போன வருஷம் பப்புவை காலையில் சாப்பிட வைக்க நான் சொன்ன கதைகள்தான் ஆகாஷ் கதைகள்,வெண்மதி கதைகள், வர்ஷினி கதைகள் எல்லாம்! இப்போதைக்கு இதுதான் நினைவில் இருக்கு! இந்தக் கதைகள் எல்லாம் ஆகாஷுக்கும்,வெண்மதிக்கும் வர்ஷினிக்கும் சமர்ப்பணம்! (பின்ன என்னையும் கொஞ்சமா யோசிச்சு கதை சொல்ல வைச்சாங்க இல்ல!)

கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! :-)

36 comments:

நட்புடன் ஜமால் said...

கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! :-)\\


ஹா ஹா ஹா

G3 said...

:)))))))))))))))

Supera kadha soldreengalae ;)

G3 said...

//கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! :-)
//

:))))))))))))))))))))))))

மணிநரேன் said...

//கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! :-)//

ஹா ஹா ஹா...கதை சொல்லியே அவ்வளவு பயமுறுத்தி இருக்கீங்களா குழந்தையை? :( :(

தீஷு said...

//கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! :-)

//

:-)).. இது நல்லாயிருக்கே.. நான் கூட தீஷுகிட்ட இந்த கதைகளைச் சொல்லிப் (மிரட்டி) பார்க்கிறேன்

கானா பிரபா said...

கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! :-)//

இத இதத்தான் எதிர்ப்பார்த்தேன், பப்பு ஆனாலும் ஸ்மார்ட்டு :)

கைப்புள்ள said...

////கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! :-)
//

கதைகள் அழகா அம்சமா அதே சமயம் டெரராவும் இருக்கு :)

"அர்ச்சனா சீக்கிரம் சாப்பிட்டுடு இல்லை முல்லை அத்தை கதை சொல்ல வந்துடுவாங்க"

ஆயில்யன் said...

ஆச்சி.....!

யூ ஆர் தி கிரேட்

எப்படி பயமுறுத்துனா பப்பு சாப்பிடும்ன்னு ஆச்சிக்கு நல்லாவே தெரிஞ்சுருக்கு !

ஆயில்யன் said...

டைட்டில் இல்லாமலே ஒரு பதிவா அதுவும் ஆச்சிக்கிட்டேர்ந்து அப்படின்னு முதல் பார்வையிலே கொள்ளை பயம் வந்திச்சு!


சாதிச்சிட்டீங்க ஆச்சி!

ராஜா | KVR said...

கதைகள் நல்லா இருக்கு, நினைவில் வர்றப்போ மற்ற கதைகளையும் பதிவிடுங்க.

பதிவின் தலைப்பு தமிழ்மணத்தில் வர மாட்டேங்குது, கவனிக்கவும்.

பைத்தியக்காரன் said...

பப்புகிட்ட கதை கேட்டிருக்கீங்களா ஆச்சி? பப்பு சொன்ன கதைகளை எங்களுக்கும் சொல்றீங்களா?

(இது எல்லா அம்மா - அப்பாக்களுக்குமான பின்னூட்டம்)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தமிழ் பிரியன் said...

இபப்டியா எங்க பப்புவை பயமுறுத்தி சாப்பிட வைப்பது.. உங்களையெல்லாம் வன்கொடுமை சட்டத்தில் பிடிக்கனும்.. ;-)

தமிழ் பிரியன் said...

கதைகளில் டோரா புஜ்ஜி தாக்கம் இருக்கே... ;-))

ஆயில்யன் said...

கதை சொல்லி

கதை சொல்லின்னு நிறைய கேள்விப்பட்டிருக்கேன் இப்பத்தான் முத முதல்லா பாக்குறேன்

கதை கொல்லி! :)))))))))

தமிழ் பிரியன் said...

///ஆயில்யன் said...

டைட்டில் இல்லாமலே ஒரு பதிவா அதுவும் ஆச்சிக்கிட்டேர்ந்து அப்படின்னு முதல் பார்வையிலே கொள்ளை பயம் வந்திச்சு!


சாதிச்சிட்டீங்க ஆச்சி!////
ஓ.. இது சாதனையா? அப்ப வாழ்த்துக்கள் ஆச்சி!

தமிழ் பிரியன் said...

//ஆயில்யன் said...

கதை சொல்லி

கதை சொல்லின்னு நிறைய கேள்விப்பட்டிருக்கேன் இப்பத்தான் முத முதல்லா பாக்குறேன்

கதை கொல்லி! :)))))))))///
நான் களை கொல்லி தான் கேள்விப்பட்டு இருக்கேன்.. அதென்ன கதை கொல்லி.. ஆயில் அங்கிள்.. புதசெவி..

ஆயில்யன் said...

//G3 said...
:)))))))))))))))

Supera kadha soldreengalae ;)
//

எப்பிடி ஜி3 உங்களால மட்டும் இப்புடி சந்தோஷமாவே எடுத்துக்கமுடியுது !

சான்ஸே இல்ல!

விக்னேஷ்வரி said...

கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! //

பாவம் பப்பு எவ்வளவு தான் தாங்குவா...

மாதேவி said...

