இது (கதை) நேற்று நடந்ததாக பப்புவால் எனக்குச் சொல்லப்பட்டது.
செய்தி 1 : கடந்த வாரத்தில் இறுதி இரண்டு நாட்களாக 11.00 - 11.30 மணி வாக்கில் பப்புவும் வர்ஷினியும் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு அழுவதாக, “அம்மாகிட்டே போகணும்” என்று அழுவதாக ஆன்ட்டி செய்தியனுப்பினார்.
செய்தி 2 : இந்த திங்களன்று பப்புவின் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது - 11.30 வாக்கில். ..அழைத்துக் கொண்டு செல்லும்படி.அவள் மிகவும் அழுதுக் கொண்டிருப்பதாகவும், காய்ச்சல் அடிப்பது போலிருப்பதாகவும்!!
(சளிதான் கொஞ்சம் அதிகமாக இருந்ததே தவிர, இவர்கள் அழுததில் கொஞ்சம் பயந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. காய்ச்சல் எதுவுமில்லை. மேலும், பப்பு இப்போது அடுத்த லெவலுக்கு சென்றிருப்பதால் ஆண்ட்டி மாறியிருக்கிறார்கள். மோதி ஆன்ட்டியை மிஸ் செய்கிறாள் போல!)

நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ? - பப்பு
நான் போடலியே....(அதற்குமேல் என்ன சொல்வது..அழகாயில்லன்னு நெகடிவா சொல்லவேணாமே..வேற எப்படி..) - யோசித்தபடி நான்.
“நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ நெய்ல்போலிஷ் போடாம அழகா இருக்கே!” - பப்பு!
ஓ..அவ்வளவு எளிதானதா இது!சிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல..!!

”இது பச்சை தண்ணியா?” - கைகழுவ தண்ணீர் கொடுத்தபோது ஆயா என்னிடம்!
”இல்ல, இது க்ரீன் தண்ணி!” - பப்பு!

19 comments:
//
“நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ நெய்ல்போலிஷ் போடாம அழகா இருக்கே!” - பப்பு!
//
பப்பு சோ......... சுவீட்....... :)
இந்த சளித் தொல்லை எப்பவும் பெருந்தொல்லைதானா குழந்தைகளுக்கு? :(((
//“நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ நெய்ல்போலிஷ் போடாம அழகா இருக்கே!” - பப்பு! //
//”இல்ல, இது க்ரீன் தண்ணி!” - பப்பு!//
:))))))))))))))))))))))))))))))))))
:))
//கடந்த வாரத்தில் இறுதி இரண்டு நாட்களாக 11.00 - 11.30 மணி வாக்கில் பப்புவும் வர்ஷினியும் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு அழுவதாக,/
நினைச்சு ஃபீல் பண்ணி பார்த்தேன் சூப்பரேய்ய்ய்ய் :)))
//
செய்தி 1 : கடந்த வாரத்தில் இறுதி இரண்டு நாட்களாக 11.00 - 11.30 மணி வாக்கில் பப்புவும் வர்ஷினியும் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு அழுவதாக, “அம்மாகிட்டே போகணும்” என்று அழுவதாக ஆன்ட்டி செய்தியனுப்பினார்//
ஹி ஹி, கதை சொல்றதை நிறுத்திட்டீங்களா, கொஞ்ச நாளா? பப்பு அதான் மறுபடி பயம் தெளிஞ்சு, உங்கக்கிட்ட வரணும்னு சொல்றாங்க:):):)
//
ஓ..அவ்வளவு எளிதானதா இது!சிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல..!!//
அப்டில்லாம் நைசா தப்பிச்சிக்காதீங்க, அவங்க ஜாஸ்தி புத்திசாலி , அப்டின்னு ஒத்துக்கங்க:):):)
//
”இது பச்சை தண்ணியா?” - கைகழுவ தண்ணீர் கொடுத்தபோது ஆயா என்னிடம்!
”இல்ல, இது க்ரீன் தண்ணி!” - பப்பு!//
அவங்க இப்போ சீனியர் பேட்ச் தான, அப்போ இப்டித்தான், அப்பப்போ மென்ஷன் பண்ணமுடியாத டென்ஷன் வந்திடும்:):):)
அட! எப்படிதான் முடியுதோ...
//“நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ நெய்ல்போலிஷ் போடாம அழகா இருக்கே!” - பப்பு!
ஓ..அவ்வளவு எளிதானதா இது!சிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல..!!//
சே! சான்ஸே இல்ல... எவ்வளவு அழகா யோசிக்கிறா குழந்தை. உண்மை தான். நாம் ரொமப யோசித்துச் சின்ன விஷயங்களைக் கூடக் குழப்பிக் கொள்கிறோம்.
நெறைய சமயங்களில் குழந்தைகள் தாங்கள் புத்திசாலிகள் என்பதை உணர்த்துவார்கள்...
பல சமயம் குழைந்தங்க கிட்ட இருந்து பெரிய விஷயங்களை நாம் கத்துக்கலாம்... :))
//“நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ நெய்ல்போலிஷ் போடாம அழகா இருக்கே!” - பப்பு!
ஓ..அவ்வளவு எளிதானதா இது!சிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல..!!//
Super Pappu
பப்பு-வர்ஷினி நட்பு ரொம்ப உணர்வு பூர்வமா இருக்கு. ரெண்டு பேரும் ஒருத்தரோட ஒருத்தர் ரொம்ப நெருங்கிட்டாங்கன்னு நினைக்கறேன். ஏதோ சொல்ல வராங்க , அவங்களால சொல்ல முடியாம அழறாங்களோ?
”இது பச்சை தண்ணியா?” - கைகழுவ தண்ணீர் கொடுத்தபோது ஆயா என்னிடம்!
”இல்ல, இது க்ரீன் தண்ணி!” - பப்பு!//
சூப்பரு, பப்புவா கொக்கா
தான் அழுவதாக சொல்லாமல் பப்பு வர்ஷினையைப் பற்றிச் சொல்லி உங்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுத்திருக்கிறாள் பாருங்கள்:)!
/
“நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ நெய்ல்போலிஷ் போடாம அழகா இருக்கே!” - பப்பு!
/
:))))))))))
/
ஓ..அவ்வளவு எளிதானதா இது!சிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல..!!
/
:))))))
//சிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல//
ஆமாம் முல்லை. பல சமயங்களில் இப்படித்தான் நடக்குது.
நான் போடலியே....(அதற்குமேல் என்ன சொல்வது..அழகாயில்லன்னு நெகடிவா சொல்லவேணாமே..வேற எப்படி..) - யோசித்தபடி நான்.
////////
ஹி ஹி ..அதை நான் சொல்லலியே...-பப்பு
நம்ம குழந்தைகளுக்கு அம்மாக்கள் எப்டி இருந்தாலும் அழகு தேவதைகள் தான்
\\“நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ நெய்ல்போலிஷ் போடாம அழகா இருக்கே!” - பப்பு! \\
சூப்பர் பப்பு!
ஓ..அவ்வளவு எளிதானதா இது!சிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல..!!//
இன்னும் குழம்ப வேண்டும் என்றால் எங்கள் வீட்டில் ஒருவர் இருக்கிறார். வேணும்னா கன்சல்ட் பண்ணுங்க....
சிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல..!!
:)-
Post a Comment