Monday, June 08, 2009

...ஃப்ரம் பப்பு'ஸ் ரூம்!ரொம்ப நாளைக்கப்புறமா பப்பு Doh வேணும்னு கேட்டதாலே, மாவு எடுத்துக் கொடுத்தேன்! போனதடவைய விட இப்போ நல்லாவே கைகளை பிசிபிசுப்பாக்கிக்க ஆர்வம் காட்டினா. மாவு பிசையறதுல உதவினேன். இந்த முறை நாங்க எடுத்துக்கிட்டது, ஷேப்ஸ். மாவிலே அந்த ஷேப்ஸை வைச்சு உருவங்கள் கொண்டு வரணும்! ஷேப்ஸ் எல்லாம் செஞ்சு முடிச்சுட்டு, கொஞ்சூண்டு மாவு இருந்தது. இப்போ பப்புவிற்கு ஒரு சில ஆங்கில எழுத்துகள் தெரியும். A செய்யறியான்னு கேட்டதும் உருவானதுதான் இந்த As!! அவங்க பள்ளிக்கூடத்திலே, "நீங்க வீட்டிலே எதுவும்(ஆங்கிலஎழுத்துகளை) சொல்லித்தராதீங்க, நாங்களே பார்த்துக்கிறோம்"ன்னு சொல்லிட்டாங்க என்கிட்டே! (என்னை பத்தி அவங்களுக்கு எப்படி தெரிஞ்சதுன்னுதான் தெரியலை! பெரிம்மா... நீங்க பப்புவோட ஸ்கூல் ஆண்ட்டியை சந்திச்சீங்களா?!!)


அப்புறம் செஞ்சதையெல்லாம் காய வச்சு வர்ணம் தீட்டினா பப்பு. அதுல A இப்படி உருமாறுச்சு!A எழுத்து வர்ற மாதிரி ஒரு கதை படிச்சோம். A - ANT.

இது ஒரு காட்டுல வாழற எறும்பு மற்றும் யானையின் கதை! பெரிய வண்ணங்கள் நிறைந்த படங்களோட இருக்கு. ஒரு குறும்புக்கார யானை எபப்டி எல்லாருக்கும் தொல்லை கொடுத்துச்சு, எறும்பு அதுக்கு என்ன செஞ்சதுன்னு, யானை எப்படி எல்லோர்கூடவும் நட்பா மாறுச்சுன்னும் அழகா சொல்லியிருக்காங்க!இந்தக் கதை முழுசும் A எங்கே வருதுன்னு கண்டுபிடிச்சா! ஆனா சின்ன a தெரியாதே, சோ ஒரு சில இடங்களில் மட்டும் அவளாலே கண்டுபிடிக்க முடிஞ்சது!

25 comments:

சின்ன அம்மிணி said...

A for ஆச்சி

வித்யா said...

:)

G3 said...

:)))))))))))))

Deepa said...

//இந்தக் கதை முழுசும் A எங்கே வருதுன்னு கண்டுபிடிச்சா! //

ரொம்ப நல்ல விஷயம். கூடிய சீக்கிரம் எழுத்துக் கூட்டிப் படிச்சு உங்களுக்குக் கதை சொல்லுவா பப்பு!

தீஷு said...

நல்ல பயிற்சி முல்லை. ஆமா.. புக்கு பார்க்க நல்லாயிருக்கே.. படிக்க எப்படியிருக்கு. பப்புவிக்கு பிடிச்சிருக்கா?

ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

A for ஆச்சி
///

B for பிரியாணி

ஆயில்யன் said...

//நீங்க வீட்டிலே எதுவும்(ஆங்கிலஎழுத்துகளை) சொல்லித்தராதீங்க, நாங்களே பார்த்துக்கிறோம்"ன்னு சொல்லிட்டாங்க ///


அருமையான ஸ்கூல் அம்மாஸ் பத்தி நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்காங்க

அட்ரஸ் ப்ளீஸ் :))))))

ஆயில்யன் said...

//ஆனா சின்ன a தெரியாதே, //

அவ்ளோ பெரிய காட்டுல சின்ன எறும்புக்கூடத்தான் தெரியாது பட் படிச்சீங்கள்ல :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

(என்னை பத்தி அவங்களுக்கு எப்படி தெரிஞ்சதுன்னுதான் தெரியலை)

பள்ளிகோடத்துல கூட போய் வத்தி வெச்சுட்டாங்களா, பய புள்ளங்க,
வேற யாரு இதெல்லாம் செய்யறது,
நம்ம ஆயில்ஸ் அண்ணன் வேலையாத்தான் இருக்கும், பாருங்க 32 கேள்வி கேட்டு ஹோம் வொர்க் பண்ண சொன்னா அதை செய்யறது விட்டுட்டு,,,, :)-

அப்புறம் செஞ்சதையெல்லாம் காய வச்சு வர்ணம் தீட்டினா பப்பு. அதுல A இப்படி உருமாறுச்சு!
+ இந்தக் கதை முழுசும் A எங்கே வருதுன்னு கண்டுபிடிச்சா!

very good பப்பு

விக்னேஷ்வரி said...