குழந்தைகள் புதுமைகளையும் மாறுதல்களையும் தான் விரும்புவார்கள்.
போட்டோ கானர்- பப்பு ஆபீஸ்போகும் படம் அசத்தல்.

rapp said...

ஹி ஹி , டைட்டில் இல்லாம பதிவு தமிழ்மணத்தில் வர்றதுக்கு அடியேன்தான் காரணம்:):):)

rapp said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். இதே கதைகள நீங்க ரிக்கார்ட் பண்ணி வெச்சி பப்பு சாப்டாதப்போல்லாம் போட்டு மிரட்ட வெச்சிருந்தீங்களா? அதை தவறிப் போய் ஒரு நாள் கேட்டுத்தான, பப்பு கத்திரிக்கோலும் முடியுமா, தலைமுடிய பிச்சிக்கிட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

rapp said...

//கதை சொல்லின்னு நிறைய கேள்விப்பட்டிருக்கேன் இப்பத்தான் முத முதல்லா பாக்குறேன்

கதை கொல்லி//

கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்:):):)

rapp said...

அநியாயத்துக்கு பாசிடிவா பப்புவை வளக்கறேன் பேர்விழின்னு, இப்டியா ட்விஸ்ட் இல்லாம சொல்றது . கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..................:):):)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தக் கதைகளினால் பப்பு மற்றும் நாங்கள் தெரிந்து கொண்ட மாரல் என்ன ?

பட் கதை சொன்னவிதம் சூப்பர் ஆச்சி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்படியோ போங்க ஆயில்ஸ் அண்ணாச்சி வாய்க்கு இல்ல கைக்கு அவலு.

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

ஆயில்யன் said...

/அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்படியோ போங்க ஆயில்ஸ் அண்ணாச்சி வாய்க்கு இல்ல கைக்கு அவலு.
//


ம்ஹுக்கும் மெல்லுற வயசா எனக்கு....???

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஜொள்ளுற வயசு ஹய்யோ ஹய்யோ! :))))

நசரேயன் said...

//
கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை!//
ம்ம்.. பப்பு ரெம்ப புத்திசாலி

ஆகாய நதி said...

//
கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை!
//


:)))

மங்களூர் சிவா said...

/
கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! :-)
/

பச்ச பிள்ளைகிட்ட இம்புட்டு டெரர்ராவா கதை சொல்லுவீங்க!?
:))))))))))

Deepa said...

நல்ல இருந்திச்சு!

சீக்கிரமே எனக்கும் இந்த்க் கதைகள் நிச்சயம் யூஸ் ஆகும்.

பை த வே எல்லாரும் “தலைநகரம்” வடிவேலு ஸ்டைல்ல இந்தக் கதைகளை ஒரு தரம் படிச்சிப் பாருங்க! hilarious.

கோமதி said...

அன்பு முல்லை, இரண்டாம் கதை ரொம்பவே நல்லா இருந்தது. முதல் கதையும் சொன்ன விதம் அருமை. ஆனால் முதல் கதையில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து இருக்கு. ஆகாஷும் நாய்க்குட்டியும் தனியா பீச்ல விளையாடுறது ரொம்ப ரிஸ்க்ன்னு தோணுது. பீச் மாதிரி இடங்கள்ல குழந்தைகள் பெரியவங்க மேற்பார்வைல தான் விளையாடணும். இப்போ ஆர்வமா கதைக் கேக்கிற பப்பு பின்னாளில் “ஆகாஷும் நாய்க்குட்டியும் மட்டும் தனியா விளையாண்டாங்கல்ல, நான் விளையாடக்கூடாதா”ன்னு கேக்க வாய்ப்பு இருக்கு. இப்போ இருக்கிற குழந்தைகள் ரொம்பவே ஞாபகம் வச்சிக்கிறாங்க, உஷாரா இருக்கிறது நம்ம கடமை.

ச.முத்துவேல் said...

போங்கப்பா! நான் என்ன மாதிரி கமெண்ட் போடனும்னு நினைச்சுட்டு வந்தேனோ அதே மாதிரி எனக்கு முன்னால பலபேரு போட்டுட்டீங்க.

செல்வநாயகி said...

சந்தனமுல்லை,

வலையுலகிலிருந்து நீளமாய்க் காணாதுபோய்த் திரும்பவந்தபின்பு உங்களைக் கண்டறிந்து தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். உங்கள் குழந்தையைச் சுற்றிய உங்கள் உலகத்தை அழகாகவும், பாசாங்குகளற்றும் பதிந்து வருகிறீர்கள். நீங்களும் உங்கள் குழந்தையும் உங்களுக்குரிய உலகிலிருந்து அனுபவித்து எழுதுவது அந்நிகழ்வுகளின் ஊடாக வாசிப்போருக்கு வேறோர் உலகத்திற்குள் பயணிக்கவும் உதவுகிறது. தமிழில் இப்போது ஐய்யாயிரத்திச் சொச்சம் பதிவுகள் இருப்பினும் உங்களதுபோல் முழுக்கக் குழந்தைகளைச் சுற்றியது மிகக்குறைவுதான். நீங்கள் இதைத் தொடர்வதற்கு வாழ்த்துக்களும், நன்றியும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கடைசி வரிகளுக்கு சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.. :-))

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

//கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! :-)//

he he he he he he