Tuesday, June 02, 2009

கொலாஜ்!



பப்புவின் முதல் கொலாஜ்! பழைய செய்தித்தாட்கள் மற்றும் ஆவி-யையும் எடுத்துக் கொண்டோம். அவளுக்கு பிடித்ததைக் கத்தரிக்குமாறு சொன்னேன். அவளைக்கவர்ந்தது சிடிகள்தான். ஆனால், கத்தரிப்பதற்கு முழுமையான உருண்டை வடிவம் வரவில்லை!பூமியை கத்தரிக்க உதவினேன். அவளாகவே அவளுக்குத் தெரிந்த ஆங்கில எழுத்துகளையும், கைவிரல்கள் படத்தையும் கத்தரித்து ஒட்டினாள். இன்னும் நுணுக்கமாகக் கத்தரிக்க வரவில்லை! இது இரு வாரங்களுக்கு முன் செய்தது!



இப்போதெல்லாம் பப்பு கத்தரிக்கோலை தனியாகக் கையாளுவதைத் தவிர்க்கிறோம். அவளுக்குக் கத்தரிக்க ஆர்வமாக இருக்கிறது, எங்களுக்கு பயமாக இருக்கிறது! :-)

12 comments:

said...

தமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்
. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வெற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .
மேலும் படிக்க

http://tamil10blog.blogspot.com/2009/06/10_02.html

said...

புதுசா ஒரு ஹேர் ஸ்டையில் பப்பு கண்டுபிடிச்சு, அதை அழகா செஞ்சுக்கிட்டு, ராக் ஸ்டார் கணக்கா போஸ் கொடுத்தா அதை நக்கலடிக்கிற உங்களோட போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்:):):)

said...

கொலஜ்

இந்த வார்த்தைகள் என் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது.

குழந்தையின் ஆர்வம் அழகு, சற்றே விளங்கி கொள்ளும் வரை, ஜாக்கிரதையாக கையாளுவதே சால(ச்)சிறந்தது.

said...

:))))))))))))))))

said...

கொலாஜ் நல்லா வந்திருக்கு முல்லை. பேப்பர், சிடி மட்டுமில்லாமல் அரிசி, பருப்பு போன்றவற்றை உபயோகப்படுத்தி 3D கொலாஜ் செய்து பாருங்க முல்லை.

said...

அட.. இதுவும் நல்லா தான் இருக்கு!

said...

ஏங்க, குழந்தை கத்திரிக்கோல் எடுக்கும் போது திட்டிட்டு இப்போ நீங்களே எடுத்து கைல குடுத்திருக்கீங்க. இந்த அம்மாக்களே ரொம்ப மோசம்பா. நம்ம செஞ்சா தப்பு, இதே அவங்க செஞ்சா சரி. பப்பு வா, நாம கூட்டு சேர்ந்துக்கலாம்.

said...

ஒரு எக்சிபிஷன் வேணா போட்டுடுவோமா?

said...

நல்லா இருக்கு

said...

பப்புக் குட்டி, கொடுடா கையை!

கொலாஜ் நல்லா இருக்கு முல்லை!
கத்திரிக்கோலை அவள் உங்கள் மேற்பார்வையிலேயே கையாளட்டும்..

//ஆவி-யையும் எடுத்துக் கொண்டோம்//

ஆனந்த விகடனா? அப்பாடி ஒரு நிமிஷம் பயந்து போயிட்டேன்!

said...

very good pappu. உங்கம்மா வுக்கும் சேர்த்துத்தான்

said...

:))))