பப்பு செஞ்சதுக்கப்புறமாவது நீங்க A கத்துக்கிட்டீங்களா.... :)

ஆயில்யன் said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...

(என்னை பத்தி அவங்களுக்கு எப்படி தெரிஞ்சதுன்னுதான் தெரியலை)

பள்ளிகோடத்துல கூட போய் வத்தி வெச்சுட்டாங்களா, பய புள்ளங்க,
வேற யாரு இதெல்லாம் செய்யறது,
நம்ம ஆயில்ஸ் அண்ணன் வேலையாத்தான் இருக்கும், பாருங்க 32 கேள்வி கேட்டு ஹோம் வொர்க் பண்ண சொன்னா அதை செய்யறது விட்டுட்டு,,,, :)-///


ஹய்யோ ஹய்யோ!

பாஸ் என்னிக்கு நான் ஒழுங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்கேன்! ஒண்ணு சாய்ஸ்ல விட்டு எஸ்ஸாகிடுவேன் இல்லாங்காட்டி கேள்விக்கு சம்பந்தமே இல்லாம வேற எதையாச்சும் பதிலிடுவேன் இன்னும் கொஞ்சம் டெரரா போனா கொஸ்டீன்ஸையே திரும்ப எழுதி பேப்பரை மூடி கொடுத்துட்டு வந்திருவேன் :))))))))))))

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//சின்ன அம்மிணி said...

A for ஆச்சி
///

B for பிரியாணி
\\

அட பாவிகளா... :))

ராஜா | KVR said...

//அதுல A இப்படி உருமாறுச்சு!//

சூப்பரா பண்ணிருக்காங்க.

// "நீங்க வீட்டிலே எதுவும்(ஆங்கிலஎழுத்துகளை) சொல்லித்தராதீங்க, நாங்களே பார்த்துக்கிறோம்"ன்னு சொல்லிட்டாங்க//

இது மாதிரி சொல்ல குறிப்பிட்ட காரணங்கள் எதாவது இருக்கா?

G3 said...

//ஆயில்யன் said...

//சின்ன அம்மிணி said...

A for ஆச்சி
///

B for பிரியாணி
//

B for பிரியாணி [only from ஆம்பூர் ;) ]

G3 said...

//இன்னும் கொஞ்சம் டெரரா போனா கொஸ்டீன்ஸையே திரும்ப எழுதி பேப்பரை மூடி கொடுத்துட்டு வந்திருவேன் :))))))))))))//

@ஆயில்யன்,

பாஸ் ஆனாலும் நீங்க ரொம்ப டெர்ரராத்தான் இருக்கீங்க !!!

ச.பிரேம்குமார் said...

//நீங்க வீட்டிலே எதுவும்(ஆங்கிலஎழுத்துகளை) சொல்லித்தராதீங்க, நாங்களே பார்த்துக்கிறோம்"ன்னு சொல்லிட்டாங்க என்கிட்டே!//

கொழப்புறாங்களே :(

மாதவராஜ் said...

ரசித்தேன்.

ஆகாய நதி said...

இந்த வழி சூப்பரா இருக்கே, ம்ம்ம் நானும் இந்த மாதிரி நாட்களுக்காக ஆவலாக இருக்கிறேன்... :)

நசரேயன் said...

ம்ம்ம்ம்.. எனக்கும் ஆங்கிலேமே வராது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

பப்புவிற்கு பாராட்டுக்கள். அவளது முயற்சியை போட்டோவாகவும் பதிவிட்டது நன்றாக இருக்கிறது.

anbudan vaalu said...

:)))

பப்புவிற்கு வாழ்த்துக்கள்...

rapp said...

முல்லை, நீங்க இவ்ளோ ஜாலி பொழுதுபோக்கெல்லாம் பப்புவுக்குக் கொடுக்குறதைப் பார்த்தா, பப்பு கூட சேர்ந்து நீங்க ஜாலியா விளையாடத்தானோன்னு எனக்கு டவுட் வருது. எனக்கும் இது மாதிரில்லாம் பண்ணனும்னு ஒரே ஆர்வக் கோளாறு வருதே:):):)

அன்புடன் அருணா said...

Good mother!!!

மங்களூர் சிவா said...

:))
nice